Friday, March 11, 2011

ஆறாத ரணம் - சிறுகதை


நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், ஒடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாமல் சிறு சிறு நீர்சுழிகள் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன. சிறுசிறு சுழிகள் இணைந்து பெரிதாகி சுழலுகின்றது. நினைவுகள் சுழன்று சுழன்று ஆழமாய் உள்ளே உள்ளே தனக்குள் சென்று கொண்டே இருக்கிறது,
நேற்று அலுவலகத்தில் செய்த செயல் வெளியில் செல்வதகே வெட்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது, குடித்துவிட்டு போதையில் ஒரு பெரிய கலாட்டவை அரங்கேற்றி இருந்தேன். மொடா குடி போதையில் பத்து கிலோமீட்டர் தொலைவு தள்ளி இருந்த வீட்டிற்கு
எப்படி சேதாரம் இல்லாமல் வந்து சேர்ந்தேன் என்று நினைவில்லை. யார் செய்த புண்ணியமோ?
தொழிற்சங்கத்தின் பொதுபேரவை கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவரும். நானும் மப்பு ஏற்ற டாஸ்மார்க் சென்றோம், நான் உதவி செயலாளராக இருந்தேன். எம்,சி,ஆப் வாங்கி இருவரும் குடித்தோம் என்பது மட்டும்தான் நினைவில் சுழல்கிறது. அதற்காக மேல் நினைவுகள் செல்ல மறுக்கின்றது.
மங்கலான நினைவுகள் இன்றும் அதிகமாக குடித்தோம், எதை பற்றியோ ஆரம்பித்து யாரையோ திட்டி இருக்கிறேன். வருத்தமுடன், சங்கடமும் நெஞ்சில் நிலவின.
நண்பர் அருளிடம் சென்று தலையை சொறிந்து நிற்கின்றன.
வாங்க தலைவரே எப்படி இருக்கீங்க
கிண்டலக்கிறார்.
என்ன நடந்தது.
பண்ண கலாட்டவே  ஞாபகமில்லையா? உன்னை சமாதானம் பண்ணி விட்டிற்கு அனுப்பவதற்குள் நாங்கள் நொந்து போய்விட்டோம். உங்களுக்குதான் ஒத்து வரல்லன்னு தெரிகிறதல்ல ஏன் குடிக்கிறீங்க.
சங்கடத்தில் நெளிந்தேன்.
பேரவை நடந்து கொண்டு இருந்தது, புரமோசன் விசயமாக விவாதம் நடந்தது, பேசிய எல்லாரும் அதிகாரிகள் குற்றம சாட்டிக் கொண்டிருந்தனர். நீங்கத போதையில் நீங்க தள்ளாடிக் கொண்டே எழுந்தீங்க, மேடைக்கு வந்து மைக்கை கெட்டியாக புடிச்சிக்கிட்டிங்க,,, நானும் பேசனும்,, பேசனும் என்று திரும்ப திரும்ப உளுறினீங்க. அப்புறம் தான் அந்த கூத்தே நடத்தச்சி.
கிண்டல் பார்வை எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது,
அதிகாரிகளை சிறிது நேரம் திட்டினீங்க தொழிற்சங்கம் சரியில்லை. தீவிரமாக செயல்படவில்லை. என்று குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீங்க அப்புறம்.....
சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்.
நந்தகோபாலை பார்த்து இவண் என்னை நொண்டின்னும் சொல்லிட்டான். நொண்டி,, நொண்டின்னு திட்டறான், ,, நீங்கல்லாம் கேளுங்க ,,, கேளுங்க,,, திரும்ப திரும்ப இப்படியே சத்தம் போட்டு கத்தினீங்க.
நந்தகோபாலுக்கு முதலில் என்னவென்றே விளங்கவில்லை.
எனக்கு என்ன நடந்தது என்று பொறி தட்டியது போல புரிந்தது. போதையில் நந்தகோபாலை சத்தம் போட்டதும். அதற்கு அவர் நான் அப்படி ஏதுவும் சொல்லவில்லை என்று முகம் வெளுத்து அலறியபடி சொல்லியது நினைவில் சுழன்றது. மிண்டும் மிண்டும் நொண்டி என்று திட்டினார் என்று நான் கத்தி கலாட்டா செய்தேன், ஒப்பாரி வைத்து அழுதேன், போதையில் சோகம் தலைக்கேறி தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது, நண்பர்களுக்கு எப்படி சூழலை சமாளிப்பது என்று புரியவில்லை. ஒரு வழியாக என்னை சமாதானபடுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்துகு படாதபாடு பட்டனர்.
நந்தகோபாலிடம் மன்னிப்பு கேட்டேன்.
பராவாயில்லிங்க,,, நான் எப்பவும் உங்களை அப்படி சொல்லவில்லையே. போன வாரம்கூட ஓட்டலில் டிபன் சாப்பிட்டபோது நான் பில்லை கொடுக்கிறதா சொல்லியும் நீங்க மறுத்துவிட்டு எனக்கும் சேர்த்து பில் கொடுத்தீர்கள்.
