Saturday, October 25, 2014

பேராசிரியர் கோ.கேசவன்: தமிழக திறனாய்வு வரலாற்றில் சுடரும் துருவ விண்மீன்!தோழர் கோ.கேசவன் காலமாகி 15 ஆண்டுகள் சென்று விட்டன. இன்றைக்கு கார்ப்பரேட் பன்னாட்டு கம்பெனிகளின் கொள்கை நலன்களுக்கான இந்துத்துவா பாசிசத்தின் நரேந்திர மோடி ஆட்சி டெல்லியில் நடைபெற்று வரும் சூழலில் பேராசிரியர் கோ.கேசவனின் வாழ்க்கையை, படைப்புகளை நினைவு கூர்வதும், திறனாய்வதும் அவசியமானதொரு பணியாகின்றது.

நுகர்வு வெறியும், சுயநலமும், தன்னகங்காரமும் உள்ள தமிழக அறிவு இன்று மேலோங்கி உள்ளது. தான், தன்குடும்பம், தன் வாழ்வு என்று தாழ்ந்து தாழ்ந்து பிள்ளைப் பூச்சியாய் கசிந்து போவதான சூழலில் பரந்து விரிந்து மானுட வாழ்க்கை கண்ணோட்டத்துடன் தன்னை முக்கியப்படுத்திக் கொண்டவர் தோழர் கோ.கேசவன்.

தோழர்.கேசவன் முதுகலைப்பட்டம் பெற்று இரண்டாண்டுகள் மொழி பெயர்ப்பாளராகவும், பின்பு வாழ்நாள் முடியும் வரை தமிழ்ப் போராசிரியராகவும் பணியாற்றியவர். ஆரம்ப நாட்களில் தி.மு.க அனுதாபியாக, இருந்து பின்பு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர், எழுபதுகளின் ஆரம்பத்தில் வளர்ந்த வானம்பாடி இலக்கிய இயக்கம் தெளிவான அரசியல் வழிகாட்டுதலும், தலைமையும் இன்மையால் தேய்ந்து நெருக்கடி கால கட்டத்தில்(1975) மறைந்து போனது. இத்தகைய பின்னணியில் நெருக்கடி நிலையை எதிர்த்து, பிள்ளை பாண்டியன் என்ற பெயரில் சில கவிதைகளை எழுதினார். அடக்குமுறை உச்சத்தில் இருந்த நெருக்கடிநிலையை விமர்சித்து எழுதிய சிலரில் கேசவனும் ஒருவர் என்பது பதிவு செய்ய வேண்டிய தகவல் ஆகும். இந்தப்பண்பு அவர் வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தது. 

ஆரம்பத்தில் இந்திய கம்யூஸ்ட்டு கட்சி {மார்க்சிஸ்ட்}யிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து கேசவன் பணியாற்றினார். அப்பொழுது எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1979இல் 'மண்ணும் மனித உறவுகளும்' என்ற நூலாக வெளியிடப்பட்டது. பரவலாக பாராட்டப்பட்ட இந்நூல் கேசவனுக்கு மார்க்சிய ஆய்வாளர், கைலாசபதியின் சீடர் என்ற பெருமைகளைத் தேடித் தந்தது. பின்பு சி.பி. எம்.மின் திரிபுவாத நிலைபாடுகளை உணர்ந்து அதிலிருந்து விலகினார். புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியான இ.க.க(மா.லெ) (மக்கள் யுத்தம்) உடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

இயக்கத்தின் தேவைகளை ஒட்டி மாரிஸ் கான் போர்த்தின்-"இயக்கவியல் பொருள் முதல்வாதம்", ஜார்ஜ் தாம்சனின் "மனித சமூகச் சாரம்" போன்றவைகளை மொழி பெயர்த்தார். புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும், செந்தாரகை ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்து புரட்சிகரப்பணிகளை ஆற்றினார். செந்தூரன் என்ற புனைபெயரில் ஏகாதிபத்திய - நிலவுடைமை கருத்துக்களையும் திரிபுவாத தத்துவங்களையும் அம்பலப்படுத்தி எழுதினார்.

தொடர்ந்து சமரன், தோழமை, மக்கள் தளம், பொதுவுடைமை ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் இருந்து பங்களிப்பு செய்தார். மக்கள் பண்பாட்டு பேரவையின் பல கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, மக்கள் பண்பாடு இதழிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார்.
90களில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவம் உட்பட பல்வேறு பிற்போக்கு கருத்துகளை முறியடிக்க அயராது உழைத்தார். தனது சர்க்கரை நோயையும் பொருட்படுத்தாது கடுமையாக பாடுபட்டதால் தோழர் கேசவன் 16.9.1998 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

புரட்சிகர ஆளுமை
நக்சல்பாரி பாதையை தனது அரசியல் வழியாக கோ.கேசவன் ஏற்றவுடன் அவர் எழுதிய நூல் "பள்ளு இலக்கியம் ஒரு சமூகப்பார்வை" என்பதாகும். தலித் மக்கள் பற்றி விரிவாகப் பேசும் இந்நூல் எழுத தோழருக்கு உந்து கோலாக இருந்தது நக்சல்பாரி அரசியல் கண்ணோட்டமே ஆகும். இந்நூலில் தலித் மக்கள் விடுதலை என்பது பாராளுமன்ற சனநாயக மாயைகளைத் தகர்த்து, ஆயுதம் தாங்கி உழவர் போராட்டமாக மலரும்போது மட்டுமே சாத்தியம் என்று கேசவன் தெளிவாக விளக்குகிறார். இதற்காக காவல்துறை கேசவனை விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்க உள்ளாகியது. கேசவன் அடக்குமுறையை உறுதியாக எதிர்கொண்டார். இந்தத் தெளிவும் உறுதியாக தோழரிடம் இறுதிவரை இருந்ததை அவரின் சாதியம், தாழ்த்தப்பட்டோரும் சமூக விடுதலையும் நூல்களைப் படிக்கும் வாசகர்கள் அறியமுடியும்.

