தோழர்
சி. மதிவாணன் சிறுகதைகள்
1.மகளிர்
காவல்
அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி.
கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத் தோன்றியது மகாவுக்கு. குபுக்கென்று கண்ணில் நீர் வந்தது.
‘போடி.. போயி வெளியில ஒக்காரு’, என்ற எஸ்ஐயின் குரல் கேட்டதுதான் தாமதம், மகா கால்கள் தள்ளாட வெளியேறினாள். ஸ்டேஷனுக்கு வெளியே அரச மரமிருந்தது. அதன் நிழலில் பிள்ளையார் சிலையிருந்தது. அப்படியே உட்கார்ந்தவள் கண் மூடிக்கொண்டாள். தலையை கால் முட்டிகளின் இடையே பதித்துக்கொண்டாள். கட்டியிருந்த புடவை இல்லாததுபோல இருந்தது.
மகா எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். இந்த ஸ்டேஷனெல்லாம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தாள். ‘இப்புடியே இருந்திடறேன்’ என்று சொல்லிப் பார்த்தாள். இதனை அவள் மூன்று வருங்களுக்கு முன்பும் சொல்லியிருந்தாள். என்ன பிரயோஜனம்? இவள் சொல்லி யார் கேட்கிறார்கள்?
‘அது பொம்பள போலீஸ் ஸ்டேஷனாம்’. என்று சொல்லித்தான் அம்மா மகாவை அழைத்து வந்திருந்தாள். பெண்கள் பிரச்சனையைத் தீர்க்க பெண் போலீஸ் மட்டும் உள்ள காவல்நிலையமாம். பெண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் வராதாம்.
அந்த எஸ்ஐ இராட்சசி பெண்தானா என்று மகாவுக்குச் சந்தேகம். சேர் நிறைய உட்கார்ந்திருந்தார்
அந்த பெண் எஸ்ஐ. மகா பத்து வரை படித்தவள். எஸ்ஐயின் சட்டையில் இருந்த பேஜ்ஜைப் படித்துப் பார்த்து பாண்டியம்மாள் என்று தெரிந்து வைத்திருந்தாள். ஆனால், மகாவுக்குப் பாண்டியம்மாளைப் பிடிக்கவில்லை. சேரில் ஆடிக்கொண்டே அந்த அம்மா பேசியது, பெண் தோற்றத்தில் ஓர் ஆண் உட்கார்ந்திருப்பதாகத்தான் மகாவுக்குத் தோன்றியது.
மகா என்ற மகாலெட்சுமிக்கு இப்போது பதினெட்டு வயது. பதினைந்து வயதில் கல்யாணம் முடிந்திருந்தது. பள்ளிக்குச் சென்று வந்தவளை பெண் பார்க்க வந்திருந்தார்கள். மகா அன்று பள்ளியிலிருந்து வர லேட். கோக்கோ விளையாட்டுப் போட்டியிருந்தது. மகாவுக்கு கோகோ மிகப் பிடிக்கும். உட்கார்ந்திருப்பளை எப்போது தொடுவார்கள் என்று காத்திருப்பாள். தொட்டவுடனே அம்பு போல நேர் கோட்டில் விரைந்து, எதிரி விலகக் காத்திருந்து, மான் போலத் தாவி, அப்புறம் எதிரி அவுட்டு ஆகியே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த தொடுகை கிடைக்கும்போது வேகம் இன்னும் அதிகரிக்கும். நிதானம் அதைவிட அதிகரிக்கும். எதிரி ஆட்டம் காட்டும்போதெல்லாம் மகாவுக்கே தொடுகை கிடைக்கும். மகா அணிதான் ஜெயிக்கும். மகாவுக்கு அத்தனை வேகம், அத்தனை நிதானம்.
ஆனால், அவள் அம்மா தனத்திற்கு நிதானம் இல்லை. சொந்தத்தில் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்.
5 ஏக்கர் நிலம் இருக்கிறது. சிறுமலையில் கருப்புக் கோவிலின் அருகே மிளகு தோட்டமும் இருக்கிறது.. நடையாக நடக்கிறார்கள்… இன்னும் இரண்டு பெண்ணிருக்கும் போது மாப்பிள்ளை கிடைத்தால் தள்ளிவிட வேண்டியதுதானே என்று மகாவின் அம்மா தனம் நினைத்தாள்.
மகாவின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் ஒன்றும் கதைக்காகவில்லை. வாடிப்பட்டி பெருமாள் கோவிலில் கண்ணன் மகாவுக்குத் தாலி கட்டினான்.
ஒரு பக்கம் மகாவுக்கு வேடிக்கையாக இருந்தது. ஊர்காரர்கள், உறவுக்காரர்கள், அப்புறம் இவளின் பத்தாம் வகுப்பு தோழிகள் எல்லாம் வந்திருந்தனர். பட்டுப் புடவை சரசரசவென்று சத்தம் போட்டது. இவளின் கையில் ஏதேதோ பரிசெல்லாம் கொடுத்தார்கள். இவளின் தோழிகள் அவ்வப்போது இவளைப் பார்த்து இரகசியமாகச் சிரித்தார்கள்.
வேடிக்கையெல்லாம் மாலை வரைதான். இரவு இவளை வீட்டின் உள்ளே விட்டு அம்மா கதவைச் சாத்திக்கொண்டாள். அந்த இரவையும் வலியையும் மகா இன்று வரை மறக்கவில்லை. கண்ணனைப் பார்க்கும்போதெல்லாம்
கடித்துக் குதறுவதுதான் நினைவுக்கு வந்தது.
மறுநாள் அம்மாவிடம் சொல்ல நினைத்தாள். வெட்கம் பிடுங்கித் தின்றது. பக்கத்து வீட்டு செல்வியக்காவிடம் இவள் இஷ்டம்போல பேசுவாள். இவள் சொன்னதைக் கேட்ட செல்வியக்கா, ‘போடி இவளே.. ஆம்பளன்னா அப்டித்தான் செய்வாங்க’, என்று சொன்னதும் இவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
அப்புறம் திருப்பூர் பயணம். கண்ணன் அங்கே மெஷின் மெக்கானிக்காக இருந்தான். அந்த தெருவுக்குச் செல்லும் வழி இன்று வரை மகாவுக்கு நினைவில் இல்லை. சாலை, தெரு, சந்து பொந்து என்று நுழைந்து அந்த வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றார்கள். அதற்குள் மகா நிறையத் தெரிந்து கொண்டிருந்தாள். ஊரில் இருந்த ஐந்து நாளில் செல்வி நிறைய சொல்லிக்கொடுத்திருந்தாள்.
அவளை அழைத்துச் சென்று திருப்பூரில் விட்ட அன்று மாலையே அம்மா புறப்பட்டுவிட்டாள். தானும் கண்ணனும் வாழ அந்த அறை போதும் என்றுதான் மகா நினைத்தாள். அப்புறம்தான் தெரிந்தது கண்ணனின் அம்மாவும் தம்பியும் கூட அந்த அறையில்தான் தூங்குவார்கள் என்று… அந்த அறைக்கு அந்தப் பக்கம் சமையல் அறை. அவ்வளவுதான்.
சமையல் அறைக்குப் போய்விடலாம் என்று, பலமுறை கண்ணனிடம் சன்னமான குரலில், அவன் இரவுகளில் தொடும்போது மன்றாடியிருக்கிறாள்.
ஆனால், அவன் அதைக் கேட்டால்தானே.. அவளின் மனம் உணர்வற்றுப் போனது… உடல் மரத்துப்போனது.. எப்போதும் தள்ளியே படுக்க ஆரம்பித்தாள்.
கண்ணன் மெஷின் ரிப்பேரான ஒவ்வொரு கம்பெனியாகப் போய்க்கொண்டிருப்பான்.
விசைத்தறி இருக்கும் ஊருக்கெல்லாம் போய்த் தங்கி வேலை பார்த்து வருவான். அவனுக்கு ஜோடியாக இன்னொரு மெக்கானிக். அவனுக்குச் சொந்த ஊர் வாடிப்பட்டி. அவனின் மனைவி ஊரில் இருந்தாள். பதினைந்து நாளுக்கு ஒரு முறை அவன் ஊருக்குப் போய் மனைவிக்குப் பணம் கொடுத்து வருவான். அவன் போக முடியாதபோது கண்ணன் போவான். போனால், இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டுத்தான் வருவான். கண்ணனும் அவன் நண்பனும் வேலையை மட்டுமல்ல மனைவியையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று தெரிந்தபோது மகா துடித்துப்போனாள். மனதுக்குள் சிறுத்துப்போனாள். அம்மா வீட்டுக்குப் புறப்பட்டுப்போனாள்.
ஆறு மாதம் ஆனபின்பும் கண்ணன் அழைக்க வரவில்லை. ஏன் வரவேண்டும்? இளமையும் இளமைக்கான துணையும் இருக்கும்போது ஏன் வரவேண்டும்?
ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துப் பேசியும் கண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை.
தாலியை அறுத்துக்கொடுத்துவிட்டுப் போய்க் கொண்டேயிருங்கள் என்று சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டான்.
அப்புறம்தான் இந்த அனைத்து மகளிர் காவல்நிலைய பஞ்சாயத்து ஆரம்பித்தது.
எத்தனை நேரம் மகா பிள்ளையாருக்கு முன்பு அப்படியே உட்கார்ந்திருந்தாள் என்று தெரியாது. கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. தோலை உரித்து வெய்யிலில் போட்டது போல உணர்ந்தாள். கிழிந்த நைட்டி போட்டுக்கொண்டு மகாவின் ஊரில் சுற்றும் பைத்தியக்காரி போல தன்னை உணர்ந்தாள். ஆனால், பைத்தியக்காரி கொடுத்து வைத்தவள். தன் உடல் பற்றிய உணர்வு அந்த பைத்தியத்துக்கு இல்லை. மகாவுக்கோ அந்த எஸ்ஐ ஸ்டேஷனில் வைத்து தன்னைத் தோலுரித்துவிட்டதாகப்
பட்டது. அந்த எஸ்ஐயின் கழுத்தைக் கடித்துக் குதறவேண்டும் என்று தோன்றியது.
‘எழுந்திரும்மா’, என்ற சண்முகம் தோழரின் குரல் கேட்டு மகா நிமிர்ந்தாள். தோழரின் தலைக்கு மேலே அரச மர இலைகளின் வழியே சூரியன் கண்களைக் கூச வைத்தான். அப்படியே திரும்பி தோழரைப் பார்த்து உட்கார்ந்துகொண்டாள்.