ஆமாம்,,, ஆமாம்
 பூம் பூம் மாடு தலையை ஆட்டினேன்.
நினைவுகளின் ஆழத்தில் தூர்வாறி தூர்வாறிக் கொண்டே சென்றேன். பளீரென முளையில்  மின்னல் தாக்கிய உணர்வு! நந்தகோபாலை பார்த்து ஏன் அப்படி கத்தினேன். கலாட்டா செய்தேன்.
நொண்டி என்று என்னை யாரும் அழைப்பது இல்லை, மைய அரசு குமாஸ்தா,,, நடுத்தர வர்க்கம் இப்படியெல்லாம் அழைப்பதில்லை. நொண்டி என்று இழிவு தொனியில் அழைத்தது எனது நினைவில் வரவில்லை.
நினைவுகளின் ஆழ்மன இரத்தகசியும் மடிப்புகளின் மின்சாரம் தாக்கி நரம்பு இழுந்தது.
அந்த அழகிய வடிவான முகம் சிவந்த கன்னம் புசுபுசுவென திரண்டிருந்த ஒட்டவெட்டிய போலிஸ் திராப் முகதிடகாத்திரமான உடற்பயிற்சி செய்த தேகம்!
இரணமாகி கீழ்பிடித்து பச்சை புண்ணாய் நினைவுகளில் எப்பொழுதும் துரத்திக்த கொண்டிருக்கும் வசைச்சொல். சொதசொதப்பாய் ஆண்டுகள் பல உருண்டொடி விட்டாலும் ரணமாய் சிழாய் உருவாகி நிற்கும் இழிசொல்! மனதித்ன ஆழத்தில் தங்கி நச்நச்சென துன்புறுத்தி¢கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் வெளிப்பட்டும் உள்ளது.
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுவது கிடையாது. போலிஸ் கொட்டடி சித்தரவதைகள். அடி உதைகள் எல்லாம் காலபோக்கில் மறந்துவிட்டது. அவன் என்னைத அழைத்த தொனி.
டேய் நொண்டி தெவுடியா பய்யா
கேட்ட மரத்திரத்தில் உள்ளதில் எரிச்சலையும் நெஞ்சில் கனலையும் பற்றி எரிய செய்த சொல்!
இதை சர்வ சதாரணமாக போகின்ற போக்கில் அந்த போலிஸ் அதிகாரி அழைத்தான் பெண்மை கலந்த வட்டமான முகம், அவன் பெயர் பழனியாண்டி!! அதிகார ஆணவத்திமிர் இரத்த நாளஙகளில் இழை இழையாய் ஒடிக் கொண்டிருந்ததன்த வெளிப்பாடு இந்த சொல்லடி!
இருபது ஆண்டுகளுக்கு முன் நக்சல் வேட்டையில் சிக்கிய நபர்களில் நானும் ஒருவன்,
சட்டவிரோத தவரை முகாமில் சிக்கி ஒருவாரம் நான் பட்டபாடு! நொந்து நுலாகி போனேன்.
பல தடவைகள் பழனியாண்டி என்னை பலவாறாக விசாரித்தான், ஆனால் ஒரு முறைகூட அவன் என் பெயரை சொல்லி அழைகவில்லை.
நொண்டி
நொண்டி நாயே
நொண்டி கம்முனாட்டி
நொண்டி பயலே,,,”
ஒவ்வொரு முறையும் அவன் என்னை அழைதது! இன்னும் கூட சொல்லலாம். எனக்கும் சங்கடமாக இருககிறது.
இந்தத நொண்டி பயனுக்கு இன்னா திமிர் வாயே திறக்க மாட்டரான்,,, நல்ல கவனிங்க இந்த நொண்டி காலைணை,,,”
பழனியாண்டி மற்ற உளவு அதிகாரிகளுக்கு என்னை அறிமுகப்படுத்திய விதமே இப்படித்தான் இருந்தது...
இவனோட இன்னொரு காலையும் பெண்டாக்கிறேன் பார்
வன்மத்துடன் அவன் அடித்த அடியில் லட்டிகள் உடைந்து நொறுங்கின, உடலெல்லாம் வலி பற்றி எரிந்து கொண்டிருந்தது? அவனது இழித்தொனி சொல் என் உயிரையே பிராண்டி கொண்டிருந்தது.
பத்து நபர்களை பிடித்து வதை முகமில் வைத்து விசாரணை செய்தார்கள். பெயர்களை சொல்லியும் சில சமயம் சாதியையும் சில சமயம் ஊர் பெயரை சொல்லியும் அழைத்ததை கவனித்தேன். 
பிச்,டி,படித்து கொண்டிருந்த மாணவரை டாக்டர் என்றும் கிண்டலாக அழைத்தனர்.
