Sunday, December 4, 2011

டிசமப்ர்-6 வருகையில் இந்த கவிதை வரிகள் கேள்விகள் நெஞ்சை உறுத்தும்.


       ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை
யா அல்லாஹ
நிராயுதபாணியாய்  கையேந்துகிறோம்
இவர்களின் கேள்விகளுக்கு
பதிலளீக்கும் திராணியற்றவர்களாய்...

கடற்கரை வெளிகளில்
புற்கள் தேங்கிய பிரதேசங்களில்,
வீதிகளின் கட்டாந்தரையில்
பெருநாள் தொமுகைக்காகக் கூடுகிறோம்.

எங்கள் தாய்தேசத்தின் செழிப்புக்காக
உன்னிடம் இறைஞ்சுகின்ற வேளை
தங்களுக்குள் இரகசியமாய் பேசிக்கொள்வது
காதில் விழுகிறது.
இதோ வெளிநாட்டுக்காரர்கள் கூடி
சதி செய்கிறார்கள் என்று
தங்கள் வீடுகளையும்
பயணிக்கின்ற பாலங்களையும்
பாதுகாக்க ஒடுகிறார்கள்.
வேகமாய்.....

தேசம் எரிகிறதுதான்
உற்று நோக்குங்கள்
எங்கள் கைகளில் பிடில் இல்லை

எங்கள் இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களுக்காக
கரவொலி எழுப்புகிற போது,
ஏன் செய்றகைத்தனமாய் நடந்து கொள்கிறாய்’?
என்று தொலைக்காட்சியிலிருந்து ஒரு
அசரீரி கேட்கிறது.

எங்களுக்கும், அந்த உளவு நிறுவனத்துக்கும்
தொடர்பிருப்பதாக உரக்கக் கத்துகிற ஒசை
அந்த மலைகளில் மோதி எதிரொலிக்கிறது
மறுபடி! மறுபடி!

சிக்கிமுக்கிக் கல்லாய்
உரசிய கேள்விகளில்,
நீ... நீ பதில் சொல்இறைவா!

எது எங்கள் தேசம்?
எது எங்கள் கலாச்சாரம்?
எது எங்கள் தாய்மொழி?.


                                                                     இ.சும்சுதீன்.

1 comment:

  1. இந்த கவி​தை எழுதப்பட்ட காலத்தில் திருவல்லிக்​கேணி பகுதியில் இக்கவி​தை குறித்தும் ​வேறு சில கவி​தைகள் குறித்தும் சும்சுதீனுடன் ​பேசிய நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது

    ReplyDelete