Friday, June 12, 2020

புழல், கடலூர் சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவல். கொள்ளை நோயை தடுக்க தமிழக சிறைகளில் உள்ள நீண்ட நாள் நோயர்களான கைதிகளை, 60 வயது முதியோர் கைதிகள், பெண் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை

புழல், கடலூர் சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவல். கொள்ளை நோயை தடுக்க தமிழக சிறைகளில் உள்ள நீண்ட நாள் நோயர்களான கைதிகளை, 60 வயது முதியோர் கைதிகள், பெண் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை
                                                                 31-05-2020
                                                                      சென்னை


விடுநர் :
       முனைவர் சுப.மனோகரன்
       வழக்கறிஞர்
       பொது செயலாளர்
       சனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை
       Organization for Protection of Democratic Rights (OPDR)
       எண்:138, இரண்டாம் தளம்,
       தம்பி தெரு, பாரிமுனை,
       சென்னை -600 0001  செல்:9940176599
பெறுநர்
       அனைத்து ஊடகங்கள்
       ஊடக நண்பர்கள்

        
வணக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3.70 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#புழல்_சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, கடலூர்,திருச்சி, உள்ளிட்ட சிறைகளில் இருந்து கைவினைப்பொருட்கள் பயிற்சிக்காக புழல் சிறைக்கு வந்து சென்ற 5 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் 19 சிறைக்காவலர்கள் 74 தண்டனை கைதிகள் உள்ளிட்ட 94 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 30 கைதிகளுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. அவ்வாறு உறுதி செய்ய முடியவில்லை எனில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்ச விடுப்பில் அனுப்ப வேண்டும்.
4 முறை ஊரடங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவுவதை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட முடியவில்லை.. இந்த நிலையில் 5வது முறையாக ஊரடங்கு சட்டம் மோடி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது
நோய் தொற்று வேகமாக பரவுவதை   தடுக்க அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் தலைவர் மிகேல் பேக்லெட் அவர்கள் சிறை கைதிகளில்  வயதானவர்களை, நாள்ப்பட்ட நோய் வாய்ப்பட்டவர்களை விடுதலை செய்ய தனது உறுப்பு நாடுகளை கேட்டு உள்ளார். அதன்படி இரான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்காவின் சிறிய  நாடான மொராக்காவில் 5,654 கைதிகளை அவர்கள் வயது மூப்பு, உடல்நிலை, நீண்டகால சிறைவாழ்க்கை அடிப்படையில் சில நாட்களுக்கு முன் விடுதலை செய்துள்ளது 
அரசியல் கைதிகளை, மாறுபட்ட கருத்துகளுக்காக கைது செய்யப்பட்ட அரசிய கைதிகளை, மனித உரிமை ஆளுமைகளை, பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய செய்தி தொடர்பாளர் ரூபர் கோல்வில் வலியுறுத்தி உள்ளார்.

(U.N. human rights spokesman Rupert Colville said prisoners at high-risk of infection, such as the elderly, people with disabilities, and pregnant women who pose no risk to society should be immediately released. 

He told VOA people who are being held illegally should be released immediately.  They include political prisoners and those detained for critical, dissenting views, such as journalists and human rights defenders.  He said very few political prisoners are among the thousands that have been released in Iran.
  
