Monday, November 21, 2011

கவிதை


பொம்மைகளின் அரசியல்

குட்டி பாப்பாவுக்கு பொம்மைங்கன்னா
கொள்ளை ஆசை
பீடிகட்டை இரண்டை  கொறைச்சாவது
மாதம் பொம்மை ஒன்னு 


பாப்பா தட்ற தட்டுல தாஞ்சாவூர் ராஜா
கால்ல விழுந்து விழுந்து கும்பிடும்
கைக் கொட்டி கெக்கலிச்சு சிரிக்கும்

ஊதி பெருத்து கொழுத்த பலூன்கள்
கலர் கலராய் யானையில தொங்கும்
பாப்பா கூர்நகம் வெடித்து சிதறடிக்கும்
அதிர்ச்சியில் அழகாய் கண்கள் சிரிக்கும்

திருவிழா தெருவெல்லாம் பொம்மைகடைகள்
சுற்றி சுற்றி உற்சாகமாய் காண்பித்தேன்
கிளுகிளுப்பை, பீப்பீ, பந்து. சொப்பு…
பொம்மைங்கன்னா மகிழ்ச்சின்னு நினைப்பு 


பாப்பாவுக்கு என்னா பொம்மை வேணும்
காந்திகுரங்கு பொம்மை காட்டியது

நாலு தலைமுறைகளை காயடித்து
நாட்டை கெடுத்து குட்டிச் சுவராக்கிய
நீதிஅறம் போதிக்கிற அரசியல் பொம்மை

பொட்டை கண்ணாய் போயிடு
செவிட்டு முண்டமாய் கிட
ஊம கோட்டானாய் இரு
பாப்பாவை சாபம் இட்டது


ஆயாவிடம் விளக்கி  சொன்னதற்கு
கட்டையில் போறவன் நாசமாய்  போக
சத்திய ஆவேசம் வந்து கத்தினாள்

அப்புகுட்டி பாப்பா அர்த்ததுடன் சிரித்தது .    

No comments:

Post a Comment