Wednesday, October 13, 2021
தேர்தல் பாதை திருடர் பாதை என்ற முழக்கம் சரியா?
தேர்தல் பாதை திருடர் பாதை என்ற முழக்கம் சரியா?
நக்சல்பாரி எழுச்சியின் தமிழ்நாடு முழக்கங்களில் ஒன்று “தேர்தல் பாதை திருடர் பாதை- மக்கள் பாதை புரட்சி பாதை” . கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக மாறாத மூல யுத்தியாக இந்த முழக்கத்தை சில நக்சல்பாரி, மாவோயிச அமைப்புகள் கடை பிடிக்கின்றன. இதை ஏற்காதவர்கள் புரட்சியாளர்கள் கிடையாது, அவர்கள் புரட்சியின் எதிரிகள் என்பதாக அந்த அமைப்பு பிரச்சாரம் செய்கிறது. இதையும் தாண்டி கூவுகிற சில ஒளி வட்டங்களும் இருக்கிறார்கள்…
பொதுவாக அரசியல் ஒரு சாக்கடை என்ற மத்தியதர வர்க்க, மனநிலையில் வளர்ந்த எங்களை போன்ற பலருக்கும் இந்த தேர்தல் பாதை திருடர் பாதை என்ற முழக்கம் பெரும் கவர்ச்சியானதாக இருந்தது. இருகிறது. இருக்கும் என்பது யதார்த்தம்!!
பாராளுமன்ற-சட்டமன்ற தேர்தல் பாதை மூலம் மட்டுமே சமூகத்தில் புரட்சிகர மாற்றம் கொண்டு வர இயலாது. பாரளுமன்ற மாயைக்குள் சிக்கி அரசியல் சீரழிவு என்பது ஒருவகை என்றால், தேர்தல் பாதை திருடர் பாதை என்பது இதன் இன்னொரு எல்லை…
உண்மையில் தேர்தல் பாதை திருடர் பாதை என்ற முழக்கம் விரிவுபடுத்தப்பட்டு அனைத்துவகை தேர்தல்களையும் புறக்கணிக்கும் நடைமுறைக்கு கொண்டு சென்றது. குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை தொழிற்சங்க மாநாடுகளை நடத்தி சனநாயகபூர்வமாக செயற்குழுக்களை, தலைமையை, பொது செயலாளரை தேர்தெடுக்கும் நடைமுறையில் இருந்து நக்சல்பாரி இயக்கம் இந்த முழக்கத்தால் விலகி சென்றது. அது தொழிளார்களை அமைப்பாக அணிதிரட்டுவதை பற்றி எந்த சிந்தனையும் அற்று முடக்குவாத சிந்தனைக்குள் நக்சல்பாரி இயக்கத்தை தள்ளி உள்ளது. ஒரு பக்கம் பாட்டாளி வர்க்க சிந்தனை, பாட்டாளி வர்க்க தலைமை என்று சொல்லிக் கொண்டு பாட்டாளிகளாக தொழிலாளர்களை சனநாயக முறையில் பயிற்றுவிக்க இந்த தேர்தல் பாதை திருடர் பாதை தடையாக மாறியது.
இந்த முழக்கத்தின் இன்னொரு திசை விலகலாக கம்யுனிஸ்ட் கட்சிக்குள் மாநாடுகள், பேராயங்கள் நடத்தி சனநாயக முறைபடி தேர்தல் நடத்தும் சிந்தனையை தோழர்களிடம் இல்லாமல் செய்தது. தலைமை வழிபாட்டுக்கு இது வழிவகுத்தது.
இன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு, நகர்புற வார்டுகளுக்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. மக்கள் திரள்களை அவர்கள் பிரச்சனைகளின் பால் கவனங்கள் குவித்து அணிதிரட்ட இவைகள் வாய்ப்பளிக்கின்றன. தேர்தல் பாதை திருடர் பாதை முழக்கம் இதையும் புறக்கணிக்க நிர்பந்திக்கிறது. மக்களின் முக்கிய அரசியல் நடைவடிக்கைகளை வெறுமனே பார்வாயாளராக இருக்க பணிக்கிறது.
சோவியத்து, சீனா நாடுகள் சோசலிசத்தில் இருந்து முதலாளிய பாதைக்கு மாறியதற்கு பலகாரணங்களில் ‘தேர்தலும்’ ஒரு காரணமாக இருக்கிறது. கம்யுனிஸ்ட் கட்சிகளுக்குள் முழுமையான சனநாயக நடைமுறை இன்மைகள், அந்த சனநாயக ஒழுங்கு முறையின் ஒன்றான தேர்தல் முறை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் சனநாயக சிந்தனை முடக்கப்பட்டதும் ஒரு காரணம்!
தேர்தல் பாதை திருடர் பாதை என்பது எந்த நக்சல்பாரி அமைப்பின் அனைத்திந்திய முழக்கம் கிடையாது. எதுகை மோனை பாணியிலான கவர்ச்சிக்காக தமிழ் கூறும் நல்லுகம் கண்டுபித்தது. வேறு எந்த மாநிலங்களில் இத்தகையை Electoral path ia Rubbery path முழக்கத்தை அந்தஅந்த மாநில கம்யுனிஸ்ட் கட்சிகள் முழங்குகின்றன!
Electoral path is Rubbery Path தேர்தல் பாதை திருடர் பாதை என்ற முழக்கத்தில் சிக்கல்கள் இருப்பதாக தோன்றியது அதை பகிர்ந்து கொண்டேன்… தொடர்ந்து மூல யுத்தியாக 50 ஆண்டுகளாக இதை பயன்படுத்துவதன் மூலம் அரசியல்ரீதியாக மக்கள்திரளை நாம் அணிதிரட்டி உள்ளோமா அல்லது மக்கள்திரளை அணிதிரட்டாமல் முடங்கி விட்டோமா என்ற கேள்வி இன்று பாசிஸ்டுகள் தேர்தல் மூலமே பாசிச அரசை முழுமையாக நிறுவ முயலும் இக்கால கட்டத்தில் நம் பார்வைகள் வழிகள் பன்முகப்பட்டதாக இல்லாமல் ஒன்றை முழக்கத்திற்கு சிக்கி கொள்வது சரியாக இருக்குமா?
Subscribe to:
Posts (Atom)