“That is a big issue and obviously, these are not rapists, murderers, people guilty of serious crimes.  Indeed, under international law, many are not guilty of any crime at all.  So, we believe these should be absolutely among the first prioritized for release,” he said.) 
The Delhi government has issued a notification introducing a new provision of "Emergency Parole" of two months, in addition to regular parole available to convicts. Till now, as many as 409 prisoners have been released - 356 were given interim bail, while 63 came out on emergency parole.
A total of 204 prisoners have been released from various jails of the Union Territory between April 1 and 13. They include 45 prisoners arrested under the PSA, 78 undertrials through the undertrial review committee, nine undertrials falling under section 107, 109, 151 of the CrPC,” a senior government official told PTI.
Among the 204, 16 prisoners were released on parole, he said.
உலக நாடுகள் அனைத்திலும் வாழும் மனிதர்கள் இன்று பெரும் பேரிடர் நெருக்கடிக்குள் சிக்கி கொண்டு உள்ளனர். உலகின் சிறிய பகுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று நோய் மூன்று மாதங்களில் உலக சுகாதாரத்தில் பேரிடரை, பொருளாதார பேரழிவை உண்டாக்கி கொண்டு தொடர்ந்து பரவி வருகிறது. எந்த நாடும், எந்த மக்கள் குழுமும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு இல்லை. உலக மாந்தர் வாழ்வின் அனைத்து தளங்களிலும் பேரிடரை, பேரழிவை கொரோனா வைரஸ் உருவாக்கும் என்பதாக உலகின் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 'கொரானா வைரஸ்'  தொற்று நோய் பேரிடர் இன்னும் வேகமாக பரவும் என்று பல்வேறு ஆய்வுகள், புள்ளி விவரங்கள் எடுத்து கூறுகின்றது. இதை கணக்கில் கொண்டு இந்திய அரசும், உச்சநீதிமன்றம், தமிழக அரசும் கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
உச்சநீதிமன்றம் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆணை இட்டுள்ளது. நீதிமன்றங்கள் விடுமுறை விடப்பட்டு, வழக்குகள் ஒத்தி வைக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. நிலைமை மோசமாவதை உணர்ந்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசும், மாண்புமிகு பிரதமர் மோடியும் 5வது முறை ஊரடங்கு பிறப்பித்து, தற்பொழுது ஜீன் 30 ஆம்தேதி வரை நீடித்துள்ளார். தமிழக அரசும் தமிழகம் முழுவது 144 சட்டத்தை அமுல்படுத்தி இருக்கின்றன. பிரதமரின் ஊரடங்கை தமிழ்நாட்டிலும் அமுல்படுத்துப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு துறைகளும் இதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், சிறைதுறை 'கொரானா வைரஸ்'  தொற்று நோய் பற்றி போதுமான அறிவியல் ரீதியான கவனம் மத்திய, மாநில அரசுகள் செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் தமிழக சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ஊடங்கங்கள் கூறிகின்றன.
இந்த நிலையில் தமிழக சிறையில் உள்ள கைதிகள் பற்றி இந்திய அரசும், உச்சநீதிமன்றம், தமிழக அரசும் போதிய கவனமும், முன்னெச்சரிக்கையும் மனிதாமானமும் கொண்டு செயல்படுவது காலத்தின் அவசியம்.
இந்திய நீதித்துறை அறிக்கை 2019 யின் படி சிறையில் தங்கும் சிறைவாசிகளின் சராசரி எண்ணிக்கை 114 சதவீதமாக உள்ளது. சராசரியான எண்ணிக்கை இவ்வாறு இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இது வெவ்வேறானதாக இருக்கிறது.
தமிழக சிறைகளில் 15,000 க்கும் மேல் சிறைகைதிகள் உள்ளனர்  இந்த கைதிகள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆவார்கள். அவர்கள் உயிருக்கும் உடல் நலத்திற்கும் இந்திய அரசும், உச்சநீதிமன்றம், தமிழக அரசுமுமே முழுயான பொறுப்பாகும். இந்திய அரசியல் சட்ட அமைப்பு வழங்கியுள்ள உயிர்வாழ்வதற்க்கான உரிமை சிறைவாசிகளுக்கும் பொருந்தும்.
  15,000 க்கும் மேல் கும்பலாக சிறைகைதிகள் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டு இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும்  'கொரானா வைரஸ்'  தொற்று கும்பலாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் வேகமாக பரவக்கூடியது என்பதால் பெருமாலான மத்திய சிறைகளில் இப்படி கைதிகள் கும்பலாக அடைக்கப்பட்டு இருப்பது நோய் பரவலை அதிவேகமாக ஏற்படுத்து வாய்ப்பு அதிகம் உள்ளது. 
இரண்டாவதாக நீண்ட நாட்கள், காலங்கள் நோய்வாய்ப்பட்டோர்கள் குறிப்பாக ஆஸ்துமா, இருதய கோளாறு, சிறுநீரக கோளாறு, நீரழவு வியாதி போன்ற நோய்களை உடையர்களையும் (கைதிகளை) 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியோர்களையும் (கைதிகளை) 'கொரானா வைரஸ்'  தொற்று நோய் எளிதில் தொற்றி மரணத்தை  ஏற்படுத்தும் என்பது உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அரசு ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.. பெருமளவு உலகம் முழுவதும் இப்படியான காரணங்களால் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  தனிகவனம் எடுத்து இவர்களை 'கொரானா வைரஸ்'  தொற்று நோயில் இருந்து பாதுகாப்பது அரசுகளால் இந்த பேரிடர் சூழ்நிலையில் முடியாதாகும்.
அரசியல் கைதிகளை. மாற்று கருத்துகளுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய அய்க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் வலியுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரும் அளவிலான அரசியல் சிறைவாசிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி அல்லது தண்டனை பெற்ற குற்றவாளிகளாக அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். பலர் நீதித்துறை விசாரணையின்றி 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டுள்ளனர். சிலர் ஏற்கனவே நோய்வாய்பட்டு அவதியுற்று வருகின்றனர்.
நாட்டிலுள்ள பல சிறைகளில் சரியான மருத்துவமனைகளோ, தேவைக்கேற்ற மருத்துவர்களோ, மருத்துவ சேவைக்கான வசதியோ இல்லை. அவசர சிகிச்சை தேவைப்படும்போது, வெளியில் உள்ள, ஏற்கனவே அதீத பணிச்சுமையால் திணறிக்கொண்டிருக்கும் பொது மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. பல நிர்வாக வழிமுறைகளின் காரணமாக ஏற்படும் தாமதத்தினால் பெரும்பாலான சிறைவாசிகள் தேவையான மருத்துவ வசதி கிடைக்கப் பெறாமல் உள்ளனர். தற்போதைய சூழலில் பொது மருத்துவமனைகளே காரோனா தொற்று நோயின் காரணமாக பெரிதும் நெருக்கடிக்குள்ளாகும் நிலையில் சிறைவாசிகளின் நிலைமை இன்னும் மேலும் மோசமானதாகி விடும். சிறைகளில் இதற்கு போதுமான வசதிகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என நமக்கு ஏதும் தெரியவில்லை.
 அதோடு இந்த கைதி நோயர்கள், முதிய கைதிகள் ( சீனியர் சிட்டிசன்) பல காரணங்களால் சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள், சிறை வார்டன்கள் மிக நெருக்கமாக கண்காணிப்பில் இருக்கும் தேவை இருப்பதால் கைதிகளுக்கும், கைதிகளிடமிருந்து சிறை ஊழியர்களுக்கும் 'கொரானா வைரஸ்'  தொற்று எளிதில் பரவ வாய்ப்பு இருக்கின்றது
இதனால்தான் ' கொரானா வைரஸ்'  தொற்று பரவாமல் தடுக்க சிறையில் உள்ள கைதிகளை மொராக்கா, ஈரான், இங்கிலாந்து, அமெரிக்கா, மத்திய கிழக்கில் சில நாடுகள் விடுதலை செய்ததை நமது அரசாங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
' கொரானா வைரஸ்'  தொற்று பரவாமல் தடுக்க புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறப்பு சிறையில் இருந்து 36 மகளிரும், விசாரணை சிறையில் இருந்து 226 போ், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 62 போ், வேலூா் மத்திய சிறையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்பட மொத்தம் 1,184 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தமிழக  சிறைத்துறையினா் தெரிவித்தனா். இது வரவேற்க்க தகுந்தது. இன்னும் சிலர் விடுவிக்கப்பட உள்ளனர்.  எனினும் 15,000 கைதிகள் எண்ணிக்கையில் இது மிக, மிக குறைவாகும்.
' கொரானா வைரஸ்'   வயதானவர்களையும், நோய்வாய்பட்டவர்களைதான் பாதிக்கும் என்பதை குறிப்பாக கவனத்தில், கணக்கில் கொள்ளாமல் இந்த விடுதலை அமைந்துள்ளது… வயதானவர்களையும், நோய்வாய்பட்டவர்களைதான் ' காரோனா வைரஸ்'  தொற்று நோய் பரவாமல் தடுக்க முதலில் அவர்கள்தான் விடுதலை செய்து இருக்க வேண்டும். அவ்வாறக நடைபெறவில்லை. மேலும், ஊரடங்கு  சட்டம் அமுலில் இந்தியா முழுவதும் உள்ளதால் வயதான, நோய்வாய்பட்ட கைதிகள் விடுதலை செய்தால் இந்த கொரோனா பயம், தொற்று, பரவல், ஊரடங்கு கண்காணிப்புகளை மீறி தப்பித்து, தலைமறைவாக சென்று விடுவார்கள் என்பது இயற்கை நீதிகளுக்கு முரணானதாகும்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு ஆணை 64/2018யின் படி  