நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், ஒடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாமல் சிறு சிறு நீர்சுழிகள் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன. சிறுசிறு சுழிகள் இணைந்து பெரிதாகி சுழலுகின்றது. நினைவுகள் சுழன்று சுழன்று ஆழமாய் உள்ளே உள்ளே தனக்குள் சென்று கொண்டே இருக்கிறது,
நேற்று அலுவலகத்தில் செய்த செயல் வெளியில் செல்வதகே வெட்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது, குடித்துவிட்டு போதையில் ஒரு பெரிய கலாட்டவை அரங்கேற்றி இருந்தேன். மொடா குடி போதையில் பத்து கிலோமீட்டர் தொலைவு தள்ளி இருந்த வீட்டிற்கு
எப்படி சேதாரம் இல்லாமல் வந்து சேர்ந்தேன் என்று நினைவில்லை. யார் செய்த புண்ணியமோ?
தொழிற்சங்கத்தின் பொதுபேரவை கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவரும். நானும் மப்பு ஏற்ற டாஸ்மார்க் சென்றோம், நான் உதவி செயலாளராக இருந்தேன். எம்,சி,ஆப் வாங்கி இருவரும் குடித்தோம் என்பது மட்டும்தான் நினைவில் சுழல்கிறது. அதற்காக மேல் நினைவுகள் செல்ல மறுக்கின்றது.
மங்கலான நினைவுகள் இன்றும் அதிகமாக குடித்தோம், எதை பற்றியோ ஆரம்பித்து யாரையோ திட்டி இருக்கிறேன். வருத்தமுடன், சங்கடமும் நெஞ்சில் நிலவின.
நண்பர் அருளிடம் சென்று தலையை சொறிந்து நிற்கின்றன.
“வாங்க தலைவரே எப்படி இருக்கீங்க”
கிண்டலக்கிறார்.
“என்ன நடந்தது.”
“பண்ண கலாட்டவே ஞாபகமில்லையா? உன்னை சமாதானம் பண்ணி விட்டிற்கு அனுப்பவதற்குள் நாங்கள் நொந்து போய்விட்டோம். உங்களுக்குதான் ஒத்து வரல்லன்னு தெரிகிறதல்ல ஏன் குடிக்கிறீங்க”.
சங்கடத்தில் நெளிந்தேன்.
பேரவை நடந்து கொண்டு இருந்தது, புரமோசன் விசயமாக விவாதம் நடந்தது, பேசிய எல்லாரும் அதிகாரிகள் குற்றம சாட்டிக் கொண்டிருந்தனர். நீங்கத போதையில் நீங்க தள்ளாடிக் கொண்டே எழுந்தீங்க, மேடைக்கு வந்து மைக்கை கெட்டியாக புடிச்சிக்கிட்டிங்க,,, நானும் பேசனும்,, பேசனும் என்று திரும்ப திரும்ப உளுறினீங்க. அப்புறம் தான் அந்த கூத்தே நடத்தச்சி”.
கிண்டல் பார்வை எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது,
“அதிகாரிகளை சிறிது நேரம் திட்டினீங்க தொழிற்சங்கம் சரியில்லை. தீவிரமாக செயல்படவில்லை. என்று குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீங்க அப்புறம்.....”
சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்.
“நந்தகோபாலை பார்த்து இவண் என்னை நொண்டின்னும் சொல்லிட்டான். நொண்டி,, நொண்டின்னு திட்டறான், ,, நீங்கல்லாம் கேளுங்க ,,, கேளுங்க,,, திரும்ப திரும்ப இப்படியே சத்தம் போட்டு கத்தினீங்க”.
நந்தகோபாலுக்கு முதலில் என்னவென்றே விளங்கவில்லை.
எனக்கு என்ன நடந்தது என்று பொறி தட்டியது போல புரிந்தது. போதையில் நந்தகோபாலை சத்தம் போட்டதும். அதற்கு அவர் நான் அப்படி ஏதுவும் சொல்லவில்லை என்று முகம் வெளுத்து அலறியபடி சொல்லியது நினைவில் சுழன்றது. மிண்டும் மிண்டும் நொண்டி என்று திட்டினார் என்று நான் கத்தி கலாட்டா செய்தேன், ஒப்பாரி வைத்து அழுதேன், போதையில் சோகம் தலைக்கேறி தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது, நண்பர்களுக்கு எப்படி சூழலை சமாளிப்பது என்று புரியவில்லை. ஒரு வழியாக என்னை சமாதானபடுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்துகு படாதபாடு பட்டனர்.
