Wednesday, December 14, 2011

முகவரியைத் தொலைத்தவனின் முகவரி


               
நமக்கு பிடித்த பாடல்களைதிரைப்படங்களை திரும்பச் சுற்றுச்செய்து (REWIND) கேட்கின்ற, பார்க்கின்ற மாதிரி வாழ்க்கையை மீண்டும் திரும்பச் சுற்ற செய்கின்ற வசதியை இயற்கை நமக்கு அளித்திருந்தால் நமது வாழ்க்கையின் இனியப் பக்கங்களை கண்டு மகிழ்ச்சியடையவும்,கோணல் பக்கங்களை மீளாய்வு செய்து திருத்தவும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நான் நினைப்பது உண்டு. மக்கள் பண்பாடு இதழ்களின் இந்த தொகுப்பை வாசிக்கையில் இந்த உணர்வு தான் மேலிடுகிறது. மனநிறைவையும்,நெகிழ்வையும் அது ஏற்படுத்திகிறது.
1990களில் பண்பாட்டுத்தளத்தில் களப்பணி ஆற்றிய மக்கள் பண்பாட்டு பேரவையினால் கொண்டு வரப்பட்ட இந்த இதழ்கள் அக்காலத்தின் கண்ணாடியாய் இருந்ததை உண முடிகின்றது. அக்காலத்தின் மைய சிக்கலான உலகமயமாக்கலையும், இந்துமத பாசிச மயமாக்கலையும் சரியான உட்செறித்துக் கொண்டு, அதை எதிர்ப்பதிலும், பதிவு செய்வதிலும் முன்னோடியாக இந்த இதழ்கள் இருந்துள்ளன.
60களின் இறுதியில் வந்தபுதிய தலைமுறை”, 70 களின் ஆரம்பத்தில் வெளிவந்த மனிதன்”, 80களில் வெளி வந்த செந்தாரகை ஆகியவைகளின் தொடர்ச்சியாகத்தான் 90 களில் வெளிவந்த மக்கள் பண்பாடு இதழைப் பார்க்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்த தொகுப்பின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும், இன்றியமையாமையும் நம்மால் உணர முடியும். தமிழ்நாட்டு வரலாற்றில் உந்துசக்தியாக இந்த இதழ்களும்இதில் பங்களித்த படைப்பாளிகள் இருந்தனர். இன்றும் களத்தில் இருக்கின்றனர். 
எல்லா சமூக நெருக்கடிகளும், அவைகளின் வளர்ச்சிப்போக்கில் தங்களுக்கான இயக்கங்களையும், படைப்பாளிகளையும் தலைவர்களையும் வரலாற்றின் முன்சமைக்கின்றன. தனது அகமுரண்களை விமர்சன- சுயவிமர்சனங்கள் மூலம்களைந்து போராடும் மக்கள் திரளுடன் இணைந்து பெரும் இயக்கமாக மாற்றம் கொள்ளும் போது அந்த நெருக்கடிகள் முடிவுக்கு வருகின்றன.  ல்லையெனில் மீண்டும் மீண்டும் நெருக்கடிகள் தனக்கான இயக்கங்களை தொடர்ந்து வரலாற்றில் முன்கொண்டு வந்த நிறுத்திக்கொண்டு இருக்கும். சமூக முரண்களும் அதன் நெருக்கடிகளும் புரட்சிகளால் முடிவுக்கு கொண்டு வரும் வரை இந்த அலைகளின் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இந்த பின்னணியில் இந்தத் தொகுப்பை புரிந்து கொண்டுப் பரிசீலிக்க வேண்டும்.
