மெரினா மக்கள் எழுச்சி என்ன படிப்பினைகள் : ஒரு மீள்பார்வைக்காக 13-01-2017 எனது முகநூல் பதிவுகள்.. *************************************************************************** விமர்சனங்கள் - மாற்று கருத்துகள் இல்லாத புனிதமான போராட்டங்கள் ஏதும் உள்ளதா?
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் ஏன் போராட வில்லை என்று விமர்சிப்பவர்கள் விவசாயிகளை அணிதிரட்ட எப்படி முயற்சி செய்தார்கள்..
செத்தது சிறு-நடுத்தர-குத்தகை விவசாயிகள்..கூலி விவசாயிகள் இல்லை..சாகட்டும் எனலமா?!
விவசாயத்தில் சாதி வேறுபாடு, சாதி ஆதிக்கம் இருக்கிறது. அதற்க்காக அதை அழித்து விடலாமா
தமிழர் பண்பாடு என பிளாஸ்டிக் குப்பைகளை கொளுத்துவது போகி-பொங்கலுக்கு எதிரானது. .............. .ஜல்லிகட்டுக்கு ஆதரவான போராட்டங்களை நாம் ஆதரிக்கலாமா? ************************************************************************* ஜல்லிகட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஜல்லிகட்டு எதிராக பீட்டா, விலங்க நல சங்கம் என்ற பெயரில் செயல்படும் பார்ப்பனீயத்தை உயர்த்தி பிடிக்கும் பார்ப்பன – உயர்சாதி ( சைவ உணவுக்காரர்கள்) காரர்கள் முதன்மையாக உள்ளனர். தமிழர் பண்பாடு, காளைகளை - உழவுதொழிலை பாதுகாத்தல், ஏகாதிபத்திய என்று பலகாரணங்கள் ஜல்லிகட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் விளக்குகின்றனர். ஜல்லிகட்டு காலவதியானது என்றும், சாதி பாகுபாடுகளை கொண்டுள்ளது என்பதற்க்காக அதை எதிர்ப்பவர்கள் சிலர் கூறுகின்றனர். ........................................................ ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல அதனுடன் தொடர்புடைய மாட்டு பிடித்தல், விரட்டுதல், ஊர்வலம் என்று எல்லா விளையாட்டு நிகழ்வுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கின்றது. அல்லது உச்ச நீதிமன்றம் தடையை காட்டி தாங்கள் மிகப்பெரிய சட்டம் காக்கும் வீரர்கள் என்று தமிழக போலிசு துறை அதிகமாகவே குரைத்து கொண்டு செயல்படுகிறது ..அத்துமீறுகிறது. ஜல்லிக்கட்டு, ஏறுதழுவதல் என்பது தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருக்கிறது. அது குறிப்பாக விவசாயத்துடன் தொடர்புடையது பழங்குடி சமூகம் அதாவது புராதான கம்யுனிச சமூகத்தில் உழவு தொழிலை செய்ய அன்றைய தமிழனுக்கு மாடு, ஆடு, குதிரை போன்ற கால்நடைகள் தேவைப்பட்டன. நிலத்தை பண்படுத்துவதில் காளைகளின் பங்கு இன்றியமையாததாகும். ............................ காட்டு மாடுகளை அடக்கி மனிதன் வீட்டு மாடுகளாக, வீட்டு விலங்காக மாற்றினான். காளைகளை அடக்குதல், பழக்குதல், பொதி சுமக்க வைத்தல், உழுதல் போன்றவற்ற்றில் மனிதனும் மாடுகளுக்கும் இடையாலான உறவு, உழைப்பு போன்றவைகளை போல செய்தலில்தான் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவதல் விளையாட்டுகள் தோன்றின. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இப்படித்தான் விளையாட்டுகள் உருபெற்று வளர்ந்தன. நிலவுடைமை சமூகத்தில் விவசாயம் மேலும் செழித்தது. மாடுகள் அதில் முக்கிய பங்கு உள்ளது. அதே சமயம் சாதிகளாக சமூகம் பிளவுண்டது. பட்டியல் இன மக்கள் உடமையற்றவர்களாக இருக்க சாதி சமூகம் நிர்பந்தித்து அவர்களை கூலி அடிமைகளாக மாற்றியது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவவைகளில் பட்டியல் இன மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். சமூக வளர்ச்சி போக்கில், விவசாய வளர்ச்சியில் சாதி நிலவுடமை சமூகம் படிப்படியாக தளர்ந்து வருகின்றது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் இந்த நிலைமை இருக்கின்றது.
