Sunday, April 26, 2015
Monday, April 13, 2015
Saturday, April 11, 2015
அவன் துரோகியா..!?
நம்பவுமும் முடியவில்லை.... நம்பாமலும் இருக்க முடியவில்லை. குழப்பம்தான் தொடர்ந்து
அதிகரித்து கொண்டு இருக்கிறது. …இப்பொழுது அவனை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது…
அது ஏன்? அவன் இப்படி எதற்க்காக மாறி விட்டான்? மாற்றம் என்ற ஒன்றை தவிர எல்லாம் மாறும் என்பதை
நிருபிக்கிறானா?
அவன் துரோகியாக
மாறுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவன் மாறி விட்டானா… என்ன?... புரியவில்லை. அவன் எவ்வாறு அப்படி மாறினான் என்பது எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது.
அவனுக்கும் எனக்குமான
உறவு இப்படி முறிந்து போகும்… வேறுவகையில் சொன்னால் உலர்ந்து உதிர்ந்து போகும்
என்று யாரும் நினைத்துகூட இருக்க மாட்டார்கள்.
அரசு உலர்ந்து உதிர்ந்து போகும் என்று பலமான சர்ச்சைக்கு இடையில் நிறுவியர்கள்
நாங்கள் இருவரும்! ஆனால் ஒன்றை ஒர் அடிப்படையான விசயத்தைக் கோட்பாட்டாக வாதிட்டு
வாதிட்டு நம்பவைப்பது வேறு..அதை நடைமுறையுடன்
இணைந்து மக்கள்திரளுடன் சேர்ந்து முரண்பாடுகளை களைந்து வாழ்வது என்பது பிறிதொன்றாக
இருக்கிறது.
அவனுக்கும் எனக்குமான
உறவு என்பது இயல்பாக சதாரணமாகவே தொடங்கி..பின்பு ஆத்மார்ந்தமான உறவாக.. நட்பாக மலர்ந்து
மணம் வீசியது.. இன்று முடை நாற்றம் எடுக்கும்
அளவிற்கு கீழே சரிந்து அதலபாதாளத்தை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருக்கிறது.
இது எதோ சமூகத்தின்
பிரச்சனை என்று நீங்கள் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. எங்கள் கதையை கூறினாலதான் உங்களுக்கு அதை புரிந்து கொள்ள முடியும். அது எங்களுக்குள் உழலும் சிக்கல் என்பதை விளங்கி
கொள்ள இயலும். அப்பொழுது… ஒருவேளை.. சில சமயங்களில் இதற்க்கான பதிலை அல்லது தீர்வை நீங்கள் எங்களுக்குத் தர முடியும்.
உங்கள் புரிதலுக்காக
எங்கள் நட்பை இரண்டு கால கட்டமாக பிரித்து விரித்து எழுதுகிறேன்.
1.தெய்வீக நட்பாக
புனிதத்துவம் அடைந்த கால கட்டம்
2. அந்த புனிதங்களை
கட்டுடைத்து சமூக யதார்த்தங்கள் எனும் தீச்சுவாலைக்குள் இன்பம் துய்த்த கால கட்டம்.
அவனுக்கும் எனக்குமான உறவு என்பது இயற்கையான ஒன்றாகும்.
சில மாதங்கள் வயது வேறுபாடு மட்டும் அவனுக்கும்
எனக்கும் இருந்தது.
எங்கள் தெருவின்
எதிர்வாடையில் அவன் வீடும் குடும்பமும் இருந்தது.
அதனால் நாங்கள் இருவரும் ஒன்றுகலந்து பழகுதல் தவிர்க்கவியலாம் போயிற்று. பார்க்காமல்
வடக்கே இருந்து உயிர் துறக்கும் நட்பு இலக்கியத்திற்கும் ..பார்க்காமல் வரும் புனித
காதல் சினிமாவிற்கு வேண்டுமானால் தகும். துலமான வாழ்க்கை நடைமுறைக்கு அவை ஒத்து வராது
என்றுதான் நின்னைக்கிறேன்
என் நினைவுக்கு
எட்டிய வரையில் எதிர் வீட்டு திண்ணையே கதியாக இருக்கும் சீயாத்தம்மா தான் குட்டி பையனான
எனது கதைசொல்லிக்குப் பார்ட்னர். மருமகளின்
உதாசீனத்தால் என்னை அடிக்கடி அழைத்து தெரு குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து தர சொல்வாள்…
பெரிய அந்த அலுமினியம் சொம்பில் வாய் கொப்பளித்து குடித்து விட்டு வாஞ்சையுடன் தலையை தடவி தனது சுருக்கங்கள்
அடர்ந்த அனுபவ கோடுகள் பதிந்த நெற்றியை எனது நெற்றியுடன் சேர்த்து
“டிய்..ட்டீய் டீய்..”
“டிய்..ட்டீய் டீய்..”
“டிய்..ட்டீய் டீய்..”
