முன்ளாள் குடியரசு தலைவருக்கு…
அத்வானி கனவு
அப்துல்லா கனவு
வேறானவை
ஆண்டை கனவு
அடிமை கனவு
வேறானவை
சங்கராச்சாரி கனவு
நந்தன் கனவு
வேறானவை
இராசபக்ச கனவு
முள்ளிவாய்கால் கனவு
வேறானவை
இந்திய இராணுவம் கனவு
சயோராம் சர்மிளா கனவு
வேறானவை
பாம்பின் கனவு
மீனின் கனவு
வேறானவை
வல்லரசு கனவு
மக்கள் கனவு
வேறானவை
உங்கள் தேசம்தான்..
எங்கள் கனவுகள் உங்களுடையதல்ல
கவிதை நன்றாக இருக்கிறது தோழர்...என்றாலும் கடைசி இரண்டு பத்திகள் தேவையற்றவை என்று எனக்குத் தோன்றுகிறது...அதை நீங்கள் ஏற்கவேண்டுமென்பது கட்டாயமில்லை. ஒரு வாசகனாக என் கருத்தைப் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவே!
ReplyDelete