எந்த உழைப்பும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் நீரை லிட்டர் 15 ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பதை அரசியல் கட்சிகள் எதிர்க்காமல்,ஆர்ப்பாட்டங்கள் நடத்தாமல் ....அதிக உழைப்புகோரும் விவசாயிகள் நன்மை செய்யும் பால் விலை உயர்வை விமர்சிப்பதை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது பற்றிய மனநிலையை எப்படி புரிந்து கொள்வது..?
" இவ்வுலகமானது மிக அபாயகரமானது; இதற்குள் மனிதர்கள் வாழுவதும் கூட...!
.இந்நிலை மனிதர்களாலோ,
போக்கிரிகளாலோ அல்ல,....!
மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகில் இருந்து அவர்களை அனுமதித்து விடுவதாலேயே."-
அறிவியல் மேதை ஆல்பர்ட் அய்ஸ்டின்
கத்தி பட விமர்சனம்:
90 சதவீத ரவுடிகள்-கிரிமனல்கள் கோழைகள் :.... 90 சதவீத கம்யுனிஸ்டுகள்-சமூக போராளிகள் வீரர்கள்... என்ற உண்மையின் தலைகீழ் காட்சி சித்தரிப்புகள் கத்தி பட கதை..
அறிவு அம்பலப்படுத்து என்கிறது.. உணர்ச்சி கண்ணீரை வரவழைக்கிறது...என்னிடத்தில் உள்ள கோளாறா..? ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவிதியா..?
மோடி அரசு சமஸ்கிரதத்தை திணிப்பதால் தமிழுக்கு என்ன நேரும்?....ஆப்பிரிக்காவின் கென்யா எழுத்தாளரான கூகி வா தியாங்கோ எழுதுகிறார்..
“ஒரு மொழியை தங்களது காலனி ஆதிக்கமாக மாற்றவேண்டுமெனில், அதன் மீது தங்களது மொழி வன்மையைத் திணித்து இலக்கிய ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதுதான். ஓயாது தங்களது மொழியின் சிந்தனையமைப்பையும் செயல்பாடுகளையும் உயர்வாகச் சொல்லிச் சொல்லி தங்களது மொழியை சமூக அந்தஸ்துக்கான குறியீடாக ஆக்குவதும், மற்ற மொழிக்குத் தாழ்மையுணர்ச்சியை ஏற்படுத்தி அதன் வீரியத்தைக் காயடித்துக் கீழானதாக்குவதும்தான்..”
கே:கம்யூனிசம் என்றால் ஒரு வரியில் சொல்லுங்க ..
மாவோ: கம்யூனிசம் என்பது தனிமனிதனை சமூகமனிதனாக்குவதாகும்...
communism is transforming individual man into social man..
புதிய தலைமுறை என்பது 60களின் இறுதியில் வந்த நக்சல்பாரி கலை -இலக்கிய இதழ். எல்.அப்பு, எஸ்.வி.ராஜதுரை, சத்தியமங்கலம் நாகராஜன், புலவர் ஆதி.... போன்றோர் அதை நடத்தினர். இன்று பாரி வேந்தர் பச்சமுத்து..என்ன கொடுமை சரவணா இது!!

மழைத் துளி.....
மழைநீர் வெள்ளமாய் கடலில்
கலக்கிறது... வேடிக்கைகள், ஊழல்களில் வாழ்ந்து தொலைந்து கொண்டிருக்கிறது
தமிழ்ச் சமூகம்..!குடிநீர்
உள்ளிட்ட அனைத்து, தமிழக நீர் தேவைக்கும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை
தான் பிரதானம். ஆண்டின் சராசரி மழை அளவு, 925 மி.மீ., ..., மழை பெய்தாலும்
நீர் நிலைகள் ஏரிகள் அழிக்கப்பட்டதால்…..பெய்யும் மழை நீரில், 40 சதவீதம்
வரை, கடலில் வீணாக கலக்கிறது.......
விவசாயம்,
குடிநீருக்கான தண்ணீர் எடுக்க தர்மபுரி, ஈரோடு,
நாமக்கல் மாவட்டங்களில், 1,200 - 1,300 அடி ஆழம் வரை, ஆழ்துளை
அமைக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக, சென்னை, திருவள்ளுர், தஞ்சாவூர், கோவை
மாவட்டங்களில், 250 முதல் 400 அடி வரை போடப்படுகிறது. பெரும்பாலான
மாவட்டங்களில், 1,000 அடி என்ற அளவிலேயே உள்ளது என, தமிழகத்தில், ஆழ்துளை
கிணறுகள் அமைக்கும் பணியில் உள்ள முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.'நில
அதிர்வைக் கூட கண்டு பிடித்து விட முடிகிறது; நீரோட்டத்தைத் தான் கண்டு
பிடிக்க முடியவில்லை. அதனால் தான், 1,300 அடி வரை போக வேண்டியுள்ளது' என,
ஆழ்துளை கிணறு அமைக்கும் ஊழியர்கள் புலம்புகின்றனர். தற்போது இந்த நிலை
என்றால், எதிர்கால நிலைமை இன்னும் மோசமாகலாம். அதற்கு முன், நிலத்தடி நீரை
மேம்படுத்தவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கவும், தேவையான நீர்
ஆதாரங்கள், கட்டமைப்புகளை, ஏரிகளை, நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்கவும்,
உருவாக்க வேண்டும். ஏரிகளை, நீர் ஆதாரங்களை பாதுகாப்பதை ,மழைநீர்
சேகரிப்புத் திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அவசியத் தேவை;
அலட்சியம் காட்டினால் மண்ணுக்குள் ஈரத்தை பார்ப்பதே அரிதாகிவிடும் என்பது
தான், நிதர்சன உண்மை. கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யுக்கு அலையும்
முட்டாள்களாக நாம் கிருஷ்ணா..கிருஷ்ணா.. கிருஷ்ணா நீர் என்று புலம்பக்
கூடாது..ஏரிகளைப், ஏரி இணைப்பு கால்வாய்களைப் பாதுகாப்போம்!! தடுப்பு
அணைகள் கட்ட தமிழக அரசை வலியுறுத்துவோம்!
|