There was an error in this gadget

Monday, May 5, 2014

காரல் மார்க்ஸ் பிறந்த நாள் 05-05-1818

லெனின்..
சமூக ஜனநாயகவாதிகளின் (கம்யூனிஸ்டுகளின்) முதல் கோரிக்கையும் முதன்மையான கோரிக்கையும் அதுதான். “அரசியல் சுதந்திரம் வேண்டும்என்று அவர்கள் எழுப்பும் முதல் கோரிக்கையின் பொருள் இது தான்:-
அரசியல் சுதந்திரம், நாடாளுமன்றத்துக்கு சுதந்திரமான தேர்தல், கூட்டம்கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மட்டும் உழைக்கும் மக்களை அவர்கள் சந்திக்கும் வறுமையில் இருந்தும், அடங்கு முறையில் இருந்தும் உடனடியாக விடுவித்து விடாது என்பதை நாம் அறிவோம். பணக்காரர்களின் லாபத்துக்காக வேலை செய்ய வேண்டிய சுமையில் இருந்து நகர்ப்புற ஏழைகளையும், கிராமப்புற ஏழைகளையும் விடுவிக்கக்கூடிய உடனடியான சாத்தியக் கூறுகள் அவற்றுக்கு இல்லை என்பது உண்மையே. உழைக்கும் மக்கள் தங்கள் மீதுதான் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். வேறு எவரையும் நம்பியிருக்க முடியாது. உழைப்பாளி தன்னைத் தானே வறுமை நிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எவறும் அவனை விடுவிக்க மாட்டார்கள். அவ்வாறு உழைப்பாளிகள் தங்களைத் தாங்களே விடுவித்துக கொள்ள வேண்டுமானால் ருஷ்யாவிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே சங்கமாக ஒரே கட்சியாக ஒன்றுபட வேண்டும். சர்வாதிகார போலீஸ் ஆட்சி, கூட்டங்களுக்கு தடை விதித்தது என்றால், உழைப்பாளிகளின் பத்திரிகைகளுக்கு தடை வித்தது என்றால், உழைப்பாளர்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்க தடை விதித்து என்றால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுபட முடியாது. உழைப்பாளிகள் ஒன்றுபட வேண்டுமானால் அனைத்து விதமான சங்கங்கள் அமைக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும். ஒன்றுபடுவதற்கான உரிமை வேண்டும். அரசியல் சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

அரசியல் சுதந்திரம் உடனடியாக தொழிலாளர்களை அவர்களின் வறுமை நிலையில் இருந்து விடுவிக்காது என்பது சரிதான். ஆனால் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதத்தை அரசியல் சுதந்திரம் உழைப்பாளிகளுக்கு அளிக்கும். வறுமையை எதிர்த்துப் போராட உழைப்பாளிகளின் ஒற்றுமைதான ஒரே வழி. வேறுவழி எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது. அரசியல் சுதந்திரம் இல்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுபடுதல் சாத்தியமானதாக இருக்காது.”
கிராமப்புற ஏழைகளுக்கு - பக்கம்21-22

எங்கெல்ஸ்….
"வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி வரலாற்றில் இறுதியாகத் தீர்மானிக்கக்கூடியவை யதார்த்த வாழ்வை உற்பத்தி செய்தலும் மறுஉற்பத்தி செய்தலும் ஆகும். இதற்குமேல் மார்க்ஸோ நானோ எதையும் எப்பொழுதும்கூறியது இல்லை. எனவே, எங்கள் கூற்றை, பொருளாதாரக் காரணி மட்டுமே தீர்மானிக்கக்கூடிய ஒரே காரணி என நாங்கள் சொல்வதாக யாரேனும் திரித்துக் கூறுவாரேயானால், அவர் இந்த கருத்தோட்டத்தை அர்த்தமற்ற, அருவமான, அறிவுக்குப் பொருத்தமற்ர சொற்றொடராக மாற்றுகிறார். "பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகள்- வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைவுகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாம் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், மதக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் – வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாய் இருக்கின்றன. இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்ளிடைத் தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. (the economic movement finally asserts itself as necessary.
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்ற ஆனந்த் டெல்டும்ப்டெ எழுதிய நூலின் மேற்கோள்


