“முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோஷலிஸ்டு சித்தாந்தம்.... , நடுவழி ஏதும் கிடையாது (ஏனென்றால் மனிதகுலம் ஒரு "மூன்றாம்" சித்தாந்தத்தைப் படைக்கவில்லை, மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத்தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே சோஷலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருளாகும். மூன்றாம் வழி கிடையாது “
என்ன செய்ய வேண்டும்? - லெனின்
“தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே -அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிரத்துப் போராடுவது, இன்றியமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமைப் பற்றிய துணுபு மட்டுமே - வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிஸத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும், சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப்பகுதினரைச் சேர்ந்தவர்கள்
- என்ன செய்ய வேண்டும் பக்கம்47 -
“பாட்டாளி வர்க்கப் புரட்சி - முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்கிறது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாக மாற்றுகின்றது.
இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது.
சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது.
“தன் தலைவரிடம் எல்லையற்ற அன்பையும் மரியாதையையும் கொண்டிருப்பது இயல்பான ஒன்றெனக் கருதலாம். ஆனால் தலைவரின் கட்டளைக் குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது வேறு. இரண்டாவது நிலையால் கேடான விளைவுகள் உண்டாகும். உயர்வான எதையும் மதிப்பது நல்ல பண்பாகும். அத்தன்மையில் உயர்ந்த கொள்கைகளையும் பண்பையும் கொண்டுள்ள மனி தனை மதிப்பது தேவையானதுதான். அதற்காக அவரி டம் கண்மூடித்தனமான விசுவாசியாக இருக்கக்கூடாது. தன் சுயமரியாதையை இழந்து தலைவரை வழி படுவது என்பது தன்னையே இழிவுபடுத்திக் கொள்வ தாகும். தலைவரை மதிப்பது என்பது தன் சுய அறிவு டன் சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை இழக்காத ஒன்றாக இருத்தல் வேண்டும். கண்மூடித்தனமாக வழிபடுதல் என்பது ஒருவனை முழு முட்டாளாக - அடிமையாக ஆக்கிவிடும்.”
பாபாசாகேப் அம்பேத்கர்
தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல் அதைச் சரிவெசய்தற்குரிய வழிகளை ஆராய்தறிந்து வகுத்துக் கொள்ளுதல் - இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம், இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும், இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும் பிறகு வெகுஜனங்களுக்கும் போதமளித்துப பயிற்றுவிக்க வேண்டும். ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள "இடதுசாரிகள்" இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்கள் கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர். ......
லெனின்
எங்கெல்ஸ் கூறுகிறார்:-
இன்றைய சமுதாயத்தின் மூன்று வர்க்கங்களான
நிலவுடைமைப் பிரபுக் குலம்,
முதலாளி வாக்கம் மற்றும் பாட்டாளி வர்க்கம் ஒவ்வொன்றுக்கும்
அவற்றுக்கே உரிய ஒழுக்கநெறி இருப்பதை காணும் பொழுது நாம் ஒரு முடிவுக்கு
மட்டுமே வரமுடியும்,
கடைசியாக நோக்குமிடத்து மனிதர்கள் தமது வர்க்க நிலைமை
அடிப்படையாகக் கொண்டிருக்கும் நடைமுறை உறவுகளிலிருந்தே - அவர்கள் உற்பத்தியையும் பரிவர்த்தனையையும் நடத்தி வரும் பொருளாதார
உறவுகளிலிருந்தே -
உணர்வு பூர்வமாகவோ அல்லது உணர்வுபூர்வம் இன்றியோ தமது
அறநெறிக் கருத்துக்களைப் பெறுகிறார்கள்.
...
ஜங்கம சொத்துக்களின் தனியார் உடைமை வளரத் தொடங்கிய தருணம்
முதல் இந்தத் தனியார் உடமை நிலவிய எல்லா சமூகங்களும் இந்த ஒழுக்க நெறி ஆணையைப்
பொதுவாக வைத்திருக்க வேண்டியிருந்தது, நீ திருடக்கூடாது.
இதன் மூலம் இந்த ஆணை ஒரு சாசுவத ஒழுக்க நெறி ஆணையாகி விடுமா?