என்னை மட்டும் பெற்றோர் இட்ட பெயரை சொல்லியோ. சாதியை குறிப்பிட்டோ. ஊரை குறிப்பிட்டோ அழைக்கவில்லை.
அவன் கண்களுக்கு எனது காலின் ஊனம் மட்டுசூமு தெரிந்தது!
தொழிலை சொல்லி அழைக்கவில்லை
படித்த படிப்பை சொல்லி அழைக்கவில்லை.
ஒரிருதடவை சொன்னாலும் அதில் நொண்டி  என்ற , சொல்லை வினைத்தொகையாக இணைந்தே சொன்னார்கள்.
இதற்கு மேலே இன்னொரு ஈனச் செயலையும் செய்தான்.
பத்திரிகையாளர்களை அழைத்துத என்னைப் பற்றி மிகைப்படுத்தி கூறினான். மறுநாள் செய்தித்தமாள் கொட்டை எழுததுகளில் இப்படி பதிவு செய்தன.
நொண்டிகால் நக்சலைட் கைது தப்பி ஒடி நொண்டி காலனை விரட்டி பிடித்து காவல்துறை சாகசம்
பத்திரிகை தர்மத்தை இப்படி அவர்கள் காப்பாற்றினர்.
ஒற்றைகண் சிவராசன்
வழுக்கை தலை முருகன்
பெண்டு மணி
நொண்டி நடராசன்
குற்றங்களை விட முதலில் பத்திரிகைகளுக்கு தெரிவது ஊணங்களைத்தான். 
சமுகத்தித்ன மனசாட்சியாக இயங்கும் இவர்களே இப்படியெனில் காவல் துறையை பற்றி என்ன செய்வது!.
வீங்கி போன காயங்கள் வடிந்து ஆறிப்போயின இரததம் கசிந்து புண்ணாகி சீழ்பிடித்த ரணங்கள் வற்றின.  வற்றிய பக்குகள் உதிர்ந்து வடுக்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்தன.
பல அற்புதமான நினைவுகள்! நெஞ்சை நெகிழவைத்த தோழமை உறவுகள்! அறிவு செறிந்த விவாதங்கள்! சச்சரவுகள்! சில சமயம் சண்டைகள் கூட!! மக்களுக்காக மக்களை பற்றி சிந்தித்த செயலாற்றிய, போராடிய தருணங்கள்!! நீர்க்குமிழிகளாய் அழிந்து போக கூடாதவைகள் அழிந்து போய் விட்டன.
இயக்கத்தை விட்டு வெளியேறி ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  சராசரி அரசாங்க ஊழியான குடும்பஸ்தானாக மாறிவிட்டேன்.  அந்த போலிஸ் அதிகாரி அழைத்த விதம் மட்டும் ரன் கால வெள்ளத்தில் கரைய, அடித்து செல்ல மறுக்கிறது?
நீயெல்லாம் பொழைக்க தெரியாத ஆளு என்பதை மீறி தனிமையில் இதையெல்லாம் சிந்திக்ம் தருணங்களில் அது பொற்காலம் தான்!
நெஞ்சில் நெருப்பாய் உணர்வில் நெருப்பாய் அணையாமல் எறியும் அந்த சொல்... அந்த தொனி
நொண்டி காலா
பிராண்டி பிராண்டி மனம் வலிக்கிறது.  குடிபோதையில் அவனை பல நாள்கள் திட்டி சக மனிதர்களிடம் கொட்டி விட்டேன்.    பல ஆண்டுகள் ஓடி விட்டது.  முதுமை எட்டி பார்த்து விட்டது.
நான் இப்பொழுது புலம்புதில்லை.  போதை தலைக் ஏறினால் பழனியாண்டியை திட்டி தீர்த்து விடுகிறேன்.  அப்படி திட்டுவதால் மனது ஆறுதலை தேடுகிறது.
அந்த போலீஸ் அதிகாரியின் உருவம் நந்தகோபாலுக் இருந்தது.  உருவம் ஒற்றுமைகள் படைத்த மனிதர்கள் பலபேர் இருக்கத்தானே செய்கிறார்கள்! நந்தகோபாலிடம் மன்னிப்பு கேட்டாலும் அவரிடம் இதை விளக்கினால் அவரால் புரிந்து கொள்ள முடியாது!
கைபேசி அழைத்தது.  மனைவி அழைத்தார் மாலை 5 மணிக்கு பேருந்து நிறுத்ததிற் வருவதாக கூறினாள்.  மேலதிகாரியிடம் அனுமதி பெற்று நான் புறப்பட்டேன்.  பேருந்து ஏறி போய் சேர மாலை ஐந்தரை ஆனது.
இரண்டு கைபைகளையும். மூன்று வயது குழந்தையையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளிடம் ஐஸ்கிரீம் வாங்கி தரும்படி குழந்தை தொந்தரவு செய்து கொண்டு இருந்தது.  சளி பிடித்துவிடும் என்று யோசனை செய்து தட்டி கழித்து கொண்டிருந்தார்.
