Saturday, March 7, 2015

பசுமை சிற்றுலா ..நீர்தேக்கங்கள்-ஏரிகளில்..முதல் பசுமைநடை செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில்..

பசுமை சிற்றுலா ..நீர்தேக்கங்கள்-ஏரிகளில்..முதல் பசுமைநடை செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில்..


தமிழ்நாட்டின், தமிழக மக்களின், நமது முன்னோர்களின் பெருமைகள், பாரம்பரியம் என்பது கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்பதல்ல.. 

மனித நாகரிக வளர்ச்சிக்கான அவசியமான சூழல் கட்டமைப்புகள், நுண்ணிய பொறியமைப்புகளை தங்கள் உழைப்பு திறனால், அறிவு நுட்பத்தால் கண்டறிந்ததுதான்.. மருத்துவம், கட்டிடம், விவசாயம், கால்நடை..என்று பலப்பல அறிவார்ந்த நுண்ணிய பொறியமைப்புகள்.. , நமது முன்னோர்களின் மகத்தான பங்களிப்புகள்.

இதில் முக்கியமானது ஏரிகள், அதன் இணைப்பு கால்வாய்கள், வடிகால்கள், நீர்நிலைகளின் ஒருங்கிணைந்த பொறியமைப்புகள் ஆகும். வற்றாத ஆறுகள் ஏதும் பாயாத தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்து பயன்படுத்தி நீரை தோக்கி வைக்கும் சிறப்பான ஏரி அமைப்பை 2000 ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். ஆகவே, மனித உழைப்பின், நமது முன்னோர்களின் மாண்புறு படைப்புகளில் மகத்தானது அவர்கள் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும் ஆகும்..

அதனினும் மகத்தானது அவர்கள் இயற்கையை மனிதநேயமாக்கியது. செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின்,உழைப்ப்பின் கூட்டுப் பலன் இது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் நாற்பது ஆயிரம் பாசனக் குளங்கள் இருப்பதாகவும், இதைப்போல ஐந்து முதல் பத்து மடங்கு எண்ணிக்கையிலான சிறிய குளங்கள், ஊரணிகள், குட்டைகள் இருக்கின்றனவென்றும் புள்ளிவிபரங்களும் மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் காலத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் மொத்தம் 116 ஆகும் இவற்றில் 6 ஏரிகள் மட்டுமே கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. மீதியுள்ள 110 ஏரிகள் அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பே கட்டப்பட்டவை..

நீரின்றி அமையாது உலகு... என்பார் திருவள்ளுவர். தமிழக நீர்நிலைகளை, வரலாற்றை புரிந்து கொள்வதும் அவை உருவாக்கிய இயற்க்கை உயிர்ச்சூழலை உணர்ந்து கொள்வதற்க்கும்தான் இந்த சிற்றுலா.(பசுமை நடை)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி… இந்த தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியில் முதல் சிற்றுலா… இது தொடரும்..தொடருவோம்.. ஒவ்வொரு ஊர்தோரும் கிராமங்கள்தோரும் அனைவரும் தொடங்குவோம். நீர்நிலைகளை தேவையை உணர்ந்து பாதுகாப்போம்!!


செம்பரபாக்கம்ஏரி சென்னையில் இருந்துசுமார் 40 கி.மீ. தொலைவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ( இன்றைய திருபெருமந்தூர் மாவட்ட்டம் + திருவள்ளுர் மாவட்டம்) மட்டும் 653 ஏரிகள் இருக்கின்றன்..இல்லை..இருந்தன. இதன் மூலம் 4,50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இன்று சென்னை நகரின் பிரதான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்துதான் அடையாறு நதி பிறக்கின்றது. இந்தஏரியின்மொத்த கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 mcft) ஆகும்.செம்பரம்பாக்கம்ஏரியின்பரப்பளவு 13 ஆயிரம் ஏக்கர்..