எங்கெல்ஸ்….
"இளைய வயதினர் சில சமயம் பொருளதாரப் பகுதிக்கு அதில் அழுத்தம் கொடுப்பதற்கு நானும் மார்க்ஸு்ம் கூட ஓரளவுபொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். எங்களது முதன்மைக் கோட்பாட்டை மறுத்த எதிராளிகளுக்கு எதிராக நாங்கள் அதனை வலியுறுத்த வேண்டியிருந்தது. பொருளாதாரக் கூறுகளுடன் ஊடாடும் பிற கூறுகளுக்கு அவற்றுக்கு உரிய மதிப்பை வழங்க எங்களுக்கு நேரமோ, இடமோ, வாய்ப்போ எப்போதும் கிடைக்கவில்லை. ஆனால் வரலாற்றின் ஒரு பகுதியை விளக்க நேர்கையில், அது முற்றிலும் மாறுகட்ட விஷயமாகிவிடுகிறது. அங்கு எந்தத் தவறும் அனுமதிக்கப்படக் கூடியதல்ல. எனினும், அவப்பேறாக பல சமயங்களில் நடப்பது என்னவென்றால், சிலர் ஒரு புதிய கோட்பாட்டின் முதன்மையான விதிகளைக் கிரகித்துக் கொண்ட நொடியிலிருந்தே (அவற்றையும் கூட அவர்கள் எல்லாச் சமயங்களிலும் சரியாகக் கிரகித்துக் கொள்வதில்லை) அக் கோட்பாட்டை முழுடையாகப் புரித்துகொண்டு விட்டதாகவும் எவ்வித சிரமமுமின்றி அதைப் பிரயோகிக்க முடியுமென்றும் நினைக்கிறார்கள். மிக அண்மைக்காலததில் ‘மார்க்ஸியவாதி’ களாகி விட்டவர்களைக் கூட என்னால் கண்டனம் செய்யாமல் இருக்க முடியாது. ஏனெனில் திகைக்க வைக்கும் அறிவற்ற கருத்தகள் இந்த வட்டாரத்திலிருந்ததான் உருவாக்கப்பட்டுள்ளளன. "

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்ற ஆனந்த் டெல்டும்ப்டெ எழுதிய நூலில்.

A persistent myth holds that Marx and Engels had unlimited faith in humanity’s ability to conquer nature and create ever more abundance — and no interest in sustainability or ecology. The myth falls apart when we examine what they actually wrote.
“Let us not, however, flatter ourselves overmuch on account of our human victories over nature. For each such victory nature takes its revenge on us. Each victory, it is true, in the first place brings about the results we expected, but in the second and third places it has quite different, unforeseen effects which only too often cancel the first.
“The people who, in Mesopotamia, Greece, Asia Minor and elsewhere, destroyed the forests to obtain cultivable land, never dreamed that by removing along with the forests the collecting centres and reservoirs of moisture they were laying the basis for the present forlorn state of those countries.
“When the Italians of the Alps used up the pine forests on the southern slopes, so carefully cherished on the northern slopes, they had no inkling that by doing so they were cutting at the roots of the dairy industry in their region; they had still less inkling that they were thereby depriving their mountain springs of water for the greater part of the year, and making it possible for them to pour still more furious torrents on the plains during the rainy seasons.
“Those who spread the potato in Europe were not aware that with these farinaceous tubers they were at the same time spreading scrofula.
“Thus at every step we are reminded that we by no means rule over nature like a conqueror over a foreign people, like someone standing outside nature — but that we, with flesh, blood and brain, belong to nature, and exist in its midst, and that all our mastery of it consists in the fact that we have the advantage over all other creatures of being able to learn its laws and apply them correctly.”
— Friedrich Engels, The Part Played by Labor in the Transition from Ape to Man

