Saturday, January 21, 2012


ஜெய் பீம் காம்ரேட்: ஆவணப்படம் வரலாற்றின் குறுக்கு வெட்டில் பயணித்த அனுபவம்
         ஆயிரம் சினிமாகாரர்கள், டி.வி காரர்கள் செய்ய முடியாததை……ஆனந்த் பட்வர்தனின் நிகழ்கால வரலாற்றைக் விமர்சனக் கதைப்பாணியில் விவரிக்கும் இந்த ஆவணப்படம் கலை அழகுடன் சொல்லி இருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டு கைதட்டலுக்கு ஏங்கும் சினிமாக்களுக்கு இடையில்  இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்த 10  தடவைகளுக்கு மேலாக கிடைத்த  கைதட்டல்கள் சினிமா மொழியை அதன் உள்ளார்ந்த அர்த்ததில் நேசிக்கும் மனிதர்கள் கிடைத்த மாபெரும் வெற்றி.

          கொடூரச் சாதி சமூகம், அதன் தொடரும் மனிதத்தன்மையற்ற  அவலங்கள், சுரண்டல்கள், அதை கட்டிகாக்கும் அரசை, அதிகாரவர்க்கத்தை, நீதித்துறையை,  ஆளும்வர்க்க அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்தி விமர்சிக்கிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய தலித் இயக்கங்களை, இடதுசாரிகளை, மாவோஸ்டுகளை காட்சி மொழியிணுடாக பருண்மயாக விமர்சிக்கிறது.

          அம்பேத்கார் சிலைக்கு அவமதிப்பு செய்தத்திற்கு எதிராக கிளர்ந்து போராடிய தலித் மக்களை சுட்டு கொன்றதால் தாங்கமுடியாத மன உளச்சலில் விலாஸ் கோக்ரே  என்ற மாவோஸ்ட் கட்சியின்  அவான் நாட்ய மன்சின் புரட்சி பாடகர் தற்கொலை செய்வதுடன் இந்த படம் துவங்குகிறது. அந்த அரசு பயங்கரவாதத்தின் கோடுரம், அதனை தொடர்ந்து நடந்த போராட்டங்கள், விசாரணை கமிசன், நீதிமன்ற விசாரணை, டாக்டர் அம்பேத்கார் போராட்ட வரலாறு குறிப்புகள், விலாஸ் கோக்ரே  குடும்பம், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பம், தலித் இயக்கங்கள் அதனை எதிர் கொண்ட விதங்கள், ஒட்டு அரசியல் கட்சிகளின் எமாற்று சித்து வேலைகள், இந்து மதவெறியர்களின் வளர்ச்சி, அவான் நாட்ய மன்சின் மாற்றங்கள், ராமபாய் காலனியின் மாற்றங்கள், சமூகத்தில் எற்ப்பட்ட வளர்ச்சி, தலித் மக்களிடம் ஏற்படுத்திய வளர்ச்சி,  உலகமமாக்கலின் விளைவுகள். . . .  14 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு, ஆயுள் தண்டனை அடைந்த போலிஸ் அதிகாரி ஜெயிலுக்கு அனுப்பாமல் மருத்துவமனைக்கு சொகுசு அளிக்கும் அரசு, கபீர் நாட்ய மன்சின் பாடகர்களின் எழுச்சி பாடல்கள்,  அந்த பாடகர்கள் தலைமறைவான பின்னனி  . . . என்று  14 ஆண்டுகள் சிறுசிறு பிரேம்களாக படமாக்கபட்டவகளை  விலாஸ்சின் ஒங்கார பாடல்களின் பின்னனியில் சிறந்த காட்சி மொழி ஆளுமையுடன், எள்ளலும், நம்பிக்கையும், எளிய மக்களின் போராட்ட குணம்சங்களையும் ஆனந்த் பட்வர்தன் கலை ஆளுமையுடன், செய்நேர்த்தியுடன் நம்முன்  3 ½ மணி இருக்கையில்  கட்டி போடவைத்துள்ளது.

                ஆவணப்படம் என்றால் வெறும் தரவுகள் என்ற மாயை உடைத்து நொறுக்கி தள்ளி,   அனைத்து மனித உணர்வுகளையும் இழை இழையாய் கோர்த்து  காட்சி பதிவு இணைப்பு, இசை, ஒலி, பாடல் சேர்க்கை, நேர்த்தியான எடிட்ங் இணைப்பு …என அனுபவ முதிர்ச்சியுடன் சினிமா மொழியின் ஆளுமை நேர்த்தியுடன்  செய்யப்பட்ட இது புதிய பரிணாமமாகும்.   இன்னும் ஒவ்வொரு சிறுசிறுக் காட்சிகளின் இணைப்புகள் ஏற்ப்படுத்தும் உணர்வுகளை நண்பர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். இதுதான் இன்றையச் சினிமாக்கள் விரித்து வைத்துள்ள மாயவலைகளில் இருந்து மக்களை விடுவிக்கும். வரலாற்றை மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் கடமை நம் அனைவருக்கும், காட்சி ஊடகத்திற்கு அதிகம் உண்டு   இந்த நோக்கில் கூடங்குளம் போராட்டம், கீழ்வெண்மணி, தாமிரபரணி, கொடியங்குளம்……..  இன்னும் தமிழீழப் போராட்டத்தையும் ஆவணப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
 
      இன்னும் நிறைய சொல்லலாம்……
      இந்த படம் பழைய நினைவுகளை கிளரி விட்டது. வரலாறாக வாழ்ந்த மனிதர்களுடன் ஏதோ ஒரு விதத்தில் பயணம் செய்தது கண்களைப் பனிக்கிறது.

        தோழர்கள் விலாஸ் கோக்ரே, கத்தர், வர வரராவ், சம்பாஜி பகத்துடன் அனைத்திந்திய புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் அங்கமாய் இருந்து வாழ்வை அர்த்தமுள்ளத்தாக்கிய நினைவுகள் பசுமையாய் நிழலாடுகிறது..... 18, 19 ஆம் நூற்றாண்டுகளின் சீர்த்திருத்த இயக்கங்களின் தொடர்ச்சியும், இன்றைய சமூக, புரட்சி இயக்கங்களுக்கும் உள்ள தொடர்ப்பு பற்றிய விவாதம் அது. விலாஸ் கோக்ரேக்கு மாராட்டி மொழி மட்டும் தெரியும் எனக்கு அவரின் மொழி புரியாது. ஆனால் அவரின் பாடல்கள்   உணர்வையும், உணர்ச்சிகளையும் மொழியை தாண்டியது. விலாஸ் கோக்ரே குழுவினர் அனைத்து நிகழ்த்து கலை நிகழ்ச்சிகளிலும் தொடக்கம் கபீர்தாஸின் ஒரு பாடலுடன் தொடங்கும் என விலாஸ் சொன்னார். அந்த வரிகள்….

    “குயவனிடம் மிதிவாங்கி கொண்டிருக்கும் மண் சொன்னது எனக்கும் ஒரு காலம் வரும் அப்பொழுது பார்த்து கொள்கிறேன்”
    இதனுடன்தான் எப்பொழுதும் விலாஸ் கோக்ரே  பாடலை ஆரம்பிப்பார்……..

     இந்த வரிகளை எப்போழுது நினைவாகும்…..

     இந்த ஆவணப்படம் அந்த  அர்த்தத்தை உள் வாங்கி உள்ளதாகவே எனக்குப் பட்டது.




No comments:

Post a Comment