12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெரியபுராணம் என்ற நூலை எழுதிய சேக்கிழார் குன்றத்தூரைச் பிறந்து வாழ்ந்தவர்.. இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியை பற்றிய வரலாற்று குறிப்புகள் ஏதும் பெரியபுராணத்தில் இருப்பதாக தெரியவில்லை.. ஆனால் சேக்கிழாருக்குப் பின் வந்த 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் எழுதிய சேக்கிழார் புராணம் எனும்“திருத்தொண்டர் புராண வரலாறு” என்ற பாடல் நூலில் குன்றத்தூரில் பாலாறு பாய்ந்து வளம் சேர்த்த வரலாற்று தகவல் உள்ளது.

அந்த பாடல்:
“பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும்
பாளை விரி மணம்கமழ்பூஞ் சோலைதோறும்
காலாறு கோவியிசை பாட நீடு
களிமயில்நின்று ஆடுமியல்தொண்டைநாட்டு
நாலாறு கோட்டத்துப் புலியூரக் கோட்ட
நன்றிபுனை குன்றைவள நாட்டுமிக்க
சேலாறு கின்றவயல் குன்றத் தூரில்
சேக்கிழார் திருமரபு சிறந்ததன்றே!”
அதாவது பாலாறு நீரினால் வளம்சுரந்து
வயல்கள் செழித்த குன்றத்தூர்"
என்கின்றது..

பாலாற்று நீர் இணைப்பு கால்வாய்கள் மூலம் திருபெருமந்தூர் ஏரி, செம்பரம்பாக்கம்ம் ஏரி, பூண்டி ஏரி , பள்ளிக்கரணை சதுப்புநிலம் வரை பாலாறு வடிகால் இணைக்கப்பட்டுள்ளன.
குன்றத்தூரை சுற்றி உள்ள கிராமங்களுக்கு விவசாயம் செய்ய பாலாற்றுநீர் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இப்பொழுதும் திருபெரும்ந்தூர் ஏரி பாலாற்றுடன் பாங்காங் கால்வாய் மூலம்
இணைக்கப்பட்டுள்ளது. திருபெரும்ந்தூர் ஏரி உபரி நீர் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கும்..இடையில் உள்ள சோமங்கலம் ஏரி, வெங்காடு ஏரி, அமரம்பேடு வருகின்றது… ஆனால் பாலாற்று நீர்தான் வரவில்லை.
மேலும் பாலாறு, கூவம் ஆறு, கொசத்தலை ஆறு,
பூண்டி ஏரி, புழல் ஏரி அனைத்தும் இணைப்புக்கால்வாய்கள் மூலம் நமது முன்னோர்களால் இணைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. குடிமராமத்து முறை இந்த நீர்நிலைகளை தூர்வாரி உயிர்ப்புடன் பலநூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு உழவு, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தத்து..

நாள்: 01-03-2015 ஞயிறு மதியம் 2.30 மணிக்கு...

கூடும் இடம்: வழக்கறிஞர் நடராசன் இல்லம், தெற்கு மலையம்பாக்கம், சர்ச் ரோடு,

(குன்றத்தூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர்கள். உள்ளது எனவே. இருசக்கர வாகனம் அவசியம்...)

2.00 P.M:புதிய தலைமுறையில் ரவுத்திரம் பழகு நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான ஏரிகள் மாசுபடுதல் பற்றிய ஆவணப்படம், ஏரிகளில் எடுக்கப்பட்ட சில ஓளிப்படங்கள் , திரையிடப்படும்.

3.30க்கு சிற்றுரை-கலந்துரையாடல் ...

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் தோழர் பத்மாவதி அவர்கள்,

காடு இதழ் ஆசிரியர் சண்முகம் அவர்கள்

4.00 மணிக்கு தேநீர்..
அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரி கலங்கல் வரை - அடையாறு உற்பத்தியாகும் இடம் வரை நடைபயணம்.

4.30 மணிக்குபின் வருபவர்கள் நேரிடையாக செம்பரம்பாக்கம் ஏரி பெரிய மதகு வரவும்..

அனைவரும் வாருங்கள்...குழைந்தைகளுடன் வாருங்கள்! இயற்கை நேசிக்க பழகுவோம்!!