நந்தகோபாலிடம் மன்னிப்பு கேட்டேன்.
“பராவாயில்லிங்க,,, நான் எப்பவும் உங்களை அப்படி சொல்லவில்லையே. போன வாரம்கூட ஓட்டலில் டிபன் சாப்பிட்டபோது நான் பில்லை கொடுக்கிறதா சொல்லியும் நீங்க மறுத்துவிட்டு எனக்கும் சேர்த்து பில் கொடுத்தீர்கள்”.
“ஆமாம்,,, ஆமாம்”
பூம் பூம் மாடு தலையை ஆட்டினேன்.
நினைவுகளின் ஆழத்தில் தூர்வாறி தூர்வாறிக் கொண்டே சென்றேன். பளீரென முளையில் மின்னல் தாக்கிய உணர்வு! நந்தகோபாலை பார்த்து ஏன் அப்படி கத்தினேன். கலாட்டா செய்தேன்.
நொண்டி என்று என்னை யாரும் அழைப்பது இல்லை, மைய அரசு குமாஸ்தா,,, நடுத்தர வர்க்கம் இப்படியெல்லாம் அழைப்பதில்லை. நொண்டி என்று இழிவு தொனியில் அழைத்தது எனது நினைவில் வரவில்லை.
நினைவுகளின் ஆழ்மன இரத்தகசியும் மடிப்புகளின் மின்சாரம் தாக்கி நரம்பு இழுந்தது.
அந்த அழகிய வடிவான முகம் சிவந்த கன்னம் புசுபுசுவென திரண்டிருந்த ஒட்டவெட்டிய போலிஸ் திராப் முகதிடகாத்திரமான உடற்பயிற்சி செய்த தேகம்!
இரணமாகி கீழ்பிடித்து பச்சை புண்ணாய் நினைவுகளில் எப்பொழுதும் துரத்திக்த கொண்டிருக்கும் வசைச்சொல். சொதசொதப்பாய் ஆண்டுகள் பல உருண்டொடி விட்டாலும் ரணமாய் சிழாய் உருவாகி நிற்கும் இழிசொல்! மனதித்ன ஆழத்தில் தங்கி நச்நச்சென துன்புறுத்தி¢கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் வெளிப்பட்டும் உள்ளது.
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுவது கிடையாது. போலிஸ் கொட்டடி சித்தரவதைகள். அடி உதைகள் எல்லாம் காலபோக்கில் மறந்துவிட்டது. அவன் என்னைத அழைத்த தொனி.
“டேய் நொண்டி தெவுடியா பய்யா”
கேட்ட மரத்திரத்தில் உள்ளதில் எரிச்சலையும் நெஞ்சில் கனலையும் பற்றி எரிய செய்த சொல்!
இதை சர்வ சதாரணமாக போகின்ற போக்கில் அந்த போலிஸ் அதிகாரி அழைத்தான் பெண்மை கலந்த வட்டமான முகம், அவன் பெயர் பழனியாண்டி!! அதிகார ஆணவத்திமிர் இரத்த நாளஙகளில் இழை இழையாய் ஒடிக் கொண்டிருந்ததன்த வெளிப்பாடு இந்த சொல்லடி!
இருபது ஆண்டுகளுக்கு முன் நக்சல் வேட்டையில் சிக்கிய நபர்களில் நானும் ஒருவன்,
சட்டவிரோத தவரை முகாமில் சிக்கி ஒருவாரம் நான் பட்டபாடு! நொந்து நுலாகி போனேன்.
பல தடவைகள் பழனியாண்டி என்னை பலவாறாக விசாரித்தான், ஆனால் ஒரு முறைகூட அவன் என் பெயரை சொல்லி அழைகவில்லை.
“நொண்டி
நொண்டி நாயே
நொண்டி கம்முனாட்டி
நொண்டி பயலே,,,”
ஒவ்வொரு முறையும் அவன் என்னை அழைதது! இன்னும் கூட சொல்லலாம். எனக்கும் சங்கடமாக இருககிறது.
