“தன் தலைவரிடம் எல்லையற்ற அன்பையும் மரியாதையையும் கொண்டிருப்பது இயல்பான ஒன்றெனக் கருதலாம். ஆனால்
தலைவரின் கட்டளைக் குக்
கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது
வேறு.
இரண்டாவது நிலையால் கேடான
விளைவுகள் உண்டாகும். உயர்வான எதையும் மதிப்பது நல்ல
பண்பாகும். அத்தன்மையில் உயர்ந்த கொள்கைகளையும் பண்பையும் கொண்டுள்ள மனி
தனை
மதிப்பது தேவையானதுதான். அதற்காக அவரி
டம்
கண்மூடித்தனமான விசுவாசியாக இருக்கக்கூடாது. தன்
சுயமரியாதையை இழந்து
தலைவரை
வழி
படுவது
என்பது
தன்னையே இழிவுபடுத்திக் கொள்வ
தாகும்.
தலைவரை
மதிப்பது என்பது
தன்
சுய
அறிவு
டன்
சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை இழக்காத ஒன்றாக
இருத்தல் வேண்டும். கண்மூடித்தனமாக வழிபடுதல் என்பது
ஒருவனை
முழு
முட்டாளாக - அடிமையாக ஆக்கிவிடும்.
” சாதி அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? முதல் தடை, சாதி அமைப்பின் உயிர்நிலையான படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மையில்தான் இருக்கிறது. மக்கள் இரண்டு வர்க்கங்களாக மேல் என்றும் கீழ் என்றும் மட்டும் பிளவுபட்டிருந்தால், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து, மேலே இருப்பவர்களை எதிர்க்க முடியும். ஆனால், இங்கு ஒரேயொரு கீழ் வகுப்பு இல்லை. வர்க்கம் என்பது, கீழ் வர்க்கம் என்றும், அதற்கும் கீழான வர்க்கம் என்றும் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளன. கீழே இருக்கும் வர்க்கம், அதற்குக் கீழ் இருக்கும் வர்க்கத்துடன் இணைவதில்லை. கீழே இருக்கும் வர்க்கம், தனக்குக் கீழே இருக்கும் வர்க்கத்தை உயர்த்தினால், தனக்கு இருக்கும் உயர் நிலையும், தனது சாதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயர் நிலையும் (அவர்களை மேலே உயர்த்துவதன் மூலம்) பறிபோய் விடும் என்றும் நினைக்கிறது…
”
கல்வி சாதியை ஒழித்து விடுமா? ...
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை’! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். இதற்கு பார்ப்பன சாதியே மிகச் சரியான எடுத்துக்காட்டு. பார்ப்பனர்களில் நூறு சதவிகிதம்பேர் படித்திருக்கிறார்கள்; இல்லை, அவர்களுள் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில், மேல் சாதியில் இருக்கும் படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.
கல்வியின் இன்னொரு எதிர்மறையான விளைவு இது. ஆனால், இதே கல்வி இந்திய சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டால், அது சாதியை ஒழிப்பதில் உதவிகரமாக இருக்கும்; அம்மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கும். அறியாமையால், அவர்கள்தான் சாதி அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஒரேயொருமுறை அவர்களின் கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சாதி அமைப்புக்கு எதிராகப் போரிடத் தயாராகி விடுவார்கள்.
தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.
“எந்தவொரு உயர்ந்த மனிதனும் தன்னுடைய போதனைகளை அல்லது முடிவுகளைத் தன்னுடைய சீடர்கள் மீது
திணித்து அவர்களது அறிவை
முடமாக்க மாட்டான். அவ்வாறு திணிக்காமல் இருப்பவரே மிகச்
சிறந்த
தலைவராவார். அத்தகைய தலைவர்
தன்னுடைய தொண்டர்களிடம் பொதிந்துள்ள ஆற்றல்
களுக்கு மேலும்
பட்டைதீட்டி ஒளிரச்
செய்து,
எழுச்சியுடன் அவர்கள் தொடர்ந்து செயல்படுமாறு செய்வார். இதனால்,
சீடர்கள் தம்முடைய தலைவரிடம் அவரு
டைய
வழிகாட்டுதலை மட்டுமே பெறுவார்கள். சீடர்கள் தலைவரின் முடிவுகளைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. தலைவரின் கருத்துகளை அல்லது
முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாத தாலேயே
தலைவரிடம் மரியாதையும் மதிப்பும் கொண்டிருக்கவில்லை என்று
கருதிட
முடியாது. அந்நிலையிலும் சீடர்
அல்லது
தொண்டர் தன்
தலை
வரிடம்
மிகுந்த மதிப்பைக் கொண்டிருப்பார் - ‘என்னுள் உறங்கிக்கிடந்த உணர்ச்சியைத் தட்டி
எழுப்பி, அறிவு
கொளுத்தி, எழுச்சியுறச் செய்தீர்கள்; அதற்காக நான்
என்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்ற
அளவில்
மட்டும்! தலைவனுக்கு இதற்குமேல் பெறு
வதற்கு
உரிமை
இல்லை.
தொண்டனும் இந்த
நன்றி
உணர்ச்சிக்குமேல் தலைவனுக்குக் கடமைப்பட்டவன் அல்லன்”
(இரானடே,
காந்தி,
ஜின்னா
என்ற
தலைப்பில் அம்பேத்கர் ஆற்றிய
சொற்பொழிவு).
சாதியும் வர்க்கமும் அண்டை வீட்டுக்காரர்கள் மாதிரி. மிகச் சிறிய இடைவெளியே இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்கின்றது. சாதி என்பது தனித்து ஒதுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கமே ஆகும்
ஓர் அடிமைக்கு அவனுடைய எஜமானன் சிறந்தவனாகவோ, இழிந்தவனாகவோ இருக்கலாம். ஆனால் நல்ல எஜமானன் என்று ஒருவன் இருக்க முடியாது. அதாவது ஒரு நல்ல மனிதன் எஜமானனாகவோ அல்லது ஒரு எஜமானன் நல்ல மனிதனாகவோ இருக்க முடியாது. உயர்ந்த சாதியாருக்கும் தாழ்ந்த சாதியாருக்கும் இடையிலான உறவுமுறைக்கும் இது பொருந்தும்.
பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில், அதிகாரங்கள், உரிமைகள், நலன்கள் பெறுவதை மட்டும் நான் பார்ப்பனியம் என்று குறிப்பிடவில்லை. அந்த அர்த்தத்தில் நான் பார்ப்பனியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை.
சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்லுகின்றேன்.
இந்த எதிர்மறை உணர்வு எல்லா வகுப்பினரிடை யேயும்
உள்ளது. பார்ப்பனர்களோடு மட்டும் அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் தாம் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும்
ஊடுருவி உள்ளது என்பது உண்மை.
உள்ளது. பார்ப்பனர்களோடு மட்டும் அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் தாம் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும்
ஊடுருவி உள்ளது என்பது உண்மை.
இந்தப் பார்ப்பனியம் எங்கும் பரவி, எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம் சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது. மற்ற வகுப்புகளுக்குச் சமவாய்ப்புகளை மறுக்கிறது.
Educate, Organise and Agitate is the most misquoted slogan of Baba Sahib Dr Ambedkar. Its true version is: Educate Agitate and Organise. While winding up the the All-India Depressed Classes Conference (July 18-19, 1942 at Nagpur), he said:
“My final words of advice to you are educate, agitate and organize; have faith in yourself. With justice on our side, I do not see how we can lose our battle. The battle to me is a matter of joy. The battle is in the fullest sense spiritual. There is nothing material or social in it. For ours is a battle, not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality.”As it happens, back in the 1880s, when the incipient socialist movement in England was riven by internal dissensions, George Bernard Shaw wrote rather impatiently: “What we have got at Palace Chambers (where the Social Democratic Federation was located) is a great deal of agitating, very little organizing (if any), no educating, and vague speculations as to the world turning upside down in the course of a fortnight or so…”
Karl Marx’s youngest daughter Eleanor Marx played a key role in the federation along with her husband, and there was a lot of bad blood in the executive. Many like Shaw were irritated.