நான் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன்.  கால் ஊனம் என்பதால் என் மனைவியே பைகளை சுமந்து கொண்டு நடந்தாள். 
வீடு போய் சேர ஒருமைல் நடக்க வேண்டும்.  டி.வி.எஸ் 50 வண்டி வைத்து இருக்கிறேன். அதை பழுது பார்க்க மைக்கானிக்கிடம் விட்டு இருந்ததால் இன்று நடராஜா சர்வீஸ்தான்!
ஒரு கையில் என்னை பிடித்து கொண்டும் மறுகையில் ஐஸ்கிரீம் வைத்து சுவைத்து கொண்டு குட்டி பையன் நடந்தான்.  சிறிது தூரத்திற்கு பின் கையிலிருந்த ஐஸ்கிரீம் தீர்ந்து விட்டது.  முன்னே நடந்து கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினான்.
என்னய தூக்கும்மா
தூக்கும்மா.... தூக்கும்மா
பிஞ்சு கைகளை நீட்டி தொந்தரவு செய்தான்.
நானே இரண்டு பைகளையும் தூக்கி கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறேன்.  நீ வேற.. உன்னை எப்படிடா நான் தூக்குவது
அவள் முணுமுணுத்தாள். குட்டிப்பையன் கைகால்களை உதறி கொண்டு தூக்கும்படி அடம் பிடித்தான்.
காலு வலிக்குதும்மா.. தூக்கும்மா
குட்டிபையன் கெஞ்சினான்.  அவனை தூக்கி கொண்டு நடக்கும்நிலையில் அவள் இல்லை.
டேய் போடா.. உங்கப்பாவை தூக்கு சொல்லுடா என்று பாரத்தை என்னிடம் தள்ளினாள்.
குட்டிபையன் திரும்மிப நின்று என்னை பார்த்தான்.  குட்டி குட்டி கண்களால் உற்று நோக்கினான்.  நான் அவன் அருகில் நெருங்கினேன்.
என்னை தூக்க சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன்.  அவன் என்னிடம் எதுவும் பேசவில்லை.  பிஞ்சு கரங்களால் என் கையை பற்றி கொண்டு நடந்தான்.   நான் விந்தி விந்தி நடப்பதை பார்த்து கொண்டே வந்தான்.
ஒரு மைல்தூரம் குட்டி பையன் நடந்தான்.  என்னிடம் ஒருமுறை கூட தன்னை தூக்கும்படி அவன் கேட்கவில்லை.  அப்பாவால் அவனை தூக்கி கொண்டு நடக்க முடியாது என்று அந்த குழந்தைக்கு தெரிந்து இருந்தது.
கால் வலிக்க அந்த குழந்தை நடந்து வந்ததே தவிர தனது அப்பாவை தூக்கி கொள்ள சொல்லகூடவில்லை.
அந்த சின்ன குழந்தைக்கு புரிந்த நாகரிகம்கூட அந்த அகாரிக்கு ஏன் தெரியவில்லை?

Tuesday, March 8, 2011

Working Women Day -- Short Story


                    பெண்சிசு                      சிறுகதை
ரங்கனுக்கு பவுனு வாக்கப்பட்டு  ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கை உழைச்சாத்தான் கஞ்சி குடிக்க முடியும். இருக்கின்ற ஒருகாணி புஞ்செய்யில் பாடுபடனும். பல நேரங்களில் வெளியில் கூலிவேலைக்கு செல்லவேண்டும் . இந்த பொழப்புலதான் ஒராண்டு முடிந்ததும் வயத்துல பூச்சியோ புழுவோ வளரலேன்னு அந்த வானம் பார்த்த பூமியே கவலைபட ஆரம்பித்தது. மாரியாத்தா புண்ணியத்தில் பவுனு அடுத்த ஆண்டில் பெண்பிள்ளையை பெற்றெடுத்தாள்.
இன்னா இவ பொட்ட பிள்ளைய பொத்துட்டாளே
என்னமோ அவள் தான் திட்டமிட்டு பெண்ணை பெற்றது கணக்கா, கட்டியவன் முதல் ஊரே இப்படி பேசி பேசி மாய்ந்து போனது.
ஆம்பள பிள்ளைன்னா கடசி காலத்தில் கஞ்சி தண்ணியாவது ஊத்தும் பொம்பள பிள்ளைன்னா செலவுதான்
ஆம்பள பசங்க எட்டி உதைக்கிற கதை தெரியமா இப்படி அங்கலாய்த்தது.
குழந்தை வளரத் தொடங்யது மழலையின் மொழியில் தங்களை மறந்து பெற்றோர் பரவசம் அடைந்தனர்.  வங்கி கடனில் பசுமாடு ஒன்னற வாங்கினர். பாலைகறந்து  நாலு குடும்பத்திற்கு ஊத்தினால், நாலு காசு கையில் பார்க்கலாம் என்ற நம்பிக்கை. அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. துவரம் பருப்பு நிறத்தில் இருந்ததால் அதற்கு துவரம் என்று செல்லபெயர் வைத்தன்.