“இந்தத நொண்டி பயனுக்கு இன்னா திமிர் வாயே திறக்க மாட்டரான்,,, நல்ல கவனிங்க இந்த நொண்டி காலைணை,,,”
பழனியாண்டி மற்ற உளவு அதிகாரிகளுக்கு என்னை அறிமுகப்படுத்திய விதமே இப்படித்தான் இருந்தது...
இவனோட இன்னொரு காலையும் பெண்டாக்கிறேன் பார்”
வன்மத்துடன் அவன் அடித்த அடியில் லட்டிகள் உடைந்து நொறுங்கின, உடலெல்லாம் வலி பற்றி எரிந்து கொண்டிருந்தது? அவனது இழித்தொனி சொல் என் உயிரையே பிராண்டி கொண்டிருந்தது.
பத்து நபர்களை பிடித்து வதை முகமில் வைத்து விசாரணை செய்தார்கள். பெயர்களை சொல்லியும் சில சமயம் சாதியையும் சில சமயம் ஊர் பெயரை சொல்லியும் அழைத்ததை கவனித்தேன்.
பிச்,டி,படித்து கொண்டிருந்த மாணவரை “டாக்டர்” என்றும் கிண்டலாக அழைத்தனர்.
என்னை மட்டும் பெற்றோர் இட்ட பெயரை சொல்லியோ. சாதியை குறிப்பிட்டோ. ஊரை குறிப்பிட்டோ அழைக்கவில்லை.
அவன் கண்களுக்கு எனது காலின் ஊனம் மட்டுசூமு தெரிந்தது!
“தொழிலை சொல்லி அழைக்கவில்லை”
படித்த படிப்பை சொல்லி அழைக்கவில்லை”.
ஒரிருதடவை சொன்னாலும் அதில் “நொண்டி” என்ற , சொல்லை வினைத்தொகையாக இணைந்தே சொன்னார்கள்.
இதற்கு மேலே இன்னொரு ஈனச் செயலையும் செய்தான்.
பத்திரிகையாளர்களை அழைத்துத என்னைப் பற்றி மிகைப்படுத்தி கூறினான். மறுநாள் செய்தித்தமாள் கொட்டை எழுததுகளில் இப்படி பதிவு செய்தன.
நொண்டிகால் நக்சலைட் கைது “தப்பி ஒடி நொண்டி காலனை விரட்டி பிடித்து காவல்துறை சாகசம்”
பத்திரிகை தர்மத்தை இப்படி அவர்கள் காப்பாற்றினர்.
ஒற்றைகண் சிவராசன்
வழுக்கை தலை முருகன்
பெண்டு மணி
நொண்டி நடராசன்
குற்றங்களை விட முதலில் பத்திரிகைகளுக்கு தெரிவது ஊணங்களைத்தான்.
சமுகத்தித்ன மனசாட்சியாக இயங்கும் இவர்களே இப்படியெனில் காவல் துறையை பற்றி என்ன செய்வது!.
வீங்கி போன காயங்கள் வடிந்து ஆறிப்போயின இரததம் கசிந்து புண்ணாகி சீழ்பிடித்த ரணங்கள் வற்றின. வற்றிய பக்குகள் உதிர்ந்து வடுக்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்தன.
பல அற்புதமான நினைவுகள்! நெஞ்சை நெகிழவைத்த தோழமை உறவுகள்! அறிவு செறிந்த விவாதங்கள்! சச்சரவுகள்! சில சமயம் சண்டைகள் கூட!! மக்களுக்காக மக்களை பற்றி சிந்தித்த செயலாற்றிய, போராடிய தருணங்கள்!! நீர்க்குமிழிகளாய் அழிந்து போக கூடாதவைகள் அழிந்து போய் விட்டன.
இயக்கத்தை விட்டு வெளியேறி ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சராசரி அரசாங்க ஊழியான குடும்பஸ்தானாக மாறிவிட்டேன். அந்த போலிஸ் அதிகாரி அழைத்த விதம் மட்டும் ரன் கால வெள்ளத்தில் கரைய, அடித்து செல்ல மறுக்கிறது?