........................... இராசயன மையப்படுத்தப்பட்ட உணவு பொருள்களுக்கு மாறாக இயற்கை உணவு பொருள்கள் மக்களுக்கு அவசியம். அதற்கு மேம்படுத்தப்பட்ட நவீன இயற்கை சார்ந்த உழவு தொழிலை வளர்ப்பதற்கு காளை மாடுகள், பசு மாடுகள் இன்றியமையாததாகும்.தொழில் சார்ந்த, அதன் பண்பாடு சார்ந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் தவிர்க்க முடியாததாகும். ....................... ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள சாதி வேறுபாடுகள் எதிர்த்து அதில் சமுத்துவத்தை கொண்டு வர வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டில் விதி முறைகளை கொண்டுவந்து அதை முறைப்படுத்தப்பட்டு அதில் உள்ள ஆபத்துக்களை, விபத்துகளை குறைக்க வேண்டும். பழயன கழியதலும் புதியன புகுதலும் அவசியம். அதற்க்காக எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட முடியாது. சமூக வளர்ச்சியில் நமது தேவைகளுக்கு உகந்து படிப்படியாக மாற்ற வேண்டும். அப்பொழுது கூட முற்றிலும் செயற்கை உணவுகளுக்கு மனிதன், தமிழன் போக இயலாது. ஏனைனில் மனிதன் இயற்கையின் ஒரு அங்கம்..அதன் நீட்சி.. அந்த நீட்சி அறுபடாமல் தடுக்க நவீனப்படுத்தப்பட்ட இயற்கை விவசாயம் அவசியம். அதற்கு காளை அவசியம். இந்த புரிதலுடன் ஜல்லிகட்டை ஆதரிப்போம்.. ...................... ஜல்லிகட்டை பாதுகாக்க உழவு தொழில் போற்றப்பட வேண்டும். மத்திய –மாநில அரசுகளின் கார்ப்பரேட் – பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பெரும் தொழிலாக விவசாயத்தை மாற்றும் கொள்கைக்களுக்கு சிறு –குறு – நடுத்தர விவசாயிகளை அழிக்ககின்றனர். சிறு –குறு – நடுத்தர விவசாயிகள் இணைந்து கூட்டுறவு இயற்கை விவசாய்த்தில் ஈடுபட் வேண்டும். அதற்கு மத்திய –மாநில அரசுகளின் கொள்கைகளை மாற்ற தமிழக மக்கள் போராட வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆதரவு போராட்டங்களை இந்த திசை வழியில் கொண்டு செல்ல முனைய வேண்டும்.
|
|
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
17-01-2017 மெரினா போராட்டம் பற்றிய சென்ற ஆண்டு பதிவுகள்'...............புதிய வெளிச்சத்தை, புதிய நம்பிக்கையை பரப்புவோம்*************************************************************************குடியரசு தினம் கறுப்புதினமாக்குவோம்- அந்நிய பொருள்களை தமிழ்நாட்டில் தடை செய்வோம்- பீட்டாவுக்கு மட்டுமல்ல கோக், பெப்ஸி போன்ற அயல்நாட்டு பொருள்களுக்கும் தடை கோருவோம்- பிஜேபியின் சதி -குடியரசு தினத்தை புறக்கணிப்போம்! ஓட்டு போட மாட்டோம்!! போலிஸ் அடக்குமுறையை எதிர்ப்போம்! கைதானாவர்களை விடுதலை செய்! மத்திய -மாநில அரசுகளை வீழ்த்துவோம்!!
.........
ஜல்லிகட்டு ஆதரவு மாணவர்-மாணவிகள், சென்னை முழக்கங்கள் இவை..
………………………………………………………………………………
மாணவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சி . மாணவர்கள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதியும் அல்லர். பல்வேறு வர்க்கங்களில், சாதிகளில், மதங்களில் இருந்து மாணவர்கள் ஒரு இடத்தில் சங்கமாகின்றனர். பல்வேறு சிந்தனைகள் ஓட்டங்கள் ஒரே நேரத்த்தில் மாணவர்களிடம் இருக்கும். அவர்கள் காலை கதிரவனை போன்று புதியதாக எழுபவர்கள். கல்வியில் உள்ள அனைத்து நிரோட்டங்களையும் கற்று தொடர்ந்து விவாதிப்பவர்கள். முற்போக்கு, பிற்போக்கு, சமரசம், நடுநிலை, அதிதீவிரம், கொள்கையாளர்கள், கொள்கையற்றவர்கள், சுயநலம், சமூக நலம், தேச பக்தி, மக்கள் நலன்..என்று அனைத்தையும் தங்களுக்குள் கொண்டவர்கள். பல்வேறு முரண்களை கொண்டு இருந்தாலும் ஒரு குறித்த சமயத்தில் அந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியை அல்லது மனசாட்சியை முன்கொண்டு செல்பவர்களாக இருக்கிறார்கள்.