சண்முகம் இவளுக்கு எதிரேயிருந்த கல்லில் அமர்ந்தார். சண்முகம் என்றாலே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைதான் நினைவுக்கு வரும். மகா சின்ன பெண்ணாக இருந்த காலத்தில் சிவப்புத் துண்டு போடுவார். இப்போதெல்லாம் போடுவதில்லை. ஏனென்று கேட்டால், ‘மேக் அப் போடாதீங்க.. வேலையில செவப்பு இருக்கட்டும்’, என்று புதிதாக வந்த மாவட்ட செயலாளர் சொல்கிறார் என்று பதில் சொல்வார். ஆனபோதும், இப்போதெல்லாம் சிவப்புப் பையொன்றைத் தோளில் மாட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தார். அதில் புத்தகங்கள், பேப்பர் என்று நிறைந்திருக்கும்.
‘அந்த அம்மா கேட்ட கேள்விக்கு உஷாத் தோழர் இருந்திருந்தாங்கன்னா, அந்த அம்மா தொப்பி கழன்றிருக்கும்.. நாங்களும் சும்மா உடல, கத்திக் காதறுத்துட்டுத்தான்
வந்தோம்’, என்று மகாவை ஆறுதல் படுத்த ஆரம்பித்தார். தனம் அருகாமையில் நின்றிருந்தாள். தனத்திற்கு மகளின் முகத்தைப் பார்க்கத் தெம்பில்லை. ரோட்டைப் பார்ப்பவள் போலத் திரும்பி நின்று கொண்டிருந்தாள்.
‘தோ பாரு மகா.. ஸ்டேஷனுக்கு பணத்தை அள்ளி விட்டுருக்கானுங்க.. அந்தக் கண்ணன் ஊருல இல்லன்னு சத்தியம் பன்றாரு அம்மாக் கட்சி கவுன்சிலரு. அம்மாக் கட்சிக்காரங்க எப்போதும் அய்யாக்களுக்குத்தான்
சப்போர்ட் பன்னுவானுங்க.. பத்தாதுன்னு ரெண்டு தொத்த வக்கீலுங்கள அழைச்சிகிட்டு வந்திருக்கானுங்க.. இப்ப பேசி காரியம் நடக்காது.. எஸ்பி ஆபீசுக்குப் போறம்னு மெரட்டிட்டு வந்துட்டோம்..எதுக்கும் செயலாளரையும் பார்த்துட்டு, அப்புறம் போவம்’, என்றார் சண்முகம்.
மகாவுக்கு எதுவும் புரியவில்லை. செத்துப் போவது நல்லது என்று மட்டும் தோன்றியது. அப்புறம் அவர்கள் பஸ் நிறுத்தம் போனது, பஸ்சைப் பிடித்துக் கட்சி ஆபீஸ் போனது எதுவும் கவனத்தில் இல்லை.
கட்சி ஆபீசில் அந்தத் தோழர் கம்யூட்டரில் எதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இவர்கள் நுழைந்ததும் திரும்பி அமர்ந்தார். அந்த அறையில் மூன்று பிளாஸ்டிக் சேர்கள் மட்டுமே இருந்தன. வந்தவர்கள் எல்லாம் அமர்ந்துவிட மகா தரையில் அமர்ந்தாள்.
‘இரும்மா..’ என்றபடி எழுந்து சென்ற தோழர் பக்கத்து அறையில் இருந்து ஒரு சேரை இழுத்து வந்து போட்டார். போலீஸ் ஸ்டேஷனில் கால் கடுக்க நின்றிருந்த மகாவுக்கு உட்காரத் தோன்றியது. ஆனாலும், தயக்கமாக இருந்தது. எல்லோருக்கும் சமமாக உட்கார முடியுமா என்று யோசித்தாள்.
‘சும்மா உட்காரும்மா.. இது நம்ம ஆபீசு’, என்று சண்முகம் வற்புறுத்தி உட்கார வைத்தார்.
‘சொல்லுங்க சண்முகம்..’, என்று தோழர் ஆரம்பித்தார். சண்முகம் பிரச்சனையைச் சொல்லி முடித்தார். எந்த வார்த்தையும் பேசாமல் தோழர் கேட்டுக்கொண்டிருந்தார்.
கேட்டு முடிப்பதற்குள் இரண்டு சிகெரட்களைப் புகைத்திருந்தார்.
சற்று நேரம் மௌனம் நீடித்தது.
‘ஒனக்கு அந்தக் கண்ணனோட சேர்ந்து வாழ ஆசையா?’, என்று மகாவைக் கேட்டார் தோழர்.
மகா தலையசைத்தாள்.
‘சேர்ந்து வாழனுமா?... வேண்டாமா? வாயைத் தொறந்து சொல்லுத் தாயி.. தலைய எப்புடி ஆட்டுறன்னு யாருக்கு என்னத் தெரியும்?’, தோழரின் கண்கள் மகாவைப் பார்த்தபடியே இருந்தன.
மகா மெலிந்த உடம்புக்காரி. நல்ல உயரம்.. கருகருவென்று முடி. மாநிறம். அவள் உதட்டைச் சுழித்தபடி யோசித்தது இன்னும் பள்ளிச் சிறுமியாக இருக்கிறாள் என்பதைச் சொல்லியது.
‘வாழனும் தோழர்’, என்று மெல்லிய குரலில் சொன்னாள் மகா.
’ஏன்?’
மகாவிடம் வெகு நேரம் பதிலில்லை. தலைகுனிந்தபடியே இருந்தாள். கை விரலில் முந்தனை முனையை சுருட்டுவதும் விரிப்பதுமாக இருந்தாள்.
‘ஏன்… இவனை வுட்டுட்டு இன்னொருத்தனைக் கட்டிகிட்டா நல்லாருக்காதுன்னு யோசிக்கிறியா?’ தோழர் எந்தத் தயக்கமும் இன்றி கேட்டார்.
‘ஆமாந்தோழர்’, என்றாள் மகா பளிச்சென்று.
தோழர் சிறிது நேரம் யோசித்தார். ‘கல்யாணம் பண்ணிக்கிறது கெணத்துல உழற மாதிரிதான். எல்லா ஆம்பளையும் சனியன்தான்… ரெண்டாவது ஆம்பளன்னா ரொம்பப் பெரிய சனியன்னு யோசிக்கிறா..’ என்று தனக்குள் பேசுவது போல பேசினார்.
அப்புறம், ‘சரி, கண்ணனுக்கு ஏறக்குறைய பத்து ஏக்கர் நெலம் இருக்கு.. அப்புறம் ஏனவன் திருப்பூர் வேலைக்குப் போனான்?’, என்று தனத்தைப் பார்த்துக் கேட்டார்.
கண்ணனுக்குக் கல்யாணம் செய்து வைக்க வந்திருந்த அப்பா அப்புறம் வரவில்லை. பையனின் போக்கு சரியில்லை என்று விலக்கி வைத்துவிட்டாரம். கண்ணனுக்கு ஆதரவாக அம்மா இருக்கிறாள் என்பதால் கண்ணனின் அம்மாவையும் விலக்கி வைத்து விட்டாராம். அந்த விவரங்களை தனம் விளக்கமாகச் சொன்னாள்.
‘அது சரி கண்ணன் இவள வேணாமுன்னு சொன்னா, யாரு நஷ்ட ஈடு தர்றது? அவனோட சொத்துல பங்கு கேக்க வேண்டியதுதான்’, என்றார்.
மகாவுக்குப் புரியவில்லை. கண்ணனோடு மறுபடியும் சேர்ந்த வாழ முடியாதா? அப்புறம் பணத்தை வாங்கிக் கொண்டுவிட்டால் வாழ்க்கை இனித்துவிடுமா என்ன?
’மகளிர் காவல் நிலையம்னு பேசிறதெல்லாம் சும்மா.. எல்லாருகிட்டயும் காசு புடுங்கிறது சாதா போலீசு. பெண்களை பெண்கள் மெரட்டி காசு புடுங்கிறது மகளிர் போலீசு.. அவ்வளவுதான் வித்தியாசம்… பெண்கள் சங்கமா ஆகாட்டுனா எதுவும் நடக்காது.. நம்ம பெண்கள் அமைப்பாளர் வேற இப்ப ஊருல இல்ல..’, என்றவாறு தோழர் யோசிக்க ஆரம்பித்தார்.
அப்புறம் முடிவு செய்தவராக, ‘சரி.. நாளைக்கிக் காலைல மகளிர் காவல் நிலையம் போயிட்டு அந்த பாண்டியம்மா எஸ்ஐ வந்துடிச்சின்னா என்னக் கூப்பிடுங்க’, என்று முடித்துக் கொண்டார்.
மறுநாள் காலையில் போன் போட்ட இருபதாவது நிமிடத்தில் தோழர் காவல்நிலையம் வந்து இறங்கினார். இவர்கள் வணக்கம் சொன்னார்கள். பைக்கை நிறுத்தியவாறு கையை உயர்த்தியவர், மகாவைக் கைகாட்டி அழைத்துக்கொண்டு நிலையத்திற்குள் நுழைந்தார். எதிரே ஒரு பெண் காவலாளி உட்கார்ந்திருந்தார். தோழர் நின்றவாறு இன்ஸ்பெக்டர் அறைக்குள் பார்த்தார்.
‘அம்மா இல்ல’, என்றார் அந்தக் காவலாளி.
‘எங்க போயிட்டாங்க..?’, என்றார் தோழர்.
‘கூடங்குளம் ஸ்பெஷல் டூட்டி’, என்றார் அந்தப் பெண் காவலாளி.
தோழர் சிரித்தார்.. ’பெண்கள் பிரச்சனையெல்லாம் ஊருல முடிஞ்சு நல்லா இருக்காங்கன்னு அரசாங்கம் நெனக்கிதோ? கூடங்குளந்தான் இப்போ பிரச்சனையோ?’, என்றார் அந்தக் காவலாளியைப் பார்த்து. பாவம் அந்தப் பெண் காவலாளி.. பேந்தப் பேந்த விழித்தார்.
