Sunday, May 10, 2015

பனுவல் தொல்லியல் கல்வி (Archeological Tour ) சுற்றுலா

பனுவல் ஏற்பாடு செய்த ஒருநாள் தொல்லியல்  கல்வி (Archeological Tour ) சுற்றுலாவில் நண்பர்கள் உற்சாகத்துடன் நாமும் ஐக்கியமானோம். கடும் கோடையில் நண்பர்கள் பாடலுக்கு நாமும்  கோரஸ் பாடி சுருதி கூட்டி மகிழ்ந்தோம். பயணங்கள் புத்துணர்ச்சியை சேர்க்கிறது …
நாம் புதியதாக கற்று கொண்டது … நாம் புரிந்து கொண்ட வரலாற்று செய்திகளை மேலும் செழுமைபடுத்திக் கொள்ள இந்த தொல்லியல்  கல்வி (Archeological Tour) சுற்றுலா பயன்பட்டது.

1.   சமணமும் பெளவுத்தமும் வைதீக மதத்துடன் இணைந்து வளர்ந்தது என்பது முழு பொய். தமிழ்நாட்டில் கி.மு 2 முதல் கி.பி. 9 வரை செழித்திருந்த தமிழ் சமணத்தையும் பெளவுத்தத்தையும் படிப்படியாக வைதீக மதம் ( தற்போதைய இந்து மதம்) எப்படி அழித்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. சமணம் தமிழ் கூறும் நல் உலகிற்கு அளித்த அளப்பற்ற நாகரிக வாழ்க்கை முறைமையை (–கல்வி. மருத்துவம்-வணிகம்-ஆன்மீகம்-இலக்கியம்-மொழி வளர்ச்சி) புரிந்து கொள்ள முடிந்தது. ‘ஐ’ என்ற தமிழின் சிறப்பு எழுத்தை தேடி ..ஆர்வமுடம் நண்பர்கள் திருநாதர் மலையில் வேகாத வெயில் மகிழ்ச்சியுடன் ஏறிய காட்சி உற்சாகத்தை தந்தது. முதன் முதலில் இங்குதான் ‘ஐ’ என்ற தமிழின் சிறப்பு எழுத்தின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

தலைப்பைச் சேருங்கள்

1.   மண்டகப்பட்டில் தமிழ்நாட்டில் முதல் கற்கோயில் பல்லவர் காலத்தில்  மகேந்திரவர்ம பல்லவன் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு முன் செங்கல், மரத்திலான சிலைகள் , கட்டடிட கலை இருந்தது. பல்லவர்களை காடுவெட்டிகள் என்பர். ஏரிகள் , இணைப்பு கால்வாய்கள் தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் காலத்தில்தான் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன. நிலவுடமை சமூகத்தின் ஆரம்பம் பல்லவர் காலம் ..பின் சோழர் காலத்தில் வலுவடைந்தது. ஏரிகள் , இணைப்பு கால்வாய்கள், நிலவுடமை உற்பத்திமுறை, வணிகம் (சமணர்களால் விரிவுபடுத்தப்பட்டது) பெருமளவு உபரி செல்வத்தை அளித்தது.   இந்த உபரி செல்வத்தின் அடிப்படையில்தான் கிரனேட் பாறைகளால் ஆன தமிழகத்தின் பாறைகளை, மலைகளை குடைந்து கற்கோயில்கள், மாமல்லபுரங்கள் நிர்மாணம் செய்யப்பட்டது. உபரி உற்பத்தி, கலைகள், உழைப்புக்கு இடையிலான உறவை உட்கிரகித்து கொள்ள தொல்லியல் ஆய்வர்கள் தோழர்கள் பத்மாவதி, தீபிகா அவர்களின் தொல்லியல் விளக்க உரைகள்  உதவின.

1.   காவி கும்பல்கள், சில போலி தமிழ்தேசியர்கள் ராஜேந்திர சோழன் பற்றிய பிரம்மையை ஏற்படுத்தி வருகின்றனர். எண்ணாயிரம் கோயில்  இல்லை… சமஸ்கிருதப் பல்கலை கழகம்….பார்ப்பனர்களுக்காக,  வர்ணாசிரமத்தை, சாதிகளை வளர்த்த சமஸ்கிருத மொழியை வளர்க்க ராஜேந்திர சோழன் செய்த பெரும் செலவை தொல்லியல் ஆய்வர்  பத்மாவதி மேடம் விளக்கும் பொழுது  பழைய வரலாறு எவ்வாறு இப்பொழுது மீண்டும் கட்டி எழுப்ப- இணைக்கப் பயன்படுகிறது என்று புரிந்தது.( வாய்ப்பு விரிப்பின் தொல்லியல் ஆய்வர்  பத்மாவதி அவர்களின்  உரை வீடியோ பதிவேற்றப்படும்.

கோயில் வெறும் பக்திக்கான இடமாக  இன்று சுருக்கி விட்டது. ஆனால் கோயில் என்பது  கல்வி, மருத்துவம், கட்டிட கலை,  செல்வ குவிப்பு, நில அளவை, வரிவிதிப்பு ..போன்ற பலவற்றையும் அரசதிக்காரம் எப்படி கோயில் மூலம் நடைமுறை படுத்தியது என்று தொல்லியல் ஆய்வர்  பத்மாவதி அவர்கள் விளக்கினார்

ராசேந்திர சோழனின் குருநாதரான பார்ப்பனர் கட்டிய கோயில்...

திருமலைநாதர் குன்றில்


எண்ணாயிரம் கோயில்   என்ற  சமஸ்கிருதப்- பார்ப்பனர்களுக்கானப் பல்கலை கழகம்…

ஐ’ என்ற தமிழின் சிறப்பு எழுத்து கி.பி. 5 

திருமலைநாதர் குன்றின்
 சமண குகை படுக்கைக்குள் இருந்து..வெளிச்சம் வர இந்தகைய ஏற்பாடு இருக்கலாம் .

மண்டகப்பட்டு பல்லவர் குகை கோயில்

மண்டகப்பட்டு பல்லவர் குகை கோயில் அருகே

பல்லவர் குகை கோயில் அருகே எங்களை கவனித்து கொண்டிருந்த சிறுவன்..அவனுக்கு வரலாற்றை அறிந்து கொள்ள உண்டாக்கப்பட்ட முள்வேலியை எப்பொழுது அகற்றுவது..

வரலாற்று கல்வியின் அவசியத்தை இந்த தொல்லியல்  கல்வி (Archeological Tour) சுற்றுலா நன்கு உணர்த்தியது. வரலாற்றை புரிந்து கொள்ளாவிடில் இந்துத்துவா கும்பல் வரலாற்றை திரித்து மறைத்து எழுதி விடும்.. தொல்லியல்   சின்னங்கள், ஆவனங்கள், வரலாற்றை, கல்வியை பாதுகாத்து மேம்படுத்துவது தமிழக மக்கள் அனைவரின் கடமை.. அதற்காக பனுவல்  புத்தக நிலையம் ஏற்பாடு செய்த ஒருநாள் தொல்லியல்  கல்வி (Archeological Tour ) சுற்றுலாவிக்கு நன்றி சொல்லி கொள்வோம்

1 comment: