நேற்று ஆரம்பித்த கன மழை இன்று பிற்பகலிலும் லேசாக தூறி கொண்டிருந்தது…
மகன் சாலை விபத்தில் மரணம் அடைந்த செய்தியை ஐ-போன் பதறிக் அறிவித்தது. தந்தை பெருந்துயர் தொண்டையை அடைக்க துடிதுடித்தார். சம்பவ இடத்தை ஆடி காரில் விரைந்து அடைந்தார்.
விபத்து நடந்த இடத்தை சுற்றி போலிஸ்காரர்கள் அடையாளம் வரைந்து அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். குட்டை போல் சாலையின் நடுவில் நீர் தேங்கி இருந்த பள்ளம் தெரியாமல் அதற்குள் படுவேகமாய் வந்த புல்லட் வண்டி சக்கரம் மாட்டி கொண்டதால் தூக்கி எறியப்பட்டு கருங்கல் சரளையில் பின்மண்டை மோதி பிளந்து இறந்தாக போலிஸ்காரர் கூறினார்.
அவரின் செல்பேசியில், “..காசு மேல … காசு வந்து … கொட்டுகிற நேரம் ம்மிது” என்று ரிங் டோன் ஒலித்தது.
“ சார்.. (மகிழ்ச்சிக் குரல்) கைலாசம் நகர் ஏரியா பேட்ச் ஒர்க் கன்ராக்ட் பணம் ரெடியாகிடிச்சு… அதோட..இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கிறதால இன்னும் நூலு ஏரிய சாலை காண்ட்ராக்ட் அதிகம் எக்ஸ்ட்ராவா கிடைக்கும் என்று பெரியவாள் சொல்ல சொன்னார் “ என்றார் அவரின் ஏஜண்ட்.
“ச்ச்சீ..”
நொந்து போன அந்த கான்ராக்டர் நிமிர்ந்த பொழுது கைலாசம் நகர் சாலை பள்ளங்களில் வாகனங்கள் சர்க்க்ஸ் செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
“ பிற்பகலில் கைலாசம் நகரில் நடந்த சாலை விபத்தில் தொழில் அதிபர் மகன் மரணம்..என்று செய்தி தொலைகாட்சிகளில் ஓடி கொண்டிருந்தது…. சாலை கான்டிராக்டில் ஒன்றுக்கு பத்தாய் சம்பாதித்து மகனுக்கு வாங்கித் தந்த அந்த புது BMW 1600விலை உயர்ந்த பைக் சிதைந்து கிடப்பதை தொலைகாட்சி காட்டி கொண்டிருந்ததை அழுகையினுடாக கான்ராக்டர் பார்க்க நேரிட்டது.. அந்த சிதைந்த குழியில் இருந்த இரத்தம் சாலை முழுவதும் பரவி அங்காங்கே உடைந்து கிடைந்த குழிகளில் இருந்த மழைநீரை சிவப்பாய் மாற்றி இருந்தது.
No comments:
Post a Comment