Friday, January 12, 2018

இந்து மதம்.

பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது. மாற்றம் இல்லாது என்பதே அந்த கருத்து பல அய்ரோப்பிய ஆய்வாளர்களும் இந்த கருத்தை வலுப்ப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள். இந்த கருத்து உண்மைக்கு புறம்பானது மட்டுமின்றி, பல நேரங்களில் இந்த மாற்றம் அடிப்படைக்க் கூறுகளேயே மாற்றுவதாக இருந்தது என்று இந்த புத்தகம் விளக்குகிறது. இந்து மதம் சனாதனமானது அல்ல என்பதைச் சாதாரண ,மக்கள் உணரச்செய்ய விரும்புகிறென் - அம்பேத்கர்





கண்சிமிட்டும் நேரம்தான் மதத்தின் ஆயுள்
.................................................................................
இளம் ஹெகலியர்களின் விமர்சனம் மதத்தை வேரறுக்கும் திறன் கொண்டதாக அது இல்லை என்பதை காரல் மார்க்ஸ் கண்டார். உண்மையில் மதத்தை காட்டுமிராண்டித்தனமாகத தாக்குவது அதனை எதிர்த்துப் போராடுவதற்க்கன சரியான வழிமுறை கிடையாது. வேறு வழிகளில் அல்லாமல அரசியல் ரீதியாக மதத்தை விமர்சிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொண்டேன். ஏனைனில், ஒன்றுமில்லாத மதம், சொர்க்கத்தில் அல்லாமல் பூமியில் வாழ்வதால் அதனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கொள்கை மறையும் பொழுது மதமும் மறைந்து விடும்.
............................
1842யில்..மார்க்ஸ் "சமுதாயத்தில் உள்ள வர்க்கக் கட்டமைப்பினாலேயே மதம் உருவாகிறது. இந்த சமுதாயக் கால கட்டம் முழுவதும் மதம் தன்னை வளப்படுத்திக் கொண்டது. வர்க்க சமுதாயத்தைத் தூக்கியெறிவதன் மூலமே மதம் உதிரும். எனவே, வர்க்க சமுதாயத்தைப் போலவே மதத்திற்கும் எதிர்காலம் இல்லை. கால அடிப்படையில் பார்க்கும் பொழுது உலகத்தில் மனித வாழ்க்கையின் பொதுவான வர்க்க சமுதாயக் காலகட்டம் ஒரு கண்சிமிட்டும் நேரம்தான். அதைப் போலத்தான் மதத்தின் ஆயுளும்" 

இப்படி முடிகிறது 23 பக்கங்கள் கொண்ட தேவி பிரசாத் சட்டோபாட்த்தியாவின் சிறு நூல் .. மதம் பற்றிய ஆழமான கோட்பாட்டு பார்வையை இந்த நூல் தெளிவாக வழங்குகிறது..


No comments:

Post a Comment