தோழர் எஸ்ஐ அறைக்குத் திரும்பினார். தோழர் நுழைந்தது முதல் பாண்டியம்மா தோழரையே கவனித்துக்கொண்டிருந்தார். தோழர் நேரே சென்று எஸ்ஐக்கு முன்னுள்ள சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
‘எங்க பெண்கள் அமைப்புத் தோழர் சென்னை போயிருக்காங்க.. அதனால நா வந்தேன். புரோக்கர்னு நெனச்சிக்காதிங்க..’, என்றார்.
பாண்டியம்மாவுக்கு சற்று குழப்பம் வந்தது. வழக்கம்போல சிவப்புத் துண்டுடன் வரும் ஆளில்லை என்று தெரிந்தது.
‘இந்தப் பொண்ணுக்கு 15 வயசுல கல்யாணம் நடந்திருக்கு.. அதாவது குழந்தைத் திருமணம்..’
‘சார்… அது பழைய கத’, என்று பாண்டியம்மாள் குறுக்கிட்டார்.
தோழர் வலது கையை உயர்த்தி ‘நிறுத்து’ என்பது போல பிடித்துக் கொண்டு, ‘தெரியும்.. அது அந்தக் கண்ணன் செஞ்ச மொதல் தப்பு. அதுக்கே சட்டம் நடவடிக்கை எடுத்திருக்கனும்’, என்றார்.
பாண்டியம்மாவுக்குப் புரியவில்லை. மூன்று வருடம் கழித்த பின்னர் எப்படி நடவடிக்கையென்று யோசிக்க ஆரம்பித்ததார்.
‘இப்போ இவளை வெரட்டி விட்டுட்டு இன்னோரு பொண்ணோட தொடர்பு வைச்சிருக்கானாம்.. வாழறதுக்குப் பணங் கேக்குறான்னு சொல்றாங்க.. இப்புடி அடுத்தடுத்த தப்பு செய்யற ஆம்பளய காப்பாத்தன்னு பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் வைச்சிருக்கிங்களா..?’
பாண்டியம்மா பதில் சொல்லவில்லை.
‘திருப்பூர்ல இவங்க வாழ்ந்த ரூமு என்ன சைசுன்னு தெரியுமா? அந்த ரூமுல எத்தனை பேரு இருப்பாங்கன்னு தெரியுமா?’ என்றவர் சற்று நிறுத்தினார்.
‘ஒங்க குவார்ட்டர்சுல எத்தன ரூமு?’. மறுபடியும் சற்று நேரம் நிறுத்தினார்.
‘அப்புறம் இவ படுக்காததால வெரட்டிட்டான்னு சொன்னிங்களாமே? ஒங்களுக்கு கொழந்தையத் தெரியுமா? பொண்ணுங்களத் தெரியுமா?’
பாண்டியம்மா உறைந்து போயிருந்தார். இந்த ஆள் பச்சை பச்சையாகத் தன்னைக் கேள்விக் கேட்கிறான் என்று தெரிந்தது. ஆனால், மனது சுட்டது. அந்த அம்மாவின் தலைக்கு மேலிருந்த பெண் முதலமைச்சர் படம் வெட்கமேயில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தது.
‘சரி… அவன புடிச்சு உள்ள போடனும்… தொத்த வக்கீல் புரோக்கருங்க சொன்ன மாதிரி கேட்டிங்கன்னா… ஒங்க ஸ்டேஷன் மானம் போயிடும்… அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடக்கும்… பொம்பளைங்க ஸ்டேஷன்தானே இது? அதனால பொம்பளங்க ஆர்ப்பாட்டம்..’, என்ற தோழரின் குரலில் கிண்டல் இருந்தது.
அப்புறம் அவர் எழுந்து புறப்பட்டார்.
அடுத்த நாள் மகாவும் தனமும் கட்சி ஆபீஸ் போனார்கள். தோழரிடம் நடந்தைச் சொன்னார்கள். நேற்று இரவே கண்ணனும் கண்ணனின் அக்காவும் கைதாம். பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று ஆள் வந்திருக்கிறதாம். பாண்டியம்மாள் எஸ்ஐ அனுப்பி வைத்தாரம்.
தோழர் ‘சரி’, என்றார்.
‘இல்லத் தோழர் பேசிக்கலாம்னா.. அவனுங்க 30 ஆயிரம் தாரேங்கிறானுங்க.. ஒங்க கிட்ட கேக்காம’
‘என்னத்தைக் கேக்குறது.. கட்சி தலையிட்டதால அந்த ஆளுங்க அரெஸ்ட்.. ஆனா.. பாண்டியம்மாவோட வருமானமுல்ல ஏறிகிட்டு போவுது..’ என்று தோழர் யோசித்தார்.
மகாவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். இந்தப் பெண்ணின் வாழ்க்கையை உத்திரவாதம் செய்வதா, பாண்டியம்மாவுக்கு வேட்டு வைப்பதா என்று யோசித்தார்.
‘சரி.. அவனோட அப்பன் நெலத்துல ஏக்கர் என்ன வெல போகும்?’, என்று கேட்டார்.
தனத்துக்குப் புரியவில்லை.. ஆனாலும், 'ஏக்கரு ரெண்டு மூனு லெட்சம் போகுந்தோழர்.. ஆனா வெசாரிக்கனும்’, என்றாள்.
‘அந்தத் தொகைய கேளுங்க.. அதவுட முக்கியமா, சாயங்காலம் நம்ம கிராமத்துப் பெண்களைக் கூப்பிட்டு ஒக்கார வைங்க.. நான் வரேன்’, என்றார்.
மகாவுக்கும் தனத்துக்கும் தோழர் ஏதோ திட்டம் போடுகிறார் என்று புரிந்தது. இனம் புரியாத நம்பிக்கையுடன் புறப்பட்டார்கள்.
தோழரின் திட்டம் மிகச் சுருக்கமானது. திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்.. ஆனால், மதுரையில். பெண்கள் காவல் நிலையத்தின் ஆண்கள் ஆதரவுப் போக்குக்கு எதிராக..
ஆர்ப்பாட்டம் நடந்தது. பேச்சி, செல்வி என்று நிறைய பெண்கள் பேசினார்கள். பெண்கள் காவல் நிலையத்தில் தங்களுக்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் புட்டுப்புட்டு வைத்தார்கள்.
இரண்டு நாட்கள் கழித்த பின்னர் மகா வேலை செய்யும் தேங்காய் நார் கம்பெனிக்கு தனம் ஓடி வந்தாள். மகளைக் கையோடு அழைத்துகொண்டு வீட்டுக்குச் சென்றாள். போகும் வழியிலேயே பதட்டத்துடன், கண்ணனின் அப்பா தேடி வந்திருப்பதைச் சொன்னாள்.
மகாவின் தலையெல்லாம் தேங்காய் நாறு தூசு படிந்திருந்தது. மட்டையை அள்ளி மெஷினுக்குள் கொட்டும் வேலை அவளுக்கு. காற்றில் எங்கும் தூசு இருக்கும். வேலைக்குச் சேர்ந்த போது மிகவும் சிரமப்பட்டாள். அப்புறம் பழகிவிட்டது.
எதற்கு வந்திருக்கிறார் அந்த ஆள் என்று மகாவுக்குப் புரியவில்லை. மறுபடியும் கண்ணனோடு வாழக் கூப்பிடுவாரோ? என்ன நடந்து கொண்டிருக்கிறது?
தனத்தின் வீடு, தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசைதான். அவளின் அப்பா அந்தத் தோட்டத்திற்கு காவலாளி. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். அதற்கப்புறம் விழுகின்ற மட்டைகளைப் பொறுக்கி விற்றுக்கொள்ளலாம். அவர் வேலைக்குச் சேர்ந்தபோது இருபது ரூபாய் சம்பளம். இருபது வருங்கள் கடந்துவிட்டன.
தென்னந்தோப்புக் குடிசையின் முன்னே கயிற்றுக்கட்டிலில் கண்ணனின் அப்பா உட்கார்ந்திருந்தார். அவருடன் ஊர் பெரிய மனிதர் ஒருவர் வந்திருந்தார். தனம், மகா, அவளின் அப்பா எல்லோரும் கீற்றுகளைத் தரையில் போட்டு அமர்ந்தனர். மோட்டார் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்ருந்தது. குடிசைக்குள் அடை காத்த கோழி குபுக் குபுக் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.
‘இன்னும் யார் வரனும்?’ என்று பேச்சைத் துவங்கினார் ஊர் பெரியவர்.
‘கட்சிக்காரரு வருனும்ல.. அவங்க இல்லாட்டி எம்பொண்ணு வாழ்க்கை ஒன்னுமத்துப் போயிருக்கும்ல’, என்றார் மகாவின் அப்பா.
யார் அந்தக் கட்சிக்காரர் என்று பெரியவர் கேள்வி கேட்க, தனம் விளக்க ஆரம்பித்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சண்முகம் சைக்கிளில் வந்துவிட்டார்.
அவருக்கென்று ஒரு கல்லை உருட்டிப் போட்டார் மகாவின் அப்பா.
‘கோச்சிக்காதீங்க.. திடீர்னு போனு போட்டிங்க.. அப்ப நான் ஆபீசுல இருந்தேன்’, என்று ஆரம்பித்தார்.
கண்ணனையும், அவன் அம்மாவையும் கைது செய்து விட்டார்களாம். இன்னும் நாலைந்து பேருக்கு பெயில் வாங்க அலைகிறார்களாம். கிடைக்கவில்லையாம். போலீஸ் தேடுகிறதாம். வேறுவழியில்லை; பேசித் தீர்த்துக்கொள்ளலாம்
என்று புறப்பட்டு வந்திருக்கிறார்களாம். கதைச் சுருக்கத்தைக் கேட்ட தோழர் சண்முகம், ‘அப்ப என்ன செய்லாம்னு சொல்லுங்கய்யா’ என்றார் கண்ணனின் அப்பாவைப் பார்த்து.
அவர் தொண்டையைச் செறுமிக்கொண்டார். அமைதியான பேர்வழி என்பது போல தெரிந்தது.
‘எனக்கு இந்த நெலம வந்துருக்கக் கூடாது… ஆகாதப் புள்ளையப் பெத்தா தேடாத எடம் தேடித்தா போகனும்’, என்றவர் தான் பெற்ற மகனைத் திட்டித் தீர்த்தார்.