“நீயெல்லாம் பொழைக்க தெரியாத ஆளு” என்பதை மீறி தனிமையில் இதையெல்லாம் சிந்திக்ம் தருணங்களில் அது பொற்காலம் தான்!
நெஞ்சில் நெருப்பாய் உணர்வில் நெருப்பாய் அணையாமல் எறியும் அந்த சொல்... அந்த தொனி
“நொண்டி காலா”
பிராண்டி பிராண்டி மனம் வலிக்கிறது. குடிபோதையில் அவனை பல நாள்கள் திட்டி சக மனிதர்களிடம் கொட்டி விட்டேன். பல ஆண்டுகள் ஓடி விட்டது. முதுமை எட்டி பார்த்து விட்டது.
நான் இப்பொழுது புலம்புதில்லை. போதை தலைக் ஏறினால் பழனியாண்டியை திட்டி தீர்த்து விடுகிறேன். அப்படி திட்டுவதால் மனது ஆறுதலை தேடுகிறது.
அந்த போலீஸ் அதிகாரியின் உருவம் நந்தகோபாலுக் இருந்தது. உருவம் ஒற்றுமைகள் படைத்த மனிதர்கள் பலபேர் இருக்கத்தானே செய்கிறார்கள்! நந்தகோபாலிடம் மன்னிப்பு கேட்டாலும் அவரிடம் இதை விளக்கினால் அவரால் புரிந்து கொள்ள முடியாது!
கைபேசி அழைத்தது. மனைவி அழைத்தார் மாலை 5 மணிக்கு பேருந்து நிறுத்ததிற் வருவதாக கூறினாள். மேலதிகாரியிடம் அனுமதி பெற்று நான் புறப்பட்டேன். பேருந்து ஏறி போய் சேர மாலை ஐந்தரை ஆனது.
இரண்டு கைபைகளையும். மூன்று வயது குழந்தையையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளிடம் ஐஸ்கிரீம் வாங்கி தரும்படி குழந்தை தொந்தரவு செய்து கொண்டு இருந்தது. சளி பிடித்துவிடும் என்று யோசனை செய்து தட்டி கழித்து கொண்டிருந்தார்.
நான் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன். கால் ஊனம் என்பதால் என் மனைவியே பைகளை சுமந்து கொண்டு நடந்தாள்.
வீடு போய் சேர ஒருமைல் நடக்க வேண்டும். டி.வி.எஸ் 50 வண்டி வைத்து இருக்கிறேன். அதை பழுது பார்க்க மைக்கானிக்கிடம் விட்டு இருந்ததால் இன்று நடராஜா சர்வீஸ்தான்!
ஒரு கையில் என்னை பிடித்து கொண்டும் மறுகையில் ஐஸ்கிரீம் வைத்து சுவைத்து கொண்டு குட்டி பையன் நடந்தான். சிறிது தூரத்திற்கு பின் கையிலிருந்த ஐஸ்கிரீம் தீர்ந்து விட்டது. முன்னே நடந்து கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினான்.
“என்னய தூக்கும்மா”
“தூக்கும்மா.... தூக்கும்மா”
பிஞ்சு கைகளை நீட்டி தொந்தரவு செய்தான்.
“நானே இரண்டு பைகளையும் தூக்கி கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறேன். நீ வேற.. உன்னை எப்படிடா நான் தூக்குவது”
அவள் முணுமுணுத்தாள். குட்டிப்பையன் கைகால்களை உதறி கொண்டு தூக்கும்படி அடம் பிடித்தான்.
“காலு வலிக்குதும்மா.. தூக்கும்மா”
குட்டிபையன் கெஞ்சினான். அவனை தூக்கி கொண்டு நடக்கும்நிலையில் அவள் இல்லை.
டேய் போடா.. உங்கப்பாவை தூக்கு சொல்லுடா என்று பாரத்தை என்னிடம் தள்ளினாள்.
குட்டிபையன் திரும்மிப நின்று என்னை பார்த்தான். குட்டி குட்டி கண்களால் உற்று நோக்கினான். நான் அவன் அருகில் நெருங்கினேன்.