புரட்சி பண்பாட்டு இயக்கம் ஆரம்பித்து பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு 'இலக்கிய விமர்சனம் ஒரு மார்க்சிய பார்வை' என்ற நூலை பேராசிரியர் கோ.கேசவன் எழுதினார். பண்பாட்டு அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்த தோழர் சரியாகவே அதை நிறைவேற்றும் வண்ணம் அத்தளத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டார். செந்தாரகை இதழில் பல கட்டுரைகள் எழுதினார். 'நமது இலக்குகள்' என்ற தொடர் கட்டுரை நிலவுடைமை பிற்போக்குத் தனங்களை, ஏகாதிபத்திய சீரழிவுகளை மட்டும் தோலுரிக்கவில்லை..... பல்வேறு நவீன திரிபுவாத கருத்துகளையும் அம்பலப்படுத்துவதாக அந்நூல் இருந்தது. ஆய்வாளராக மட்டுமல்லாமல்..... கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் பங்கேற்று, இச்சங்கம் நடத்திய பல போராட்டங்களில் முன்னணிப் போராளியாக இருந்தது வழிநடத்தினார்.

90களில் முன்னாள் சோலிச நாடுகளின் தகர்வும் ஏகாதிபத்தியங்களின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரமும் அறிவு ஜீவிகளின் மத்தியிலும், நடுத்தர வர்க்கத்தினிடமும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியது. கம்யூனிசத் தத்துவம், புரட்சி, சோசலிச சமூகம் என்று பலவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது. கேசவன் இந்தப் போக்குகளை எதிர்த்துப் போராடினார். "ரசியப் புரட்சி மாயையா?" என்ற நூலை எழுதினார்.

நரசிம்மராவ் காலம் தொட்டு உலகமயமாதல், தாராளமயமாதல் என்று பல விதங்களில் ஏகாதிபத்திய சுரண்டல் அதிகரித்தது. உலகமயமாதல் தலித் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது முதல் ஏகாதிபத்திய சீரழிவுத் தத்துவமான பின் நவீனத்துவம் வரை பல சரக்குகளை ஆர்ப்பாட்டமாகச் சிலர் தமிழகக் களத்தில் இறக்கி விட்டனர். தலித் மக்கள், பெண்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை இத்தத்துவ பின்னணியில் வியாக்யானம் செய்து அப்போராட்டங்களைச் சிதறடித்து நீர்த்துப் போக வைக்க முயன்றனர். தோழர் கேசவன் அதைத் தனக்கே உரிய முறையில் எதிர்கொண்டார்.
1987க்குப் பின்பு தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டதை ஒட்டி புரட்சிப் பண்பாடு இயக்கம் மறைந்து போனது. கேசவன் பணியானது சிறிது திசை திரும்பியது. ஆனாலும், மார்க்சிய அடிப்படையில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தலித் இயக்கம் பற்றியும், பெரியார், அம்பேத்கார், சிங்காரவேலர் போன்றோரின் பணிகள்-படைப்புகள் பற்றியும் வரலாற்று அடிப்படையிலான மதிப்பீட்டு ஆய்வு நூல்களைச் செய்தார். இவையெல்லாம் பொதுவுடைமை இயக்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விலை மதிப்பற்ற அறிவுச் செல்வங்களாக என்றும் விளங்கும்.

 இந்திய அமைதிப் படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, கொலைகளை விமர்சனம் செய்து அப்துல் ரகுமான் எழுதிய கவிதை "சுட்டுவிரல்" பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய பாடத்தில் பாடமாக இருந்தது. ..இதை பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் முத்துகுமரன் தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழுவை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நீக்கினார். அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழு உறுப்பினராக பணியில் இருந்த பேராசிரியர் கோ.கேசவன் இதை கண்டித்து தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழுவில் தீர்மானம் கொண்டுவர பேசினார். மேலும், தனது பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழு உறுப்பினர் பதவியை துறந்து வெளியேறினார். சொல்லும், செயலும் ஒன்றாக வாழ்ந்தவர் பேராசிரியர் கோ.கேசவன்