‘மகாலெட்சுமிய நாங்கொற சொல்ல மாட்டேன். அது பச்ச மண்ணு..’ என்றார். ‘அதனால, எம் பையங்கிட்ட பேசிட்டேன். எதுவும் கதைக்காகல.. பேசமா அவனுக்குப் போற பங்குல ரெண்டு ஏக்கர மகா பேருக்கு எழுதிடரேன்.. நீங்க வைச்சிக்கிட்டாலும் சரி. இல்லை வித்து பணமாக் கேட்டிங்கன்னா வித்துக் கொடுக்கறேன்.. என்ன மட்டும் சிக்கல்லேந்து எடுத்துவுடுங்க.. அதுபோதும்’, அவரின் குரல் உள்ளொடுங்கி ஒலித்தது. வேட்டி மடிப்பிலிருந்து வெற்றிலையை எடுத்து தயார் செய்ய ஆரம்பித்தார்.
மறுபடியும் மௌனம் சூழ்ந்தது.
தோழர் சண்முகம், ‘சொல்லு மகா.. ஒனக்குச் சம்மதமா?’, என்றார்.
’தோழரே நா அப்பாகிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறனே?’ என்றாள் மகா. இத்தனை நாளுக்குள் செயலாளர் அவளுக்கு அப்பாவாகியிருந்தார்.
சண்முகத்தின் செல்லில் இருந்து தோழரை அழைத்தாள் மகா. தோழர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மகாவுக்குச் சம்மதம் என்றாள் முடித்துக்கொள்ளலாம் என்றார்.
‘அது சரிப்பா.. எப்புடி எங்க மாமா இப்புடி தேடி வந்தாரு.. என்ன செஞ்சிங்க..?’, என்று சந்தேகத்தைக் கேட்டாள்.
‘நா என்ன செஞ்சேன்… எல்லா நீங்கதான். ஒங்க ஆர்ப்பாட்டம் முடிஞ்சு எங்கிட்ட டிபார்ட்மெண்ட்லேந்து
கேட்டாங்க.. பாண்டிம்மா பணம் வாங்கினதையும், கைது பண்ணிட்டு பேசிப் பிரிஞ்சுக்குங்கன்னு
பேரம் பேசுனதையும் சொன்னேன். அவ்வளவுதான். சமயத்துல எங்கோ அடிச்சா எங்கோ பல்லு போகும்பாங்களே அது நடந்துடிச்சி… அவ்வளவுதான்’, என்றார்.
‘சரிப்பா.. நானு அம்மாகிட்ட கொடுக்கிறே’, என்றவளை தோழர் தடுத்தார்.
‘இன்னொரு சேதி தெரியுமா.. பாண்டிம்மா எஸ்ஐ சஸ்பெண்டு.. அனேகமா இனி இந்த ஸ்டேஷன்ல போட மாட்டாங்க’
’சூப்பரப்பா’, என்றாள் மகா குதூகலத்துடன். போனை அம்மாவிடம் கொடுத்தவளுக்கு தலை கால்புரியவில்லை.
‘தொப்பிய கழட்டிட்டம்ல’, என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
2.கொள்ளை
ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு
கீற்று
கூட
முடியவில்லை. குத்து
வைத்து
எத்தனை
நேரம்
வேலை
பார்ப்பது? அடிவயிற்றில் வலி
பொறுக்கமுடியவில்லை. எழலாம்
என்றாலோ காலும்
இடுப்பும் ஒத்துழைக்கவில்லை. கைகளைத் தரையில் ஊன்றி
எழப்பார்த்தாள்.
அடிவயிற்றுக்கும் கீழே
வலித்தது. அந்த
இடத்தில் அரிப்பெடுத்தது. நசநசவென்றிருந்தது. பாழாய்
போன
வெள்ளை
மறுபடியும் வந்துவிட்டது என்று
நினைத்துக்கொண்டாள்.
ஈஸ்வரிக்கு வயது
முப்பத்தியைந்துதான். ஆனாலும் அவளைப்
பார்க்கும் யாரும்
அவளை
நாற்பது நாற்பத்தைந்து வயதுக்காரி என்றுதான் நினைப்பார்கள். காதோரத்தில் கனத்த
நரை
ஓடியிருந்தது. எலும்புக்கூட்டுக்கு புடவை
சுற்றிதுபோல அவளிருந்தாள். உட்பாவாடையும் புடவையும் நழுவி
கீழே
இறங்கும் அளவுக்கு இடுப்புக்குக் கீழே
இளைத்திருந்தாள்.
பின் என்னதான் ஆகும்?
இரண்டு பிள்ளைகள். பெரியவனுக்கு 21 வயதாகிறது. இரண்டாவது பெண்.
18 வயது.
அடுத்தடுத்த குழந்தைகளைக் கலைத்துவிட்டாள். எப்போதாவது தனிமையில் சோர்ந்து அமர்ந்திருக்கும் போது
கணக்குப் போட்டுப் பார்ப்பாள். ஆறு
அல்லது
ஏழு
குழந்தையைக் கலைத்திருக்கிறாள். ஒவ்வொரு முறை
கலைக்கும்போதும் உடல்
ஒடுங்கிப்போகும். இரத்தம் வற்றிப் போகும்.
ஆனால்,
வேலைகள் மட்டும் அப்படியே நீளும்.
காலை எழுந்தவுடன் வாசலில் மாடு
கட்டியிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து
தீவனம்
வைக்க
வேண்டும். கல்லுடைக்கப் போகும்
கணவனுக்கு சமைத்து, சாப்பிட வைத்து
கொடுத்தனுப்ப வேண்டும். அப்புறம் பிள்ளைகளை அனுப்பி வைக்க
வேண்டும். அதற்கப்புறம், அள்ளிப் போட்டுக்கொண்டு தூக்கு
வாளியைத் தூக்கிக்கொண்டு ஓட
வேண்டும்.
பெரியாற்றுக் கால்வாயில் தண்ணீர் வந்துவிட்டால் பத்து
இருபது
நாளைக்கு கருப்பட்டி துவங்கி ஆண்டிப்பட்டி வரை
வேலைகிடைக்கும். களையெடுப்பு, நாற்று
நடவு
என்ற
முப்பது முப்பத்தைந்து நாள்
கூட
ஓடும்.
அதற்குள் சம்பாதித்துவிட வேண்டும் என்ற
வெறியில் ஓடுவாள். அப்புறம், உடம்புக்கு காய்ச்சல் வந்து
சீதாலட்சுமி டாக்டருக்குக் காசு
கொடுப்பாள்.
அது இல்லையேன்றால் தென்னை
மட்டை
வாங்கி
கீற்று
முடைவாள். மட்டைக்கும் பஞ்சம்
வந்துவிட்டால், ஓடை
வேலைக்குப் போவாள்.
அந்த
அறுபதுக்கு யார்
போவார்கள் என்று
நொந்துகொண்டே போவாள்.
இதற்கிடையில் மாட்டுக்குப் புல்
அறுத்துக்கொண்டும் வரவேண்டும்.
இப்படியாக இவளின்
பொழுது
முடியும்போது தொலைக்காட்சியில் நாடகங்களெல்லாம் முடிந்திருக்கும். எப்போதாவது ஒரு
நாள்
கணவனின் கை
இவள்
மேல்
ஊரும்.
ஒத்துழைக்க வேண்டும்.
அவனின் மனைவி
இறந்த
பின்னர் பாறையில் வேலை
பார்த்த பழக்கத்தில் இவளைச்
சேர்த்துக்கொண்டான். இரண்டு
பிள்ளை
பிறந்த
பின்னர் பேசுவது கூட
இல்லை.
எப்போதாவது ‘கஞ்சி
என்னாச்சிடி’, என்று
உறுமல்
கேட்கும். அவ்வளவுதான்.
அவன் கை
ஊர்ந்தால் நிச்சயம் பிரச்சனைதான். கலைக்க
வேண்டிவரும். அவள்
எத்தனையோ முறை
சாடை
மாடையாகச் சொல்லிப் பார்த்தாள். அவன்
தயராக
இல்லை.
ஆண்மை
போய்விடுமாம். அப்புறம் கடைசிமுறை கலைக்கும்போது டாக்டரே இவளுக்குக் கருத்தடை செய்து
வைத்தார்.
எழுந்து நின்ற
ஈஸ்வரிக்குக் காலெல்லாம் நடுங்கியது. அடிவயிற்றில் வலி
தீப்பிடித்தது போல
பரவியது. மெல்ல
நடந்துபோய் திண்ணையில் படுத்துக்கொண்டாள்.
அலங்காநல்லூர் போகும்
பஸ்
சத்தம்
கேட்டு
எழுந்தாள். அந்த
டாக்டரம்மா வந்திருக்கும் என்று
நினைத்தவளாக மினி
பஸ்
பிடிக்கப் புறப்பட்டாள். துணைக்கு மகள்
காளியையும் அழைத்துக்கொண்டாள்.
டாக்டரம்மா சொன்னதைக் கேட்டவளுக்கு தலையில் இடி
இறங்கியது போல
இருந்தது. கண்ணில் இறங்கிய கண்ணீரை மறைத்துக்கொண்டு 500 ரூபாய்
ஒரே
தாளாகக் கொடுத்துவிட்டு மகளுடன் திரும்பினாள்.
வீட்டுக்கு வந்தபோது மணி
9 ஆகிவிட்டது. இவளுக்குப் பசிக்கவில்லை. நல்ல
வேளையாக, காலையில் மிச்சமிருந்ததைச் சாப்பிட்டுவிட்டு கணவன்
படுத்திருந்தான். சாராய
வாடை
அடித்தது. இனி
எழுந்திருக்க மாட்டான். ஒரு
பிரச்சனை முடிந்தது. பையனைக் காணவில்லை.
இவளை அறியாமல் அழுகை
வந்தது.
‘வலிக்குதாம்மா?’
என்றாள் காளி.
ஆமாம். வலித்தது. போட்ட
ஊசியும் கொடுத்த மாத்திரைக்கும் கேட்காமல் வலியெடுத்தது. ஆனால்,
ஈஸ்வரி
அதனால்
அழவில்லை.
டாக்டர் சொன்னதைச் சொன்னாள். கர்ப்பப் பையை
எடுக்க
வேண்டும் என்று
சொன்னதை மகளிடம் சொன்னாள். பின்
வீட்டு
சீதாக்
கிழவி
வந்து
அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தாள்.
‘போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள். சீதா
கெழத்துக்குத் தெரிந்தால் அது
ஊருக்கே தெரிந்த மாதிரி.
‘அத எடுத்துட்டா அப்புறம் என்ன
பொம்பளடி நீயி’.
என்றாள் சீத்தாப் பாட்டி.