மக்கள்பண்பாடு போன்ற சிற்றிதழ்கள் பங்களிப்பை அதன் தாக்கத்தை தமிழ்நாட்டின் பெரும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அன்றைக்கு சிறிய அளவல் இருந்தது. வரலாற்றின் தொடர்ச்சியில் அதன் பங்களிப்பு கணிசமானதாகும். சமீபத்திய இரு நிகழ்வுகள் இதற்கு சான்றாகும். தமிழ்வழிக்கல்வி, பொதுக்கல்விமுறை,  பொதுபாடத்தை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு 14 இயக்கங்களின் கூட்டியக்கம் திண்டிவனத்தில் ஆரம்பிக்கப்பட்டதை மக்கள்பண்பாடு பதிவு செய்துள்ளது. சிறுபொறியாக-சிறுகுழுக்களின் கோரிக்கையாக இருந்த அது பெரும் காட்டுத் தீயாக பல இயக்கங்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த பெரும் மாணவர்-மக்கள் எழுச்சி இந்த ஆண்டு நடந்ததை அவதானிக்கையில் இத்தகைய புரட்சிகர இதழ்களின் கால பொருத்தப்பாட்டை விளங்கி கொள்ள முடிகிறது.
              ராஜீவ் கொலையைப் பின்புலமாக்கி கொடூர அடக்கு முறைகளை அன்றைய ஜெயா அரசு மக்கள் மீது திணித்தது. இம்மொன்றால் சிறை, போராடினால் தடா என்பது எழுதாத சட்டமாகி இருந்தது. சித்ரவதைச் செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலங்கள், கறுப்புச் சட்டமான தடாவின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நீதிமன்ற வழக்கு விசராணை,  அரசியல்ரீதியில் பழிவாங்கப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளில் அனைவருக்கும் தூக்குத் தண்டனையைச் சர்வசாதாரணமாக இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. இந்த ஒடுக்கமுறைக்கு எதிராக பல்வேறு சிறிய இயக்கங்கள் முதலில் களம் இறங்கி. மக்கள் பண்பாடு இதழும் தனது பங்களிப்புச் செய்ததை இத்தொகுப்பில் காணலாம்.
மக்கள் பண்பாட்டுப் பேரவையால் ஒருங்கிணைக்கப்பட்ட புரட்சி பாடகர் கத்தார் பங்கேற்ற  “ மரணதண்டனைக்கு  எதிரான கலைநிகழ்ச்சிசென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. மக்களின் எதிர்ப்பால் அனைவருக்கும் தூக்குத் தண்டனை என்பது ரத்து செய்யப்பட்டது. நான்கு பேருக்கும் மட்டும் தூக்குதண்டனை என உச்சநீதிமன்றம் மக்கள் முன்பு அடிபணிந்தது! தற்போது இலங்கை அரசைப் போர் குற்றவாளியாக்க உலகமெங்கும் நடைபெறும் மக்கள் இயக்கத்தை திசைதிருப்ப மூன்றுப் பேருக்குத் தூக்கு என்று ஆளும் காங்கிரஸ் அரசு நாள் குறித்தது. இதனால் மரணதண்டனைக்கு எதிரான இயக்கம் தமிழ்நாட்டில் பெரும் எழுச்சிக் கொண்டதால் தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது. ராஜீவ் கொலைக்கு பின்னர் காட்டு தர்பார் ஆட்சி செய்த ஜெயா கும்பல் இன்று தூக்குதண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு காரணம்  மனித உரிமைக்கு ஆதரவான, அடக்குமுறைக்கு எதிரான மக்கள் திரள் இயக்கம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் சிற்றிதழ்களின் பங்களிப்பை மக்கள் பண்பாடு  இதழின் காலப் பொருத்தபாட்டை இந்த இரு ம்பவங்களின் பின்னணியில் எளிதாக நம்மால் விளங்கிக்  கொள்ள முடியும்.

