Sunday, January 29, 2012


முத்துகுமார் மரண சாசனம்: ஒரு மீள் பார்வை

எந்த விடுதலை இயக்கமும் மரணங்களை, தியாகங்களை, அர்ப்பணிப்புகளை, இழப்புகளை எதிர் கொள்ளாமல் தனது இலட்சியத்தை அடைய முடியாது. தமிழீழ விடுதலைஇயக்கம் உலகில் உள்ள எந்த விடுதலை இயக்கத்திற்கு சளத்ததல்ல என்று வரலாற்றில் நிருபித்து உள்ளது இருப்பினும் இன்று பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. 

இந்த தியாகமும், வீரமும் எண்ணற்ற இளைஞர்களை தமிழகத்தில் அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது. இந்த இளைஞர்கள் அரசியல் நேர்மையும், அர்ப்பணிப்பில் உறுதியும். இலட்சியத்தில் சமரசமும் கொண்ட தலைமைகளால் உட்கிரகிக்கப்பட்டு செறிக்கப்பட்டு காயடிக்கப்பட்டு வருகின்றனர். 
முத்துகுமார் தியாகத்தை விமர்சையாக கொண்டாடும் வேளையில் அவர் உணர்ச்சி பிழம்பாய் எழுதி வைத்த மரண சாசனம் வரிகளை இன்று மீளபார்வை செய்தால் சிற்சில அசைவுகளைத் தவிர பெரும் மாற்றங்கள் ஏதும் மூன்று ஆண்டுகளில் நடைபெற வில்லை என்பது கண் கூடாதத் தெரிகின்றது.

முத்துகுமார் மரணத்தால் கிளர்ந்த எழுச்சி அவரின் மரண ஊர்வலத்திலேயே ஒட்டுக்காக அலையும் அரசியல் கட்சி தலைமைகளால் திசைத்திருப்பப்பட்டு மழுங்கடிக்கப்பட்டது.

இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் அரசுகளின் உதவியுடன் சிங்கள பாசிச அரசு ஈழத்தின் மீது ஈவு இரக்கமற்ற போரை நடத்தி முடித்தது. விடுத்லைப் புலிகளின் தலைமையும், அவர்களின் இராணுவ, சமூக, அரசியல் கட்டமைப்புளை சிதைத்து அழித்து, ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, பல இலட்ச மக்களை முள்வேலி முகாம்களில்  சிறைபிடித்து சித்ரவதை செய்து இரத்த வெள்ளத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்டது.
இந்த போரில் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு  உடல் ஊனமுற்றவர்களும், அனாதையாக்கப்பட்ட குழந்தைகளும், விதவையாக்கப்பட்ட பெண்களும்  தொடர்ந்து படும் அவலங்களும், துயர்களும் ஈரமுள்ளவர்களில் நெஞ்சு குலைகளைப் பதற வைப்பதாக உள்ளது.
சிறைப்பிடிக்கப்பட்டு, சித்ரவதை முகாமிகளில் உள்ள போர்க்கைதிகள்  கதி என்ன ஆயிற்று? சர்வதேசச் சட்டங்களும், மனித உரிமைகளும் அவர்கள் விசயத்தில் கடைபிடிக்கப்பட்டதா என்று எவரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.
சனநாக, கம்யூனிச மூகமுடிகள் அணிந்த இந்தியா, சீனா. ரஷ்யா, அமெரிக்கா என அனைத்து அரசுகளும் தங்களுக்குள்ள முரண்பாடுகளை தள்ளி வைத்து விட்டு ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசிள் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முறியடித்துள்ளன.

 ராசபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க எழுந்த தமிழக மக்களின் போராட்டங்கள் படிப்படியாக வடித்து வருகின்றது.
மூவர் தூக்கு தண்டணை த்து செய்ய எழுந்த எழுச்சி தற்காலிக ஒத்து வைப்பிற்குப்பின் தணிந்து உள்ளது.
மூன்றாண்டுகள் முடிந்த பின்பும் எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் முள்ளிவாய்க்காலுக்குள் சென்று உண்மை நிலையை அறிய முடியவில்லை. முள்ளிவாய்க்காளில்என்ன நடந்தது என்று முழுமையான தகவல்கள் இவ்வளவு தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த  உலகில் வெளிவராமல் புதைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடிப்படையான காரணம் தமிழீழப் போராட்டத்தின் நட்பு சக்திகளுக்கு இடையிலான ஒற்றுமையாக இல்லாதது மட்டுமே!
தமிழீழ விடுதலை இயக்கம் விடுதலைபுலிகள் ஆதரவாளர்கள், விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் என்று ஒற்றை அடையாளமாக சுருக்கி இணைய தளங்களிலும் நாளேடுகளிலும் ஒவ்வொருவரையும் கடித்து  குதறாத குறையாமல் அதைவிட அதிகமாக தடித்த வார்த்தைகளால் குதறிக் கொண்டு இருக்கிறார்கள். உலக முழுவதும் விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களுக்கு நட்பு சக்திகள் என்ற பரந்தப்பட்ட வளையம் இருந்தன. இருக்கின்றன. விடுதலை புலிகள் இயக்கத்திற்கு அத்தகைய பரந்த பட்ட நட்பு முகாம், வளையம் இல்லாத போனதற்கு புறநிலை, அகநிலை காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்

பரந்தப்பட்ட பார்வையில் ஈழ விடுதலையில் ரண்டு முகாம்கள் உள்ளன. மனிதகுல விடுதலைக்கான சனநாயகத்திற்கான, மனித உரிமைகளுக்கான, சமத்துவத்திற்கான வரலாற்று சக்கரங்களை முன்னோக்கி உந்தித் தள்ளும் முகாம். இவற்றையெல்லாம் வெறுமனே வார்த்தை ஜாலங்களாக்கி கொண்டு நிலவுன்ற ஒடுக்கு முறையைத் தக்க வைக்க அநீதியான போர்களை நடத்தும் எதிர் முகாம்.

*விடுதலை புலிகள்
*விடுதலை புலிகளை எந்த விமர்சனமுமின்றி முழுமையாக ஆதரிக்கும் சக்திகள், பல்வகைப்பட்ட தமிழ் தேசிய இயக்கங்கள், குழுக்கள்.
*குறைந்த அளவிற்கு புலிகளை விமர்சனம் செய்யும் சக்கிகள், இயக்கங்கள்
*கடுமையான விமர்சனத்துடன் புலிகளை, ஈழவிடுதலையை ஆதரிக்கும் சக்திகள், இயக்கங்கள்
*புலிகளைப் புறந்தள்ளி விட்டு, ஈழவிடுதலை ஆ£ரிக்கும், முன்னெக்கும் சக்திகள், குழுக்கள்
*மனித உரிமைகள், குடியுரிமை ஆர்வலர்கள், இயக்கங்கள்
இந்த சக்திகளின் பின்னுள்ள பரந்து பட்ட பல்வகையான பின்புலங்களை,  அணிச்சேர்கைகளை உள்ள மக்கள் திரள்கள்.

தமிழக, இந்திய, இலங்கை உலக அளவில் உள்ள இவைகளின் அணிச்சேர்க்கைதான் ஈழ விடுதலைக்கான நட்பு முகாம்.

*பாசிச சிங்கள அரசும், சிங்கள இனவெறி குழுக்கள்.
*இதன் பிரதான பங்காளியான இந்திய அரசும், ஆளும் கட்சிகளும்.
*சீன, பாக்கிஸ்தான், அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு வல்லரசுகளும், அதன் அடிவருடியான அரசுகளும்.,
*இவைகள் பின்னுள்ள ஆளும் கட்சிகள், அதிகா வர்க்கம், அதன் பின்னுள்ள மக்கள் கூட்டம்,
*ஈழவிடுதலைக்கும் நட்பாய் இருப்பதாக நடித்துக்கொண்டு உண்மையில் துரோகம் செய்யும் அரசியல் கட்சிகள், சக்திகள்.
*தனிநபர் வன்முறையை ஊதிப்பெருக்கி அரசு பயங்கரவாதத்தை அதன் கீழாக தணிந்த குரலில் பேசும் மனித உரிமை ஆர்வலர்கள்.

தமிழக, இந்திய, உலக அளவில் உள்ள இவைகளின் அணிசேர்க்கைத்தான் ஈழவிடுதலைக்கான பகை முகாம்.