ஈஸ்வரிக்கு ஈரக்கொலை அறுந்தது போல
இருந்தது. அழுதாள். வாய்விட்டு அழுதாள்.
‘எதுக்குடி இப்புடி அழுவுற’, என்று குரல்
கொடுத்தாள் முத்தம்மா. அவர்கள் கீற்று
முடையும் இடத்திலிருந்து குரல்
வந்தது.
ஈஸ்வரி
பதில்
சொல்லவில்லை.
உரத்துச்சொல்ல உடலில்
தெம்பில்லை. மனதிலும் தெம்பில்லை.
முத்தம்மா எழுந்து வந்தாள். திண்ணைக்கு அருகே
நின்று
கொண்டு
இவளைப்
பார்த்தாள். ‘சொல்லுடி.. அடக்
கழுத…
சொல்லிட்டு அழுதாத்தானே என்னான்னு தெரியும்’, என்றாள்.
முத்தம்மா பக்கத்து வீட்டுக்காரி மட்டுமல்ல, தலைவியும் கூட.
ஈஸ்வரி சொல்வதற்கு முன்பு
கெழவி
முந்திக்கொண்டாள். ‘ஈசுக்குக் கர்ப்பப்பைய அறுத்துடனுமாம்’.
‘யாருடி சொன்னா?’, என்றாள் முத்தம்மா.
‘சீதாலட்சுமி டாக்டரு சொன்னாங்களாம்..
போயிருந்தோம்’, என்று
காளியிடமிருந்து பதில்
வந்தது.
‘அடிப்பாதகத்தி..
எத்தனை
மொற
சொன்னேன்டி நானு..
கலைக்காதடி.. கலைக்காதன்னு எத்தனை
மொறச்
சொன்னே...
இப்ப
ஆப்பரேஷனு ஆச்சின்னா எத
வித்துடி செஞ்சிப்ப?’ என்று
கோபப்பட்டாள் முத்தம்மா.
முத்தம்மாவுக்கு ஈஸ்வரியின் கதை
முழுக்க அத்துபடி. கர்ப்பப் பை
ஆப்பரேஷன் என்றால் அந்த
டாக்டரம்மா பத்து
ரூபாய்க்கு மேல்
கேட்கும் என்றும் முத்தம்மாவுக்குத் தெரியும்.
‘சரி நான் பொறப்படறேன்’, என்று
தோழரின் குரல்
கேட்டது. அவரும்
கீற்று
முடையும் இடத்தில்தான் இருந்திருப்பார் போல.
‘அட இரு தோழரு…
ஈசு
அழுதுகிட்டு கெடக்கிறா.. நீ
போறங்கற’, என்று
முத்தம்மா திரும்பிப்பார்த்து குரல்
கொடுத்தாள்.
தோழர் எழுந்து வந்தார். ஈஸ்வரி
வாரிச்சுருட்டிக்கொண்டு, முணகிக்கொண்டே எழுந்து உட்காரப் பார்த்தாள்.
தோழர் திண்ணையில் அமர்ந்துகொண்டார். குண்டு
பல்பு
வெளிச்சத்தில் அவரின்
முன்னந்தலை வழுக்கைத் தெரிந்தது. இவளையே
பார்த்துக்கொண்டிருந்தார்.
‘சரி டாக்டர் என்ன
சொன்னாங்க’, என்று
ஈஸ்வரியைப் பார்த்து கேட்டார்.
ஸ்கேன் எடுத்ததையும், கர்ப்பப் பையில
புண்
என்றும் டாக்டர் சொன்னதைச் சொன்னாள்.
‘சரி.. ஸ்கேனக் காட்டு’,
என்றார் தோழர்.
‘ஸ்கேனு கொடுக்கல’, என்றாள் ஈஸ்வரி
ஈனசுரத்தில்.
சொல்லி முடிப்பதற்குள் தோழர்
கேட்டார், ’ஏன்
கொடுக்கல?’.
‘கம்பியூட்டர்ல
காட்னாங்க.. ரொம்ப
மோசமா
இருக்குன்னு சொன்னாங்க’, என்றாள் ஈஸ்வரி.
‘ஓஹோ.. அப்புடியா?’ தோழர்
குரலில் கிண்டல் இருந்ததாகப் பட்டது.
‘ஒனக்கு கம்யூட்டர் காட்டி
வௌக்கம் கொடுத்தாங்களாங்காட்டியும்’, என்றார் தோழர்.
அவர்
உதடு
பிரியாமல், வழக்கம்போல, சிரிக்கிறார் என்று
தெரிந்தது.
‘மருந்து சீட்டைக் காட்டு’, என்றார்.
மருந்து சீட்டெல்லாம் இல்லை.
டாக்டர் கிளீனிக்கிலேயே கடையும் இருந்தது. நேரடியாக மருந்துதான் கொடுத்தார்கள் என்பதைச் சொன்னாள். அப்புறம் தோழர்
அந்த
கேரி
பேக்கைத் திறந்து, கண்ணாடி போட்டுக்கொண்டு குண்டு
பல்பு
வெளிச்சத்தில் மாத்திரைகளைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தார்.
‘ஆண்டி பயாடிக், பெயின்
கில்லர்.. சத்து
மாத்திரை’, என்றவர் முழம்
உயரத்துக்கு இருந்த
டானிக்
பாட்டிலைப் பார்த்தவர் வாய்விட்டு சிரித்தார்.
‘என்னா தோழர்.. ஒனக்கு
எங்க
பாடு
கிண்டலா இருக்கா?’, என்று
முத்தம்மாள் பொய்க்
கோபத்துடன் கேட்டாள்.
‘லூசுங்களா.. லூசுங்களா..’, என்றார் தோழர். லூசு என்பது
அவருக்குப் பிடித்த வார்த்தை.
’லூசுங்களா.. இது எதுக்க இருக்கிற பாண்டியன் தென்னந் தோப்புல இருக்கிற கீர..
அத
சாறாக்கி.. ஒங்ககிட்ட’, என்றவர் டானிக்
பாட்டில் அட்டையைப் பார்த்துவிட்டு, ‘நூத்து
நாப்பது ரூபா
புடுங்கிட்டாங்க.. அந்த
டாக்கடரம்மாவுக்கு எப்படியும் இந்த
வகையில
நாப்பது ரூபா
வரவு’
என்று
சிரித்தார்.
அப்புறம் எழுந்தவர் முத்தம்மாவைத் தனியே
அழைத்துச் சென்றார்.
‘இதல்லாம் ஆம்பள பேசுனா தப்பாச் சொல்வானுங்க.. ஊருல..
நாங்கேக்குறத ஈசுகிட்ட கேட்டு
சொல்லு’
என்றவர் முத்தம்மாவிடம் சில
கேள்விகளைச் சொல்விட்டு பைக்கருகே சென்று
சிகெரெட் பிடிக்கத் துவங்கிவிட்டார்.
முத்தம்மா திரும்பி வந்து
ஈஸ்வரியிடம் கேட்டதைத் தோழரிடம் சொன்னாள்.
‘சரிதான்.. நாளைக்கு ஆறு மணிக்கு அப்புறம் ஈச
கூப்பிட்டுட்டு வா.
மந்த
கிட்ட
வேல்முருகன் டாக்டர் இருக்காரு.. அவருகிட்ட காட்டு…
ஈசுக்கு கர்ப்பப்பையெல்லா எடுக்க
வேண்டி
வராது’,
என்று
சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
முத்தம்மா சொன்னதை ஈஸ்வரியால் நம்ப
முடியவில்லை. அவளுக்குத் தோழரைத் தெரியும். ரொம்பப் படித்தவர். ஆனால்,
டாக்டர் பொய்
சொல்வாரா? கம்யூட்டருமா பொய்
சொல்லும்?
மறுநாள் மாலையில் தோழர்
சொன்னபடி மந்தைக்குப் போய்
சேர்ந்தாள். துணைக்கு முத்தம்மாவை அழைத்து வந்திருந்தாள். போன்
போட்டு
தோழரையும் வரச்சொல்லும்படி முத்தம்மாவை நச்சரித்தாள்.
தோழர் வந்து
சேர்ந்தவுடன் மூவருமாக டாக்டர் வீட்டுக்குச் சென்றார்கள். டாக்டர் வீட்டு
வராந்தாதான் கிளினிக். வழக்கம்போல மூலையில் மருந்து கடையிருந்தது. பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டனர். இரண்டு
மூன்று
பேர்
காத்துக்கொண்டிருந்தனர்.
மருந்துக் கடைக்காரரிடம் தோழர்
ரொம்பப் பழகியவர் போல
ஏதோ
பேசிக்கொண்டிருந்தார். ஏதோ
ஒரு
மருந்து பேரைச்
சொல்லி
இப்போது என்ன
விலை
என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு
மேல்
ஈஸ்வரிக்குப் புரியவில்லை.
இவர்கள் முறை
வந்தபோது தோழர்
முன்னே
சென்று
நின்றுகொண்டே ஏதோ
இங்கிலீசில் பேசினார். அப்புறம் வெளியே
போய்விட்டார்.
அப்புறம் டாக்டர் இவளின்
அடிவயிற்றை அழுத்திப் பார்த்தார். லேடி
டாக்டர் கொடுத்த மாத்திரைகளைப் பார்த்தார். தோழர்
முத்தம்மாவை அனுப்பி கேட்கச் சொன்ன
கேள்விகளையெல்லாம் டாக்டரும் கேட்டார்.
‘ஒன்னுக்குப்போற
எடம்
வீங்கிட்டு வலிக்குதுன்னு சொல்றா
டாக்டரு’, என்று
முத்தம்மா கூடுதல் விவரம்
சொன்னாள்.
‘யூரின் டெஸ்ட், பிளட்
டெஸ்ட்
எடுத்தாங்களா?’, என்று
கேட்டார்.
‘இல்ல டாக்டரு.. நேர
ஸ்கேன்
எடுத்தாங்களாம்’, என்றாள் முத்தம்மா முந்திக்கொண்டு.
அந்த டாக்டர் தலையைக் குனிந்துகொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு பின்
தலையைச் சொறிந்துவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுதினார்.
‘இந்த மாத்திரையெல்லாம் சரியா
சாப்பிடுங்க.. நல்லா
சாப்பாடு சாப்பிடுங்க.. சரியாயிடும்.. சாதாரண
இன்பெக்ஷன்தான்.. சரியாயிடும்.. ஆகலன்னா.. யூரின்
டெஸ்ட்,
பிளட்
டெஸ்ட்
எடுத்துட்டு அப்புறம் பார்க்கலாம்’, என்றார்.