மரண தண்டனை முறை ஏன் இருக்கக்கூடாது? -கார்ல் மார்க்ஸ்.
“தனது நாகரிகத்தைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சமுதாயத்தில், எந்தவொரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை என்பது நீதியானது என்றோ, பொருத்த மானது என்றோ நிறுவுவது மிகக் கடினமானது - அது முற்றிலும் சாத்தியமற்றது எனச் சொல்ல முடியாது என்றாலும். தண்டனை என்பது அச்சுறுத்துவதற்கோ, சீர்படுத்துவதற்கோ பயன்படும் வழிமுறைகளிலொன்று எனப் பொதுவாக அதற்குச் சார்பாகப் பேசப்படுகிறது. ஆனால், மற்றவர்களைச் சீர்படுத்தவோ அச்சுறுத்தவோ என்னைத் தண்டிப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தவிரவும், காயீன் காலத்திலிருந்து (கடவுளால் படைக்கப்பட்ட முதல் ஆணான ஆதாமுக்கும் முதல் பெண்ணான ஏவாளுக்கும் பிறந்த காயீன், தனது இளைய சகோதரன் ஆபெல் மீது பொறாமை கொண்டு அவனைக் கொலை செய்ததாக விவிலியம் கூறுகிறது -எஸ்.வி.ஆர்.), இன்றுவரை உலகம் தண்டனையின் காரணமாகச் சீர்திருத்தப்பட வில்லை, அச்சுறுத்தப்படவுமில்லை என்பதை வரலாறு- புள்ளிவிவரங்கள் எனச் சொல்லப்படும் ஒரு விடயம் - முற்றுமுடிவான சான்றுடன் மெய்ப்பிக்கின்றது... தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துக்கிலிடுப வனைத் தவிர வேறு சிறந்த கருவி எதனையும் அறிந்திராத, தனது கொடூரத்தனத்தை சாசுவதமான சட்டம் என ‘உலகின் முன்னணிப் பத்திரிகை'யின் (இலண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘டைம்ஸ்' நாளேடு - எஸ்.வி.ஆர்.) மூலம் அறிவிக்கின்ற ஒரு சமுதாயத்தின் கதிதான் என்ன...? புதிய குற்றவாளி களின் வருகைக்கான இடத்தை ஏற்பாடு செய்வதற்காக ஏராளமான குற்றவாளிகளைத் தூக்கில் போடுபவனைப் புகழ்வதற்குப் பதிலாக, இந்தக் குற்றங்களைத் தோற்று விக்கும் சமுதாய அமைப்பை மாற்றுவதைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கான அவசியம் இல்லையா?”
எஸ்.வி.ஆர்

கேள்வி - நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களும், பல ஆயத்த ஆடை நிறுவனங்களும் இந்தியாவை விட்டு ஏன் வெளியேறுகின்றன ?
பதில் - கார்ல் மார்க்ஸ் - முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கான இலாபம் இல்லை அல்லது குறைவான இலாபம் என்பதை தவிர்க்கின்றது. 10 விழுக்காடு இலாபம் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் செய்ய முன்வருகிறது. இருபது விழுக்காடு இலாபம் வருமென்றால் ஆர்வத்துடன் முதலீடு செய்ய ஓடுகின்றது.
ஐம்பது விழுக்காடு இலாபம் வருகிறது என்றால் எதையும் செய்ய துணிவு கொள்கிறது. நூறு விழுக்காடு இலாபம் வருமென்றால் அனைத்து சட்டங்களையும் காலில் மிதிக்கும் துணிவு பெற்றுவிடுகிறது.
முந்நூறு விழுக்காடு இலாபம் என்றால் அதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யும். தூக்கிலிடப்படுவோம் எனினும் துணிந்து எதையும் செய்யும். சமூக கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் ஊக்குவிக்கும்.
காரல் மார்க்சின் மூலதனம் தொகுதி ஒன்று.


காரல் மார்க்சின் மூளையில்  நம்ப முடியாத அளவுக்கு வரலாற்றிலிருந்தும், இயற்கை அறிவியலிருந்தும், ஏராளமான உண்மைகள் குவிந்து கிடந்தன. பல்லாண்டுகளாகப் பணி புரிந்து தாம் சேர்த்து வைத்த அறிவையும், கருத்துகளையும்  பயன்படுத்துவதில் வியக்கத்தக்க பேராற்றல் படைத்திருந்தார். எந்த நேரத்திலும் சரி, எந்த விசயத்தையும் பற்றியும் அவரிடம் கேள்விகள் கேட்கலாம்.  திருப்தி தரும் விரிவான பதில்கள் கிடைக்கும் . அதோடு,  தத்துவார்த்தக் கருத்துகளும் உடன் சேர்ந்து வரும். அவரது  அறிவு  துறைமுகத்தில் நீராவி ஏற்றி நின்றிருக்கும்  "போர்க் கப்பல்" போன்றது. எந்த கருத்துக் குவியலுக்கு உள்ளும் நுழையும் ஆற்றல் வாய்ந்தது. " அறிவியல் -சுயநல மகிழ்ச்சிக்குரியதாக இருத்தல் கூடாது" என்று மார்க்ஸ் சொல்வது வழக்கம்.. அவர் மிகவும் விரும்பிக் கூறும் அறிவுரை  " மனித குலத்திற்காப் பணி புரிக" என்ப்தாகும் :- பால்மார்க்