...................................................................
மாணவர்களின் தொடர் மக்கள்திரள் போராட்டங்கள் அடிப்படையில் ஒரு பொருண்மை ( பொருள் அல்ல) (Material Base)யை கொண்டிருக்கும். அந்த பொருண்மை சூழலை அப்பொழுது உலகம் முழுவதும், அந்தந்த நாடுகளில் உள்ள அரசியல்-பொருளாதார சூழல் காரணமாக இருக்கும்..
மக்களை கம்யுனிஸ்டுகள், முற்போக்கு-மாற்று இயக்கங்கள் திட்டமிட்ட கொள்கை போராட்டங்களில் திரட்ட முடியாதபொழுது தன்னிச்சையான போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களில், முழக்கங்களில் வெடிக்கும்.
.......................................
அத்தகைய போராட்டம்தான் ஜல்லிகட்டு ஆதரவு மாணவர்கள் போராட்டம்!
எனவே, மாணவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சி . மாணவர்திரள் போராட்டங்கள் ஆதரிக்கப்பட வேண்டும்!!
#WeDoJallikatu #Jallikattu #Justice4Jallikattu#SaveJallikattu #BoycottCorporate
மாணவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சி என்கிறார் மாவோ.. மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்!!
"உலகம் உங்களுடையது. அது போல எங்களுடையதுமாகும். ஆனால் இறுதியாக ஆராய்ந்து பார்த்தால் உங்களுடையது தான். இளைஞர்களாகிய நீங்கள் உத்வோகமும் உயிராற்றலும் நிறைந்தவர்கள். காலை கதிரவனை போல் இருக்கிறீர்கள். நம்பிக்கை முழுவதும் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கிறது."
தோழர் மாவோ.
MGR மாயையை உடைத்தெறிந்த இளயதலைமுறை போராட்டத்தினை வாழ்த்துவோம்! அரசியல்படுத்துவோம்!
!Magesh Ramanathan பதிவு
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மிக பரவலான கடும் எதிர்ப்பு வெறும் ஜல்லிக்கட்டை மட்டுமே வைத்தானதாக தெரியவில்லை. இது தொடர்ச்சியாக பல விசயங்களிலும் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கும் வஞ்சிக்கப் படுவதற்கும் எதிரான கூட்டு எதிர்ப்பாகவே கருதவேண்டும். போராட்டத்தில் கலந்து கொண்ட பலரிடமும் உரையாடியதில், கூடங்குளத்திலிருந்து, மீத்தேன், கெயில், விவசாயப் பிரச்சினை, காவிரி என அனைத்தும் பற்றிய கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.
ஓட்டு பொறுக்கி கட்சிகள் அடையாள போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி. மாணவர்களுக்கு வாழ்த்து
****************************************************************************
18-01-2018 ஜல்லிக்கட்டு மெரினா மாணவர் போராட்ட எனது முகநூல் பதிவுகள் (மீள் பார்வைக்காக)
++++++++++++++++++++++++
.பெரிய அளவு விவாதம் நடத்த
ஆன்மபலம் எனக்கில்லை தோழனே!
...
வற்றிப்போன நம்பிக்கைகள்!
தீய்ந்து போன ஊற்றுக்கண்கள்!
…
‘இது ஒரு புரட்சியாளனுக்கு அழகில்லை’
என்ற உன் விமர்சனம் சரிதான்
நூற்றுக்கு நூறு.
…
காலத்தின் தேவையை நோக்கி நகராமல்
எத்தனைநாள் வீணாக்கினோம்?
தினவெடுத்த தோள்கள் தேய்ந்து தேய்ந்து
எலும்புகள் துருத்தி
வெறும் கூடாக நிற்கும் வரை
ஏதேதோ வாதங்களில்
எத்தனை நாட்கள் மூழ்கினோம் ?
இதுதான் அழகோ புரட்சியாளர்களுக்கு ?
வாயினால் அளந்தோம்
வானத்தைக் கூட.
“அவர் சரியில்லை
இவர் சரியில்லை
அது சரியில்லை
இது சரியில்லை”
……….