எவ்வழியிலும் ஆகாது. திருடுவதற்கான எல்லாச் செயல் நோக்கங்களும் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு சமுகத்தில்
அதன் காரணமாக அதிகமாய்ப் போனால் பைத்தியக்காரர்கள் மட்டுமே எப்பொழுதாவது
திருடுவார்கள் என்ற நிலையில் நீ திருடக் கூடாது என்ற சாசுவத உண்மையினை பயபக்தியுடன் பறைசாற்ற முயலும் ஒர்
ஒழுக்கநெறிப் பிரசாரகர் எவ்வாறு சிரிப்புக்கு ஆளாவார் தெரியுமா!
எனவே, ஒழுக்க நெறி உலகத்திற்கும் அதன் நிரந்தரக் கோட்பாடுகள் உள்ளன, அவை வரலாற்றுக்கும் நாடுகளிடையான வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு நிற்பவை என்ற
சாக்கில் ஒரு சாசுவதமான அறுதியான என்றென்றும் மாற்றவொண்ணா அறநெறி விதி என்ற
முறையில் ஏதேனும் ஓர் ஒழுக்க நெறி சூத்திரத்தையும் எம்மீது திணிக்க நடத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கிறோம். இதற்கு மாறாக,
இறுதியாக ஆய்வுசெய்து பார்க்கும் பொழுதில் இதுகாறுமுள்ளதான
எல்லா ஒழுக்கநெறிக் கொள்கைகளும் அந்தந்தக் காலங்களில் நிலவிய சமூகத்தின் பொருளாதார
நிலைமைகளின் விளைவே என்று நாம் மெய்ப்பித்து நிலைநிறுத்துகிறோம். சமூகம் இதுவரையில் வர்க்கப் பகைமைகளிலேயே இயங்கி வந்திருப்பதால், ஒழுக்க நெறி எப்பொழுதுமே வர்க்க ஒழுக்க நெறியாக இருந்து வந்துள்ளது, அது ஒன்றா ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் மற்றும் நலன்களையும்
நியாயப்படுத்தியுள்ளது அல்லது ஒடுக்கப்பட்ட வர்க்கம் போதியளவு வலுப்பெறத்
தொடங்கியது முதல் இந்த ஆதிக்கத்திற்கு எதிரான அதன் கோபாவேசத்தின், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன்களின் சின்னமாக அமைந்துவிட்டது.
- டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 165 - 167
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை 1848
ReplyDelete...........................................
குடும்ப ஒழிப்பு!
கம்யூனிஸ்டுகளுடைய இந்த இகழ்மிக்க முன்மொழிவு குறித்து, அதிதீவிரக் கொள்கையினரும்கூடக் கொதித்தெழுகின்றனர்.
முதலாளித்துவக் குடும்பமாகிய இன்றைய குடும்பம், எந்த அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது? மூலதனத்தின் மீது, தனியார் இலாபத்தின் மீது [எழுப்பப்பட்டுள்ளது]. இந்தக் குடும்பம், முழுதும் வளர்ச்சி பெற்ற வடிவில், முதலாளித்துவ வர்க்கத்தார் இடையில் மட்டுமே நிலவுகிறது. ஆனால் இந்த நிலைமையின் நிரப்புக் கூறாக (complement) பாட்டாளிகள் இடையில் அனேகமாகக் குடும்ப அமைப்பு இல்லாதிருப்பதையும், [சமுதாயத்தில்] வெளிப்படையான விபச்சாரத்தையுமே காண முடிகிறது.
முதலாளித்துவக் குடும்பத்தின் நிரப்புக் கூறு மறையும்போது, முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும். மூலதனம் மறையும்போது இரண்டுமே மறைந்து போகும்.
குழந்தைகளை அவர்களின் பெற்றோர் சுரண்டுவதைத் தடுத்து நிறுத்த விரும்புகிறோம் என்றா எங்கள்மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? [அவ்வாறெனில்] இந்தக் குற்றத்தை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், நாங்கள் வீட்டுக் கல்விக்குப் பதிலாகச் சமூகக் கல்வியைப் புகுத்தும்போது, [மனித] உறவுகளிலேயே மிகவும் புனிதமானவற்றை நாங்கள் அழிப்பதாகக் கூறுவீர்கள்.