“முதலாளித்துவ விவசாயத்தின் முன்னேற்றம் எல்லாமே உழைப்பாளியை கொள்ளையிடுவது மட்டுமன்றி மண்ணையும் கொள்ளையிடுகிற கலையின் முன்னேற்றம்தான்;குறிப்பிட்ட காலத்திக்கு மண்ணின் வளத்தை அதிமாக்குவதிலான முன்னேற்றம் எல்லாமே அந்த வளத்துக்குரிய நிலையான ஆதாரங்களை கெட்டழியச் செய்யும் வழியிலான முன்னேற்றம்தான்.ஒரு நாடு எவ்வளவுக்கெவ்வளவு நவீன தொழிற்துறையை அடிப்படையாகக்கொண்டு -உதரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டை போல்-தன் வளர்ச்சியை தொடங்குகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிவேகமாய் இந்த அழிவு நிகழ்கிறது.ஆகவே முதலாளித்துவ பொருளுற்பத்தியானது செல்வங்களுக்கெல்லாம் மூல ஆதாரமாகிய மண்ணையும் உழைப்பையும் கசக்கிப் பிழிந்துதான் தொழில்நுட்பத்தை வளர்த்திடுகிறது.” -----கார்ல் மார்க்சு....

“ஒரு மிருகம் தனது சுற்றுச்சார்பைச் சும்மா பயன்படுத்த மட்டுமே செய்கிறது;தனது வெறும் இருத்தலால் மட்டும் இதில் மாற்றங்களை உண்டாக்குகிறது;மனிதன் தனது மாற்றங்களால் தனது குறிக்கோள்களுக்கு அதை ஊழியம் புரியச் செய்கிறான்,அதற்கு எஜமானன் ஆகிறான்”

“ இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை.ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது.ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது ,மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுப்பட பலன்களையும் அளிக்கிறது;இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்துவிடுகின்றன…….
மெசபட்டோமியா ,கிரீஸ்,ஆசியா மைனர்,இன்னும் இதர இடங்களிலும் சாகுபடி நிலங்களை பெறுவதற்காக காடுகளை அழித்த மக்கள் காடுகளை அழித்ததுடன் கூடவே நீர்த்தேக்கங்களையும் தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும் ஒழித்ததனால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்ற நிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடக் காணவில்லை.
ஆல்ப்ஸ் மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வடபுறச்சரிவுகளில் அவ்வளவு பரிவுடன் பேணிக் காக்கப்பட்ட பைன் மரக்காடுகளைத் தென்புறச்சரிவுகளில் பூரணமாக வெட்டி பயன்படுத்தி விட்டபொழுது,அவ்விதம் செய்ததின் மூலம் அப்பிரதேசத்துப் பால்பண்ணை தொழிலின் அடி வேர்களையே வெட்டி விட்டதன் சூசகத்தையும் கூடக் காணவில்லை;அதன் மூலம் வருடத்தின் பெரும் பகுதியில் மலைசுனைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதைப்பற்றியும் மழைக் காலங்களில் கூடுதலான வெள்ளப்பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்கு வகை செய்யப்பட்டது என்பதை பற்றியுமோ ,அந்த அளவு சூசகம் கூடக் காணவில்லை.

அயல்நாட்டு மக்கள் மீது வெற்றிவாகை சூடியவனை போல ,இயற்கைக்குப் புறத்தே நிற்கும் ஒருவனைப் போல இயற்கை மீது எவ்விதத்திலும் நாம் ஆளுகை புரியவில்லை என்பதும் அதற்கு பதிலாக நமது சதை ,ரத்தம் ,மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில் வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைபிடிப்பதிலும் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொரு படியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.”...இயற்கை மீதான மனிதனின் ஆதிக்கம் குறித்தும் 
இயற்கையின் விதிகளை மனிதன் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் மனித நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்பட்ட சூழலியல் சிக்கல்கள் குறித்தும் தனது முடிக்கப்பெறாத “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” நூலில் எங்கெல்ஸ் எழுதுகிறார்.

