Saturday, November 22, 2014

கத்தி பட விமர்சனம்:

எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் ரசிகனாக பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தேன். பின்னாளில் இடதுசாரி அரசியல் ஆர்வம் காரணமாக இந்த ரசிக மனப்பான்மை மாயையில் இருந்து விலக காரணமாக இருந்தது.. இருப்பினும்கூட எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் பற்றி ஆழமான அரசியல் புரிதலை மறைந்த தோழர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களிடன் நடந்த உரையாடல்கள், விவாதங்கள்தான் காரணமாக அமைந்தன… 90களில் அடையார் MIDSயில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆய்வக அறை நானும், பாஸ்கரும் பல நாட்கள் சென்று செய்த அந்த COMPARTABLE -ஆன உரையாடல்கள் நினைவுக்கு வருகின்றன. எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றதற்க்கான பொருளியல்-சமூக பின்னணியை எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அழுத்தமாக பதிவு செய்தவர்.. பெரும்பாலும் களப்பணியில் இருந்த எங்களை போன்றவர்களுக்கு பல மணி நேரங்கள் தனது நேரத்தை ஒதுக்கி அவரது அறையிலேயே விரிந்த உரையாடலுக்கு சொந்தகாரர். இப்படியானவர்கள் மிகவும்வெகுசில பேராசிரியர்கள்தான் எனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன்....கத்தி திரைப்படத்தை சிபிஎம்-மும், முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் பாராட்டி பிரச்சாரம் செய்வதை பார்க்கும் பொழுது இன்னும் பல எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற ஆய்வாளர்கள், பேராசிரியர்கள்....நமது சமூகத்திற்கு தேவை உள்ளது…




கத்தி படத்தை பார்ப்பது என்பது வேறு..அதை தூங்கி பிடித்துக் கொண்டாடுவது வேறு…..ஜி.ராமகிருஷ்ணன்
போன்றவர்கள் கத்தியை கொண்டாடுவது கோட்பாட்டு அடிப்படையிலும், மக்கள்திரள் இயக்கங்களை
கட்டி அமைப்பதற்கு எதிரானது என்பதே என் பார்வை… எம்.ஜி.ஆர் , விஜயகாந்த் ..போன்றவர்களின் தனிநபர் சாகச படங்கள் தனிபட்ட முறையில் இரசப்பது அவரவர் தனிப்பட்ட விசயம்..ஆனால் கம்யுனிஸ்ட் கட்சி அதை எப்படி கொண்டாட முடியுமகத்தி திரைப்படத்தை (CPM)சிபிஎம்-மும், முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் பாராட்டி பிரச்சாரம் செய்ய.வதன் மூலம் மக்களுக்கு
என்ன சொல்ல வருகிறார்கள்… முருகதாஸ், விஜய் மூலம் கம்யுனிச கருத்துகளை பாப்புலராக மக்களிட
பரப்பி விட முடியுமா என்ன..?


அறிவு அம்பலப்படுத்து என்கிறது.. உணர்ச்சி கண்ணீரை வரவழைக்கிறது...என்னிடத்தில் உள்ள கோளாறா..? ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவிதியா..
90 சதவீத ரவுடிகள்-கிரிமனல்கள் கோழைகள் :.... 90 சதவீத கம்யுனிஸ்டுகள்-சமூக போராளிகள் வீரர்கள்... என்ற உண்மையின் தலைகீழ் காட்சி சித்தரிப்புகள் கத்தி பட கதை



மாற்று அரசியல் இயக்கங்கள் மக்களிடம் கொண்டு சென்ற பிரச்சனையை தனது இலாபத்திற்க்காக முருகதாஸ், விஜய் பயன்படுத்தி உள்ளனர் என்பதே உண்மை..அதை திரிக்கவும் செய்து தனிமனித சாகசமாக்கி உள்ளனர்..


இடதுசாகசவாதம் என்று நக்சல்பாரி இயக்கங்கள்- ஆதரவு தனிநபர்களையும் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று விடுதலை புலிகளை- ஈழவிடுதலையை ஆதரிப்பவர்களையும் விமர்சனங்கள் செய்கின்றன சிபிஎம்-மும், முற்போக்கு எழுத்தாளர் சங்கமும்…!! ஆனால் அதேசமயம் தனிநபர் சாகசவாதத்தை, நுட்பமாக காட்சிப்படுத்தும் கத்தி படத்திற்கும் கம்யுனிச ஆதரவு படம் என்றும், முருகதாஸ்சுக்கும், விஜய்க்கும் கம்யுனிச ஆதரவாளர்கள் என்ற பாராட்டி உச்சி முகர்கின்றனர். இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்வது…?
உண்மையில் இது வெட்கக்கேடானது..... டாட்டா பிர்லாக்கள் டிரஸ்டுகள்... என்.ஜி.ஓக்கள் வைத்துக் கொண்டு பெயருக்கு சேவை செய்து கொண்டு வளங்களைக் கொள்ளை அடிப்பதற்கும் ஒரு கமர்ஷியல் சினிமாவின் வெற்றிக்காக மக்களின் துயர்களை ஊறுகாய் போல் பயன்படுத்துக் கொள்வதற்கும் என்னைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இல்லை... 

டைஃபி சேலம் கிளை இப்படி ஒரு விழா நடத்துவது அவர்களின் தலைமைக் கட்சிக்கு உடன்பாடா என்று தெரியவில்லை... இருப்பின்... நாம் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்... எது உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று....

மேலும்.... கலை இலக்கிய முன்னணி கட்டுகிறோம் வெகுஜன மக்களை அமைப்பிற்குள் இழுக்கிறோம் என்னும் பேர்வழியில் இதுபோன்ற அமைப்புகள் வேடதாரிகளுக்கும்... அறிவு அரிப்பு பிடித்த சினிமாக்காரர்களுக்கும் நன்கு சொறிந்து கொடுக்கிறார்கள்.....

கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டு அமைப்புகளே நம்மைப் பாராட்டுகின்றனவே என்று சம்பந்தப்பட்டவர் பெருமைப்பட்டுக் கொள்ளவும்…. தன்னையும் ஒரு புரட்சியாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு நல்ல ஒரு வியாபாரியாகத் தன்னை வளர்த்துக் கொள்ளவுமே இது வகை செய்கிறது….

இவர்கள் இதோடு பாராட்டு விழாவை நிறுத்தி விடக்கூடாது…. பெண்கள் தினத்தன்று… ஆணாதிக்கம் தகர்க்கும் விஜய் சமந்தாவின் ’காதல்’ பாடல்களுக்காகவும் ஒரு சிறப்பு விழா நடத்தலாம்… பெண்ணின் உடலை எவர் எப்படி பயன்படுத்தினால் என்ன… எங்களுக்குத் தேவை நிகழ்ச்சி நடத்த ஒரு பத்து நிமிட ‘மெசேஜ்’…. அதுலையும் ‘விவசாயப் பிரச்சினை’, ‘தமிழ்ழிழ பிரச்சினை’ என்றால் சிறப்பு மதிப்பு….. மத்தபடி நீங்க என்ன குப்பைய இந்த சமூகத்துல கொட்டுனா என்ன…. மணமா இருந்தா போதும் அதை நாங்க குப்பைன்னு சொல்லவே மாட்டோம்…. குப்பைல கொஞ்சம் சிவப்பையும் கலந்துடுங்க//...Kotravai Kotravai

No comments:

Post a Comment