அலைபேசி : 9840855078 ,




மார்ச் மாதத்தில் மேகங்கள் வடதமிழ்நாட்டில் பெரும்பாலும் இருக்காது... செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் கரைகள் அனைத்தும் கிழக்கு திசையில்தான் அமைக்கப்பட்டு இருக்கும்... நிலத்தின் சாய்வுக்காக இவ்வாறு நம் முன்னோர்கள் அமைத்தனர். அதனால்மார்ச் மாதத்தில் அந்தி வானில் செங்கதிரோன் ஏரிக்குள் நீந்தி சென்று மறையும் காட்சி இரசிக்க வேண்டிய ஒன்று..


செம்பரம்பாக்கம் ஏரி நீர்பாசனத்தினால் பயன்பெற்ற 64 கிராமங்களும்
குன்றத்தூரை சுற்றியுள்ளவைகளாகும்… 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெரியபுராணம் எழுதிய
சேக்கிழார் குன்றத்தூரைச் பிறந்து வாழ்ந்தவர்.. செம்பரம்பாக்கம் ஏரியை பற்றிய
வரலாற்று குறிப்புகள் ஏதும் உள்ளதா என்று பெரியபுராண சொற்பொழிவாளர் கலாநிதி கே.பி. அறிவானந்தம்
அவர்களிடம் கேட்ட பொழுது பெரியபுராணத்தில் செம்பரம்பாக்கம் ஏரி.. குன்றத்தூர்
பற்றி தகவல்கள் இல்லை என்றார். ஆனால்
சேக்கிழாருக்கு பின் வந்த நூற்றாண்டை சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்
எழுதிய சேக்கிழார் புராணம் எனும்
“திருத்தொண்டர் புராண வரலாறு” என்ற பாடல் நூலில் குன்றத்தூர் பற்றி தகவல் உள்ளது
என்றார். அந்த பாடல்:
“பாலாறு வளம்சுரந்து நல்க
மல்கும்
பாளை விரி மணம்கமழ்பூஞ் சோலை
தோறும்
காலாறு கோவியிசை பாட நீடு
களிமயில்நின்று ஆடுமியல்
தொண்டைநாட்டு
நாலாறு கோட்டத்துப் புலியூரக்
கோட்ட
ந்ன்றிபுனை குன்றைவள நாட்டு
மிக்க
சேலாறு கின்றவயல் குன்றத் தூரில்
சேக்கிழார் திருமரபு சிறந்த
தன்றே!”
பாலாறு நீரினால் வளம்சுரந்து
வயல்கள் செழித்த குன்றத்தூர் என்று வருகின்றது.. பாலாற்று நீர் கால்வாய்கள் மூலம்
குன்றத்தூரை சுற்றி உள்ள கிராமங்களுக்கு விவசாயம் செய்ய கொண்டுவரப்பட்டு உள்ளது.
இப்பொழுதும் திருபெரும்ந்தூர் ஏரி பாலாற்றுடன் பாங்காங் கால்வாய் மூலம்
இணைக்கப்பட்டுள்ளது. திருபெரும்ந்தூர் ஏரி உபரி நீர் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம்
ஏரிக்கும்..இடையில் உள்ள சோமங்கலம் ஏரி, வெங்காடு ஏரி, அமரம்பேடு வருகின்றது…
மேலும் பாலாறு, கூவம் ஆறு, கொசத்தலை ஆறு,
பூண்டி ஏரி, புழல் ஏரி அனைத்தும் இணைப்புக்கால்வாய்கள் மூலம் நமது முன்னோர்களால்
இணைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. குடிமராமத்து முறை இந்த நீர்நிலைகளை
தூர்வாரி உயிர்ப்புடன் பலநூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு உழவு, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தத்து..

