Saturday, February 18, 2017

FACEBOOK STATUS...

எந்த உழைப்பும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் நீரை லிட்டர் 15 ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பதை அரசியல் கட்சிகள் எதிர்க்காமல்,ஆர்ப்பாட்டங்கள் நடத்தாமல் ....அதிக உழைப்புகோரும் விவசாயிகள் நன்மை செய்யும் பால் விலை உயர்வை விமர்சிப்பதை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது பற்றிய மனநிலையை எப்படி புரிந்து கொள்வது..?


" இவ்வுலகமானது மிக அபாயகரமானது; இதற்குள் மனிதர்கள் வாழுவதும் கூட...!
.இந்நிலை மனிதர்களாலோ,
போக்கிரிகளாலோ அல்ல,....!
மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகில் இருந்து அவர்களை அனுமதித்து விடுவதாலேயே."- 
அறிவியல் மேதை ஆல்பர்ட் அய்ஸ்டின்

கத்தி பட விமர்சனம்:

90 சதவீத ரவுடிகள்-கிரிமனல்கள் கோழைகள் :.... 90 சதவீத கம்யுனிஸ்டுகள்-சமூக போராளிகள் வீரர்கள்... என்ற உண்மையின் தலைகீழ் காட்சி சித்தரிப்புகள் கத்தி பட கதை..
 அறிவு அம்பலப்படுத்து என்கிறது.. உணர்ச்சி கண்ணீரை வரவழைக்கிறது...என்னிடத்தில் உள்ள கோளாறா..? ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவிதியா..?


மோடி அரசு சமஸ்கிரதத்தை திணிப்பதால் தமிழுக்கு என்ன நேரும்?....ஆப்பிரிக்காவின் கென்யா எழுத்தாளரான கூகி வா தியாங்கோ எழுதுகிறார்..
“ஒரு மொழியை தங்களது காலனி ஆதிக்கமாக மாற்றவேண்டுமெனில், அதன் மீது தங்களது மொழி வன்மையைத் திணித்து இலக்கிய ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதுதான். ஓயாது தங்களது மொழியின் சிந்தனையமைப்பையும் செயல்பாடுகளையும் உயர்வாகச் சொல்லிச் சொல்லி தங்களது மொழியை சமூக அந்தஸ்துக்கான குறியீடாக ஆக்குவதும், மற்ற மொழிக்குத் தாழ்மையுணர்ச்சியை ஏற்படுத்தி அதன் வீரியத்தைக் காயடித்துக் கீழானதாக்குவதும்தான்..”


கே:கம்யூனிசம் என்றால் ஒரு வரியில் சொல்லுங்க ..

மாவோ: கம்யூனிசம் என்பது தனிமனிதனை சமூகமனிதனாக்குவதாகும்...

communism is transforming individual man into social man..

 புதிய தலைமுறை என்பது 60களின் இறுதியில் வந்த நக்சல்பாரி கலை -இலக்கிய இதழ். எல்.அப்பு, எஸ்.வி.ராஜதுரை, சத்தியமங்கலம் நாகராஜன், புலவர் ஆதி.... போன்றோர் அதை நடத்தினர். இன்று பாரி வேந்தர் பச்சமுத்து..என்ன கொடுமை சரவணா இது!!



மழைத் துளி..... மழைநீர் வெள்ளமாய் கடலில் கலக்கிறது... வேடிக்கைகள், ஊழல்களில் வாழ்ந்து தொலைந்து கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்..!குடிநீர் உள்ளிட்ட அனைத்து, தமிழக நீர் தேவைக்கும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை தான் பிரதானம். ஆண்டின் சராசரி மழை அளவு, 925 மி.மீ., ..., மழை பெய்தாலும் நீர் நிலைகள் ஏரிகள் அழிக்கப்பட்டதால்…..பெய்யும் மழை நீரில், 40 சதவீதம் வரை, கடலில் வீணாக கலக்கிறது....... விவசாயம், குடிநீருக்கான தண்ணீர் எடுக்க தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், 1,200 - 1,300 அடி ஆழம் வரை, ஆழ்துளை அமைக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக, சென்னை, திருவள்ளுர், தஞ்சாவூர், கோவை மாவட்டங்களில், 250 முதல் 400 அடி வரை போடப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில், 1,000 அடி என்ற அளவிலேயே உள்ளது என, தமிழகத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் உள்ள முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.'நில அதிர்வைக் கூட கண்டு பிடித்து விட முடிகிறது; நீரோட்டத்தைத் தான் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தான், 1,300 அடி வரை போக வேண்டியுள்ளது' என, ஆழ்துளை கிணறு அமைக்கும் ஊழியர்கள் புலம்புகின்றனர். தற்போது இந்த நிலை என்றால், எதிர்கால நிலைமை இன்னும் மோசமாகலாம். அதற்கு முன், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கவும், தேவையான நீர் ஆதாரங்கள், கட்டமைப்புகளை, ஏரிகளை, நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்கவும், உருவாக்க வேண்டும். ஏரிகளை, நீர் ஆதாரங்களை பாதுகாப்பதை ,மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அவசியத் தேவை; அலட்சியம் காட்டினால் மண்ணுக்குள் ஈரத்தை பார்ப்பதே அரிதாகிவிடும் என்பது தான், நிதர்சன உண்மை. கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யுக்கு அலையும் முட்டாள்களாக நாம் கிருஷ்ணா..கிருஷ்ணா.. கிருஷ்ணா நீர் என்று புலம்பக் கூடாது..ஏரிகளைப், ஏரி இணைப்பு கால்வாய்களைப் பாதுகாப்போம்!! தடுப்பு அணைகள் கட்ட தமிழக அரசை வலியுறுத்துவோம்!