ன்றைய உலகமாயமாக்கப்பட்ட சர்வதேசிய சூழலில் பல்வகை ர்க்கங்களாக, குழுக்களாக மேலும் மேலும் பகுக்கப்பட்டு இருக்கும் மக்கள் திரள்களின் பிளவுகளை உள்வாங்கி புரிந்து கொண்டால்த்தான், அவைகள் இருந்தலுக்கான நியாங்களை உணர்ந்தால்தான், ஈழவிடுதலையின் நட்பு, பகை முகாம்களின் புறவயப்பட்ட இருத்தல்களை புரிந்து கொள்ள முடியும்.
இதைத்தான் உணர்ச்சவயப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பட்ட மக்களையும் ஈழத்தில் நடைபெறும் போருக்கு எதிராக அணிசேரும்படி முத்துகுமார் தனது மரண சாசனத்தில் முன் வைத்துள்ளார்.

இன்று ஈழவிடுதலைக்கான பகை முகாமைச் சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டுதான் காய்களை நகர்த்தி வருகின்றனர். நட்பு முகாமில் உள்ளவர்கள் பற்றி நாம் சொல்ல தேவையில்லை.

விடுதலை புலிகளின், ஈழபோராட்டத்தின் வளமான செழுமையான அனுபவங்களை விமர்சனரீதியாக உட்கிரகித்து கொண்ட புதிய பரந்தபட்ட மக்கள்திரளின் ஐக்கிய முன்னணியும், அதனை வழிநடத்தும் நேர்மையான, புதிய தலைமையும், அமைப்பும் தான் இன்றையத் தேவை! முத்துக்குமார் போன்ற எண்ணற்ற தியாகிகளின் கனவை அப்பொழுதுதான் நினைவாக்க முடியும்!.

Saturday, January 21, 2012


ஜெய் பீம் காம்ரேட்: ஆவணப்படம் வரலாற்றின் குறுக்கு வெட்டில் பயணித்த அனுபவம்
         ஆயிரம் சினிமாகாரர்கள், டி.வி காரர்கள் செய்ய முடியாததை……ஆனந்த் பட்வர்தனின் நிகழ்கால வரலாற்றைக் விமர்சனக் கதைப்பாணியில் விவரிக்கும் இந்த ஆவணப்படம் கலை அழகுடன் சொல்லி இருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டு கைதட்டலுக்கு ஏங்கும் சினிமாக்களுக்கு இடையில்  இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்த 10  தடவைகளுக்கு மேலாக கிடைத்த  கைதட்டல்கள் சினிமா மொழியை அதன் உள்ளார்ந்த அர்த்ததில் நேசிக்கும் மனிதர்கள் கிடைத்த மாபெரும் வெற்றி.

          கொடூரச் சாதி சமூகம், அதன் தொடரும் மனிதத்தன்மையற்ற  அவலங்கள், சுரண்டல்கள், அதை கட்டிகாக்கும் அரசை, அதிகாரவர்க்கத்தை, நீதித்துறையை,  ஆளும்வர்க்க அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்தி விமர்சிக்கிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய தலித் இயக்கங்களை, இடதுசாரிகளை, மாவோஸ்டுகளை காட்சி மொழியிணுடாக பருண்மயாக விமர்சிக்கிறது.

          அம்பேத்கார் சிலைக்கு அவமதிப்பு செய்தத்திற்கு எதிராக கிளர்ந்து போராடிய தலித் மக்களை சுட்டு கொன்றதால் தாங்கமுடியாத மன உளச்சலில் விலாஸ் கோக்ரே  என்ற மாவோஸ்ட் கட்சியின்  அவான் நாட்ய மன்சின் புரட்சி பாடகர் தற்கொலை செய்வதுடன் இந்த படம் துவங்குகிறது. அந்த அரசு பயங்கரவாதத்தின் கோடுரம், அதனை தொடர்ந்து நடந்த போராட்டங்கள், விசாரணை கமிசன், நீதிமன்ற விசாரணை, டாக்டர் அம்பேத்கார் போராட்ட வரலாறு குறிப்புகள், விலாஸ் கோக்ரே  குடும்பம், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பம், தலித் இயக்கங்கள் அதனை எதிர் கொண்ட விதங்கள், ஒட்டு அரசியல் கட்சிகளின் எமாற்று சித்து வேலைகள், இந்து மதவெறியர்களின் வளர்ச்சி, அவான் நாட்ய மன்சின் மாற்றங்கள், ராமபாய் காலனியின் மாற்றங்கள், சமூகத்தில் எற்ப்பட்ட வளர்ச்சி, தலித் மக்களிடம் ஏற்படுத்திய வளர்ச்சி,  உலகமமாக்கலின் விளைவுகள். . . .  14 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு, ஆயுள் தண்டனை அடைந்த போலிஸ் அதிகாரி ஜெயிலுக்கு அனுப்பாமல் மருத்துவமனைக்கு சொகுசு அளிக்கும் அரசு, கபீர் நாட்ய மன்சின் பாடகர்களின் எழுச்சி பாடல்கள்,  அந்த பாடகர்கள் தலைமறைவான பின்னனி  . . . என்று  14 ஆண்டுகள் சிறுசிறு பிரேம்களாக படமாக்கபட்டவகளை  விலாஸ்சின் ஒங்கார பாடல்களின் பின்னனியில் சிறந்த காட்சி மொழி ஆளுமையுடன், எள்ளலும், நம்பிக்கையும், எளிய மக்களின் போராட்ட குணம்சங்களையும் ஆனந்த் பட்வர்தன் கலை ஆளுமையுடன், செய்நேர்த்தியுடன் நம்முன்  3 ½ மணி இருக்கையில்  கட்டி போடவைத்துள்ளது.

                ஆவணப்படம் என்றால் வெறும் தரவுகள் என்ற மாயை உடைத்து நொறுக்கி தள்ளி,   அனைத்து மனித உணர்வுகளையும் இழை இழையாய் கோர்த்து  காட்சி பதிவு இணைப்பு, இசை, ஒலி, பாடல் சேர்க்கை, நேர்த்தியான எடிட்ங் இணைப்பு …என அனுபவ முதிர்ச்சியுடன் சினிமா மொழியின் ஆளுமை நேர்த்தியுடன்  செய்யப்பட்ட இது புதிய பரிணாமமாகும்.   இன்னும் ஒவ்வொரு சிறுசிறுக் காட்சிகளின் இணைப்புகள் ஏற்ப்படுத்தும் உணர்வுகளை நண்பர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். இதுதான் இன்றையச் சினிமாக்கள் விரித்து வைத்துள்ள மாயவலைகளில் இருந்து மக்களை விடுவிக்கும். வரலாற்றை மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் கடமை நம் அனைவருக்கும், காட்சி ஊடகத்திற்கு அதிகம் உண்டு   இந்த நோக்கில் கூடங்குளம் போராட்டம், கீழ்வெண்மணி, தாமிரபரணி, கொடியங்குளம்……..  இன்னும் தமிழீழப் போராட்டத்தையும் ஆவணப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
 
      இன்னும் நிறைய சொல்லலாம்……
      இந்த படம் பழைய நினைவுகளை கிளரி விட்டது. வரலாறாக வாழ்ந்த மனிதர்களுடன் ஏதோ ஒரு விதத்தில் பயணம் செய்தது கண்களைப் பனிக்கிறது.

        தோழர்கள் விலாஸ் கோக்ரே, கத்தர், வர வரராவ், சம்பாஜி பகத்துடன் அனைத்திந்திய புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் அங்கமாய் இருந்து வாழ்வை அர்த்தமுள்ளத்தாக்கிய நினைவுகள் பசுமையாய் நிழலாடுகிறது..... 18, 19 ஆம் நூற்றாண்டுகளின் சீர்த்திருத்த இயக்கங்களின் தொடர்ச்சியும், இன்றைய சமூக, புரட்சி இயக்கங்களுக்கும் உள்ள தொடர்ப்பு பற்றிய விவாதம் அது. விலாஸ் கோக்ரேக்கு மாராட்டி மொழி மட்டும் தெரியும் எனக்கு அவரின் மொழி புரியாது. ஆனால் அவரின் பாடல்கள்   உணர்வையும், உணர்ச்சிகளையும் மொழியை தாண்டியது. விலாஸ் கோக்ரே குழுவினர் அனைத்து நிகழ்த்து கலை நிகழ்ச்சிகளிலும் தொடக்கம் கபீர்தாஸின் ஒரு பாடலுடன் தொடங்கும் என விலாஸ் சொன்னார். அந்த வரிகள்….

    “குயவனிடம் மிதிவாங்கி கொண்டிருக்கும் மண் சொன்னது எனக்கும் ஒரு காலம் வரும் அப்பொழுது பார்த்து கொள்கிறேன்”
    இதனுடன்தான் எப்பொழுதும் விலாஸ் கோக்ரே  பாடலை ஆரம்பிப்பார்……..

     இந்த வரிகளை எப்போழுது நினைவாகும்…..

     இந்த ஆவணப்படம் அந்த  அர்த்தத்தை உள் வாங்கி உள்ளதாகவே எனக்குப் பட்டது.
Saturday, January 7, 2012

தினமணி கதிர் உதவி ஆசிரியர் புதிய ஜீவாவின் அணிந்துரைஅனுபவம்... உண்மை... எளிமை!

தோழர் நடராசன் எனக்கு முதன்முதலில் அறிமுகமானது தோழராகத்தான். நான் இதுவரை அவரை அறிந்து வைத்திருந்ததும் அப்படித்தான். அவருக்குள் ஒரு படைப்பாளி ஒளிந்து கொண்டு இருந்ததை அவர் ஒருநாளும் வெளிக்காட்டியதில்லை.
இந்தச் சிறுகதைகளை என்னிடம் அவர் கொடுத்தபோதும், இக்கதைகள் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருக்கும் என்ற முன் முடிவுடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.
மிகச்சிறந்த படைப்பாளிக்குரிய மொழி ஆளுமை, சிறுகதை தொழில்நுட்ப நேர்த்தி என்னை வியக்க வைத்தது. எப்படி இது சாத்தியம்? என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை என்னால் விடை காண முடியவில்லை.
நிறைய எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து, தன்னை எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொள்ள படாதபாடு படும் எழுத்தாளர்களின் சொற்குவியல்களுக்கு நடுவில் ஒரு மின்னல் போல இறங்கியிருக்கிறது இச் சிறுகதை தொகுப்பு.
அனுபவங்களும், அவற்றைச் சொல்லும் பகட்டில்லாத சொற்களும், வாழ்க்கை ஒரு போராட்டம் எனப் பார்க்கும் பார்வையுமே இச்சிறுகதைகளின் வெற்றிக்கான காரணங்கள் எனலாம்.
முற்போக்கு இலக்கியங்களில் பிரச்சார நெடி அடிக்கும் என்று முகஞ்சுளிப்பவர்கள் இச்சிறுகதைகளைப் படித்தால் தங்களுடைய கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்பது உறுதி.
 எழுதத் தெரிந்த யாரும் இக்கதைகளை எளிதில் எழுதிவிட முடியாது.
நடராசன் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் காரணமாகக் காவல்துறையின் சித்ரவதைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த சித்ரவதைகளின் வலி நம் இதயத்தை நடுங்கச் செய்கிறது. நமது காலத்தின் எத்தனை படைப்பாளிகளுக்கு இந்த வலியை வெளிப்படுத்த முடியும்?
மாற்றுத் திறனாளியான நடராசனின் அனுபவங்களையும் எல்லாராலும் எளிதாக எழுதிவிட முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக நடராசனின் மக்கள் நலன் சார்ந்த கண்ணோட்டம் இத் தொகுப்பு முழுவதும் தன் உரத்த குரலால், தொகுப்பு முழுவதையும் அதிர்விக்கிறது.
தமிழின் பிற படைப்பாளிகளுக்குக் கிட்டாத இந்த மூன்றும்தான் இச்சிறுகதைத் தொகுப்பை, தமிழ் படைப்புலகில் வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.
தான் ஒரு பெரிய படைப்பாளி என்ற எண்ணம் எதுவுமில்லாமல், தனக்குத் தோன்றியதை எழுத வேண்டும், பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதால், தேவையற்ற சொல் அலங்காரங்களோ, பகட்டுகளோ இல்லாமல் மிக எளிமையாக இத் தொகுப்பில் உள்ள  கதைகள் நம் முன் உணர்வுப்பூர்வமான காட்சிகளாக விரிகின்றன.
நடராசனின் உள்ளத்தின் உண்மையளி, அவருடைய இச்சிறுகதைகளுக்கு உயிர்ப்பைத் தந்திருக்கிறது.
சிறுகதைகளை வாசிக்கும் நமது மனதுக்கும்.

புதியஜீவா
05.12.2011