John P. Mencher, Agriculture and Social Structure in Tamil Nadu, Bombay,

The Chembarambakkam tank is the biggest tank in
Chingleput district. It is an ancient tank formed long before the days of the
British rule. The bund is about 5 ½ miles long and the tank has the
capacity of 3,120 m.cu. ft. The water spread at full tank level is about 9 ½
square miles. In addition to the rainfall on its own catchment the tank also
receives supplies from the Palar and Cooum rivers
The supply from Palar river to the Chembarambakkam tank is
through Chowdarykal Channel and supply from Cooum is through New
Bangaru Channel taking off from Korattur Anicut It is interesting to
know that the Palar basin is the most tank intensive basin in Tamil Nadu.....
Tanks are the main source of irrigation in the Chingleput
district. About 450,000 acres are irrigated by as many as 653 tanks found
throughout the district. Though rainfall is generally favourable in the
locality, the district is peculiarly suited to tank irrigation and topography of
the district favours this method of irrigation97. According to the statistical
atlas of Chingleput district almost every village has atleast one tank..

செம்பரபாக்கம்ஏரி சென்னையில் இருந்துசுமார் 40 கி.மீ. தொலைவில், செங்கல்பட்டு மாவட்டத்தில்உள்ள ஏரியாகும்.சென்னைநகரின்குடிநீர்தேவையைபூர்த்திசெய்யும்முக்கிய ஏரிகளில்ஒன்றானஇந்தஏரியில்இருந்து அடையாறு நதி பிறக்கினறது.
இந்தஏரியின்மொத்த கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 mcft) ஆகும்.செம்பரம்பாக்கம்ஏரியின்பரப்பளவு 13 ஆயிரம்ஏக்கர்


சோமங்கலம் ஏரி பற்றிய தொல்லியல் தரவுகள்..
Somangalam Inscriptions :
Somangalam is a small village about 10 km west of Tambaram. There we came across a number of Tamil inscriptions, many of which had not been reported before. Two old temples in the village contain inscriptions of kings and chieftains belonging to the Chola, the Pandya, the Telugu Choda and the Vijayanagar dynasties.
A Chola inscription (MCC No. 1974/ 02) of Kulothunga III refers to his victories over the kings of Ceylon and Madurai. The inscription of the fourteenth year of the king corresponds to January 2, 1192, on the basis of astronomical data given in the inscription. The inscription refers to floods during the twelfth year of the king and states that the lake bunds were destroyed in seven places on the same day. The bunds had to be repaired. In order to prevent future flood damage, the village council was given forty gold coins called kaasu by one Tiruvekambamudaiyaan, Kannappan of Tiruchuram. Forty kaasu is equivalent to twenty kazhanju which is about 100 gms of gold and is about five thousand rupees worth. Out of the interest (palisai or polisai) accrued from the amount, the village council (maha sabhai) had to maintain the bund. In this inscription the village is called Panchanadivaana Chadurvedivangalam. Another inscription (MCC No. 1974/01) of Kulothunga refers to Somangalam as Rajasigamani Chadurvedimangalam and the deity as Someesuramudaiyar. Two donors, one of whom a priest of the temple, gave a kaasu to the local oil vendor in order that he might daily provide enough oil for burning a lamp (sandhi vilaku) during evening worship. The inscription ends with the wish that this may go on for as long as the sun and the moon last.
An inscription of an earlier period is found in the Vishnu shrine of the same village. The inscription could not be copied but part of the text is available (South Indian Inscriptions, Vol. Ill, Part II, 1903). It refers to the deity as Tiruchitrakoodathu Aalvaar -- or the god of the hall of paintings. The king referred to is Rajendra Chola and is most likely to be Kulothunga I since it refers to the king's practice of sitting on the throne with his consort Bhuvanamuzhuthu Udaiyaal.