நியாயமாகக் கூட இருக்கலாம் நம்குரல்.
...............
ஆனால்
லட்சக்கணக்கில் ஒற்றுமையாய் திரண்டனர் மாணவர்கள்
இந்த போராட்டங்களில் எந்த நியாமும் இல்லையா? தோழனே
புதிய வெளிச்சத்தை, புதிய நம்பிக்கையை பரப்புவோம்
#WeDoJallikatu #Jallikattu #Justice4Jallikattu #SaveJallikattu#BoycottCorporate #TamilRepublic#CasteAnnihilation #supportstudentuprising.......
திமிரி எழு அத்து மீறு அடங்க மறு - தோழர் திருமா முழக்கம். மாணவர்கள் நிரூப்பித்தனர்.
........................
மோடி நாட்டுக்கு, நோட்டுக்கு, மாட்டுக்கு கேடு"மாணவர்கள் முழக்கம் #Justice4Jallikattu
.............
மோடி நாட்டுக்கு, நோட்டுக்கு, மாட்டுக்கு கேடு"மாணவர்கள் முழக்கம் #Justice4Jallikattu
...................
கல்லூரிகள் விடுமுறை Old டெக்னிக் சார். Whatsapp, முகநூல் மாணவர்கள் கைகளில்.
..................................
மாணவர்கள் போராட்டத்தில் நண்பர்கள்
தமிழர்கள் ( அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் + பார்ப்பனிய எதிர்ப்ப்பாளர்கள் + ஊழல் எதிர்ப்பாளர்கள் + ஜனநாயகசக்திகள் அனைவரும்)
.........................
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்க பிஜேபியை விரட்டு
.............................
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்க பிஜேபியை விரட்டு
.............................
ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டங்கள் பறை இசை முழுங்க எழுச்சி #Justice4Jallikattu
............
ஏன் கிரீன்பீஸ் போன்ற சர்வதேச அமைப்புகள் மத்திய அரசின் விருப்பங்களுக்கு மாறாக செயல்பட்டால் நாட்டை விட்டு வெளியேற சொல்லும் இந்திய அரசு பீட்டாவை அப்படி வெளியேற்ற வேண்டியது தானே. இதன் பொருள் என்ன மத்திய அரசுக்கும் பீட்டாவின் நடவடிக்கைகளில் உடன்பாடு உண்டு என்பது தானே!
.................
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே - பாவேந்தர்
.................
பல இலட்சம் மாணவர்கள் வீதியில் திரண்டனர். போராட்டம் மகிழ்ச்சியானது
.....................
மாணவர்களிடம் போலிஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்துவது சரியா? மாணவர்கள் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். அவர்கள்தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அல்லது சிவில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தலாம். இது தேவையில்லாமல் மாணவர்கள் - போலிஸ் துறை பகையைத்தான் ஏற்படுத்தும். இது சரியான சிவில் சமூகம் அணுகுமுறை கிடையாது. #Justice4Jallikattu
#struggle.................................
மாணவர் போராட்டங்கள் நன்மைகள் என்ன? சாதிப்பவைகள் என்ன?
1.சாதி, மதம், ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடுகளை மீறி( கடந்து அல்ல) மாணவர்களை ஒற்றுமை படுத்தி உள்ளது.
2.பிற்போக்கு வகுப்பறைகளை விட்டு மாணவர்களை தெருவிற்கு, களங்களுக்கு கொண்டு வந்துள்ளது.
3. நூறு புத்தகங்கள் ஆயிரம் LECTURES களும் சில நூறு போர்களுக்கு மட்டும் தான் கல்வியை கற்று தரும். ஆனால் போராட்டகளங்கள் பெரும் திரளான மக்களுக்கு கல்வி தரும். தந்து கொண்டிருக்கிறத்உ
4. மாணவர்களிடம் கூட்டு சிந்தனையை , விட்டு கொடுத்தலை வளர்த்துள்ளது.
5. பல்வேறு அரசியல் கருத்துகளை, சிந்தனைகளை விவாதிக்க மாணவர்களுக்கு கற்று தந்துள்ளது.
6.இணையத்தை அரட்டைகளுக்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான விசயங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கற்று தந்தந்துள்ளது.
7. ஆண் – பெண் நட்பை வலுபடுத்துகிறது.
8. சட்ட வரம்பிற்குள் நிற்க்காமல் அதை மீறி ஒற்றுப்பட்டால் போராட முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு அளித்துள்ளது.