Rachel Homes, author of the gripping biography of Eleanor, titles one of her chapters – Educate, Agitate, Organize
இன்றைய நிலையில் நாம் சமத்துவமற்ற சமூகத்தைப்பெற்றிருக் கிறோம். இதன் பொருள் ஒரு சிலரை உயர்த்தியும் மற்ற அனைவரையும் தாழ்த்தியும் வைத்திருக்கிறோம். பொருளாதார அரங்கிலும் ஒருசிலர் அளப்பரிய செல்வத்துடன் வாழக்கூடிய அதே சமயத்தில் பெரும்பான் மையோர் மிகவும் இழிந்த முறையில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் வைத்திருக்கிறோம். இத்தகைய முரண்பாடுகளை எத்தனை காலத்திற்குத் தொடரப்போகிறோம்?
" ஏற்றத் தாழ்வு என்ற கட்டுமானத்தின்மேல் கட்டப்பட்டுள்ள இந்து மதம், சிலருக்கு வேண்டுமானால் வசதியாக இருக்க லாம். குறிப்பாக, மேல் ஜாதியினருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் நிலை என்ன?
ஒரு பார்ப்பனப் பெண் -_ குழந்தையைப் பெற்றால், அவள் குழந்தையைப் பெற்ற நாள் முதலே -_ எந்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் நாற்காலி காலியாக உள்ளதோ, எப்பொழுது காலியாகுமோ என்பதைப் பற்றியே குறியாக இருக்கிறார். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் நம் சகோதரி, ஒரு குழந்தை பெற்றாள் எனில், தாம் பெற்ற குழந்தைக்கும் ஒரு துடைப்பக் கட்டை கிடைக்காதா? என்றே ஏங்கு கின்றாள்."
ஒரு பார்ப்பனப் பெண் -_ குழந்தையைப் பெற்றால், அவள் குழந்தையைப் பெற்ற நாள் முதலே -_ எந்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் நாற்காலி காலியாக உள்ளதோ, எப்பொழுது காலியாகுமோ என்பதைப் பற்றியே குறியாக இருக்கிறார். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் நம் சகோதரி, ஒரு குழந்தை பெற்றாள் எனில், தாம் பெற்ற குழந்தைக்கும் ஒரு துடைப்பக் கட்டை கிடைக்காதா? என்றே ஏங்கு கின்றாள்."
பார்ப்பனர்களுக்கு ஒரு ராமாயணம் தேவைப்பட்டது,,
சூத்திர வால்மீகியை பயன்படுத்திக் கொண்டார்கள்,,
சூத்திர வால்மீகியை பயன்படுத்திக் கொண்டார்கள்,,
பார்ப்பனர்களுக்கு ஒரு மகாபாரதம் தேவைப்பட்டது,,
சூத்திர வியாசனைப் பயன்படுத்திக் கொண்டார்கள்,,
பார்ப்பனர்களுக்கு சட்டம் தேவைப்பட்டது,,,
சூத்திரனான என்னை பயன்படுத்துகிறார்கள்,,
ஆனால்,,
நாளை ஒருவேளை அதை எரிக்கும் நேரம் வந்தால்
அச்சட்டத்தை எரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்
"சாதியைத் தகர்ப்பது என்றால், வெறும் பவுதீகத் தடையைத் தகர்ப்பது என்பது அல்ல. மாறாக ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.
சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை. சாதி என்கிற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகிறேன்.
என்னுடைய இந்தக் கருத்து சரியானதென்றால், நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி – சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி.”
1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்தி லிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த் தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளில் சில..
1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.
5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.
7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.
8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.
9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.
10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்......