உங்களுடைய கல்வி மட்டும் என்னவாம்? அதுவும் சமூகக் கல்விதானே? எந்தச் சமூக நிலைமைகளின்கீழ் நீங்கள் கல்வி போதிக்கிறீர்களோ அந்த நிலைமைகளாலும், பள்ளிக்கூடங்கள் மற்றும் இன்னபிறவற்றின் வழியாக சமுதாயம் மேற்கொள்ளும் நேரடி அல்லது மறைமுகத் தலையீட்டாலும் அக்கல்வி தீர்மானிக்கப்பட வில்லையா? கல்வியில் சமுதாயத்தின் தலையீடு என்பதைக் கம்யூனிஸ்டுகள் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. அந்தத் தலையீட்டின் தன்மையை மாற்றவும், ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து கல்வியை மீட்கவுமே கம்யூனிஸ்டுகள் முயல்கின்றனர்.
நவீனத் தொழில்துறையின் செயல்பாட்டால் பாட்டாளிகளிடையே குடும்பப் பிணைப்புகள் அனைத்தும் அறுத்தெறியப்படுகின்றன; பாட்டாளிகளின் குழந்தைகள் சாதாரண வணிகப் பொருள்களாகவும், உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகின்றனர். இந்தப் போக்கு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு, குடும்பம், கல்வி பற்றியும், பெற்றோர், குழந்தை இடையிலான புனித உறவு பற்றியும் முதலாளித்துவவாதிகள் பேசும் பகட்டான பேச்சுகள் அதிகமாக அருவருப்பூட்டுகின்றன.
ஆனால், கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களைப் பொதுவாக்கி விடுவீர்கள் என்று ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும் ஒரே குரலில் கூக்குரலிடுகிறது.
முதலாளித்துவவாதி தன் மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பார்க்கிறான். உற்பத்திக் கருவிகள் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படப் போகின்றன என்று கேள்விப்படுகிறான். அனைவருக்கும் பொதுவாகிப் போகும் அதே கதி, பெண்களுக்கும் நேரும் என்கிற முடிவுக்கு வருகிறான். இயல்பாகவே, இந்த முடிவைத் தவிர வேறெந்த முடிவுக்கும் அவனால் வர இயாலாது.
பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக இருக்கும் நிலையை ஒழித்துக் கட்டுவதுதான் உண்மையான நோக்கமாக இருக்கும் என்று ஓர் ஐயமாகக்கூட அவனுக்கு எழவில்லை.
மற்றபடி, கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் பெண்களைப் பொதுவாக்கப் போகிறார்கள் எனப் பாசாங்கு செய்து, நமது முதலாளித்துவவாதிகள் தார்மீகச் சீற்றம் கொள்வதைக் காட்டிலும் நகைக்கத் தக்கது வேறொன்றும் இல்லை. கம்யூனிஸ்டுகள் பெண்களைப் பொதுவாக்கத் தேவையில்லை. அனேகமாக நீண்ட நெடுங்காலந்தொட்டே அது நிலவி வந்துள்ளது.
நமது முதலாளித்துவவாதிகள் சாதாரண விபசாரிகளிடம் போவதைச் சொல்லவே வேண்டாம். அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளின் மனைவிகள், மகள்கள் ஆகியோருடன் திருப்தி அடையாமல், தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் பெண்டாளுவதில் ஆகப்பெரும் இன்பம் காண்கிறார்கள்.
முதலாளித்துவத் திருமணம் என்பது நடைமுறையில் மனைவியரைப் பொதுவாக்கிக்கொள்ளும் ஒரு முறையே ஆகும். எனவே, மிஞ்சிப் போனால், கள்ளத்தனமாக திரைமறைவில் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்குப் பதிலாக, வெளிப்படையான சட்டபூர்வமான முறையை அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள் எனக் கம்யூனிஸ்டுகள் மீது பழிசுமத்துவது சாத்தியம். மற்றபடி, இன்றைய உற்பத்தி அமைப்புமுறை ஒழிக்கப்படும்போது, அந்த அமைப்பிலிருந்து உதித்தெழுந்த, பெண்களைப் பொதுவாக்கும் முறையும், அதாவது பொதுவான விபசாரம், தனிப்பட்ட விபசாரம் இரண்டும், கூடவே ஒழிந்தாக வேண்டும் என்பது கண்கூடு.
(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)