அழகின் விதிகள் :Law of Beauty- தோழர் காரல் மார்க்ஸ்
********************************
விலங்குகள் தாம் உயிர்வாழ்வதற்குச் தேவையான அளவிற்கே செயல்களில் ஈடுபடுகின்றன. பறவைகள் கூடு கட்டுகின்றன. எறும்புகள் புற்று அமைக்கின்றன. மனைதனும் செயற்படுகின்றான். ஆனால், அவன் உணர்வுள்ள ஜீவன். அவன் தன் வாழ்க்கைச் செயலையே தன் சித்தத்திற்கும் உணர்வுக்கும் உட்படும் பொருளாக ஆக்குகிறான். புற உலகின் பல்வேறு குணங்களை அதாவது புற உண்மைகளைக் கண்டறியும் அதே நேரத்தில் வெறும் உயிர்வாழ்வதற்கு வேண்டிய செயல்களுக்கான திறன்களுக்கும் அப்பால் தனுள் வேறு சில திறன்களும் அடங்கி உள்ளன. என்க் காண்கிறான். எனவே, தான் உயிர் வாழ்வதற்க்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான செய்லகளோடு மட்டும் அவன் நின்று விடுவதில்லை. அந்தத் தேவையில்லாத பொழுதும், ஏன் அந்தத் தேவையில் இருந்து விடுதலை பெற்ற பின்னரே, அவன் உண்மையான படைப்புத் தொழிலில் ஈடுபடுகிறான். விலங்கு தன்னைத் தானே மறுபடைப்பு செய்கிரது. மனிதனோ இயற்கை முழுவதையும் மறுபடைப்பு செய்கிறான். விலங்கின் படைப்பு உடனேயே அதன் உடலிற்கு உரித்தாகிறது. மனிதனோ சுதந்திரமாக தன் படைப்பை எதிகொள்கிறான். விலங்கு தன் உயிரினத்டின் தேவையையும் குணத்தையும் பொருத்தே பொருட்களை ஆக்குகிறது. மனிதனோ எல்லா உயிரினங்களின் குணங்களுக்கும் ஏற்றப்படி எப்படி படைப்பது என்பதை அறிவான். எனவே, அழகின் விதிகளுக்கேற்பப் படைக்கிறான்.......(K.Marx., Economic and philosophic Manuscripts, 1844, progress publishers, 1977 pp 73-74)

அழகை உனர்தல் என்பது ஒரு பொருளின் வடிவமைதி, குறிப்பிட்ட பயன்பாட்டை மட்டுமல்லாது புற உலகின் மீது மனிதன் செயலாற்றுவதன் மூலம் ஏற்படும் புலனுணர்வுகளின் விழிப்பு, கண்டு பிடிப்பில் அவன் பெறும் ஆனந்தன் ஆகியவற்றையும் தனக்குள் கொண்டு உள்ளது என்பதை உணர்ந்து கொள்வதே ஆகும். அது மனிதனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது: அவன் புற உலகை எதிர்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அழகு என்பது ஒரு பொருளின் நிறை, பரிமாணம், நிறம் போன்ற பெளதீக பண்பல்ல. மேலும், அழகை உணர்வது என்பது வெறும் தன்னிச்சையான அகவயமான செயல் அல்ல.மாறாக, அது மனிதனுக்கும் புற உலகிற்க்கும் இடையில் உள்ல ஒரு செயல் ஊக்கம் உடைய உரவே ஆகும் . அது பழங்கால சமூகத்தில் உழைப்பு கருவிகளுடன் இணைந்தே தோன்றியது. ஏனெனில், இக்கருவிகளும் கூட மனிதனுக்கும் புற உலகிற்கும் இடையே ஒரு செயல் உறவையே ஏற்படுத்துகின்றன. இப்படைப்புகளில் காணப்படும் அழகு சுட்டு காட்டுவது என்னவெனில் உழைப்பு கருவியை படைக்கும் செயல், அதை இய
க்குவதற்க்கு தேவையான திறன்களை மட்டுமல்ல, அவற்றிற்கும் அப்பால் அவனுக்குள் அடங்கிய வேறு திரன்களையும் விழித்தெழச்செய்துள்ளது என்பதைத்தான்.- ஸிட்னி பிங்கெல்ஸ்டெய்ன் , மார்க்சிய விமர்சகர்

No comments:
Post a Comment