துவராம்மா
இவர்கள் அழைத்தால் திரும்பி பார்த்து, அது அசைந்து அசைந்து வரும் அழகே தனி?
கடேறி கன்றை (பசு கன்று) ஈன்று அவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. பால் வியாபாரமும் நன்றாக நடந்தது.
இரண்டு வயதான குழந்தை தெருவில் இருந்து செவிலி நாய் குட்டியை தூக்கி வந்து விட்டது. நாய்குட்டியும் குழந்தையும் துள்ளி துள்ளி குதித்து விளையாடினர். அந்த வீடே மகிழ்ச்சி கடலில் ழூழ்கியது. நாய்குட்டி ஒட குழந்தை துரத்த, குழந்தை ஒட நாய்குட்டி துரத்த அமர்களப்பட்டது . பவுனு அதை ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள்.
அந்தி சாய்ந்ததும் கழனியில் இருந்து ரங்கன் திரும்பினான். குழந்தை அப்பாவிடம் நாய்குட்டியை கொண்டு வந்து கொடுத்தது. துரு துருவென்று கண்களுடன் புரண்டு விளை ,யாடிய அதை ரங்கனுக்கு பிடித்து போனது. வாஞ்சையுடன் தூக்கி மடியில் வைத்து கொஞ்சினான். மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாடினான்.
ஐய்யே....பொட்டை நாய் குட்டி
அவன்முகம் சுண்டி விட்டது, நாய் குட்டியும் குழந்தையும் மீண்டும் குதித்து குதித்து விளையாடியானர்.
பாப்பா... இந்த குட்டிய எங்கேந்து கொண்டாந்தா
யம்மாக் கூட நாடார் கடைக்கு போவச்ச தெருவில் கிடைச்சது
குட்டிய அது அம்மாகிட்ட கொண்டு போயி விட்டுடலாம் பாப்பா. பாவம்மா அது.  உன்னாட்டும் அதுக்கும் அம்மா வேணும்லா
இல்லப்பா... நம்ம வூட்ல வைச்சிக்கலாம்,  சோறுல்லாம் ... சாப்பிட்டு இல்லாம்மா,,,”
பொட்டைக் குட்டிம்மா இது. வசவசன்னு குட்டி போட்டுகிட்டே இருக்கும். அதுங்க தொல்லை தாங்க முடியாது
குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு நாய்குட்டியை விட்டுபிரிய மனமில்லை. இறுக்கமாக அணைத்து கொண்டது.
இந்த பொட்ட கழுதையே எப்படி கரையேத்தறதுன்னு தெரியல்லை, இதுல்ல இது வேற  தொல்லை...
எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்
பவுன் மீது ஏறிந்து விழுந்தான்.
நான் யென்னா பண்ணறது. அது தான் தெருவில் போற குட்டியை தூக்கியாந்திட்டு யென் உயிரை வாங்குறா
நாய்குட்டி ஒடிவந்து ரங்கன் காலை நக்கியது.  தரையில் உருண்டு பிரண்டு அழகு காட்டியது. எம்பி எம்பி குதித்தது.
வொவ்வ்வ் வொவ்வவ்.... வொவ்வவய்’’
கொஞ்சி கொஞ்சி சிணுங்கி கொண்டிருந்தது. ரங்கன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதனுடன் சிறிது நேரம் வினளயாடினான். குழந்தை,  நாய்குட்டி, கணவன், மனைவி சேர்ந்து விளையாடினர். அந்த வீட்டில் மகிழ்ச்சி பொங்கி பெருகி கொண்டிருந்தது.
பவுனு இரண்டாம் முறை கர்ப்பம் தரித்தாள். இந்த முறையாவது ஆண்பிள்ளை பிறக்க வேண்டுமென்று அவளும் ரங்கனும் வேண்டாத தெய்வம் இல்லை,
 துவ¬ராம் பசு பால் கறப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நிலை கொள்ளாமல் பசு அல்லாடி கொண்டு கத்தி கொண்டிருந்தது. சினைக்கு விடும் நேரம் வந்து விட்டதை ரங்கன் புரிந்து கொண்டான்.
கால்நடை மருந்துவரிடம் பசுவை கொண்டுச் சென்றான், உயர்ந்த ஜாதிரக மாட்டின் விந்துவை கொண்டு சினை ஊசி போடப்பட்டது. மருந்துவர் கேட்பதற்கு முன்பே நூறு ரூபாய் கொடுத்தான்.

 ஜெர்சி இனத்தோட விந்துப்பா இது. பசுவை நல்லா கவனிச்சிக்க. ஏதாச்சின்னு வந்து காட்டு
 இந்த முறையும் கடேறி கன்று பிறந்தால் கொங்கையம்மனுக்கு வேப்பஞ்சலை கொடுப்பதாக வேண்டிக் கொண்டான்.
