Monday, November 14, 2011

கவிதை


நிலவுதட்டில் நட்சத்திரங்களை உண்ணும்
வானவில்லில் கோவணம் உடுத்தும்
பறக்கும் யானையில் பவனி வரும்

கருவறையில் கக்கா போகும்
மசூதிக்குள் முத்தங்கள் பொழியும்
பைபிள்களில் பந்துகள் ஆடும்

தாயின் தாலிகொடி அறுக்கும்
தந்தையை செருப்பால் அடிக்கும்
தமயனிடம் சண்டைகள் செய்யும்


சாதி மதம் இனம் மொழி
தேசம் நாடு போர் வர்க்கம்
தெரியாத  குழந்தைகள் உலகை
வாழ்த்திவோம் கொண்டாடுவோம்

1 comment:

  1. கவிதைகள் அதன் போக்கில் இயல்பாக இல்லாமல் ஆசிரியனின் அரசியல் அதை ஆட்டிப் படைக்கிறது.. உங்கள் கவிதைக்கான மொழிநடை கூடுதல் சிரத்தை கோரி நிற்கிறது. நீங்கள் சொல்லவரும் அரசியல் பிடித்திருக்கிறது. ஆனால் ...சொல்லும்முறை... கவிதைக்குச் சற்றுத் தள்ளி நிற்கிறது.

    அவசரப்படாதீர்கள்...எழுதியதை உடனே பிரசுரித்துவிடாமல் மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து நிதானமாக வெளியிடுங்கள்!

    ReplyDelete