அம்மா...தாய்... நேசித்த தமிழின் சிறந்த வார்த்தைகள்..ஏன் உலகின் எல்லா மொழி படைப்புகளிலும் ஆக அன்பிற்கும் நேசத்திற்கும் உரிய வார்த்தைகள்... இங்கு தமிழ் சூழலில் அவலமாய்..சுயநலமாய்..தன் அகங்கரமாய் அபசுரமாய் மாறி வருவதற்கும் பஜனை பாடுவதற்குமாக தமிழ் சினிமா உலகின் சமூக விழுமியங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படாமல் திருட்டு விசிடிக்கு மட்டும் பொங்கினால் எப்படி..
 திருட்டு விசிடிகள் அல்ல இனி அவை மக்கள் விசிடிகள் .. என்று அழையுங்கள்!!

ஊழலுக்கு, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பத்ற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் செய்யும் தமிழ்க திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு திருட்டு விசிடிகள் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை... திருட்டு விசிடிகள் அல்ல மக்கள் விசிடிகள் .. 60 கோடிகள், 100 கோடிகள் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்த தண்டனை குற்றவாளி மக்கள் முதல்வர் என்றால் 50 ரூபாய் விசிடிகள் திருட்டு விசிடியா அல்ல அவை மக்கள் விசிடிகள்... மக்களுக்கான விசிடிகளை கொண்டாடுவோம்..மக்கள் விசிடிகளை பரவலாக்குவோம்..!
ஏழை மக்கள் புத்தம் புதிய திரைப்படங்களை பார்க்க உதவும் மக்கள் தொழிற்சாலைகள்தான் எளிய திருட்டு(மக்கள்) விசிடி தயாரிப்பு நிலையங்கள் ... அதை ஊக்கு விப்போம். கொள்ளை இலாபம் அடிக்கும் , ஊழல்-கொள்ளை-வரி ஏய்க்கும், ஆதரிக்கும் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு பாடம் புகட்டுவோம்..!!
கத்தி, புலிபார்வை திரைப்படங்கள் புத்தம் புதிய மக்கள் விசிடிகள் கிடைக்கிறதா..?

