Tuesday, February 21, 2012

கடல் தன் அலைகரங்களால் தீட்டிய ஒளி ஒவியங்கள்

கடலும் வானமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற ஒவியங்களை, வண்ண கலவைகளை தீட்டுகின்றன.

சுருள் சுருளாய்  கரையில் மோதும் அலைகள் மணல்திரைச் சீலைகளை தொட்டு விட்டு மட்டும் செல்வதில்லை

பொங்கும் நுரைகளால் புதிய புதிய ஒவியங்களை கடற்கரையில் கணப்பொழுதில் தீட்டித் தீட்டி பார்க்கின்றது

தான் வரைந்த கோடுகள் தனக்கு திருப்தி அளிக்காமல் போன, அடுத்த நொடியில் கலைத்துப் போட்டு விடுகிறது

தீராத ஆசையால் மீண்டும் மீண்டும் சிறுபிள்ளையாய் விளையாடி மகிழ்கிறது


இந்த விளையாட்டின்  அழகிய பரிணாமங்கள் இங்கு ஒளி ஒவியங்களாய் காட்சிக்கு வைக்கப் படுகிறது






உங்கள் எண்ணங்களை இங்கு  பதிவேற்றுங்கள்

No comments:

Post a Comment