சிலரின் இறப்பு இறகை விட இலேசானது என்றும், சிலரது இறப்பு மலையை விட கனமானது என்றும் தோழர் மாவோ குறிப்பிடுவார். இந்தியச் சூழலில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சூழலில் திரிபுவாத தற்கால நவீன திரிபுவாத சக்திகள், சீர்திருத்த இயக்கங்கள், ஓட்டுப் பொறுக்கும் திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் துணையோடு இந்துத்துவம் பாசிச பரிவாரங்கள் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலைமையில், ஏகாதிபத்திய சீரழித்தத்துவமான பின்நவீனத்துவம் தான் முற்போக்கானது என்று ஏமாற்றுவது முதற்கொண்டு திராவிட இயக்கமே மண்ணுகேற்ற மார்க்சியம் என்று பிழைப்பு நடத்துவது வரை உள்ள அறிவுச் சூழ்நிலையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதலியல் ஆய்வு அடிப்படையில் பல்வேறு தளங்களில் 33 நூல்களையும், இன்னும் பல கட்டுரைகளையும் எழுதிய மார்க்சிய ஆய்வாளரும், நக்சல்பாரி இயக்கத் தோழருமான தோழர் கோ.கேசவன் அவர்களின் இழப்பை மேற்கண்டவாறு மதிப்பிடுவது மிகையானது அல்ல.
"கோ.கேசவனின் திறனாய்வாளுமை" - நூல் வெளியீட்டு விழா
வரவேற்புரை: பேரா.திருமாவளவன்,
தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்
வெளியிடுபவர்: நீதியரசர் கே.சந்துரு
பெறுபவர்: தோழர் ராதாபாய் அவர்கள்
கருத்துரை:
பேரா.கோச்சடை,
பேரா. மணிகோ.பன்னீர் செல்வம்,
பேரா.கமலா கிருஷ்ணமூர்த்தி,
ஆசிரியர் தா.பாலு, (விழுப்புரம்)
எழுத்தாளர் கி.நடராசன்.
ஏற்புரை: ஜெ.கெங்காதரன்
நன்றியுரை: ஜெ.பா.தமிழ்
நாள்: 01-11-2014, சனிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம் : தமிழ் இணைய கல்விக் கழகம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்,
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்,
சென்னை.600 025..
அனைவரும் வருக! ஆதரவு தருக!!
- முரண்களரி இலக்கிய அறக்கட்டளை
98402408497, 94444 80549

 பேராசிரியர் கோ.கேசவன் நூல்களில் இருந்து...

சாதி ஒழிப்பு, தலித் அரசியல், தலித் இலக்கியம் ..பற்றி பல ஆழமான, தரவுகளுடன், காத்திரமான நூல்களை எழுதினார்..
"அரசதிகாரத்தை நடுநிலைப்படுத்தி சில காரியங்களை ஆற்றிக் கொள்கிற செயல் தந்திரத்தை எல்லாக் கால கட்டங்களிலும், கடைபிடித்துக் கொண்டே இருக்க இயலாது. ஏதேனும் ஒரு தலித் அமைப்பு அத்தகைய செயல் தந்திரத்தை மட்டுமே தொடர்ந்து கடைப் பிடிக்குமானால் அது, இறுதி நிலையில் அரசதிகாரத்தால் உள்ளிழுக்கப் பட்டுவிடும் என்பது தெளிவு..."

 சங்க காலம் பொற்காலம் என்பதும், எல்லோரும் எல்லமும் பெற்றார்கள் என்பதும், அனைவரும் சமமாக உண்டு உடுத்தி உறைந்தனர் என்பதும் சில அறிஞர்களின் அகநிலைப்பட்ட சமூக, அரசியல் விருப்பு சார்ந்த மாயக்கனவே அன்றி உண்மை யதார்த்த மில்லை என்பதை உய்த்துணரலாம்..{Magesh Ramanathan உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமூக உடமையாக இருந்தது என்கிற அர்த்தத்தில்தான் அக்கால கட்டத்தை புராதன பொதுவுடமை சமூகம் என்று குறிப்பிடுகிறார்களே தவிர, அதை ஒரு முன்னுதாரணமான பின்பற்றத்தக்க சிறந்த சமூக அமைப்பு என்கிற புகழ்பாடல்கள் எதுவும் மார்க்சிய மூல ஆசிரியர்களின் நுால்களில் கிடையாது. அது வரலாற்றுரீதியில் வளர்ச்சியடையாத மிக பிற்போக்கான சமூகங்கள், நாகரீகம் வளர்ச்சியடையாத விலங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட காலமாகவே கருதப்படுகிறது. தனியுடமையை ஒழிப்பதும் உற்பத்திச் சாதானங்கள் அனைத்தையும் பொதுவுடமையாக்குவதும் மனித சமூகத்தின் தடையற்றதும் சமத்துவமானதுமான வளர்ச்சிக்கு முன்நிபந்தனையே தவிர, அதுவே அனைத்தும் என்று புரிந்து கொள்ளக்கூடாது. உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி நிலை, அவற்றை கையாளும் மனிதர்களின் வளர்ச்சி நிலை, அச்சமூகத்தின் கருத்தியல், தத்துவார்த்த, கலாச்சார வளர்ச்சி நிலை என பலவும் அடிப்படையாகிறது. வரலாற்று விசயங்களை அக்காலகட்டத்தின் சமூக வளர்ச்சியோடு இணைத்தே புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அக்காலகட்டத்தின் அக புற அம்சங்களை நீக்கிவிட்டு கையாள்வது ஏற்புடைய ஆய்வு முறையாக இருக்க முடியாது. பண்டைய பெருமை பேசுவது எவ்வளவு தவறானதோ அதே அளவு தவறானது அவற்றை கொச்சைப்படுத்திப் பேசுவது. சரியான கோணத்தில் வரலாற்றை புரிந்துகொள்ளவும் அவற்றை ஆய்வு செய்யவும் அவற்றிலிருந்து சமகாலத்திற்கான படிப்பினைகளை பெற விரும்புபவர்களும் இத்தகைய தவறான அணுகுமுறைகளை கையாள மாட்டார்கள். தோழர் கோ. கேசவனின் ஆய்வுகள் இந்நோக்கில் பண்டைய வரலாற்றை பார்க்கும் நோக்கம் கொண்டது கிடையாது. குறிப்பாக முச்சங்கங்கள் குறித்தெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் குறைவு, என்கிற கருத்தை பல வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அத்தகைய ஆய்வுகளை நாம் வெறுமனே கொச்சைப்படுத்தும், இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டவை என எளிய சூத்திரங்களால் ஒதுக்கித் தள்ள முடியாது.}