 "ஒரு குற்றத்திற்கான தண்டனை என்பது, குற்றம் செய்தவர் மீது அத்தண்டனையை திணிப்பதில் அல்ல; மாறாக, அக்குற்றத்தை உருவாக்ககூடிய சமூக காரணத்தை ஒழிப்பதில் உள்ளது. மனிதன் சுற்றுச் சூழலால் உருவாக்கப்படுகிறான் என்றால், அச்சுற்றுசூழலை மானுடதன்மை மிக்கதாக மாற்ற வேண்டும்., மனிதன் இயல்பாகவே சமூக தன்மை கொண்டவன். அவனது இயல்பின் வலிமையை சமூகத்தின் வலிமை கொண்டுதான் அளவிட வேண்டுமே ஒழிய; மாறாக,அவனின் தனிப்பட்ட வலிமையை கொண்டு அல்ல." -'தத்துவத்தின் வறுமை' என்ற நூலில் காரல்மார்க்ஸ்

கம்யுனிசம் என்பது என்ன..? இந்த கேள்வி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி..? பலரும் பல விளங்கங்களை தருகிறார்கள்.. இருக்கட்டும்... நேற்று முத்துமோகன் அவர்களின் நூலில் சில பக்கங்களை வாசித்தேன் அதில் மாமேதை காரல் மார்சின் இந்த மேற்கோள் எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. 
" கம்யுனிசம் என்பது நம்மை பொருந்த மட்டில் இனிமேல்தான் உண்டாக்க வேண்டிய ஒர் ஒழுங்குமுறை அல்ல. தொடர்ந்து தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய இலட்சியமும் அல்ல. இன்றைய ஒழுங்குமுறையை அழித்தொழிக்கின்ற உண்மையான சமூக இயக்கத்தை நான் கம்யூனிசம் என்று அழைக்கின்றேன்" ( Karl Marx works ...ed. Mcleen Oxford 1977 Page 147)
ஏற்கனவே கம்யூனிசம் என்ன என்பது நாம் விளங்கி கொண்டிருப்பத்ற்கு அது ஒரு எதிர்கால சமூக ஒழுங்கமைப்பு சோசலிசத்தின் ஊடாக உருவாகும் அடுத்தக்கட்ட அமைப்பு என்பதற்கு இந்த மேற்கோள் எதிரானதா..?கம்யூனிஸ்டுகளுக்கு ஒழுக்க நெறி என்பது சுரண்டல்காரருக்கு எதிராக உணர்வுபூர்வமாக வெகுமக்கள் போராட்டத்திலும் அதற்கான ஒன்றுப்பட்ட உறுதியான கட்டுப்பாட்டிலும் தான் முழுக்க முழுக்க இருக்கிறது. என்றும் மாறாத நிரந்தரமான ஒழுக்க நெறியில் எங்களுக்கு நம்பிக்கை யில்லை.ஒழுக்க நெறி பற்றிய எல்லாக் கட்டுக்கதைகளின் பொய்மையை அம்பலப்படுத்துவோம். மனித சமுதாயம் மேலும் உயர்ந்த நிலைக்கு உயர்ந்து முன்னேற உதவுவதற்கும் தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை ஒழிப்பதற்குமே ஒழுக்க நெறி உதவுகிறது....... காரல் மார்க்ஸ்

ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களே கோலோச்சும் கருத்துக்களாக விளங்கும். அதாவது, சமுதாயத்தின் பொருள்வகை சக்தியை ஆளும் வர்க்கம், அதே சமயம் அதன் கோலோச்சும் அறிவுத்துறை சக்திகளாகவும் விளங்கும். பொருள் உற்பத்தி சாதனங்களைத் தனது     செயலாட்சியில் வைத்திருக்கும் வர்க்கம், அதேசமயம் அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் மீது கண்காணிப்புச் செலுத்தும், எனவே அதன் மூலம், பொதுப்படச் சொன்னால், அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் தம் வசம் இல்லாதவர்கள், அதற்குக் கீழடங்கி இருப்பார்கள். கோலோச்சும் கருத்துக்கள் என்பவை மேலோங்கி நிற்கும் பொருள்வகை       உறவுகளின் லட்சிய வெளிப்பாடும், கருத்துக்களாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளும் தவிர வேறு எதுவுமல்ல.                                           - ஜெர்மன் சித்தாந்த்தம் -  மார்க்ஸ்