Saturday, January 7, 2012

தினமணி கதிர் உதவி ஆசிரியர் புதிய ஜீவாவின் அணிந்துரை



அனுபவம்... உண்மை... எளிமை!

தோழர் நடராசன் எனக்கு முதன்முதலில் அறிமுகமானது தோழராகத்தான். நான் இதுவரை அவரை அறிந்து வைத்திருந்ததும் அப்படித்தான். அவருக்குள் ஒரு படைப்பாளி ஒளிந்து கொண்டு இருந்ததை அவர் ஒருநாளும் வெளிக்காட்டியதில்லை.
இந்தச் சிறுகதைகளை என்னிடம் அவர் கொடுத்தபோதும், இக்கதைகள் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருக்கும் என்ற முன் முடிவுடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.
மிகச்சிறந்த படைப்பாளிக்குரிய மொழி ஆளுமை, சிறுகதை தொழில்நுட்ப நேர்த்தி என்னை வியக்க வைத்தது. எப்படி இது சாத்தியம்? என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை என்னால் விடை காண முடியவில்லை.
நிறைய எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து, தன்னை எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொள்ள படாதபாடு படும் எழுத்தாளர்களின் சொற்குவியல்களுக்கு நடுவில் ஒரு மின்னல் போல இறங்கியிருக்கிறது இச் சிறுகதை தொகுப்பு.
அனுபவங்களும், அவற்றைச் சொல்லும் பகட்டில்லாத சொற்களும், வாழ்க்கை ஒரு போராட்டம் எனப் பார்க்கும் பார்வையுமே இச்சிறுகதைகளின் வெற்றிக்கான காரணங்கள் எனலாம்.
முற்போக்கு இலக்கியங்களில் பிரச்சார நெடி அடிக்கும் என்று முகஞ்சுளிப்பவர்கள் இச்சிறுகதைகளைப் படித்தால் தங்களுடைய கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்பது உறுதி.
 எழுதத் தெரிந்த யாரும் இக்கதைகளை எளிதில் எழுதிவிட முடியாது.
நடராசன் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் காரணமாகக் காவல்துறையின் சித்ரவதைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த சித்ரவதைகளின் வலி நம் இதயத்தை நடுங்கச் செய்கிறது. நமது காலத்தின் எத்தனை படைப்பாளிகளுக்கு இந்த வலியை வெளிப்படுத்த முடியும்?
மாற்றுத் திறனாளியான நடராசனின் அனுபவங்களையும் எல்லாராலும் எளிதாக எழுதிவிட முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக நடராசனின் மக்கள் நலன் சார்ந்த கண்ணோட்டம் இத் தொகுப்பு முழுவதும் தன் உரத்த குரலால், தொகுப்பு முழுவதையும் அதிர்விக்கிறது.
தமிழின் பிற படைப்பாளிகளுக்குக் கிட்டாத இந்த மூன்றும்தான் இச்சிறுகதைத் தொகுப்பை, தமிழ் படைப்புலகில் வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.
தான் ஒரு பெரிய படைப்பாளி என்ற எண்ணம் எதுவுமில்லாமல், தனக்குத் தோன்றியதை எழுத வேண்டும், பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதால், தேவையற்ற சொல் அலங்காரங்களோ, பகட்டுகளோ இல்லாமல் மிக எளிமையாக இத் தொகுப்பில் உள்ள  கதைகள் நம் முன் உணர்வுப்பூர்வமான காட்சிகளாக விரிகின்றன.
நடராசனின் உள்ளத்தின் உண்மையளி, அவருடைய இச்சிறுகதைகளுக்கு உயிர்ப்பைத் தந்திருக்கிறது.
சிறுகதைகளை வாசிக்கும் நமது மனதுக்கும்.

புதியஜீவா
05.12.2011


3 comments:

  1. புதிய ஜீவாவின் அணிந்து​ரை உங்கள் க​தைகளின் தனிச்சிறப்​பைத் ​தெளிவாகவும் சுருக்கமாகவும் ​கோடிட்டுக் காட்டிவிட்டது, அ​தே ​போல இத்த​கைய க​தைக​ளை எந்த​வொரு இலக்கியத் ​தொழில்நுட்பம் ​கைவர​பெற்ற எழுத்தாளர்களாலும் எழுதிவிட முடியாது, அ​வை படிப்பதா​லோ, சிறந்த க​தை​யைத் தர​வேண்டும் என்ற தூண்டலா​லோ மட்டும் வரக்கூடியதல்ல என்ப​தை உங்கள் பின்புலத்​தை ​வெளிப்படுத்துவதன் வாயிலாக அழகாக ​கோடிட்டுக் காட்டுகிறார்,

    அ​தே ​போல உங்கள் ப​டைப்புகளில் காவல்து​றை குறித்த மா​யைகள் உ​டைக்கப்படுகின்றன அல்லது முழு​மையான முகம் ​வெளிப்படுத்தப்படுகிறது என்ற அம்சத்​தையும் அணிந்து​ரை குறிப்பிடுகிறது. எனக்குத் ​தெரிந்து தமிழ்ச்சூழலில் நக்சல்பாரி புரட்சிகர இயக்கங்களில் அதிலும் குறிப்பாக 80களுக்குப் பிறகு உள்ளவர்களின் அல்லது இருந்தவர்களின் வாழ்க்​கை ​​போராட்டங்கள், மன இயல்புகள், சமகால வாழ்க்​கை குறித்த அவர்களு​டைய முற்றிலும் மாறுபட்ட கண்​ணோட்டங்கள் ப​டைப்புகளாக வரவில்​லை. தங்களிடம் அந்த விசயங்க​ளைப் ப​டைப்பாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், நீங்கள் ​செய்ய முடியும் என்​றே நம்புகி​றேன்.

    ​மேலும் ஆழமாக உங்கள் க​தைகள் ​பேசும் விசயங்கள் குறித்தும், அ​வை எவ்வாறு ஒட்டு​மொத்தத் தமிழ்ச்சூழலின் க​தை​களிலிருந்து மாறுபட்டுள்ள​தெனவும் ஆதாரப்பூர்வமாக குறிப்பான உதாரணங்களின் வழி ஆய்வு ​செய்ய ​வேண்டும் எனவும் விரும்புகி​றேன்.

    ReplyDelete
  2. பல்வேறு தருணங்களில் , நக்சல்பாரி அரசியலை ஏற்பதற்கு முன், புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்களில், 2000 க்கு பின், 2010க்கு பின் என்ற காலகட்டங்களில் எனது மன இயல்புகள்,சந்தித்த அற்புத மனிதர்கள், நிகழ்வுகளை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். சந்தர்ப்பமும், சுழலும் வாய்க்க வேண்டும்

    ReplyDelete
  3. இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் யாரிடம் கிடைக்கும்? கிடைக்குமிடங்களை www.hooraan.blogspot.com ல் தெரிவிக்கவும்.

    ReplyDelete