மூன்று முறைகள்
இடிப்பாள். எனது பிஞ்சு நெற்றி வலித்தாலும்
அவரின் ஆசி என்னை பரவசப்படுத்தும்… நான் அவரின் அணைப்பினால் சிறிது வெட்கத்துடன் திரும்பும்பொழுது
எனது நண்பனுக்கு அதே போல் அந்த திண்ணையில் இருக்கும் அய்க்கெண்ணி ஆயா..
“டிய்..ட்டீய்
டீய்..”
“டிய்..ட்டீய் டீய்..”
“டிய்..ட்டீய் டீய்..”
கொடுப்பாள். அவன் அந்த பாட்டியின் அலுமினிய சொம்பில் நீர் நிரப்பித்தர தெருக்குழாயுக்கு
ஓடுவான்.
அப்பொழுதுதான் எங்களுக்கு இடையில் உறவு பாலம் மின்னல்
கம்பி போல் பரவி இருக்கும் என்று தோன்றுகிறது.
பம்பரத்தின் கயிற்றை
ஏறுவரிசையில் நான் சுற்றி சுற்றி ஓங்கி செல்வம்
பம்பரம் மீது குறிவைத்து ஓங்கி குத்த கயிற்றின் விசையை இழுப்பேன். அதற்குள்
அவன் பம்பரத்தின் கூர் முனை செல்வத்தின் பம்பரத்தை
இரண்டாக குத்தி பிளத்திருக்கும். ஆச்சரியத்துடன் பார்க்கும் நான் நோக்கும் பொழுது அவனும்
நோக்கினான். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால் கதை போல் இல்லை அதனினும் ஆழமானது
இது..!! இந்த்அ சின்ன சின்ன கணங்கள்தான் அடுத்த
கட்டத்திற்கு எங்கள் உறவை கொண்டு சென்றது.
அடர்ந்த வனமாய்
செம்பரம்பாக்கம் ஏரி கரை ஓரப்பகுதிகள் செழித்து காடாக இருந்த அந்த காலம் அது. எந்நேரமும் பறவைகளின் கீதங்களும் அணிப்பிள்ளைகளின்
கீச்சல்களும், ஒணான்கள் அதை தலையாட்டி இரசிப்பதுமாக ஏரி வனம் இருக்கும்.
விரிந்த கிளைகளைப்
பரப்பி வான் மூட்டக் வளர்ந்த காட்டுவா மரத்தின்
பொந்துகளில் எட்டி எட்டி பார்த்த சிகப்பு வளைய பச்சைகிளிகளின் குஞ்சுகள் எனது
கண்ணை உறுத்தியது. எப்படியும் எனது பெயரை அந்த குஞ்சுகள் கிள்ளை மொழியில் பேச வைத்துவிட
எனது மனம் அலைபாய்ந்தது.
அந்த குஞ்சுகளை
நான் கடத்தி வந்தபொழுது அது கீக் ..கீகீ….கீ.ய் என்று வீட்டில் கூப்பாடு போட்டது. வீட்டில்
உள்ளவர்கள் அனைவரும் முறைத்த பொழுது அவன்தான் ஆறுதல் தந்தான். உதவியும் செய்தான். ஆனால் இரண்டு நாட்கள்தான் எங்கள்
மகிழ்ச்சி நீடித்தது. இரண்டு மூன்று சில கோவைப்பழங்களை அவை சாப்பிட்டு இருக்கும். அதற்குள்
அடிக்கடி எங்கள் வீட்டிற்கு விருந்தாளியாய்
வரும் பூனையாருக்கு ஒருநாள் இரவு அந்த குட்டிகிளிகள் சத்தமில்லாமல் உணவாகி போனது வேறு ஒரு சிறிய கதை. அடுத்த நாட்கள் எதையோ பறிகொடுத்தது போன்று நாங்கள்
பெரும் சோகத்தில் திரிந்தோம். இயற்கையின் சமன்பாட்டை புரிந்து கொள்ள அது உதவியது. இயற்கை
மீதான் எங்கள் காதலை இன்னும் அதிகப்படுத்தி இன்னும் எங்களை நெருக்கமாக்கியது.
நாளோருமேனியும்
பொழுதுதொன்றுமாக ..ஒரே தட்டில் சாப்பிடுவது, பாயில் படுப்பது ஒன்றாய் திரிவது என்று
எங்கள் நட்பு வளர்ந்தது.
கல்லூரியில் சேர்ந்த
பொழுது ஒரே பெண்ணை இருவரும் லுக் விடுவதில் ஆரம்பித்து… காதலிக்கும் வரை எங்கள் தெய்வீக
நட்பு வளர்ந்து பூத்து குலுங்கி மணம் கமிழ்ந்து எல்லாரையும் மகிழ்விக்க செய்தது உண்மையான
செய்தி.!!.
இந்த
புனிதத்தில் மெல்ல விரிசல்கள் விட்டன. அந்த நாட்களில்தான்.. நான் இலக்கியத்தையும் இயற்கையின்
அழகியலுக்குள் மூழ்கி திளைக்க தொடங்கினேன். அவன் சமூக முரண்களுடன், அரசியல் நிகழ்வுகளுடன்
உரையாடலை தொடங்கி விட்டு இருந்தான். இந்த அவனது அரசியல் உரையாடல்கள் எங்களுக்குள் உராய்வை
விரசலை ஏற்படுத்தின. சிறிது சிறிதாக கொதிநிலைக்கு
உயர்ந்து கொண்டு சென்றது.