9. அந்நிய பொருள்களை தமிழ்நாட்டில் தடை செய்வோம்- குடியரசு தினம் கறுப்புதினமாக்குவோம் - ஓட்டு போட மாட்டோம் என்ற பல கருத்துகளை மாணவர்கள் முன்வைத்து விவாதிக்கின்றனர்.
10.குடியரசு தினத்தை புறக்கணிப்போம்! ஓட்டு போட மாட்டோம்!!-போராட்ட கள மாணவிகள்
11. காலை 10 முதல் மாலை 6 மணி வரை அடையாள போராட்டங்கள், அடையாள கைது முற்றுபுள்ளி. தொடர்ந்து போராட மாணவர்கள் போராட்டங்கள் வழி வகுத்துள்ளது.
12. போராடும் சக்திகளுக்கு, மாற்று சமூக அமைப்புகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
13. மத்திய – மாநில ஆட்சியாளர்களின் அதிகாரத்துவதை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
14. பார்ப்பனீயத்தின் வாலாக நீண்டு கொண்டிருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை குப்பை தொட்டியில் வீசி உள்ளது.
15. ஜல்லிக்கட்டுக்கு எதிரான மிக பரவலான கடும் எதிர்ப்பு வெறும் ஜல்லிக்கட்டை மட்டுமே வைத்தானதாக தெரியவில்லை. இது தொடர்ச்சியாக பல விசயங்களிலும் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கும் வஞ்சிக்கப் படுவதற்கும் எதிரான கூட்டு எதிர்ப்பாகவே கருதவேண்டும். போராட்டத்தில் கலந்து கொண்ட பலரிடமும் உரையாடியதில், கூடங்குளத்திலிருந்து, மீத்தேன், கெயில், விவசாயப் பிரச்சினை, காவிரி என அனைத்தும் பற்றிய கோபத்தையும் மாணவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்
16. பீட்டாவுக்கு மட்டுமல்ல கோக், பெப்ஸி போன்ற அயல்நாட்டு பொருள்களுக்கும் தடை கோருவோம் என்று கூற வைத்துள்ளது.
17. MGR நூற்றாண்டு என்று தமிழக மக்களை MGR மாயை வைத்து ஆட்சி செய்யும் அதிமுக கும்பல்கள் பேராசையில் மண்ணை போட்டு உள்ளது.
18. தமிழ் தேசியத்தின் அடையாளமாக என்ன என்ன பண்பாடுகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ள. விவாதிக்க உதவும். இந்திய பார்ப்பனீய பண்பாடு, தமிழ்பண்பாடு உள்ள வேறுபாடுகளை களத்திற்கு கொண்டு வந்துள்ளது.
19. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த உதவும். கார்ப்பரேட் விதைகள், பசுக்கள் மாற்றாக நம் நாட்டு மாட்டு இனங்களை அடையாளம் கண்டு வளர்க்க உதவும்.
..இறுதியாக"போராட்டம் என்பதே மகிழ்ச்சியானது" என்பார் மாமேதை காரல் மார்க்ஸ் சிந்தனையை தமிழக மாணவர்களிடம் பரப்பி உள்ளது #Justice4Jallikattu #struggle
#SupportYoungsters #StandForTamilians................................
முற்போக்கு சக்திகள், கம்யுனிஸ்டுகள், தமிழ்தேசிய சக்திகள், சிறுபான்மையினர் போராட்ட களங்களை விலகி நின்று கொண்டு விமர்சனம் செய்து கொண்டு இருந்தால் இந்துத்துவா, இந்து முன்னணி கைப்பற்ற வாய்ப்புள்ளது.. முடிந்த வரையில் போராட்ட களங்களில் இருக்க முயற்சி செய்வோம்.. விமர்சனம் செய்ய இன்னும் நிறைய நேரம் இருக்கிறது..
.................
ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் முஸ்லிம் சகோதரிகள். தமிழ் தேசிய இனத்தின் வாரிசுகள்..
....................
நூறு புத்தகங்கள் ஆயிரம் LECTURES கற்றுதராததை சில போராட்டகளங்கள் கற்றுதரும் #struggle
.....................
மாணவர்களுக்கு வகுப்பறை கற்று கொடுக்காததை களங்கள் கற்றுதரும் #Struggle
............................
நடந்தது TRAIL.இன்றுதான் மாணவர் போராட்டத்தின் முழுவீச்சு #Jallikattu #Struggle
.............
போராட்டங்கள் வீண் இல்லை. களங்களிலிருந்து மாணவர்கள் கற்று கொள்வார்கள் #Jallikattu
.......................