‘இல்ல டாக்டரு.. கர்ப்பப் பைய
எடுக்கனும்னு டாக்டரு சீதா..’,
என்று
ஆரம்பித்த முத்தம்மாள் முடிப்பதற்குள் டாக்டர் குறுக்கிட்டு,‘அதெல்லா வேணாம்மா.. அப்புடி ஒன்னும் பெரிசா
இல்ல..
புரியலன்னா… ஒங்க
தோழரக்
கேளு’,
என்றபடி இவர்களை அனுப்பி வைத்தார்.
மருந்துக் கடையில் 130 ரூபாய்
வாங்கிக்கொண்டார்கள். ‘டாக்டருக்கு?’ என்று
ஈஸ்வரி
இழுத்தபோது, ‘எல்லாஞ் சேத்துத்தாம்மா’, என்றார் மருந்துக் கடைக்காரர்.
‘இப்புடி ஒரு டாக்டரா.’ என்றிருந்தது ஈஸ்வரிக்கு. நேற்று
500… அதற்கு
முன்பு
500 என்று
அந்த
லேடி
டாக்டருக்குக் கொட்டிக்கொடுத்திருந்தாள். தவணைக்கு எடுத்து வைத்திருந்தப் பணத்தை
டாக்டருக்குக் கொடுத்திருந்தாள். ஆனால்,
சரியாகவில்லை.
அவர்கள் வெளியே
வந்தபோது தோழர்
சிகெரெட் பிடித்தபடியே நின்று
கொண்டிருந்தார்.
‘ந்தா தோழர்.. இப்புடி சிகெரட் புடிச்சன்னா இதே
டாக்டருகிட்ட நீ
வரணும்’,
என்று
முத்தம்மா தோழரை
மிரட்டினாள்.
அவர் பதிலேதும் சொல்லாமல் ‘சரி
வரட்டா’,
என்று
புறப்பட்டார்.
‘இரு தோழரே ஒரு
டீ
சாப்பிட்டுப் போ’,
என்று
முத்தம்மா அவரை
நிறுத்தினார். ‘ஓ
கே’,
என்றார் தோழர்.
’டீயின்னா எப்பவும் மாட்டேன்னு சொல்லமாட்டியே’,
என்று
முத்தம்மா கிண்டல் செய்தாள்.
’ஓசி டீய விட
முடியுமா’, என்றார் தோழர்
பதிலுக்கு.
அப்புறம் யோசித்தபடியே, ‘முத்தம்மா.. போலீஸ்
ஸ்டேஷன்ல காசு
கேட்டா
குடுப்பியா’, என்று
கேட்டார்.
‘இப்ப கொடுக்க மாட்டேன். ஆனா..
கட்சிக்கு வரதுக்கு முன்னடி கொடுத்திருக்கே’, என்றவள், ‘எனக்கு
அப்ப
வெவரம்
தெரியதுல்ல’ என்று
சேர்த்துக்கொண்டாள்.
‘அதாம் பிரச்சனையே.. ஒங்களுக்கு வெவரம்
தெரியாதுன்னுதா போலீசும் கொள்ளையடிக்குது.. அந்த
டாக்டரம்மாவும் கொள்ளையடிக்குது..’, என்றபடி நடந்தார். மூவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். தோழர்
நிறைய
பேசினார். அரசு
மருத்துவத் துறையை
பணக்காரர்களுக்கு தானம்
செய்துவிட்டது என்று
துவங்கி பேசிக்கொண்டே நடந்தார்.
தோழர் சொல்வதெல்லாம் அவர்களுக்குப் புதிதாக இல்லை..
ஆனால்,
பழகிப்போன விஷயங்களுக்கு என்ன
பொருள்
என்று
புரிந்தது.
3..சொல்ல முடியாத பிரச்சனை
காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள் அடைத்து வைத்ததெல்லாம் வெளியேறும் நேரம் அது.
அவளது வீட்டில் கீற்றால் அடைத்த மறைப்பு உண்டு. அங்குதான் குளிப்பாள். அது மாலை ஆறு மணிக்கு. அப்போதுதான் கீற்று முடையும் வேலை முடியும். கருவை மரத்தின் கீழே அவளும் இன்னும் சில பெண்களும் கீற்று முடைவார்கள். எரிக்கும் வெயிலுக்கு கருவை உதவாது. வேர்த்துக் கொட்டும். ஆனால், அதுதான் வீட்டின் அருகே வளர்ந்திருந்தது. அதன் நிழலில் இருப்பது பெண்ணுக்கு பெரும் உதவி. ஒன்றுக்கு இருக்க வேண்டிய தேவை அடிக்கடி வராது. அப்படியே வந்தால் கீற்றுத் தடுப்பில் ஒதுங்கிக் கொள்ளலாம். வேர்வையில் நனைந்த உடம்பை மாலையில் அங்குதான் குளிப்பாட்டுவாள். அப்புறம்தான் வயிற்றைக் கலக்கும். கலக்கினால் போய் விட முடியுமா? அதற்கு இருட்டு வர வேண்டும்.
அவள் வாழ்ந்த கிழக்குத் தெருதான் ஊரின் கடைசித் தெரு. இரண்டு பக்கம் ஊர். ஒரு பக்கம் ஓடை. மற்றொரு பக்கம் சுடுகாட்டுக்குச் செல்லும் சாலை. சாலைக்கும் இவள் வீட்டின் பின்புறத்திற்கும் இடையில் இருக்கும் தோட்டமும் புறம்போக்கும்தான் இவர்களின், அதாவது இவள் சாதிப் பெண்களின் கழிப்பிடம். தென்னந்தோப்பு, கருவை முள் என்று கலப்படமான இடம். ஆண்கள் சுடுகாட்டுச் சாலையில் நடந்து ஓடைக்குப் போவது கண்ணுக்குத் தெரியும் இடம். இவள் சாதி ஆண்கள் ஒற்றையடிப் பாதையில் நடந்து இவர்களைக் கடப்பார்கள். ஓடைக்கோ ஒடையைத் தாண்டியோ வெளிக்கியிருக்கப் போவார்கள்.
குளித்து முடித்தவள் வேகமாக அந்த இடத்தை நோக்கி நடந்தாள். இன்று நேரமாகிவிட்டது. 7 மணிக்குக் கூட்டம். தோழர் வருவார். அந்த கூட்டம் துவங்கும் முன்பு வயிற்றுப் பிரச்சனையைச் சரி செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தில் உட்கார முடியாது.
அவள் வீட்டின் பின்புறம்தான் அந்த இடம். அங்கு இருந்து, காது கொடுத்துக் கேட்டால், கீற்று முடையும் இடத்தில் நடக்கும் கூட்டத்தில் பேசுவதெல்லாம் கேட்கும். தோழர் வந்துவிட்டார் என்று தெரிந்தது.
‘சீக்கிரம் உட்காருங்கம்மா.. இன்னிக்கு ரெண்டு கூட்டம், நொச்சிப்பட்டிக்கும் போவனும்’, என்ற தோழரின் குரல் கேட்டது.
அய்யோ என்றிருந்தது இவளுக்கு. இவளைத் தவிர எல்லோரும் வந்து விட்டார்கள் என்பதை அங்கேயிருந்து வந்த பேச்சு சப்தத்தில் உணர்ந்தாள். போகவேண்டும். ஆனால், அது… அந்த பாழாய் போன வயிற்றுக்குத் தெரியவில்லை. பொறுமிக்கொண்டேயிருந்தது.
‘எல்லாம் வந்துட்டாங்களா?’, என்ற தோழரின் குரல் கேட்டது.
‘வந்துட்டாங்க’, என்று வெள்ளையம்மாள் பதில் சொன்னதும் கேட்டது.
‘..ம்.. காளியைக் காணோம்..?’ என்றார் தோழர். காளிதான் கிளையின் முக்கியமான நபர் என்று தோழர் நினைப்பது காளிக்குத் தெரியும்.
‘காளி.. தோப்புக்குப் போயிருக்கா’, என்ற சடச்சியின் குரல் கேட்டது.
‘தோப்புக்கா..? இந்த நேரத்திலா? மட்டைத் தூக்கவா?’ என்றார் தோழர்.
அவரின் பரிவு இவளுக்கு இதமாக இருந்தாலும், எரிச்சலாக வந்தது. வெட்கக் கேடாக இருந்தது. அவசரமாக எழுந்தாள்.
‘சரி.. ஆரம்பிக்கலாம்.. தோழர் காளி வந்து சேந்துகிட்டும்’, என்று தோழர் கூட்டத்தை ஆரம்பித்தார்.
இவள், தெருவிளக்கு வெளிச்சம் படாமல் மறைந்து கீற்றுத் தடுப்புக்குள் சென்று சுத்தம் செய்துகொண்டு, சத்தம் எழுப்பாமல் போய் கூட்டத்தின் கடைசி நபராக உட்கார்ந்துகொண்டாள்.
வயிறு இன்னும் அடங்கவில்லை. என்ன சாப்பிட்டோம் என்று யோசித்தாள். அப்புறம் கவனத்தை மாற்றிக்கொண்டு தோழர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள். வாய்ப்பில்லை என்றால் வயிறு அடங்கிக்கொள்ளும் என்பது காளிக்குத் தெரியும். பெண்ணாகிய இவள் வேறென்னதான் செய்ய முடியும்? இவளுக்குப் பழகிவிட்டது.
தோழர் என்பது அவர்களின் கிளைப் பொறுப்பாளர். ஏரியா கமிட்டியிலிருந்து வருகிறார். ஆள் வாட்டசாட்டமாக இருப்பார். ஆனால், குழந்தை போல பேசுவார். சின்னப் பிள்ளைகள் எப்போதும் அவரைச் சுற்றிக்கொள்ளும்.
‘சரி.. கிராமத்துல வேறென்ன பிரச்சன?’, என்றார் தோழர்.
சொல்லியே ஆக வேண்டும் என்று காளிக்குத் தோன்றியது. ஆனால், எப்படி சொல்வது? அதுவும் ஓர் ஆணிடம்?