அது என்ன சொத்து குவிப்பு வழக்கு... ?
சொத்து என்ன மணல் மாதிரி கடற்கரையிலா குவித்து வைத்திருக்கு...! மக்கள் தங்கள் உழைப்பால் விளைத்த செல்வத்தை கொள்ளை அடித்த வழக்கு என்று சொல்ல வேண்டும்...... 10 ஆயிரம், 50 ஆயிரம் எடுத்தால் மட்டும் திருட்டு என்று குற்றமாறது.. கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை திருடினால் ....சொத்து குவிப்பு வழக்கு..லாஜிக் உதைக்குதே..?
செங்கல்பட்டு மாவட்டம் (இன்றைய ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளுர் மாவட்டங்கள்) ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்டன..… ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், இணைப்பு கால்வாய்கள் நிறைந்த இருந்தன… 16 நூற்றாண்டுகளுக்கு முன் பல்லவர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டு…. பிற்க்கால சோழர் ஆட்சியில் செழுமைப்படுத்தப்பட்டு, ஆங்கிலேடர் ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்பட்டன….இந்த மாவட்டங்கள் செ 16 நூற்றாண்டுகளாக நம் முன்னோரிகள் கூட்டு உழைப்பு, கூட்டு சிந்தனையால் உருபெற்ற பல ஏரிகள் நம் தலைமுறையில் அதுவும் 20 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு விட்டன …. புதிய பொருளாதார கொள்கை என்றும், வளர்ச்சி என்றும் ஏரிகளை, நீர்நிலைகளை குப்பை தொட்டிகளாக கருதி இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இராசயன- மங்காத கழிவுகளை கொட்டி சீரழிக்கின்றன..நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. தண்ணீருக்காக, 1,200 - 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.'மழை இந்த வருஷமும் ஏமாத்திடுச்சே... தண்ணிக்கு அல்லாட வேண்டியது தான்...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், தமிழக மக்கள் கூறுவது வழக்கம். மழை பெய்யவில்லை என, வருத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், கொட்டிய மழைநீரையும் சேமிக்காமல்,ஏரிகளை, நீர்நிலைகளை அழித்து விட்டு , கழிவுகளை கொட்டி வீணடித்துவிட்டு, 'வருண பகவான் ஏமாத்திட்டாரு' என, குறைகூறுவது சரியல்ல.
குடிநீர் உள்ளிட்ட அனைத்து, தமிழக நீர் தேவைக்கும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை தான் பிரதானம். ஆண்டின் சராசரி மழை அளவு, 925 மி.மீ., என்றாலும், இந்த அளவை தமிழகம் எட்டிப் பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன.போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஏரிகள் அழிக்கப்பட்டதால்…..பெய்யும் மழை நீரில், 40 சதவீதம் வரை, கடலில் வீணாக கலக்கிறது. ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருந்த பகுதிகளிலும், வியாபார நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நிலைமை சிக்கலாகி, நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு போய் விட்டது.தாகம் தீர்க்கும் தண்ணீருக்காக மக்கள் பல கி.மீ., அலைந்து திரியும் நிலை, பெரும்பாலான மாவட்டங்களில் நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில், டெல்டா பாசன பகுதிகளிலேயே விவசாயம் முடங்கியது என்றால், மற்ற பகுதிகளைக் கேட்க வேண்டியதில்லை.
விவசாயம், குடிநீருக்கான தண்ணீர் எடுக்க, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், 1,200 - 1,300 அடி ஆழம் வரை, ஆழ்துளை அமைக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக, சென்னை, திருவள்ளுர், தஞ்சாவூர், கோவை மாவட்டங்களில், 250 முதல் 400 அடி வரை போடப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில், 1,000 அடி என்ற அளவிலேயே உள்ளது என, தமிழகத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் உள்ள முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.'நில அதிர்வைக் கூட கண்டு பிடித்து விட முடிகிறது; நீரோட்டத்தைத் தான் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தான், 1,300 அடி வரை போக வேண்டியுள்ளது' என, ஆழ்துளை கிணறு அமைக்கும் ஊழியர்கள் புலம்புகின்றனர். தற்போது இந்த நிலை என்றால், எதிர்கால நிலைமை இன்னும் மோசமாகலாம். அதற்கு முன், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கவும், தேவையான நீர் ஆதாரங்கள், கட்டமைப்புகளை, ஏரிகளை, நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்கவும், உருவாக்க வேண்டும். ஏரிகளை, நீர் ஆதாரங்களை பாதுகாப்பதை ,மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அவசியத் தேவை; அலட்சியம் காட்டினால் மண்ணுக்குள் ஈரத்தை பார்ப்பதே அரிதாகிவிடும் என்பது தான், நிதர்சன உண்மை. கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யுக்கு அலையும் முட்டாள்களாக நாம் கிருஷ்ணா..கிருஷ்ணா.. கிருஷ்ணா நீர் என்று புலம்பக் கூடாது..ஏரிகளைப், ஏரி இணைப்பு கால்வாய்களைப் பாதுகாப்போம்!!ஏரி இணைப்பு கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற போராடுவோம்!1 தடுப்பு அணைகள் கட்ட தமிழக அரசை வலியுறுத்துவோம்

சுப்பிரமணிய சுவாமி நேற்றைய மழையில் பூத்த விஷ களான் அல்ல...ஆர்.எஸ்.எஸ் என்ற குப்பை கூடாரத்தின் விஷ வித்து.....அரசு அதிகாரம் கிடைத்ததால் இன்று சுகமாய் வளர்கின்றது. குப்பையில் நெளியும் புழுக்களான ஆயிரம் நாக்குகளில் ஒன்று.. அகண்ட பாரத ஒற்றை கலாச்சாரத்தினை பன்முக தன்மைகள் கொண்ட இந்திய துணைக்கண்டத்தில் வன்முறையாய் நிறுவ துடிக்கும் பார்ப்பீனியத்தின் நாம் புரிந்து கொள்ள வேண்டும்... ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி- தமிழிசை எல்லாம் ஒன்றுதான்... நேரம் பார்த்து ஆழம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈழ விடுதலை போரை கொச்சைப்படுத்த, தமிழின விடுதலையை முளையிலேயே கிள்ளி எறிய

1 comment: