Tuesday, October 21, 2014

மக்கள் இணையம் - தமிழக இயற்கைவளப் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்புக் கருத்தரங்கம், காஞ்சிபுரம். 27.07.2014.கி. நடராசன், மக்கள் வழக்குரைஞர் கழகம்


2 comments:

  1. Waste Management -கழிவு மேலாண்மை என்பது பற்றி எந்த திட்டங்களும் இல்லாமல் பொதுசொத்தான நீர்நிலைகள், ஏரிகளை கழிவு கொட்டும் இடங்களாக கருதப்படுகின்றன.
    ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளுர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகளை குப்பை தொட்டிகளாக கருதி இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இராசயன- மங்காத கழிவுகளை கொட்டி சீரழிக்கின்றன..இந்த ஓப்பந்தங்கள் ஏரிகளை இல்லாமல் செய்து விடும்..பின் சென்னை, திருபெரும்புதூர் , திருவள்ளுர் மாவட்டங்களில் உள்ள 2 கோடி மக்கள் குடிநீர், மற்றும் பிற தேவைகளுக்கான நீரை என்கிருந்து பெறுவது... எல்லா தேவைகளுக்கும் நீரை பணம் கொடுத்துதான் 2 கோடி மக்கள் வாங்க வேண்டும்..அதற்கு பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா போடுவார்...எல்லாம் பன்னாட்டு கம்பெனிகள் சேவைகளில் ஆட்சியாளர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்..16 நூற்றாண்டுகளாக நம் முன்னோரிகள் கூட்டு உழைப்பு, கூட்டு சிந்தனையால் உருபெற்ற பல ஏரிகள் நம் தலைமுறையில் அதுவும் 20 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு விட்டன.. வருங்கால் தமிழ் சமூகம் நம்மை மன்னிக்குமா..?

    ReplyDelete
  2. செங்கல்பட்டு மாவட்டம் (இன்றைய ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளுர் மாவட்டங்கள்) ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்டன..… ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், இணைப்பு கால்வாய்கள் நிறைந்த இருந்தன… 16 நூற்றாண்டுகளுக்கு முன் பல்லவர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டு…. பிற்க்கால சோழர் ஆட்சியில் செழுமைப்படுத்தப்பட்டு, ஆங்கிலேடர் ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்பட்டன….இந்த மாவட்டங்கள் செ 16 நூற்றாண்டுகளாக நம் முன்னோரிகள் கூட்டு உழைப்பு, கூட்டு சிந்தனையால் உருபெற்ற பல ஏரிகள் நம் தலைமுறையில் அதுவும் 20 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு விட்டன …. புதிய பொருளாதார கொள்கை என்றும், வளர்ச்சி என்றும் ஏரிகளை, நீர்நிலைகளை குப்பை தொட்டிகளாக கருதி இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இராசயன- மங்காத கழிவுகளை கொட்டி சீரழிக்கின்றன..நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. தண்ணீருக்காக, 1,200 - 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.'மழை இந்த வருஷமும் ஏமாத்திடுச்சே... தண்ணிக்கு அல்லாட வேண்டியது தான்...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், தமிழக மக்கள் கூறுவது வழக்கம். மழை பெய்யவில்லை என, வருத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், கொட்டிய மழைநீரையும் சேமிக்காமல்,ஏரிகளை, நீர்நிலைகளை அழித்து விட்டு , கழிவுகளை கொட்டி வீணடித்துவிட்டு, 'வருண பகவான் ஏமாத்திட்டாரு' என, குறைகூறுவது சரியல்ல.
    குடிநீர் உள்ளிட்ட அனைத்து, தமிழக நீர் தேவைக்கும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை தான் பிரதானம். ஆண்டின் சராசரி மழை அளவு, 925 மி.மீ., என்றாலும், இந்த அளவை தமிழகம் எட்டிப் பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன.போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஏரிகள் அழிக்கப்பட்டதால்…..பெய்யும் மழை நீரில், 40 சதவீதம் வரை, கடலில் வீணாக கலக்கிறது. ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருந்த பகுதிகளிலும், வியாபார நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நிலைமை சிக்கலாகி, நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு போய் விட்டது.தாகம் தீர்க்கும் தண்ணீருக்காக மக்கள் பல கி.மீ., அலைந்து திரியும் நிலை, பெரும்பாலான மாவட்டங்களில் நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில், டெல்டா பாசன பகுதிகளிலேயே விவசாயம் முடங்கியது என்றால், மற்ற பகுதிகளைக் கேட்க வேண்டியதில்லை.
    விவசாயம், குடிநீருக்கான தண்ணீர் எடுக்க, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், 1,200 - 1,300 அடி ஆழம் வரை, ஆழ்துளை அமைக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக, சென்னை, திருவள்ளுர், தஞ்சாவூர், கோவை மாவட்டங்களில், 250 முதல் 400 அடி வரை போடப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில், 1,000 அடி என்ற அளவிலேயே உள்ளது என, தமிழகத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் உள்ள முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.'நில அதிர்வைக் கூட கண்டு பிடித்து விட முடிகிறது; நீரோட்டத்தைத் தான் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தான், 1,300 அடி வரை போக வேண்டியுள்ளது' என, ஆழ்துளை கிணறு அமைக்கும் ஊழியர்கள் புலம்புகின்றனர். தற்போது இந்த நிலை என்றால், எதிர்கால நிலைமை இன்னும் மோசமாகலாம். அதற்கு முன், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கவும், தேவையான நீர் ஆதாரங்கள், கட்டமைப்புகளை, ஏரிகளை, நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்கவும், உருவாக்க வேண்டும். ஏரிகளை, நீர் ஆதாரங்களை பாதுகாப்பதை ,மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அவசியத் தேவை; அலட்சியம் காட்டினால் மண்ணுக்குள் ஈரத்தை பார்ப்பதே அரிதாகிவிடும் என்பது தான், நிதர்சன உண்மை. கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யுக்கு அலையும் முட்டாள்களாக நாம் கிருஷ்ணா..கிருஷ்ணா.. கிருஷ்ணா நீர் என்று புலம்பக் கூடாது..ஏரிகளைப், ஏரி இணைப்பு கால்வாய்களைப் பாதுகாப்போம்!! தடுப்பு அணைகள் கட்ட தமிழக அரசை வலியுறுத்துவோம்!

    ReplyDelete