தாராளமயக் கொள்ளையால் தாராளமயமாக்கபட்ட ஆபாச சீரழிவு பண்பாடு எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும் எனும் நுகர்வு வெறி, ஆங்கில மோகம், ஆதிக்கச்சாதி வெறி இன்றும் பல சமூகத்தைப்பற்றி எரியும் பிரச்சனைகளைப் பற்றி
பதிவுகளை தலையங்கமாக, கட்டுரைகளாக, கதை, கவிதைகளாக இவ்விதழ்களில் பதிவாகி உள்ளன. போராட்டகளத்தில் நிற்கும் செயல் மறவர்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டு வரவும், எதிரிக்கு ஏதிராக ஒருமித்துச் செறிவுடன் இணைந்து போராடவும் இவைகள் இன்றும் பொருத்தப்பாடு உடையவையாக விளங்குகின்றன. இறுக்கமான நிலவுடைமைக்கும், கொடூர பாசிச ஒடுக்கு முறைக்கும் இடையில் ஜனநாயக வெளியை இப்படைப்புகள் திறந்து விடுகின்றன.
கிருஷ்டோபர் காடுவேல்,  சரபண்டராஜ், கென்சரா விவா, கோ.கேசவன், குமரேசன் போன்ற பண்பாட்டுப் போராளிகளின் வாழ்க்கைப் பதிவுகள் எனக்கு இதில் முக்கியமானதாகப் படுகிறது. அவர்களின் நிலவுடைமை ஏகாதிபத்திய எதிர்ப்பு
படைப்புகள் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையே ஒருபடைப்பாக பாடமாக நம்முள் ஒளிர்கிறதுவாழ்வியல் கண்ணோட்டத்தை செழுமைப்படுகின்றது. மக்கள் பண்பாடுதொடர்ந்து வந்திருந்தால் பண்பாட்டுப் போராளிகள் வரலாறு தனித்தொகுப்பாக வெளிவந்திருக்கும் என்ற ஏக்கம் நெஞ்சில் கரையாமல் நிற்கிறது.
 வாய்மொழி எதிர்ப்பிலக்கியம் சில பதிவும் இதில் உள்ளன. இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டியவைகள், கள ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டிய அவசியத்தை இன்னும் நிறையவே உள்ளன என அவை சொல்லாமல் சொல்கின்றன.சுரண்டலை சகித்துக் கொண்டு மக்கள் திரள் மொக்கையாக இருந்ததில்லை. தங்கள் எதிர்ப்புகளை கலைநயத்துடன் எதிர்வினையாற்றி உள்ளதை இப்பொழுது பதிவாக்காவிடில் எப்பொழுதும் பதிவு செய்ய முடியாது.
பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தங்கள் படைப்புகளை இந்த இதழ்களில் பங்களித்தவர்கள் இன்று குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளாக வளர்ந்துள்ளனர். நாடக அரங்கில் பணியாற்றும் போராசிரியர் பார்த்திபராஜா, “சோளகர் தொட்டி”  நாவலின் ஆசிரியர் பாலமுருகன்,  “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்”  மொழியாக்கம் செய்த முருகவேள், யாழினி முனுசாமி,  பாலன்,  கிருஷ்ணன், “ஒடியன்எனும் தலைப்பில் இருளர் வாய்மொழி கவிதைகளைத் தொகுப்பாக்கிய லட்சுமணன்.....என்று இப்பட்டியல் நீள்வது இத்தொகுப்பை அர்த்தமுள்ளதாக்குவதாக விளங்கிற்று.
காணாமல் போன தன் குழந்தையை ஒரு சந்தர்ப்பத்தில் இந்த குழந்தையைப்பெற்ற தாய் சந்தித்தால் எவ்வாறு மன எழுச்சியும், மகிழ்ச்சியும் அடைவர்களோ அந்த உணர்வுக்கு இத்தொகுப்பை வாசிக்கையில் ஆட்கொள்ளப்பட்டேன். இதில் உள்ள ஒவ்வொரு படைப்பும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கடந்து சென்றுள்ளதை உணரமுடிந்தது! இருப்பினும் இப்படைப்புகள் அனைத்தும் மார்க்சிய-லெனினிய-மாவோவியத்தை வழிகாட்டுதலாக கொண்டு மக்கள் பண்பாட்டுப் பேரவையின் அதன் ஆசிரியர் குழுவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. அப்படைப்புகளை வாசிக்கையில் அந்த வசந்த காலம், வாழ்வை அர்த்தமுடையதாக்கிய நினைவுகள் புதிய தெம்பை எனக்கு மீண்டும் அளிக்கின்றன.
இவ்விதழில் பதிவாகி உள்ள எனது சில கட்டுரைகள் எனக்கே பிரமிப்பை உண்டு பண்ணின். இன்று என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை? அதற்கு நீண்ட களப்பணியும், போராடும் மக்களிடம் நெருக்கமும், கூட்டுச் சிந்தனையும் முன்நிபந்தனைகள் என்பது எனக்கு விளங்காமல் இல்லை..!
இத்தொகுப்பை வாசிக்கையில் சில விமர்சனங்களும் எழுகின்றன. சில படைப்புகளை இன்னும் செழுமையாக தந்திருக்க முடியும் நூல்கள் பற்றிய விமர்சனமோ, அறிமுகமோ இவ்விதழ்களில் இல்லை. விரிந்து பரந்தப் பல படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்று இருக்கவேண்டும். இதழ்களை முறையான கால இடைவெளியில் கொண்டு வரவில்லை. இன்னும் கடின உழைப்பும், ஒத்துழைப்பும் நல்கியிருந்தால் எளிதாக இவைகளை கடந்து வந்திருக்க முடியும்.
இந்த தொகுப்பு பற்றி தோழர் ஒருவரிடம் உரையாடிய பொழுது மக்கள் பண்பாடு இதழ் தொடர்ந்து வெளிவந்திருந்தால் தமிழ்நாட்டு இலக்கிய உலகில் முக்கிய சக்தியாக உருவாகி இருக்கும். நூற்றுக்கணகாணக்கான சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள் உருவாகி இருப்பார்கள். மக்கள் போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு புதிய உற்சாகத்தையும், தெம்பையும் தந்திருக்க வேண்டிய அவர்கள் காலவெள்ளத்தில் கரைந்து காணாமல் சீரழிந்து போய் விட்டனர். வழிகாட்டிய தோழர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சனம் வைத்தார்.
எனக்கு இந்த விமர்சனம் பொருந்தும் என்பதால் நான் மௌனமாகி போனேன்!
இத் தொகுப்பினை பதிப்பித்தத் தோழர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
  “மக்கள் பண்பாடு      இதழ்களின்     தொகுப்பு:
 மணிக்கோ. பன்னீர் செல்வம்.   விலை: ரூ.250/-
வெளியீடு: இளங்குருத்து புத்தகச் சந்திப்பு, மதுரை.
அலைபேசி; 94888 60685 மின்னஞ்சல்: ilanguruthu2011@gmail.com







