Tuesday, January 30, 2018

தோழர் லெனின்

கம்யுனிஸ்டுகள் -புரட்சிவாதிகளால் மட்டும் - புரட்சி செய்ய முடியாது- ஏன்?- தோழர் லெனின்
***************************
கம்யுனிஸ்டுகள் செய்த மிகப்பெரிய மிகவும் அபாயகரமான தவறுகளில் ஒன்று( பொதுவாக, ஒரு பெரிய புரட்சியின் ஆரம்பத்தை வெற்றிகரமாக நிறைவெற்றிய புரட்சிவாதிகள் செய்யும் தவறுதான்)
ஒரு புரட்சி, புரட்சிவாதிகளால் மட்டும் நடத்தப்பட முடியும் என்னும் கருத்தாகும். அதற்கு நேர்மாறாக வெற்றி கிடைப்பதற்கு, சகல ஆழ்ந்த நோக்குடைய புரட்சிப் பணிக்குத் தேவைபடுகிறது.
புரட்சிவாதிகள் உண்மையான வீரியமிக்க முன்னோக்கிச் செல்லும் வர்க்கத்தின் முன்னணிப் படையின் பங்கைத்தான் ஆற்றும் சக்தி படைத்தவர்கள் என்னும் கருத்தைச் சரியானபடி புரிந்து கொண்டு, செயலாக்க வேண்டியதுதான். ஒரு முன்னணிப்படை, முன்னணிப்படை என்னும் முறையில் தன்னுடைய கடமையை அது தான் தலைமை தாங்கும் மக்களிடம் இருந்து தனிமைப்படுவதைத் தவிர்க்கும்போதுதான், அது உண்மையிலேயே மக்கள் அனைவருக்கும் தலைமை தாங்கி முன்னுக்கு அழைத்துச் செல்ல வல்லமையுடையதாக இருக்கும் போதுதான் ஆற்றுகிறது. மிகவும் பல்வேறான செயல்துறைகளில் கம்யுனிஸ்டுகள் அல்லாதவர்களுடன் கூட்டணி இல்லாமல் கம்யுனிச நிர்மாண கட்டமைப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவது என்பது சாத்தியமே இல்லை.

No comments:

Post a Comment