3 மாணவிகள் உயிருடன் எரிக்கப்பட்ட குற்றவழக்கில் மரணதண்டனை பெற்று  உச்சநீதிமன்றம் வரை உறுதி செய்யப்பட்டு கடைசியில் சீராய்வு மனுவில் ஆயுள்தண்டனையாக்க குறைக்கப்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்த  கைதிகள் அனைவரையும் மாண்புமிகு எடப்பாடியார் ஆட்சி ஒரே வாரத்தில் விடுதலை செய்தது. இதே ஆணையின்படி மேலவளைவு படுகொலை குற்றவழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற கைதிகள் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அதே போன்று 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு ஆணை 1155/2008 யின்படி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  தலைவர் தோழர் லீலாவதி அவர்கள் படுகொலைசெய்யப்பட்ட  குற்றவழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை 7 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் 10 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பின்பும் 29 ஆண்டுகள் வரை பல கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ' கொரானா வைரஸ'  தொற்று நோய் பரவும் பேரிடருடன் இணைத்து இவைகளையும் கருத்தில் கொண்டு கீழ்காணும் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் மனிதாபிமானத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும். 
இந்த நொடி வரையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியதையும் பலியானோரின் எண்ணிக்கை 3.70 லட்சமாக உயர்ந்துள்ளதையும் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளதையும். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதையும் கருத்தில் கொண்டு,
'கொரானா வைரஸ்'  பரவும் வேகத்தையும், அதனை உடனடியாக குணப்படுத்த எந்த மருந்தும் இல்லாமல் உள்ள இந்த சூழ்நிலையில், தமிழக மாண்புமிகு எடப்பாடி ஆட்சி,
1.   10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு ஆணை 64/2018 யின் படி  கைதிகள் தண்டனை பெற்ற குற்ற வழக்கு பின்னணிகள், மத வேறுபாடுகள் பார்க்காமல் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
2.   நீண்ட நாட்கள், காலங்கள் ஆஸ்துமா, இருதய கோளாறு சிறுநீரக கோளாறு, எயிட்ஸ், புற்றுநோய், தீராத புண்களுடன் கூடிய நீரழிவு வியாதி போன்ற நோய்களை உடைய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
3.   60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியோர் கைதிகளை 'கொரானா வைரஸ்'  தொற்று நோயில்  இருந்து காக்க உடனை விடுதலை செய்ய வேண்டும்.
4.   20 ஆண்டுகள் மேல் 29 ஆண்டுகள் வரை தமிழக சிறைகளில் பல கைதிகள் உள்ளனர். இந்த கைதிகள் தண்டனை பெற்ற குற்ற வழக்கு பின்னணிகள், மதங்கள்-சாதி வேறுபாடுகள் பார்க்காமல் இந்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
5.   பெண் கைதிகள் பொதுவாக ஆணாதிக்க சமூகத்தின் எதிர்விளைவாகதான் குற்ற செயல்களுக்கு தள்ளப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கின்றனர். இவர்களில் நீண்ட காலங்கள் ஆஸ்துமா, இருதய கோளாறு சிறுநீரக கோளாறு, எயிட்ஸ், புற்றுநோய், தீராத புண்களுடன் கூடிய நீரழிவு வியாதி போன்ற நோய்களை உடைய பெண் கைதிகளை, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து முடித்து உள்ள பெண்கைதிகளை எந்த நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
6.       அரசியல் கைதிகளை, மாறுபட்ட கருத்துகளுக்காக கைது  செய்யப்பட்ட அரசியல் கைதிகளை, மனித உரிமை ஆளுமைகளை, பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்திபடி மாண்புமிகு மோடி அரசும், எடப்பாடி அரசும் விடுதலை செய்ய வேண்டும்.
.  மனித குலம் இதுவரை சந்தித்திராத பெரும் பேரிடரை சந்தித்து வருகிறது. இயற்கை நீதியும், மனித மாண்புகளும் காக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.  இந்த கோரிக்கைகளை பரிவுடன் கவனித்து ஆவண செய்யும்படிக் கேட்டு கொள்கிறேன்.
நன்றி

                                             இவண்
                               முனைவர் சுப.மனோகரன்
 வழக்கறிஞர்
செல்: 9940176599
அனைத்திந்திய பொது செயலாளர்
                   சனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை
Organization for Protection of Democratic Rights (OPDR)

தொடர்புக்கு: முனைவர் சுப.மனோகரன், வழக்கறிஞர்
செல் 99401 76599

No comments:

Post a Comment