 நாயும் பருவம் வந்து விட்டது. எப்பொழுதும் அதன் பின்னால் ஆண் நாய்கள் சுற்றி சுற்றி வந்தன. இதுவும் கூட பல தடவைகள் ஆண் நாய்களுடன் வெளியில் அடிக்கடி ஒடி போனது. சிறுமிக்கு இந்த நாய்கெல்லாம் எதற்கு நம்ம நாயை சுத்தி வருகிறது என்று புரியவில்லை. கற்களை கொண்டு அவைகளை விரட்டி விரட்டி அடித்தாள். ஆண் நாய்களின் அலச்சல் தாங்கமுடியாததாக இருந்தது. ரங்கனும் விரட்டிப் பார்த்தான். ஒன்று ஆண் நாய்கள் இதைச் சுற்றி சுற்றி வந்து சண்டை போட்டன. அல்லது பெண் நாய் ஆண் நாய்கள் இருக்குமிடம் தேடி ஓடியது.  இந்த தேடல் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வந்தது.
நாய் சினையாகி விட்டதை பவுன் புரிந்துகொண்டாள்.  வழக்கத்தைவிட அதிகமாக சாப்பாடு கொடுத்தாள்.  வாஞ்சையுடன் அதை கவனித்துக் கொண்டாள்.
கழனியில் இருந்து பசும்புல்லை அறுத்து வந்து பசுவிற்குப் போட்டாள்.  கணவன் தரும் பணத்தில் மிச்சம் பிடித்து தவுடு புண்ணாக்கு வாங்கி கொடுத்தாள்.  அடிக்கடி பசுவைக் கழனிக்கு ஓட்டிச்சென்று வயிறாற மேய்ந்து கொண்டு வந்தாள். 
இயற்கையின் உந்துதலால் இனப் பெருக்கத்திற்காக தாய்மை அடைந்த உயிர்கள் தங்களுக்குள் வாஞ்சையும், பரிவும் கொண்டிருந்தன.  ஒன்றுக்கொன்று தோழமை உணர்வை வெளிப்படுத்தின.
மாதங்கள் உருண்டோடின.  இடுப்பு வலி கண்ட பவுனை பக்கத்து நகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவ நிலையத்தில் ரங்கன் அழைத்துக் கொண்டு போய் சேர்த்தான்.  எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு, அம்மாவை இரவு மனைவியுடன் மருத்துவமனையில் தங்கி இருக்கச் செய்தான்.
அக்கம் பக்கம் உறவினர்கள் பார்த்தாலும், குழந்தை தனியாக வீட்டில் இருக்கும் என்று பதைப்புடன், மாலையில் வீடு வந்து சேர்ந்தான்.  வந்ததும் வராததுமாக குட்டிப்பெண் ஓடிவந்து காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
அப்பா அப்ப்பா... நம்ம நாய் ஜச்சு குட்டி போட்டிருக்கு... வா காட்டுறேன்...
எங்கம்மா....
இழுக்காதக் குறையாக அப்பாவை இழுத்து சென்றது.  புழக்கடையில் முட்புதர்களுக்கு மத்தியில் பாதுகாப்பான இடத்தில் குட்டிகளைப் போட்டு இருந்தது. தாய்மை பூரிப்பில் நாய் அவனைப் பார்த்தது.  குட்டிகள் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை.
ம்ம்ம்...ம்ம்..ம்
மெல்லியதாக முணுகியபடி ஊர்ந்து ஊர்ந்து தாயின் மடியில் பாலைக் குடிக்க முயற்சிக்கின்றன.
இரண்டு கருப்புக் குட்டி... இரண்டு செவிலி.. ஐந்தாவது எங்கம்மா...
இப்ப தான்ப்பா கொஞ்சம் முன்னாடி பார்த்தேன்.
பலவீனமான குட்டியைத் தாய்நாய் தின்றுவிட்டு இருக்கும்.  பசிக்காகவா அல்லது மருத்துவ காரணங்களுக்காகவா என்று ரங்கனுக்கு விளங்கவில்லை.
நாய்குட்டிகளை எடுத்துப் பார்த்தான்.  இரண்டு கடா குட்டிகள்.  இரண்டு பெட்டைக் குட்டிகள் இருந்தன.
குட்டிப் பெண்ணின் மகிழ்ச்சி எல்லையற்று தாண்டவமாடியது.
அன்றிரவு துவராம் பசுவும் எந்த சிக்கலுமின்றி கன்றை ஈன்றது.ஆசையுடன் என்ன முயன்று கொண்டு இருந்தது.
இரண்டு பெட்டை குட்டிகளை எடுத்து துண்டால் மறைந்து கொண்டு நடந்தான்.  வீட்டின் மூளையில் இருந்த மண்வெட்டியைக் கொண்டு சென்று குழியைத் தோண்டினான்.  சிறிய குழிதான்.  அதில் இரண்டு பெட்டைக் குட்டிகளைப் போட்டான்.  புசுபுசுவென மகிழ்ச்சியாகக் கண்களைக் கூட திறக்காத குட்டிகள் ஒன்றின்மீது ஒன்று ஏறிக் கொண்டிருந்தன.
