Monday, July 11, 2011

சிறுகதை

ஊனம்      
        
    விசில் சத்தம் கேட்ட மறுவினாடியே பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக் கொண்டு எதிரில் வேகமாக ஒருவர்  ஒடி வந்தார். பேருத்தை நிறுத்துவதில்லை என்ற முடிவுடன் ஒட்டுனர் ஒட்டும் பொழுது தான் கவனித்தார்.

    ஊனமாகி சூம்பி போன காலை தொடையில் கையை வைத்து அழுத்தி தரையில் அதை ஊன்ற செய்து ஓடிவருபவர் ஊனமுற்றவர் என்பதை அவர் உணர்ந்தார். பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அவர் வண்டியில் ஏறுவதற்கு ஒருவர் உதவி செய்தார்.

   கால் சரியில்லாதவர்ப்பா...... யாராவது எழுந்து சீட் கொடுங்க."

   எறியவர் தடுமாற்றத்துடன் நகர்ந்து இருக்கைகளில் சாய்வதற்கான கம்பியை இறுக்கி பிடித்து கொண்டு நின்றார்.

        அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஒரு நாடகமே நடந்து முடிந்தது.

         உட்கார்ந்திருந்த இரு பயணிகள் கண்களை இறுக மூடி தூங்கி வழிவதாக பாசாங்கு செய்தனர்!  இன்னும் இரு ஜன்மங்கள் சன்னலுக்கு வெளியே எதோ காணாத அதிசயத்தை காண்பது போல் வெளியில் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்!!

   உடம்பே சரியில்லப்பா

   இன்னொரு ஜன்மம் தனக்குள் உரக்க முணுமுணுத்துக்கொண்டு தலையை தொங்க போட்டாது!

      அத்திப்பூத்தாப் போல் எப்பொழுதுதாவது தான் எனக்கே இடம் கிடைக்கும் அதையும் விட்டு தரணுமா என்று சங்கடத்தில் இன்னொன்று நெளித்தது. ஆனால் எழுந்து இடம் தரவில்லை.

   பேருந்து ஒட்டத்தில் சரியாக நிற்க முடியாமல் வந்தவர் தத்தளித்தார். யாராவது தனக்கு இடம் தரமாட்டார்களா என்று பரிதாபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.

   ஊனமுற்றோருகாக ஒதுக்கீடு செய்த சீட்டை கவனித்தார்.  ஒரு சீட்டில் ஊன்று கோல்களுடன் ஒருவர் அமர்ந்து இருந்தார்.
   
        அவர் பக்கத்தில் சன்னல் ஒரமாய் அமர்ந்து இருந்தது சன்னலில் தலையை சாய்ந்து அயர்ந்து தூங்குவதாக பாசாங்கு செய்து நடித்தது. யாராவது எழுந்திருக்க சொல்லி விடுவார்களோ என்று காதைத் தீட்டி கொண்டிருந்தது. யார் சொன்னாலும் எழுந்திருப்பதில்லை என்று முடிவுடன் தூங்கியே விட்டது!

   அடுத்த பேருந்து நிறுத்தம் வந்தவுடன் பிரேக் அடித்து வண்டியை ஓட்டுநர் நிறுத்தினார்.  ஒரு குலுங்கி குலுங்கி பல்லவன் நின்றது. கைப்பிடி நழுவ ந்த ஊனமுற்றவர் விழப் பார்த்தார். தன் மேல் சரிந்து விட்டார் என்று பக்கத்து பயணி எரிச்சலுடன் நகர்ந்து கொண்டார்.

  யாரைவது கேட்டு உட்கார வேண்டியது தானே. மேல மேல விழுந்தா...”என்று முணுமுணுத்தார்.

       வந்தருக்கு சங்கடமாக இருந்தது. யாராவது இடம் தந்தால் தானே உட்காருவதற்கு என்று நினைத்தார்.

   எஸ்கீயூஸ் மீ.... இங்கே.... உட்காருங்க
 .
     இரண்டு சீட்டுகள் தள்ளி இளைஞர் ஒருவர் எழுந்து இடம் தந்தார்.

    தேங் ஸ்......

    பக்கத்து கம்பியை பிடித்து சென்று, இருக்கையில் அமர்ந்த  ஊனமுற்றவர் நன்றி பெருக்குடன் அந்த இளைஞரை பார்த்தார்.

      அதற்குள் கண்ணாடி அணிந்த அந்த இளைஞர் பேருந்தின் முன்னாள் நகர்ந்தார். சில நிறுத்தங்களை பேருந்து கடந்து சென்றது.

     அழகிய கறுப்பு கூலிங்கிளால் அணிந்திருந்த அந்த இளைஞர் பேருந்தை விட்டு இறங்கினார். பேண்ட் பாக்கட்டில் கையை விட்டு மடித்து வைத்திருந்த இரும்பு ஸ்டிக்கை உதறி நீட்டினார்.

          நிமிர்ந்த நடையுடன், நேர் கொண்ட பார்வையுடன் கண் தெரியாத அந்த இளைர் நடந்து போவதை பயணிகள் கவனித்தனர்.
@@@@