ஏரிகளைக் காப்பது முதல் பணி
ஆற்றில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் சேமிக்க வழியில்லாமல் போய் விடும் என்பதைப் பற்றிப் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அதை விட மிக முக்கியமானது ஆறுகளை நம்பி இருக்கும் ஏரிகள், குளங்கள் நாசமாவது தான். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பகுதி கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் சுலபமாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் சேமிக்கப் படுவதில்லை. ஆற்றின் ஓரங்களில் உள்ள ஊர்களில் மட்டும் கிணற்றைக் கொண்டுள்ள விவசாயிகள் இதுபற்றி கவலை கொண்டிருப்பது உண்மை தான். ஆனால், தமிழ் நாட்டின் பெரும் பகுதி கிராமங்கள் ஆற்றிலிருந்து வெகு தொலைவில்தான் உள்ளன. அவர்கள் வைகை போன்ற ஆறுகள் நாசமாவதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் குமுறி வருகின்றனர். அத்தகைய கிராம மக்கள் பெருகி வரும் மணல் கொள்ளையினால் ஆற்றில் இருந்து தொலைவில் உள்ள தமது குளங்களுக்கு நீர் வருவதில்லை என்பது பற்றிய கவலையில் ஆண்டு தோறும் மூழ்கி வருகிறார்கள். எனவே, ஆற்று மணல் கொள்ளையிடப்படுவதன் முதல் சேதம் ஏரிகளுக்கும் கால்வாய்களுக்கும்தான். அதிலும் பெரும் ஏரிகளுக்கு ஏற்படும் சேதம் மிகவும் தீவிரமானது. பல நூறு ஆண்டுகள் பணி செய்த இத்தகைய ஏரிகளை அழிக்கும் மணல் கொள்ளையை நிறுத்துவது மட்டுமே எதிர் வரும் பேரிழப்பை தடுக்கும்.

ஆற்றின் தரை மட்டத்தை அளவிட்டு அந்த அளவினை நம்பியே ஏரிகளுக்கு நீரை இட்டுச்செல்லும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் மணல் அள்ளும்பொழுது அதன் ஆழம் அதிகரித்து விடுவதால் ஆற்றில் வரும் நீர் மேல் ஏறி கால்வாய்கள் வழியாக குளங்களுக்குச் செல்லாது. ஒரு பேச்சுக்காக கால்வாய்களையும் சேர்த்து ஆழமாகத் தோண்டினாலும் குளங்களின் தரை மட்டத்தை தாழ்த்த முடியாது. ஒரு வேளை குளங்களைத் தோண்டி ஆழமாக்கினாலும் பாசனம் பெறும் நிலங்களை ஆழமாக்கிட முடியாது. இதனால் ஆற்றில் நீர் வந்தாலும் குளங்கள் நிரம்பாமல் வீணாகி கடலுக்குச் சென்று சேரும். பன்னெடுங்காலம் நீர் வழங்கி நம் சமூகத்தைக் காத்து வந்த இந்தக் குளங்கள் பாழ்பட்டு அழிந்து படுவதில் இந்த மணல் கொள்ளையர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்....மனித உழைப்பின் மாண்புறு படைப்புகளில் மகத்தானது அவன் உருவாக்கிய ஏரிகளும் குளங்களும். அதனினும் மகத்தானது அவன் இயற்கையை மனிதநேயமாக்கியது. செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் நாற்பது ஆயிரம் பாசனக் குளங்கள் இருப்பதாகவும், இதைப்போல ஐந்து மடங்கு எண்ணிக்கையிலான சிறிய குளங்கள், ஊரணிகள், குட்டைகள் இருக்கின்றனவென்றும் புள்ளிவிபரங்களும் மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் காலத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் மொத்தம் 116. இவற்றில் 6 ஏரிகள் மட்டுமே கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவை. மீதியுள்ள 110 ஏரிகள் அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பே கட்டப்பட்டவை.

வினவு

ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்குள் தமிழக ஆட்சியாளர்கள், அதிகாரிகளால் அலட்சியம்
செய்யப்பட்டதால் இந்த இணைப்பு கால்வாய்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு
விட்டது. பாலாற்று கனிம மணல் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-பெரும் பணக்காரர்களால்
கொள்ளை அடிக்கப்பட்டு அதில் நீர் வரத்து
நின்று போனது… 
பாலாறு- ஏரிகள்- இணைப்புகால்வாய்கள்-ஆறுகள்-குளங்கள் பாதுகாத்தால்
சென்னை-திருவள்ளுர்-காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் தராளமாக
கிடைக்கும். கிருஷ்ணா- வீராணம் என்று தேவையற்ற செலவிணங்கள் தவிர்க்க முடியும்…
யாரிமும் குடிநீருக்கு கையேந்த அவசியம் இல்லை.. அத்துடன் பாலாறு- ஏரிகள்-
இணைப்புகால்வாய்கள்-ஆறுகள்-குளங்கள் பாதுகாத்தால் என்பது இயற்கையை உயிர்ப்புடன்
வைக்கப்பட்டு பல் உயிர்ப்பு வளம் (BIO-DIVERSITY) அழியாமல் காப்பாற்றப்படும்.