 இலக்கியம் என்பதைக் குறிப்பிட்ட தன்மையிலும், சமூகம் என்பதைப் பொது தன்மையிலும் காண வேண்டும். எனவே, இலக்கியத்தை விமர்சிக்கின்ரபொழுது, இந்த இரண்டின் இணைவு நிலையைச் சுட்டிக் காட்ட வேண்டும். இப்படிக்க் தான் இலக்கியத்தை விமர்சிக்க விரும்புகிறேன். . இப்படித்தான் பார்க்க வேண்டிமா எனக் கேட்டால், இல்லை என்பதே என் பதிலாகும். இது ஒர் அணுகுமுறை. ஆனால், ஏனைய அணுகுமுறைகளைக் காட்டிலும் உண்மைக்குப் பக்கத்தில் நம்மை நிறுத்தும் அணுகுமுறை என இதைச் சொல்லலாம். மார்க்சிய-லெனினியத்தை சமூகத் தத்துவமாக ஏற்றுக் கொண்டவன் என்ற முறையில் மேற்கண்டவாறே இலக்கியத்தை விமர்சிக்க விரும்புகிறேன்...Tuesday, October 14, 2014

சர்வ தேச கீதம்..

இன்டர்நேசனல் கீதம்..கம்யுனிஸ்ட் அமைப்புகளின் சர்வ தேச கீதம்..தமிழ்நாட்டில் கம்யுனிஸ்டுகள் செய்த தவறுகளில் இந்த பாடலின் இசையை மாற்றி தங்கள் விருப்பதிற்கு இசைத்தனர்.  இசையை மாற்ற இவர்களுக்கு யார்..?
https://www.youtube.com/watch?v=WpBpbXmdLRo

https://www.google.co.in/search?q=sheffield+socialist+choir+internationale&oq=Sheffield+Socialist+Choir&aqs=chrome.1.69i57j0l3.2239j0j7&sourceid=chrome&espv=2&es_sm=122&ie=UTF-8

Saturday, October 4, 2014

செல்வி ஜெயலலலிதா மீதான தீர்ப்பு குறித்த பதிவுகளின் தொகுப்பு

செல்வி ஜெயலலலிதா மீதான தீர்ப்பு  குறித்த  பதிவுகளின் தொகுப்பு 
அன்று மக்கள் தீர்ப்பு இன்று நீதிமன்ற தண்டனை...
1996யில் தமிழகமக்கள் தண்டனை அள்ளித்தார்கள். அதிமுகாவை 1996யில் நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் மக்கள் தோற்கடித்னர். சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றது . அன்று மக்கள் தேர்தலில் கொடுத்த தண்டனை தீர்ப்பை, இன்றைக்கு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை வழி மொழிந்துள்ளது.. அதுவும் 18 ஆண்டுகள் தங்கள் அதிகார, பண, சாதிய பலத்தால் வழக்கை இழுத்தடித்து. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் புனிதமானவைகள் அல்ல. அவை ஏழைக்கும் பணக்காரனுக்கு, அதிகாரத்தில்-பதவியில் இருப்பவனுக்கும் சதாரண மக்களுக்கும், ஆதிக்க சாதிகாரனுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகாரனுக்கும் வேறு வேறு நீதிகளையே வழங்கி வருகின்றன. ஆகவே அரிதினும் அரிதாக நீதிமன்றங்கள் வழங்கும் நல்ல தீர்ப்புகளை நாம் வரவேற்க வேண்டும்.எல்லாவற்றுக்கும், எல்லா நிகழ்விற்க்கும் பின் அரசியல் இருக்கவே செய்யும் என்பதுதான் அரசியலின் பால பாடம். ஒரு நிகழ்விற்க்குப் பின் “அரசியல்” இருக்காது” என்று மாற்று அரசியல் இயக்கங்கள், கருத்தாளர்கள் யோசிக்க இயலாது.... இன்று இந்துத்துவா பாசிசம், ஊழல், கார்ப்பரேட் முதலாளிய கொள்ளை, இயற்கை வளங்களை சூறையாடல்…போன்ற பல பிரச்சனைகள் நமது மக்கள் முன் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் அதனதன் அளவில் மிகவும் மக்கள் நோக்கில் முக்கியமானது. இவைகளை மாற்று அரசியல் இயக்கங்கள், கருத்தாளர்கள் எப்படி கையாள்கிறார்கள் அல்லது இதில் எப்படி அரசியல் செயல்பாடுகளை கொண்டுள்ளனர் என்பதுதான் அவர்கள் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.
ஜெயலலிதா தண்டனைக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்படும் வெற்றிடத்தை பிஜேபி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதால் நாம் மகிழ்ச்சி கொள்ள முடியாது என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இப்படியானதொரு வாய்ப்பு, முனைப்புகள் இருக்கவே செய்கின்றன.
ஆனால் திமுக, அதிமுக கட்சிகள் ஊழலை, கொள்ளையை, அதிகார அத்துமீறலை சமூகத்தின் அடிமட்ட வேர்கால்கள் வரை கொண்டு சென்றுள்ளன. ஒரு வார்டு மெம்பர் ஒரு பதவி காலத்தில் பல கோடிகளுக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடித்துள்ளான். அரசியல் என்பது பணம்கொழுக்கும் தொழிலாக திமுக, அதிமுக கட்சிகள் மாற்றி உள்ளன. இது மாற்று அரசியல் தோழர்களை பிழைக்கத்தெரியாதவர்கள், விளங்காதவர்கள் ..போன்ற அடைமொழிகளுக்கு அழைக்க மக்களை திமுக, அதிமுக கட்சிகள் பழக்கி உள்ளன.
ஆகவே ஊழலுக்கு எதிரான் இந்த தீர்ப்பை நாம் கொண்டாட வேண்டும்… மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