ஒரு கணம் யோசனை செய்தான்.  மண்ணை அள்ளி அதன்மீது போட்டு உயிரோடு அந்தக் குட்டிகளைப் புதைத்துவிட்டான்.
குட்டியின் கடைசி அலறல் கேட்டு நாய் அங்குமிங்கும் ஓடியது.  இரண்டு குட்டிகளை அணைத்து சுற்றுமுற்றும் பார்த்தது.  இரண்டு குட்டிகளைத் தேடி தேடி ஒடி அலைந்தது.
கடேறிக் கன்று வாலை முறுக்கியவாறு துள்ளி துள்ளிக் குதித்து ஓடிவந்தது.
                     ====

Monday, March 7, 2011

vanambadi-- short story


வானம்பாடி
சிறுகதை
தனது இனத்தின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை கண்டு வானம் பாடி மகிழ்ச்சி அடைந்தது. கடைக்குட்டி மகன் பறத்தலை இச்சை செயலாக அடைந்து விட்டது, அதற்கு ஆனந்தத்தை அளித்தது.
தனது கடைசி வித்தையை மகனுக்கும் மனைவிக்கும் காட்டியது. பாடிக்கொண்டே சுழன்று வானில் மேலே எழும்பியது. செங்குத்தாக வானில் பாய்ந்து மறைந்தது. கண்ணுக்கு தெரியாமல் மறைந்தாலும் அதன் இனிய இசைக் குரல் அந்த வசந்த காலத்தில் புதிய உலகத்தை உதயமாக்கியது. அம்பு போல் சடாரென கீழே பாய்ந்து பின் இறக்கைகளை விரித்துவானில் மிதந்து மீண்டும் அம்பென பாய்ந்து பாடிக் கொண்டே தன் பெட்டையின் அருகில் வானம்பாடி அமர்ந்தது. கடைக் குட்டி அதனை உள்வாங்கிக் கொண்டு செய்து காட்டியது. 
சென்று வா மகனே
பெற்றோர் விடை கொடுத்தனர். குட்டிப்பறவை இறக்கைகளை விரித்து மடக்கி வன்னி பிரதேசத்தின் நான்கு திசைகளிலும்  பறந்து பறந்து திரிந்தது.
வட்டமடித்து பாடிக்கொண்டே வன்னிவயல்களை சுற்றி சுற்றி வந்து குட்டி பறவை பரவச நிலையை  அடைந்தது! பச்சை பசேலன நெற்பயிர்கள், புல்வெளிகள், செடி, கொடி மரங்கள்! வசந்த காலத்தினை வரவேற்கும் வண்ணமலர்கள், பலவிதமான நறுமணங்கள்! காடு, வயல், சமவெளி என்றும் தன் இனத்தோடு சுதந்திரமாக வானம்பாடி திரிந்தது.
வட்டமடித்து பாடி கொண்டே வானில் எழும்பி இனிய இசையை எழுப்பி கொண்டே சடாரென கீழே வந்தபோது தன் இணையை கண்டது. வானம் பாடியின் இசைக்கு பெட்டை மயங்கியது. இரண்டும்  இணை சேர்ந்து காதல் கீதம் இசைந்து உறவாடி சுதந்திர வானில் ஆடி பாடி மகிழ்ந்தன.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை விரிந்து கிடந்த நெல்வயலில் தங்கள் காதல் கூட்டைக் கட்டின.  சின்னஞ்சிறு புற்களால் நேர்த்தியாய் அடர்ந்து தூர்விட்டு கிளம்பிய  நெற்கட்டின் இணைந்து கட்டபட்ட கூடு வானம்பாடியின் வீடு.
காதல் தந்த பரிசாக அடர்நீல நிறத்தில் கரும் புள்ளிகள் கொண்ட  நான்கு முட்டைகள் அடைகாத்து குஞ்சுகளை பொறித்தன.  உழவனுக்கு உதவியது வயலில் கிடந்த சிறுசிறு புழுக்கள், பூச்சிகளை விரட்டி பிடித்துதானும் உண்டு குஞ்சுகளுக்கு தந்தன. சிவந்த சின்ன சிறு அலகுகளை  திறந்து குஞ்சுகள் வானம்பாடிகளை அழைக்கும் அழகே தனி வானம்பாடிகள் மகிழ்ந்து கூத்தாடின. 
நெற்கதிர்கள் பூந்து குலுங்கி மகரந்த வாச¬¬யை பரப்பி பின் பால் பிடித்தது நெல்மணிகள்  உருண்டு திரண்டு முற்றி அறுவடையாகும் முன்பே தன் குஞ்சுகளுக்கு இறகுகள் நன்கு வளர வேண்டும் என்று ஆண்டவனை வானம்பாடிகள் வேண்டிக் கொண்டன.