வழக்கம்
போல் நானும் அவனும் ஒன்றாக சென்ற வழியில் ஒரு பிச்சைகாரர் மறித்தார். ஒரு ரூபாய் நாணயத்தை
நான் எடுத்து போட முயன்றேன். நானும் அவனும் கையில் காசு இருக்கையில் இப்படி போடுவது
வாடிக்கையான தோன்றுதான்! ஆனால் அவன் இன்று
என்னை தடுத்தான். அத்துடன் இல்லாமல்..அதற்கு பெரிய ..பெரிய கோட்பாட்டு விளங்கங்கள்,
தத்துவ விசாரணைகள், தமிழ் இலக்கியம்-வரலாறு ஆதரங்களை அள்ளி வீசி பேசிக் கொண்டே இருந்தான். இந்த சின்ன சிறிய விசயத்திற்கு இவ்…வ்வளவு மொக்கை தேவையா என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.
எரிச்சலாய் அவனை முறைத்தேன்.
சங்க
காலத்தில்ல் போர்ச்சூழலில் அரசர்களுக்கிடையில் தூதுசென்ற ஒளவை போரில் ஈடுபடாததால் புத்தம்
புதியதாக காணப்படும் அரசனின் ஆயுதங்களையும்
தொடர்ந்து சண்டைகளில் ஈடுபட்டத்தால் முனை ஒடிந்து அலங்கோலமாக துருபிடித்த அரசனின் ஆயுதங்களையும்
ஒப்பிட்டு தர்க்கம் செய்து விளக்கி சமாதானம் செய்ய முனைந்ததை இதோடு ஒப்பிட்டு அவன்
பேசிக்கொண்டு வந்தான். எனக்கு சிலது புரிந்தது மாதிரியும் இருந்தது… பலது புரியாததும் மாதிரி இருந்தது..
வர்க்கம்,
போராட்டம், விடுதலை, சமத்துவம், பொருள்முதல்வாதம், முரணியல் ..என்று புதிது புதிதாக
எதையாவது சொல்லி கொண்டிருந்தான். தர்க்கம் செய்து விளக்கி கொண்டிருந்தான். அல்லது ரம்பமாய் அறுத்துக் கொண்டு இருந்தான். சிலர்
அவனை கண்டு ஒரங்கட்டுவதும் நிகழ்ந்தது
கல்லூரி
நண்பர்கள் குழாமுடன் ஒருநாள் இரவு சினிமாவுக்கு
சென்று இரவின் மவுனத்தை கலைக்கும் சிரிப்புடன் நாங்கள் திரும்புகையில் ரோந்து போலிஸ் வெள்ளை வேன்
குறுக்கிட்டு குருட்டு விசாரணை செய்தது. நாங்கள்
அந்த கல்லூரி விடுதியை சேர்ந்தவர்கள்… இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு செல்கிறோம் என்று
சினிமா டிக்கெட்டுகளை அவர்களுக்கு காண்பித்து கொண்டிருந்தோம்.
ஜீப்பில்
இருந்த போதை இன்ஸ்பெக்டர் ஒருமையில் “இங்கே வாடா” என்று எங்கள் நண்பன் ஒருவனை அழைத்தான்.
“மரியாதையாக
பேசுங்க சார்..” என்று அவன் சட்டென பதில் சொன்னான். “மரியாதையாக பேசுங்க” என்பது தமிழக
காவல்துறை அகராதியில் மிகவும் மரியாதை குறைவான சொல், அது ஒரு குற்றச்செயல் என்பது அன்று
எங்களுக்கு விளக்கினர். இரண்டு லட்டிக் கொம்புகளை
தமிழக அரசின் சார்பில் போலிஸ்காரர்கள் செலவு
செய்தனர். தகராறு..போலிஸ்நிலையம். ..விடுதி காப்பாளர்.. மாணவர் தலைவர் என்ற முறையீடுகளுக்கு
பிறகும் கேஸ் போட்டுதான் வெளியில் விட்டனர்.
தொட்ரும்
Monday, April 6, 2015
தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் அய்யா அ.வீரப்பன் அவர்கள் செலவில்லாமல் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்துவது எப்படி என்ற திட்டத்தை விளங்குகிறார். அதிமுக அரசும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதை நிறைவேற்றுவார்களா..? அல்லது உலக வங்கியிடம் பிச்சை எடுப்பார்களா..? தொண்டை மண்டல விவசயம் வளர்ச்சியும் வீழ்ச்சியும்... தமிழக நீர்வளங்களைக் காக்க என்ன வழி... பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் காஞ்சியில் நடத்திய சிறப்புக் கருத்தரங்க [4 -4 -2015] உரை
Subscribe to:
Posts (Atom)