வெற்றிடம் பற்றி: 
கடந்த 30 ஆண்டுகளாக ஈழ ஆதரவு அரசியலில் நேர்மையாக உழைப்பவர்கள் கம்யுனிச புரட்சிகர அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும், பெரியாரிய அமைப்புகளும், தலித் இயக்கங்களும், சில இஸ்லாமிய அமைப்புகளும்தான். ஆனால் இந்த உழைப்பை அறுவடை செய்பவர்களாக, ஈழ அரசியலில் ஆதாயம் பெற்றவர்கள் திமுக, அதிமுக கட்சிகள் தான் இன்றுவரை உள்ளன. திமுக, அதிமுக கட்சிகள் ஆதாயம் அடைகின்றன என்பதற்க்காக கம்யுனிச புரட்சிகர அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும், பெரியாரிய அமைப்புகளும், தலித் இயக்கங்களும், சில இஸ்லாமிய அமைப்புகளும் அதில் களமாடுவதை குறைத்து கொள்ள முடியுமா என்ன?
கடந்த 40 ஆண்டுகளுக்கு காங்கிரசும், தற்பொழுது பாரதீய சனதாவும் தமிழக அரசியலில் செல்வாக்கு பெற முயன்று தோற்று போய்விட்டன. ஆனால் காங்கிரசும், பாரதீய சனதாவின் அரசியலை திமுக, அதிமுக கட்சிகள் தமிழக மக்களிடன் கொண்டு சேர்க்க்கும் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன. பாரதீய சனதா இங்கு காலூன்ற யார் காரணம்? திமுக, அதிமுக கட்சிகளின் பதவி வெறி, ஊழல், அதிகார அத்துமீறல்தான். திமுக, அதிமுக கட்சிகள் காங்கிரசும், பாரதீய சனதாவின் கொள்கைகளைத்தான் இங்கு நடைமுறைப்படுத்துகின்றன. இங்கு எழுந்த மக்கள்திரள் போராட்டங்களை யார் ஒடுக்கினார்கள்.? கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் எதிரிகள் யார்..? காங்கிரசும், பாரதீய சனதா, திமுக, அதிமுக கட்சிகள்தான்.. கம்யுனிச புரட்சிகர அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், தலித் இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்களுக்கு காங்கிரசும், பாரதீய சனதா, திமுக, அதிமுக கட்சிகளும்தான் காரணம். ஒடுக்குமுறையின் அளவுகோலில் இவைகளுக்கு வித்தியாசங்கள் உள்ளன என்பது உண்மையாக இருப்பினும் இன்று அந்த இடைவெளி சிறிது சிறிதாக குறைந்து வருகின்றன.

இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய கடமை கம்யுனிச புரட்சிகர அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், தலித் இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் மீது காலம் சுமத்தி உள்ளது. இந்த முரண்பாடுகளை நுண்ணறிவுடன் அரசியலாக்க வேண்டியது இந்த மாற்று அரசியல் இயக்கங்கள், கருத்தாளர்கள் முன் உள்ள சவால். இதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்…
இந்துத்துவா பாசிசம், ஊழல், கார்ப்பரேட் முதலாளிய கொள்ளை, இயற்கை வளங்களை சூறையாடல்…போன்ற பல பிரச்சனைகளை, இதனால் எழும் அரசியல் முரண்பாடுகளை கைகொள்ள தயாராக வேண்டும்..
இதுதான் அரசியல்..,…இல்லையெனில்..பாசிசம் வரும்..மக்கள் பிரச்சனைகளை, மக்களிடமான அதிருப்திகளை பயன்படுத்தி..@