1 comment:

  1. ​தோழர் நடராஜனுக்கு,

    மக்கள் பண்பாடு ​தொகுப்பு ​வெளிவந்திருப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் சிறப்பு குறித்தும் தங்களு​டைய பதி​வைப் படித்து மகிழந்​தேன். மிக நல்ல பதிவு. ​மொத்தம் எத்த​னை இதழ்கள் வந்தன? அவற்றில் எத்த​னை இத்​தொகுப்பில் ​சேர்க்கப்பட்டுள்ளன? இன்னும் ஆழமாக அத்​தொகுப்​பை ​வைத்துக் ​கொண்டு நாம் ஆய்வு ​செய்து பல படிப்பி​னைக​ளை ​பெறலாம் என்​றே நி​னைக்கி​றேன். குறிப்பாக, அவ்விதழ்கள் ​வெளிவந்த​பொழுது எத்த​னை பிரதிகள் அச்சிடப்பட்டன? தமிழகத்தின் எந்​தெந்த மாவட்டங்களில் எவ்வளவு விநி​யோகிக்கப்பட்டன? அதில் வந்த ப​டைப்புகள், விமர்சனங்கள் குறித்து அக்காலத்தில் வந்த எதிர்வி​னைகள், விமர்சனங்கள (இதழ்களில் இடம்​பெறாத​வை) என்ன? யா​ரை தன் இலக்காக ​வைத்து அவ்விதழ்கள் உருவாக்கப்பட்டன? அவர்களி​டை​யே இவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? இவ்விதழ்க​ளை ஒட்டி படிப்பதற்கும் விவாதிப்பதற்குமான எத்த​கைய முயற்சிகள் எடுக்கப்பட்டன? ​போன்ற எண்ணற்ற ​கேள்விகள் என் மனதில் ​தோன்றின. இன்​றைக்கு அது ​போன்ற ஒரு இதழுக்கான ​வெற்றிடம் இன்னும் மிகப் ​பெரியதாக உள்ளது. நாம் இத்த​கைய ​கேள்விக​ளை ​தொகுத்துக் ​கொண்டு இத்​தொகுப்​பை முன்​வைத்து விவாதக் கூட்டங்க​ளை ஒருங்கி​ணைப்பது ​காலத்தின் ​தே​வை என்று கருதுகி​றேன்.

    ReplyDelete