மரண தண்டனை முறை ஏன் இருக்கக்கூடாது? -கார்ல் மார்க்ஸ்.
“தனது நாகரிகத்தைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சமுதாயத்தில், எந்தவொரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை என்பது நீதியானது என்றோ, பொருத்த மானது என்றோ நிறுவுவது மிகக் கடினமானது - அது முற்றிலும் சாத்தியமற்றது எனச் சொல்ல முடியாது என்றாலும். தண்டனை என்பது அச்சுறுத்துவதற்கோ, சீர்படுத்துவதற்கோ பயன்படும் வழிமுறைகளிலொன்று எனப் பொதுவாக அதற்குச் சார்பாகப் பேசப்படுகிறது. ஆனால், மற்றவர்களைச் சீர்படுத்தவோ அச்சுறுத்தவோ என்னைத் தண்டிப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தவிரவும், காயீன் காலத்திலிருந்து (கடவுளால் படைக்கப்பட்ட முதல் ஆணான ஆதாமுக்கும் முதல் பெண்ணான ஏவாளுக்கும் பிறந்த காயீன், தனது இளைய சகோதரன் ஆபெல் மீது பொறாமை கொண்டு அவனைக் கொலை செய்ததாக விவிலியம் கூறுகிறது -எஸ்.வி.ஆர்.), இன்றுவரை உலகம் தண்டனையின் காரணமாகச் சீர்திருத்தப்பட வில்லை, அச்சுறுத்தப்படவுமில்லை என்பதை வரலாறு- புள்ளிவிவரங்கள் எனச் சொல்லப்படும் ஒரு விடயம் - முற்றுமுடிவான சான்றுடன் மெய்ப்பிக்கின்றது... தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துக்கிலிடுப வனைத் தவிர வேறு சிறந்த கருவி எதனையும் அறிந்திராத, தனது கொடூரத்தனத்தை சாசுவதமான சட்டம் என ‘உலகின் முன்னணிப் பத்திரிகை'யின் (இலண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘டைம்ஸ்' நாளேடு - எஸ்.வி.ஆர்.) மூலம் அறிவிக்கின்ற ஒரு சமுதாயத்தின் கதிதான் என்ன...? புதிய குற்றவாளி களின் வருகைக்கான இடத்தை ஏற்பாடு செய்வதற்காக ஏராளமான குற்றவாளிகளைத் தூக்கில் போடுபவனைப் புகழ்வதற்குப் பதிலாக, இந்தக் குற்றங்களைத் தோற்று விக்கும் சமுதாய அமைப்பை மாற்றுவதைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கான அவசியம் இல்லையா?”
தோழர் எஸ்.வி.ஆர் எழுதிய புத்தகத்திலிருந்து
தோழர் எஸ்.வி.ஆர் எழுதிய புத்தகத்திலிருந்து
No comments:
Post a Comment