கிரிமினல் குற்றங்களை விட சிவில்( சொத்து) குற்றங்களுக்கு அதிகம் தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் சிவில்( சொத்து) குற்றங்களுக்கு மிகக் குறைவான தண்டனையே வழங்கப்படுகிறது. பலசமயங்களில் சிவில்( சொத்து) குற்றங்களை செய்தவர்கள் சட்டங்களில் உள்ள ஓட்டையை, கையூட்டு கொடுத்து தப்பி விடுகின்றனர். கிரிமினல் குற்றங்கள் தனிநபருக்கோ அல்லது அவர் சார்ந்த சிலருக்கோதான் தீமையாக இருக்கிறது. சிவில்( சொத்து) குற்றங்கள் பெரும்தொகையான மக்களுக்கு எதிரானது..தீமை விளைக்கின்றது. 66 கோடிகள்... 1,76,000 கோடிகள் எத்தனை தமிழக மக்களின் வாழ்க்கைக்கு செலவிட வேண்டியது.. அவர்கள் வாழ்க்கை சீரழித்து சின்னபின்னமாகி நரகத்திற்கு போனது இந்த சிவில்( சொத்து) குற்றங்களால்தான்..சென்னை ஜகோர்ட வழக்கறிஞர் சங்கம் கலைத்துவிட்டு இனிமெல்......................... கொள்ளைகாரர்கள்- குற்றவாளிகள் ஆதரவு ஜகோர்ட வழக்கறிஞர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப் படுகிறது@

இந்த ஜனநாயகம் என்ற அமைப்பு முறை மக்களுக்கு அளிக்கும் வாய்பே அவ்வளவு தான். தேர்தல் என்பது எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்ற வாய்ப்பையே நமக்கு அளிக்கிறது. இன்னும் தேர்தல் ஜனாயகத்தின் உடன் பிறப்பே ஊழல். ..@

தினந்தந்தி டிவி பாண்டே வன்முறைக்கு எதிராக பொங்கி பொங்கி எழுவாரே.. !!ஒடுங்க வேண்டுமென்று நரம்பு புடைக்க காத்துவானே,..! ஏன் இப்படி இன்று சோக கீதம் வாசிக்கிறான்.. பாண்டே மூச்சியை பார்க்க சகிக்கல.. ஆள மாத்து..

குற்றவாளி ஜெயாவிற்க்கு ஆதரவாக வன்முறை, தீவைப்பு, பொதுசொத்தை நாசப்படுத்தும் அதிமுக கட்சி குண்டர்கள் மீது தமிழக காவல்துறை ஜெயா அரசு கொண்டுவந்த புதியதாக கொண்டு வந்த குண்டர்சட்டத்தை (அதாவது ஒரு முறை குற்றம் செய்தால்) போட்டு சிறையில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அம்மாவின் சார்பி. வேண்டி கேட்டு கொள்கிறோம்..

நந்தினி ஆனந்தன் கடந்த 25 ஆண்டுகளில் தி.மு.க.,அ.தி.மு.க. ஆட்சிகளில் நடைபெற்ற அனைத்து ஊழல்களும் நேர்மையான முறையில் விசாரணை செய்யப்பட்டு கருணாநிதி குடும்பம்,மன்னார்குடி கும்பல், இரு கட்சிகளின் இன்னாள் முன்னாள் அமைச்சர்கள்,ஊழல் அதிகாரிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.அனைவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.இதன் மூலம் கிடைக்கும் பலஆயிரம் கோடி நிதியின் மூலம் தமிழ்நாட்டில் வேலையில்லாத அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்


அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் ஜெயா டிவியில் குற்றவாளி 7402 -க்கு ஆதரவாக முழங்கி கொண்டிருக்கிறார்..!

விளங்கிடும் தமிழ்நாடு வாழ்வுரிமை...!!

ராம்செத் மாலின் வழக்கறிஞர் போன்றவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு களங்கம்...பணம் கொடுத்தால் எந்த சட்டத்தையும் வளைப்பார்..

என்னுடைய அப்பா எனக்கு 5 வயது இருக்கும் பொழுது ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார். அதற்கு பிறகு எனது அம்மா தான் எங்களை வளர்த்தார். அம்மாவின் அயராத உழைப்பு, உடல் நலம்( கர்ப்பப்பை கோளாறு) அவரை எனது பள்ளி இறுதி நேரத்தில் பலி கொண்டு விட்டது.. எனக்கு வயது 55 ஆண்டுகள் நிறைவு ஆகிறது...தாய்க்கு தலைமகனான என்னிடம் எனது அம்மா எப்பொழுதும் ஒரு வார்த்தை எனக்காக அடிக்கடிச் சொல்வார்..அந்த வார்த்தை எனக்கு மட்டும் அல்ல...!!
" எதற்க்காகவும் யார் காலிலும் விழக் கூடாது. ..சுயமரியாதை உயிரினும் மேலானது "@

கண்ணீர் அமைச்சரவையின் முதல் சட்டம்: இன்று முதல் தமிழர்களின் சொத்துக்களை ஊழல் செய்து, கொள்ளை அடிப்பது குற்றமல்ல ...@

அதிமுக அடிமை ஒருவன் சிறைவாயிலில் கிடந்த தமிழக மந்திரிகளுக்கு தண்ணீர் கூட கன்னடர்கள் தரவில்லை என்று தங்கள் சுயநலத்திற்கு பொய்களை கட்டவிழ்த்து விடுகிறான்... ஆனால் வேறொரு செய்தியாளரின் பதிவு இது.. //எந்தச் செய்தியையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில், சோர்ந்துபோய் சந்து முக்கில் உட்கார்ந்திருந்தோம். அப்போது அதை ஒட்டி இருந்த வீட்டைச் சேர்ந்த பெண்மணி, "ஏய் எல்லாம் வாங்கப்பா.. சோறு ரெடி.. பாசிப் பருப்பு சாம்பார்தான் வச்சிருக்கேன். கொற சொல்லாம சாப்பிடனும்" என்றார்.
நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு, அரை மனதோடு "பரவாயில்லங்க" என்று மறுத்தோம். அவர் பிடிவாதமாக தட்டைக் கையில் கொடுத்து சுடச்சுட சோறும் சாம்பாரும் ஊற்றினார்.
அடித்த வெயிலுக்கும் அப்போதிருந்த பசிக்கும் அந்த உணவு எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. பணம் கொடுக்க முன்வந்தபோது வாங்க மறுத்துவிட்டார்.
முதல் பந்தியில் இடத்தை மிஸ் பண்ணிவிட்ட முத்து கிருஷ்ணனுக்கு சுடுசோறும் ரசமும் கிடைத்தது.
பிறகு, சிறிது நேரம் கழித்து சூடாக டீ போட்டுக் கொடுத்தார்.
எனக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பாக விகடனில் படித்த, "ஏனு சாமி உடுத்தீரோ?" (என்ன ஐயா தேடுகிறீர்கள்?) என்ற கன்னடப் பின்னணியில் அமைந்த கதைதான் ஞாபகத்திற்கு வந்தது. புதிதாக ஒரு ஊருக்குச் செல்லும் ஒருவரிடம் மிக இயல்பாகப் பழகும் கன்னட தேசத்தவருடனான உரையாடல்தான் அந்தக் கதை.//@#

அதிமுக கட்சி அடிமைகளுக்கு மட்டும்..
“தன் தலைவரிடம் எல்லையற்ற அன்பையும் மரியாதையையும் கொண்டிருப்பது இயல்பான ஒன்றெனக் கருதலாம். ஆனால் தலைவரின் கட்டளைக் குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது வேறு. இரண்டாவது நிலையால் கேடான விளைவுகள் உண்டாகும். உயர்வான எதையும் மதிப்பது நல்ல பண்பாகும். அத்தன்மையில் உயர்ந்த கொள்கைகளையும் பண்பையும் கொண்டுள்ள மனி தனை மதிப்பது தேவையானதுதான். அதற்காக அவரி டம் கண்மூடித்தனமான விசுவாசியாக இருக்கக்கூடாது. தன் சுயமரியாதையை இழந்து தலைவரை வழி படுவது என்பது தன்னையே இழிவுபடுத்திக் கொள்வ தாகும். தலைவரை மதிப்பது என்பது தன் சுய அறிவு டன் சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை இழக்காத ஒன்றாக இருத்தல் வேண்டும். கண்மூடித்தனமாக வழிபடுதல் என்பது ஒருவனை முழு முட்டாளாக - அடிமையாக ஆக்கிவிடும்.”

பாபாசாகேப் அம்பேத்கர்@

கொள்ளை அடிப்பது, ஊழல் செயவது சரியானதொரு வழிமுறை என்று சதாரண மக்கள் வரை பரப்பி விடுவார்கள் போல..ஊழலை ஒழிப்பது இந்த அமைப்பு முறையை மாற்றியமைப்பதோடு தொடர்புடையதுதான்..ஆனால் ஊழலுக்கு எதிரான கருத்தாக்கங்களை, நடைமுறைகளை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்... சிறிய அசைவுகளையும் ஆதரிக்க வேண்டும்@

தமிழ்நாட்டில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் இனிமேல் உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்பீல் பண்ணி தீர்ப்பு வரும் வரை கீழமை நீதிமன்றங்கள் கொடுத்த தண்டனைகளை தண்டனைகள் என்று சொல்லக்கூடாது என்று நீதிமன்றங்கள், காவல்நிலைய வாயில்களில் உண்ணாவிரதங்கள் இருக்க தமிழக காவல்துறை அனுமதி வழங்குமா..?@

//படிப்பறிவற்ற, ஆர்வக்கோளாறு தொண்டர்கள் அன்புமிகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதை கூட பொறுத்துக் கொள்ளலாம். படித்த அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாக்காரர்கள் செய்யும் அலப்பரைகள் தமிழர்களை உலகளவில் கோமாளிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.//

சில தனி நபர்கள்..கூட கொள்ளைக்கு,ஊழலுக்கு ஆதரவாக இந்த சமூகத்தில்...இருக்கலாம்.. ஆனால் ஒரு மிகபெரும் நிறுவனம்.. அனைத்து கலைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட சினிமா துறையினர்... நிறுவனமாக... கொள்ளைக்கு,ஊழலுக்கு ஆதரவாக தெருவிற்கு வருவதை எப்படி புரிந்து கொள்வது...?
படைப்பாளிகளின் அறம், தார்மீகம், பற்றி வாய் கிழிய பேசும் கலை-இலக்கிய-எழுத்தாள ஜம்பவான்கள் ஏன் அமுக்கி வாசிக்கினர்...