காளியெல்லாம் தீண்டத்தகாத சாதிக்காரர்கள். அது என்னவோ தெரியவில்லை. தோழர் இவர்கள் இடத்தில் தவமா தவமிருந்து கட்சிக் கிளையை உருவாக்கியிருந்தார். அவர் பி.சி. தெருவுக்கெல்லாம் போவதில்லை. ஏனென்று இவள் யோசித்திருக்கிறாள். ஆனால் புரிந்ததில்லை.
காளி 12 வரை படித்தவள் தீண்டாமை என்பது குற்றம் என்று துவங்கி பாடப்புத்தகத்தில் எழுதியிருந்ததைப் பார்க்கும் போதெல்லாம் இவளுக்கும் கோபம் வரும்.. ‘அப்புறம் ஏண்டா உட்டு வச்சிருக்கிங்க?’ என்று மனதுக்குள் கத்துவாள்.
இவள் பள்ளர் சாதி. பள்ளியில் படிக்கும் போது கள்ளர் சாதிப் பையன்கள் இவளைப் பற்றி, இவள் சாதியைச் சேர்ந்த மற்ற பெண்களப் பற்றிப் பேசுவதெல்லாம் இவளுக்குக் கேட்கும். ஆனால், வெளியே சொல்ல முடியாது. அப்படிப் பேசுவார்கள் பாவிகள்.
அதெல்லாம் பரவாயில்லை என்று இப்போது தோன்றியது. அந்த நிலத்தை காவேரியம்மா விற்றுவிட்டாள். அவரும் கள்ளர் சாதிதான். அந்த அம்மா அடாவாடிப் பேர்வழி, வீட்டுக்காரர் எப்போதோ செத்துப்போய்விட்டார். ஆனால், மூன்று ஆண் பிள்ளைகள். பிள்ளைகளை காவிரியம்மாதான் வளர்த்தாள். வீட்டுக்காரரைப் போலவே அடவாடி செய்து விவசாயம் செய்து பிள்ளைகளை வளர்த்தாள். எல்லா சாதிக்காரர்களின் பாத்திரம் பண்டம் முதல் அனைத்தையும் அடகு பிடிப்பாள். அடகு பிடித்த பாத்திரங்களைப் போட்டுவைக்கவென்றே அவளுக்குத் தனியே ஒரு வீடு இருக்கிறது. வீட்டுக்காரர் பிடித்து வைத்திருந்த புறம்போக்கில் தென்னையை நட்டுவைத்தாள். அது இவளின் சாதிக்காரப் பெண்களுக்குப் பிரச்சனையில்லை. இருட்டின பின்தானே ஒதுங்கப் போக வேண்டும். கருவையைக் காட்டிலும் தென்னை நல்லது என்று நினைத்தார்கள். இருட்டும் இருக்கும். முள்ளும் இருக்காது என்று நினைத்தார்கள்.
பத்துப் பதினைந்து வருஷம் போனபின்பு அதுதான் பிரச்சனை ஆயிற்று.
யாரோ முகம் தெரியாத ஆட்கள் வந்து தென்னையை வெட்டினார்கள். புறம்போக்கில் இருந்த தென்னையையும் காவிரியம்மாவின் பட்டா நிலத்தில் இருந்த தென்னையையும் வெட்டினார்கள். இவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அப்புறம் புறம்போக்கை மறித்து மண் கொட்டினார்கள். இவர்களுக்குப் பதைபதைத்தது. என்ன நடக்கிறது?
காளிதான் விசாரித்தாள். புறம்போக்கையும் சேர்த்து எல்லா நிலத்தையும் திண்டுக்கல்காரருக்கு, காவிரியம்மா விற்றுவிட்டாளாம்.
பிளாட் போட்டு விற்பது வாங்கியவரின் நோக்கமாம். சாலையை ஒட்டி கிழக்குப் பக்கத்தில் விற்கப்பட்ட நிலத்தில் நுழையலாம். ஆனாலும், இடத்தை வாங்கிய திண்டுக்கல்காரர் மேற்குப் பக்கத்தில் உள்ள புறம்போக்கில் பாதை போடுகிறார். பட்டா இடத்தில் பாதை போட்டால் மனை எண்ணிக்கை குறையும் என்று திண்டுக்கல்காரருக்குக் கவலையாம்.
அந்த சாலையில்தான் ஆண்கள் நடந்து போய் ஓடையில் வெளிக்கி இருப்பார்கள். ஆண்கள் கடக்கும்போதெல்லாம் பெண்கள் எழுந்து நின்று கொள்வார்கள். சாலை, கள்ள சாதிப் பெண்கள் உட்காரும் இடம். ‘இது நானில்லை’ என்பது போல முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். இருட்டாக இருந்தாலும் வெட்கம் இருக்கிறதல்லவா? அவர்களின் நிலை இவள் சாதிப் பெண்களை விட மோசம். பல சாதி ஆண்களும் அந்த சாலையின் வழிதான் ஓடைக்கு ஒதுங்கப் போவார்கள்.
காளியின் சாதிப் பெண்கள் தென்னந்தோப்பைப் பயன்படுத்துவார்கள். அல்லது அவர்கள் சாதி சாமி அம்புக்குத்தும் புறம்போக்கைப் பயன்படுத்துவார்கள். அந்த சாலையில் இருந்து பாதை போட்டு மனை போட்டுவிட்டால் அப்புறம் எல்லாம் வீடாகிவிடும். அப்புறம் பெண்கள் எங்கே ஒதுங்கப்போவது? ஆண்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடையில் போயா உட்காரமுடியும்? இதுதான் இரண்டு நாட்களாகப் பெண்களின் பிரச்சனை.
இந்தப் பிரச்சனையை தோழரிடம் சொல்லலாமா என்று காளி யோசித்தாள்.
அதற்குள் தோழர் மற்ற விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். மன்மோகன்சிங், நூறுநாள் வேலைக்குக் குறைவாகப் பணம் ஒதுக்கியது, ஜெயலலிதா பால் விலையேற்றியது என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். வழக்கமாக தோழர் பேசுவது காளிக்குப் பிடிக்கும்.. ஆனால், இன்று ரசிக்கவில்லை.
கூலி குறையுது, சாப்பாடு குறையுது என்பதுதான் அவர் சொல்லும் செய்தி. வெளிக்குப் போக வாய்ப்பில்லாவிட்டால் சாப்பாடு குறைவது நல்லதுதானே என்று காளி யோசித்தாள். அவஸ்தை குறையுமல்லவா?
ஏதோ ஒரு போரட்டம் பற்றி தோழர் பேசிக்கொண்டிருந்தார். காளிக்கு அதிலெல்லாம் மனசு போகவில்லை. வயிறு பொறுமிக்கொண்டேயிருந்தது.
இரவில் ஒதுங்குவது பெண்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. அது பழகிவிட்டது. ஆனால், வயிறு பொறுமினாலோ அல்லது பேதியாகிவிட்டாலோ பிரச்சனைதான். அது பகல் என்றால், செத்துப்போய்விடலாம் என்று தோன்றும் அளவுக்கு அவஸ்தையாக இருக்கும். பாவாடையிலேயே போய்க்கொண்டு பாவாடையிலேயே துடைத்துக்கொள்ள வேண்டும். என்ன மனுஷப்பிறவி என்று தோன்றும். மாட்டுக்கு உள்ள சுதந்திரம் கூட பெண்ணுக்கு இல்லையென்பது தெரியும்.
கூட்டம் முடியும் நேரம். இதுவரை காளி ஒன்றும் பேசவில்லை.
‘காளி.. என்னம்மா பிரச்சன? நீ பேசவேயில்ல?’ என்று தோழர் கேட்டார்.
காளிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், பொறுமும் வயிறு அவளிடம் சொன்னது… ‘வாயைத் தொறடி நாய’, என்று.
என்ன வெட்கம் இருக்கிறது? ஓடைக்கு ஒதுங்கப் போகும் ஆண்கள் தென்னந்தோப்பு நடைபதையைக் கடக்கும் போதெல்லாம் பி.ட்டி வாத்தியார் ஒன் டூ திரி சொன்னது போல எழுந்து அமர்ந்திருக்கிறாள். என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கிறது?
‘சாப்பிடறது கூட எங்களுக்குப் பிரச்சனையில்ல.. ஆனா..’
‘சும்மா இருடி‘, என்று வெள்ளையம்மா அதட்டினாள்.
‘அப்ப நீ சொல்லு’, என்று காளி முடித்துக்கொண்டாள்.
சற்று நேரம் அமைதி. அந்தக் கிளையில் எல்லோரும் பெண்கள்தான். தோழர் மட்டும்தான் ஆண். ஆனால், அவர் ஆண்தானா என்று காளிக்குச் சந்தேகம் வரும். பெண்ணைப் பார்ப்பது போல அவர் என்றும் அவளைப் பார்த்ததில்லை. அவளை மட்டும் அல்ல, எவளையும் பார்த்ததில்லை. அவருடைய கண்கள் நேராகக் கண்களைப் பார்க்கும். மாராக்கு விலகி அமர்ந்திருக்கும் பெண்ணைக் கூட அவருக்குத் தெரியாது. ‘சரியான பொட்ட’, என்று இவள் சில நேரம் யோசித்திருக்கிறாள்.
இவரிடம் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. சொல்லிவிட்டாள்.
சடச்சி இடையில் புகுந்து ’ச்சூ..’ என்றாள்.
‘அப்ப நீ சொல்லு’, என்று காளி வாயை மூடிக்கொண்டாள். அப்புறம் மௌனம். தோழர் குறுக்கிட்டு ‘மேல சொல்லுங்க தோழர் காளி’, என்றவுடன் பேச ஆரம்பித்தாள்.
தோழர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் முகத்தைக் கைகள் தாங்கிக்கொண்டிருந்தன. அந்த நேரம் பார்த்து கரண்ட்டும் போய்விட்டது.
தோழர் நிமிரவேயில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது.
வெள்ளையம்மா போய் மண்ணெண்ணெய் விளக்கு கொண்டு வந்தாள். தோழர் நிமிர்ந்தார். செல்லை அழுத்தி மணியைப் பார்த்துக்கொண்டார்.
‘நீங்க நொச்சிப்பட்டிப் போக நேரமாயிடுச்சா?’, என்று சடச்சி கேட்டாள். எப்படியாவது இந்த வெட்கக் கேட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று அவள் யோசித்தாளோ..?