பின்பனி காலம் பிப்ரவரி 15 to ஏப்ரல் 15
இளவேனில் - சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள்; கோடையின் தொடக்கம்
முதுவேனில் - ஆனி ஆடி மாதங்களாகிய கோடைக்காலம்
கார்/குளிர் - ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம்
கூதிர் - சரற்காலம் எனப்படும் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
முன்பனி - முற்பகுதியில் பனி மிகுதியுடைய மார்கழி தை மாதங்கள்
பின்பனி - பிற்பகுதியில் பனி மிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள்.

Tanks, diversion weirs and spring channels have been the most important traditional sources of surface irrigation in India from ancient times. There were about 760,000 such structures in India, which irrigated over 57.7 million hectares. Of these traditional structures, 208,000 are tanks. Tamilnadu, which is known to be a tank-rich State, reported to have over 39,000 tanks as per government records. These tanks in Tamilnadu provided irrigation to over 1.7 million hectares in the 1950s. Most of these structures still exist but the area irrigated by these sources has come down drastically over time to 0.7 million hectares in the late 1990s. in the past four or five decades, the village economies have undergone tremendous socio-economic, technological and political transformation:
Landlords and upper caste cultivators have left the village
Owner cultivation has emerged as the principal mode of production
The hitherto tenants have become cultivators, who are more market and profit driven
Markets have penetrated into village economies
New bio-chemical technology is adopted in the cultivation process, which gives a much better yield compared to the traditional one
Lift irrigation technology has become popular and wells have spread not only in the dry lands but also in the tank and canal commands
A good deal of subsidy is provided by the government for many purposes which include, chemical fertilizer, well digging, electricity for lifting water, support price for agricultural output, subsidized short-term crop loan and so fort
h
S.Janakarajan
Professor,

Kaliyappan Gagadaran கட்டுரை நல்ல தகவல்களை சொல்கிறது.ஒரு சில திருத்தங்களும் 
கூடுதல் தகவல்களும் சேர்த்தால் இன்னும் சிறக்கும் என நம்புகிறேன்.
வற்றாத ஜீவநதிகள் என்று சொல்லக்கூடிய நதி எதுவும் தமிழகத்தில்

இல்லை என்பது சரியல்ல என நினைக்கிறேன்.காவிரி, தென்பெண்ணை 
பாலாறு, வைகை, பொருனை என எல்லாமே ஜீவ நதிகள் தாம்.நீர் பிடிப்பு 
பகுதிகளில் ஆக்கிரமிப்பு,ஆற்றுக்கு நீர்கொண்டு வரும் கால்வாய்கள் 
மறிப்பு துணை ஆறுகளில் மறிப்பு அணைகள் போன்றவையும் 
அண்மைக்காலமாக மணலுக்காக ஆற்றை ஒட்ட ஒட்ட சுரண்டுவதும் ஆறுகளை வற்றசெய்து விட்டன. பாலாற்றில் கோலார் தங்க வயலுக்குthanneer கொண்டு செல்ல வேதமங்கலம் என்னுமிடத்தில் 
குறுக்கே அந்த காலத்திலேயே ஆணை கட்டப்பட்டு ஆற்றின் 
இயற்கையான நீரோட்டம் தடுக்காப்பட்டதில் இருந்தே அந்த ஆற்றுக்கு 
சனிதான்! வாணியம்பாடி அருகேயும் குடியாத்தம் பள்ளிகொண்டா
இராணிபேட்டை ஆகிய ஊர்களுக்கு அருகேயும் சேரும் துணை ஆறுகள் 
குறுக்கே ஆணை கட்டாத வரை பாலாற்றில் ஆண்டில் மூன்று 
மாதம் வரை தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும்.அது வரை ஆற்று மணலில் ஊரும் நிலத்தடி நீர் சென்னை ஆதம்பாக்கம் வரையுள்ள 
மக்களுக்கு சுவையான குடிநீரை தரும்.எல்லாம் பாழான பிறகு பாலாறு 
பாழாறு ஆகிவிட்டது.இப்போது எல்லா ஆறுகளுமே அதே கதியை சந்திக்கின்றன.