தமிழ்நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு சினிமாக்காரர்கள்தான்.. சரியா..?@

ஜெயலலிதா கைதியாக அடைக்கப்பட்டுள்ள இந்த பரப்பன அக்ரஹாரம் சிறையில் கேரளாவின் அரசியல் தலைவர் மதானி அவர்கள் எல்லாவிதமான மனித உரிமைகளையும் மீறி பல ஆண்டுகளாக ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணை சிறைவைக்கப்பட்டு உள்ளார்..
ஜெயலலிதா- கருணாநிதி ஆட்சிகளில் மாற்று அரசியல் களமாடும் தோழர்களின் கைதுகள் வார கடைசி வேலைநாளான வெள்ளிக்கிழமைகளில்தான் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
தனக்கு வந்தா மனித உரிமை மீறல்..மற்றவர்களுக்கு வந்தால்..?@

தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனீயம் விஷேசமானது. எந்த இயக்கம் தோன்றி வளர்வதற்கு அடிப்படையானதொரு சமூக அமைப்பு தேவை என்பது சமூகவியலில் அடிப்படை பாலபாடம். அதனால்தான் பலமான பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கம் பெரியாரால் தமிழ்நாட்டில் கட்டி அமைக்கப்பட்டது. ..சோ..சு.சாமி, தினமணி.. THE HINDU...இன்றும் வர்ணாசர்ம நீதியை நிலைநாட்ட மக்களை திரட்ட மக்களிடம் நச்சை பரப்ப முயல்கின்றன . பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கத்தை நீர்த்து போகச் செய்து விட்டனர். பார்ப்பனீய கருத்தாக்க தலைமையை தமிழ்க மக்களை ஏற்க்ச் செய்வதில் வெற்றியும் பெற்று விட்டனர். அதை நோக்கி தமிழக மக்களை, இயக்கங்களை நகர்த்த திட்டமிடுகின்றனர். தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனீயத்தின் கருத்தியல் விஷேசமானது என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்புக்கு பிறகும் கூட சிறிதுகூட சுயவிமர்சனம் அற்றதாக மிகபெரும்பாலான பார்ப்பனர் கும்பல் உள்ளது அதனால் இன்னும் அறிவியல்வகைப்பட்ட பலமான பார்ப்பனீய ஒழிப்பு இயக்கம் தேவை@

படுகையும் பாலாறும் ஆகும். விக்கி மீடியா ஆங்கிலத்தில் பெருகற்கால காலம் ( Monolithic period ) என்று கிளிக் செய்தால் பாலாற்று படுகையில் உள்ள பல இடங்களை காட்டும்..அந்த தொன்மையாக நாகரிகத்திற்கு காரணமான பாலாற்றை ஜெயலலிதா- கருணாநிதி அரசாங்கங்கள் என்ன செய்துள்ளன. அவர்களின் அல்லகைகள் தங்கள் சுயநலத்திற்க்காக பாலாற்றை அழித்து விட்டனர். இந்த ஒரு காரணம் மட்டும் போதும் ஜெயலலிதா- கருணாநிதியுன் இந்த குற்றத்திற்க்காகவே தண்டிக்கப்பட வேண்டிய குற்ற வாளிகள் !! வடதமிழ்நாட்டை அழித்தவர்கள் ஜெயலலிதா- கருணாநிதி அரசாங்கள்!!@

அரிதினும் அரிதாக நீதிமன்றங்கள் வழங்கும் நல்ல தீர்ப்புகளை மக்கள் வரவேற்கவே செய்கின்றனர் .... 
//குற்றத்தின் தீவிரத்தன்மை, சொத்துகளின் அளவு, அவை குவிக்கப்பட்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையின் அளவை தீர்மானிக்க முடியும். அப்படி பார்க்கும்போது, இது கடுமையான தண்டனை விதிக்கத்தக்கது. எனவே, இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு), பாதிக்கு மேல் விதித்தால்தான், நீதி நிலைநாட்டப்படும்.//
ஜெயலலிதாவுக்குத் தண்டனை என்ன ?
துல்லியமான புதிய தகவல்
=========================================
1. ஊழல் தடுப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட இரண்டு விதிகளின் கீழ் 4 ஆண்டு சாதாரணச் சிறைத் தண்டனை ( simple imprisonment அதாவது சிறையில் வேலை செய்வது கட்டாயமில்லை. )
2. மேலும் மற்ற சட்டப் பிரிவுகள் சிலவற்றின் கீழ் 6 மாதச் சாதாரணச் சிறைத் தண்டனை.
3. மேற்கண்ட இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அதாவது மொத்தம் 4 ஆண்டுகள்.
4. இவை அல்லாது 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை . இது மேற்கண்ட 4 ஆண்டுத் தண்டனைக்குள் அடங்காது.
5. அபராதத் தொகையை அரசு வசூல் செய்ய, ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளில் உள்ள ஃபிக்செட் டெப்பாசிட், பாலன்ஸ் தொகை போன்றவை முதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
6. மீதி உள்ள தொகையை வசூல் செய்யும் முறை : 
கோர்ட் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ள அவரது தங்க, வைர நகைகளில் 7 கிலோ 40 கிராம் அளவுக்குத் தங்கத்தையும், அதே விகிதாசாரத்தில் வைரத்தையும் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
பிறகு உள்ள நகைகளில் போதுமானவற்றைத் தனியாக எடுத்து ரிசர்வ் வங்கிக்கோ அல்லது ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமோ விற்பனை செய்து வசூல் செய்ய வேண்டும்.
அதன் பிறகும் மீதம் உள்ள நகைகளை அரசே பறிமுதல் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
7. ஏற்கனவே அட்டாச் செய்யப்பட்டுள்ள லெக்ஸ் உள்ளிட்ட 6 கம்பெனிகளின் அசையாச் சொத்துகள் அனைத்தையும் அரசு பறிமுதல் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.Jawahar