தோழர் நிமிர்ந்து அனைவரையும் பார்த்தார். ‘மன்னிக்கனும்.. எங்க கிராம ஆய்வுல இது வல்ல.. இந்தப் பிரச்சனை வல்ல.. நாங்கெல்லாம் ஆம்பிளைதானே’, என்று ஏதேதோ பேசினார். அவர் தடுமாறுவது அவருக்கே புரிந்தது போல, ஒரு சிகெரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டு, ஆழ்ந்து புகையை இழுத்தார்.
‘இதுல யோசிக்க எதுவும் இல்ல.. தலித்துகளோடு வாழ்வாதரத்தைப் புடுங்கிறதும் வன்கொடுமைதான்.. ஒங்க பயன்பாட்டுல இருந்த பொறம்போக்கு ஒங்க வாழ்வாதாரம்தான். சாதியச் சொல்லித் திட்டுறது மட்டுமில்ல, வாழ்வாதாரத்தைப் புடுங்கறதும் வன்கொடுமைதான்’, என்றார், அவர் யோசிக்கிறாரா பேசுகிறாரா என்று காளிக்குப் புரியவில்லை. தோழர் மறுபடியும் புகையை உள்ளே இழுத்துக்கொண்டார்.
அப்புறம் அவர் பேசியதை அந்தப் பெண்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் குட்டி யானை- அதாவது டாட்டாவின் சின்ன லாரி-பிடிக்க வேண்டும். கலெக்டர் ஆபீஸ் போக வேண்டும். இரண்டு இரண்டு பேராகப் போய் கலெக்டர் அறைக்குள் நுழைந்துகொண்டு பிரச்சனை செய்ய வேண்டும். இதுதான், தோழர் சொல்ல, அவர்கள் ஒப்புக்கொண்ட திட்டம். பெண்கள் மத்தியில் நிறைய பயம் தெரிந்தது. வெட்கம் தெரிந்தது.
’ஏண்டி.. என்னடி வெட்கம்? ஆம்புள போவும்போது மொகத்தை திருப்பிக்கிறம்ல? பாவாடையில போயிட்டு காலு ஒட்ட தெருவுல நடக்கிறம்ல.. அப்புறம் என்ன வெக்கம் கேக்குது?’, என்று காளி இரைந்தாள்.
தோழர் நொச்சிப்பட்டி போகவில்லை. நிறைய பேசினார்கள். அன்று இரவு அங்கேயே தங்கினார்.
மறுநாள் காலையில், நான்கு குட்டி யானைகள் நிறைய பெண்கள் கலெக்டர் ஆபீசுக்கு புறப்பட்டுப் போனார்கள்..
அவர்களோடு காளி செல்ல முடியவில்லை. பொறுமிய வயிறு பொங்கித் தீர்த்துவிட்டது. கடுமையான பேதி. அந்த பகலை அவள் கடத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
மாலையில் ஊர் கூட்டம் நடந்தது. தோழர் வந்திருந்தார். ஆனால், வெள்ளையம்மாள்தான் நடந்ததைச் சொன்னாள். கலெக்டரைப் பார்க்க நான்கு பேரைத்தான் அனுமதித்தார்களாம். தோழர் நான்கு பேரை அழைத்துக்கொண்டு, கண்ணைக் காட்டிவிட்டுச் சென்றாராம். அதனைப் புரிந்துகொண்ட பெண்கள், அந்த வழி, இந்த வழி என்று புகுந்து கலெக்டர் அறையை நிரப்பிவிட்டார்களாம். சடச்சிதான் போட்டு உடைத்திருக்கிறாள். கலெக்டர் முகம் செத்துவிட்டதாம். நாளையே தாசில்தார் வருவார். ஆக்கிரமிப்பை அகற்றுவார் என்று சொன்னாராம்.
அதற்கிடையே பத்திரிகையாளர்கள் வெளியே திரண்டிருந்த பெண்களைப் பார்த்து கேள்வி கேட்க மறுநாள், எல்லாப் பத்திரிகையிலும் பிரச்சனை நாறியது. இவர்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் இடத்தைப் போல.
சொன்னபடி தாசில்தார் வந்தார். சர்வேயர் படையே வந்திருந்தது. ஒரு லாரி நிறைய போலீஸ் வந்திருந்தது. காவிரியம்மா வீடு பூட்டிக்கிடந்தது. அவரையோ அவரது மகன்களையோ பார்க்க முடியவில்லை.
சாமி அம்பு குத்தும் புறம்போக்கு இடத்தின் அளவு இரண்டு மடங்கு அதிகமானது. முயல் கட்டும் இடம் மூன்று மடங்காகியது. பாதைக்காக கொட்டப்பட்டிருந்த மண்ணை ஜேசிபி அள்ளி அகற்றியது. கல்லை ஊன்றிய சர்வேயர்கள், இளநீர் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர். கூடமாட உதவிக்கு நின்றது இவள் தெரு ஆட்கள்தான். கள்ள சாதி ஆட்கள் வேடிக்கைப் பார்த்ததோடு சரி.
இவள் யோசித்தாள். ‘ஒதுங்குறது எல்லாருக்கும் பொது.. ஆனா.. பள்ளச் சாதி ஆளுங்களத்தவிர ஏன் வேற யாரும் அளக்கும்போது வரல?’.
அப்புறம் ஒரு வாரம் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போதுதான் பிரச்சனை வந்தது.
காவிரியம்மா வீடு திறந்திருந்தது. அப்போதே காளி யோசித்தாள். ‘இந்த அம்மா எங்க போயிருந்தது? இன்னிக்கு ஏன் வந்துச்சி?’
பத்து மணி வாக்கில் பதில் கிடைத்தது. இரண்டு லாரிகளில் மண் வர, ஒரு ஜேசிபி அவற்றை நிரவி பாதை சமைத்தது. காவிரியம்மா வீட்டு வாசலில் அண்ணா கைகாட்டும் கொடி பறந்த கார் நின்று கொண்டிருந்தது.
இவளுக்குப் புரிந்துவிட்டது. தோழரை அழைத்தாள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட தோழர் ஒரு கேள்வி கேட்டார். ‘பெண்கள் என்னா செய்யிறாங்க?’.
‘எல்லாரும் கூட்டமா இருக்காங்க தோழர்.. நீங்க வரணும்’
‘வரேன்.. அதுக்கு முன்னாடி ஸ்டேஷனுக்கு போன் போட்டுட்டு, என்னா சொல்றாங்கன்னு சொல்லு’, என்றார் தோழர்.
அவர் சொன்னபடியே செய்தாள். தோழரின் மூளையைப் புரிந்து கொள்ளமுடியாது என்று காளிக்குத் தெரியும். போன் போட்டு முடித்து விட்டு தோழரை அழைத்தாள்.
அவர் போனை எடுத்தபோது நிறைய வண்டி சப்தம் கேட்டது. தோழர் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
தோழர் நேரடியாக கேள்வி எழுப்பினார். ‘ஸ்டேஷன்ல என்ன சொன்னாங்க?’ இவள் சொன்னாள். ‘ஸ்டேஷன்ல ஆளேயில்லையாம்’.
எல்லாரும் சாணாம்பட்டி திருவிழா பந்தோபஸ்த்து போயிருக்கிறார்கள் என்று சொன்னதைச் சொன்னாள்.
அவர் சிரித்தார். ‘நானும் தாசில்தாரைக் கூப்பிட்டேன்.. அந்த அம்மா லீவுல இருக்காங்களாம். ஏதாவது புரியுதா?’.
‘அப்ப என்ன செய்யிறது?’, என்று கேட்டாள் காளி பதட்டத்துடன்.
பதிலுக்கு தோழர் கேட்டார், ‘என்ன ஆயுதம் கையில இருக்கு?’
’வூட்ல அருவா இருக்கு தோழர், தென்ன மட்ட வெட்டுற அருவா’
‘அதெல்லாம் இவனுங்களுக்குத் தேவையில்லை, வௌக்குமாறு இருக்கா..? எடுத்துட்டு போ, நம்ம தோழர்கள கூப்பிட்டுக்க.. எல்லாப் பெண்களையும் கூப்பிட்டுகிட்டு.. அவுங்க வந்தாலும் வராட்டாலும் முன்னாடி போயி ஜெசிபி முன்னாடி நில்லு.. நா அதுக்குள்ள அங்க வந்துடுவேன்”.
காளிக்குப் புரியவில்லை. ஆனால், தோழர் சொன்னது நினைவுக்கு வந்தது. போராட்ட களத்தில் கட்டளையை அமுல்படுத்த வேண்டும். அதுதான் கம்யூனிஸ்ட்டின் அடையாளம்.
புறப்பட்டாள். வெள்ளையம்மாவுக்குக் குரல் கொடுத்தாள். சடச்சியைக் கூப்பிட்டுக்கொண்டாள். தெருமுனையைக் கடந்து இடது பக்கம் திரும்பியபோது கவனித்தாள். அவர்களுக்குப் பின்னே பத்து நூறு பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அனைவர் கையிலும் துடைப்பம் இருந்தது. சிலர் கையில் அருவாளே இருந்தது.
காளி வலது பக்கத் திருப்பத்தைத் தாண்டி நடந்து, ஜேசிபியை பார்த்தபோது அதிர்ந்துபோனாள். ஜேசிபியை கள்ள சாதிப் பெண்கள், இவர்களுக்கு முன்னதாக, சூழ்ந்துகொண்டிருந்தனர்.
‘அதானே.. நம்ம பாடு பரவாயில்ல.. அவளுக சுடுகாட்டுப் சாலையிலல்ல உட்காரனும்’. என்று சடச்சியிடம் காளி சொன்னாள்.
அண்ணா படம்போட்ட கொடி பறந்த அந்த காரைக் காணவில்லை. காவிரியம்மா வீடும் பூட்டிக்கிடந்தது. ஏன் பயந்து ஓடிவிட்டார்கள்?
கள்ளசாதிப் பெண்களுடன், பள்ள சாதிப்பெண்களும் ஜேசிபியை மறித்து நின்றனர். சடச்சி ஜேசிபியில் ஏறி டிரைவரை விளக்குமாற்றால் விளாசினாள். அவளோடு கள்ள சாதிப்பெண் கண்மணியும் சேர்ந்துகொண்டாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடம் களேபரம் ஆகிவிட்டது. ஆண்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள். மற்ற பல ஆண்கள் குழுமி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள்.
அப்புறம் போலீஸ் வந்து டிரைவரையும் ஜேசிபியையும் மீட்டுச் சென்றது. தோழர், அருகாமை மந்தையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்து, உதடு பிரியாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.
4.

No comments:
Post a Comment