அடுத்து,சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வேலூருக்கு கீழே காவேரி 
பாக்கம் எனும் இடத்தில் பாலாறு திசை மாற்றப்பட்டு காஞ்சிக்கு தெற்கே ஓடுமாறு செய்யப்பட்டது.சுமார் 1000 தொழிலாளர்கள் இந்த பணியில் 
ஈடுபட்டனர்.அதனால் பாலாற்றின் கிளைகளான கொசஸ்தலையாறு,கல்லாறு,கூவம்,அடையாறு ஆகியவை 
துண்டிக்கப்பட்டன.அடையாற்றின் குறுக்கே அந்த காலத்திலேயே 
கட்டப்பட்டதுதான் செம்பரம்பாக்கம் ஏரி.அதன் உபர நீரைத்தான் 
நாம் அடையாறு என சொல்லிக்கொண்டிருக்கிறோம்.உண்மையில் 
கோதாவரி, கிருஷ்ணா,காவிரிக்குள்ளது போல பாலாற்றுக்கும் 
டெல்ட்டா பகுதி இருந்தது.அது பொன்னேரியில் இருந்து சதுரங்க
பட்டினம் வரை இருந்தது.குன்றத்தூர் மக்கள் அடையாறு எனும் கிளை நதி மூலம் பாலாற்றின் நீரை குடித்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பாலாற்றின் டெல்ட்டா பகுதி இப்போதும் அட்லசில் அதற்கே உரிய
வண்ணத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கலிங்கத்து பரணியில் காஞ்சியில் இருந்து சோழ பேரரசின் தளபதி கருணாகர தொண்டைமான் படையெடுத்து சென்ற போது முதலில் அவன் கடந்தது பாலாறு.அப்படியானால் அப்போது அது காஞ்சிக்கு 
வடக்கே ஆகும்.ஆனால் இப்போது காஞ்சிக்கு தெற்கே தான் பாலாறு போகிறது.

பாலாறு திசை மாற்றப்பட்டதற்கு இவை சான்றுகளாகும்


இன்று ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47 ஆகும்... நீர் இன்று அமையாது உலகு ..என்பதற்கு .. தமிழர்கள் எப்படி நீரை அதை சேமிக்கும் தொழில்நுட்பங்களை புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த சொற்களே சாட்சி..
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம். 
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்..Tanks and Lakes, the Kancheepuram region is sometimes referred to as the “District of Lakes,” due to numerous tanks and lakes including the major ones at Chembarambakkam, Sriperumpudur, Thenneri, Mathuranthakam, Uthiramerur, and Chengalpattu (Kolavai Eri). There are 1,942 tanks in the region, maintained by the State P.W.D. and the local bodies. The tanks are mostly harnessed for irrigation purposes. The Vedanthangal and Karikill tanks are situated in the Mathuranthakam taluk and are of importance as they attract water birds from all over the world. The shallow tanks get inundated even with moderate rains and are teemed with micro-organisms and food for the birds.
இதோடு வேறு நீர் அமைப்புகளும் உண்டு..முள்ளம் என்று ஏரி கால்வாயில் மீன் பிடிக்க அமைக்கபடும் அமைப்பு முள்ளம்.. தெற்கு மலையம்பாக்கத்தில் இந்த அமைப்பு உண்டு..

1 comment:

  1. வணக்கம்.
    வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன்,
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_7.html

    ReplyDelete