என்னை தூக்க சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன். அவன் என்னிடம் எதுவும் பேசவில்லை. பிஞ்சு கரங்களால் என் கையை பற்றி கொண்டு நடந்தான். நான் விந்தி விந்தி நடப்பதை பார்த்து கொண்டே வந்தான்.
ஒரு மைல்தூரம் குட்டி பையன் நடந்தான். என்னிடம் ஒருமுறை கூட தன்னை தூக்கும்படி அவன் கேட்கவில்லை. அப்பாவால் அவனை தூக்கி கொண்டு நடக்க முடியாது என்று அந்த குழந்தைக்கு தெரிந்து இருந்தது.
கால் வலிக்க அந்த குழந்தை நடந்து வந்ததே தவிர தனது அப்பாவை தூக்கி கொள்ள சொல்லகூடவில்லை.
அந்த சின்ன குழந்தைக்கு புரிந்த நாகரிகம்கூட அந்த அகாரிக்கு ஏன் தெரியவில்லை?
எல்லா ரணங்களுமே ஆறுவதில்லை தான். சிறுகதை யதார்த்தமாய் நன்றாயிருக்கிறது.
ReplyDeleteWord Verification ஐ எடுத்துவிட்டால் என்ன!
உங்களுக்கு உங்கள் துனைவியார் தொலைபேசியில் அழைத்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதாகக் கூறும் இடத்திலிருந்து கதை அதன் மையப் பகுதியை நோக்கி மிக அற்புதமான விவரனைகளின் மூலம் நடத்திச் சென்ற பாங்கு என்னை வெகுவாக தனக்குள் ஈர்த்துக் கொண்டது.
ReplyDeleteஎன் மனக்கண்ணில் தாங்கள் பேருந்திலிருந்து இறங்கி தங்கள் துனைவியாரிடம் பைகளை கொடுத்துவிட்டு உங்கள் பேண்ட்டை இழுத்து சரிசெய்து கொண்டு உங்கள் துனைவியார் முன்னே நடக்க நீங்கள் பின்னே உங்கள் மகனுடன் நடக்கும் காட்சி விரிந்தது.
தங்களின் கதை மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
இது கதையல்ல , நிஜம் . திருச்சி ஏரியாவில் பழனிசாமி என்று அயோக்கியபய இன்ச்பெக்டாரக இருந்தார் . அவர் தான் இவ்வாறு தோழர்களை நடத்துவார்.
ReplyDeleteஅவருடைய குடும்பமே அவரை விட்டு ஓடிவிட்டது ( அவ்வளவு மனிதநேயம் கொண்டவர் )
பின்னாளில் மாச-என்று பாசாணம் அல்ல , பெயரை சொல்ல கூட அருவெறுப்பாக உள்ளது.
+++++
போலீ ஸ் தான் கிரிமனலஸ் .
அவங் கதான் எல்லோருக்கும் பட்டை பெயர் வைப்பாக.
அதில ஒரு யுக்தி உள்ளது அதுதான் காவல்துறை அலுவலகத்தில் அவர்களுக்கு சொல்லிகொடுக்கும் பயிற்சி . பட்டபெயர்வைத்து அழைத்தால் " நொட்டோரியஸ் " என்று பொருள். . மனோவியலாகவே , அந்த மனிதனின் உண்மை கொள் கைளின் அடிப்படையில் அவனை அடையாளம் காணாகூடாது , அவ்வாறு புகழ் வந்து விடக்குடாது , அவரது அரசியலை கொச்சை படுத்தி அதுவும் ஒரு ரவுடியின் கொள்கை போன்ற மாயையை உறவாக்கும் செயல்தான் என் திசை திருப்பி பட்ட பெயர் வைப்பது
++++ இதைதான் ஊர்களில் தெருக்களில் திரியும் ரவுடிகளும் மற்றவர்களை பட்ட பெயர் வைத்து அழைக்கும் அ---ப்ழக்கம் என உணரலாம் .
கதை அருமையாக வந்துள்ளது என்பதைவிட அனுபவம் சிறந்த கதையாகி இருக்கிறது. காவல்துறை - ஊடகம் - ஆளும் வர்ககம் கருத்தியலில் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள், வெளிப்படுத்துகிறார்கள் என்பது குறித்து விவாதிக்க வேண்டியது முக்கியம்.
ReplyDelete