வன்னிவயல்களில் நெற்பயிர்கள் முற்றி பரந்து விரிந்த தங்கநிறம் கம்பளங்கள் அடுக்கடுக்காய் விரித்தது கிடந்தன குஞ்சுகளுக்கு இறகுகள் முளைத்து கொள்ளை அழகுடன் திகழ்ந்தன
நாளைக்கு பறக்கலாம் கண்ணுங்களா 
இன்றைக்கே பறக்கலாம்பா 
குஞ்சுகளில் செல்ல கொஞ்சலில் வானம்பாடி மயங்கின மஞ்சள்  வெயிலில்தத்தி தத்தி நெல்வயிலில் பறந்தன. மாலை மயங்கி இருள் கவ்வியது. வானம்பாடிகளின் கதகதப்பில் சுதந்திர வானில் பறக்க போவதை கனவு கண்டு குஞ்சுகள் மகிழ்ந்தன.
கருத்த வானில் சிறு சிறு விண்மீன்கள் மின்னுவதை குஞ்சுகள் கண்கொண்டாமல்  பர்£த்து ரசித்து   கொண்டிருந்தன எப்பொழுதோ ஒரு முறை எரி நட்சத்திரம் நகர்ந்து சென்று மறைந்தது
பெரிய எரி நட்சத்திரம் வேகமாக வயலை நோக்கி வந்தது நெருப்பு குண்டு   வெடித்து வயல் பற்றி எரிந்தது. தொடர்ந்து நாலா பக்கங்களிலும் குண்டுகள் வெடித்து சிதறின எல்லா இடங்களிலும் வயல்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன.   தூரத்தில் ஊரெல்லாம்   தீப்பிடித்து வெடித்து சிதறும் ஒசை ஒயாமால் கேட்டது.      
பயந்து போன குஞ்சுகள் பெற்றோரை கட்டிக் கொண்டன. எங்கே இருந்து பறந்து வந்த ஷெல்  வானம்பாடி கூட்டின் அருகில் வெடித்தது பாடுபாட்டு ஒவ்வொரு புல்லாய், நாராய் சேகரித்து பின்னப்பட்ட அழகிய கூடு பிய்த்து எரியப்பட்டது.
 ஒரு நெஞ்சில் பறிறி எரியும் நெருப்பில் விழுந்து கருகின அம்மா என்று அலறக் கூட அதற்கு வாய்ப்பில்லை. இன்னொன்று இரத்த சகதியில் குற்றுயிராய் துடிதுடித்து அலறி கொண்டே உயிரை விட்டது. பயத்தில் மயக்கம் அடைத்து கிடந்த இரண்டு குஞ்சுகளையும் ஆளுக்கொன்றாய் தூக்கி கொண்டு வானம்பாடிகள் காட்டை நோக்கி பறந்தன.
போரின் கொடூரம் எங்கும் கிடந்தன மனிதர்கள் உடல்கள் அங்காங்கே சின்ன பின்னமாய் கிடந்தன. வானில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தன. நிலமெங்கும் கருகும் வாசனையும்  தீப்பிழம்புகளும் காணப்பட்டன. காட்டில் மான்களும்,  வண்ணமயில்களும், முயல்கள், புலிகள் என்று அனைத்து உயிர்களின் உடல்களும் சிதறிக் கிடந்தன. வயல்களிலும்  ஊர்களிலும் மனித உடல்களும் குற்றுயிராய் சிதைந்த உடல்களும் எங்கும் கிடந்தன மனிதர்கள் சகமனிதர்களை ஏன்?
இப்படி கொன்று குவிக்கின்றனர் தாங்கள் உழைத்து உற்பத்தி செய்த வீடுகளை, மாட மாளிகைகளை வயல்களை, குண்டுகளை கொண்டு தாங்களே தகர்ந்து அழிப்பதும் ஏன்? என்று புரியாமல் வானம்பாடி பறந்தன. 
பொழிந்து குண்டு மழையில் ஒரு சிதறல் தாய் வானம் பாடியையும்  அது தூக்கிச் சென்ற குஞ்சினையும் சுக்கு நூறாய் பிய்ந்து எறிந்தது கண்முன் நடந்த கோரத்தை கண்டும் கதறக் கூட வானம்படியால் முடியவில்லை. ஊமையாய் போனது சக்தியற்று மரண பயத்தில் போரில் சிதலடைந்த டாங்கி ஒன்றில் குஞ்சுடன் தஞ்சமடைந்தது.
பயத்தில் வானம்பாடி கழிசலாய் கழிந்தது. அது டாங்கியினுள் கிடந்த புத்தனின் அமைதி தழுவும் முகத்தை ஒரு கணம் கோரமாக்கி சிதைத்தது. இன்னொரு குண்டு அந்த டாங்கியில் விழ அந்த இடமே சுடுகாடாகி விட்டது.